டெஸ்லா மாடல் எஸ் பிளெய்ட் ப்ளஸ் எடிசன் உற்பத்தி திட்டம் ரத்து: எலான் மஸ்க் அறிவிப்பு!

அதிக தூரம் பயணிக்கும் திறன் கொண்ட டெஸ்லா மாடல் எஸ் பிளெய்ட் ப்ளஸ் எலெக்ட்ரிக் காரின் உற்பத்தி திட்டம் ரத்து செய்யப்படுவதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.

 டெஸ்லா மாடல் எஸ் பிளெய்ட் ப்ளஸ் எடிசன் உற்பத்தி திட்டம் ரத்து: எலான் மஸ்க் அறிவிப்பு!

அதிதிறன் வாய்ந்த பேட்டரி மற்றும் சிறந்த தொழில்நுட்ப அம்சங்களுடன் விற்பனையில் இருக்கும் டெஸ்லா மின்சார கார்கள் உலகின் பல்வேறு நாடுகளில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. மின்சார கார்களின் தலை எழுத்தை மாற்றி எழுதிய பெருமையும் டெஸ்லா நிறுவனத்திற்கு உண்டு.

 டெஸ்லா மாடல் எஸ் பிளெய்ட் ப்ளஸ் எடிசன் உற்பத்தி திட்டம் ரத்து: எலான் மஸ்க் அறிவிப்பு!

இந்த நிலையில், அதிக தூரம் பயணிக்கும் திறன் வாய்ந்த மாடல் எஸ் சொகுசு செடான் காரை உருவாக்கும் திட்டத்தை டெஸ்லா ஈடுபட்டு இருந்தது. மாடல் எஸ் பிளெய்ட் ப்ளஸ் என்ற பெயரில் இந்த கார் குறிப்பிடப்பட்டது.

 டெஸ்லா மாடல் எஸ் பிளெய்ட் ப்ளஸ் எடிசன் உற்பத்தி திட்டம் ரத்து: எலான் மஸ்க் அறிவிப்பு!

மாடல் எஸ் பிளெய்ட் எடிசன் காரைவிட இந்த பிளெய்ட் ப்ளஸ் எடிசன் அதிக தூரம் பயணிக்கும் வாய்ப்பை வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டதால், உலக அளவில் இந்த கார் பற்றிய எதிர்பார்ப்பு அதிகரித்தது. இந்த காரின் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 643 கிமீ தூரம் வரை பயணிக்கும் வாய்ப்பை வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

 டெஸ்லா மாடல் எஸ் பிளெய்ட் ப்ளஸ் எடிசன் உற்பத்தி திட்டம் ரத்து: எலான் மஸ்க் அறிவிப்பு!

எனவே, இந்த மாடல் எஸ் பிளெய்ட் ப்ளஸ் மின்சார கார் இந்த ஆண்டு மத்தியில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று டெஸ்லா நிறுவனம் தெரிவித்தது. கொரோனா பிரச்னை காரணமாக, அடுத்த ஆண்டுக்கு இந்த காரின் அறிமுகம் தள்ளிப்போடப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.

 டெஸ்லா மாடல் எஸ் பிளெய்ட் ப்ளஸ் எடிசன் உற்பத்தி திட்டம் ரத்து: எலான் மஸ்க் அறிவிப்பு!

இந்த சூழலில், மாடல் எஸ் பிளெய்ட் ப்ளஸ் எடிசன் காரின் உற்பத்திக்கு கொண்டு செல்லும் திட்டத்தை கைவிடுவதாக டெஸ்லா நிறுவனத்தின் அதிபர் எலான் மஸ்க் சமூக ஊடகம் மூலமாக அறிவித்துள்ளார்.

 டெஸ்லா மாடல் எஸ் பிளெய்ட் ப்ளஸ் எடிசன் உற்பத்தி திட்டம் ரத்து: எலான் மஸ்க் அறிவிப்பு!

அதாவது, மாடல் எஸ் பிளெய்ட் எடிசன் மாடலே மிகச் சிறப்பான ரேஞ்ச் கொண்டதாக இருப்பதால், பிளெய்ட் ப்ளஸ் மாடலை களமிறக்கும் திட்டத்தை கைவிடுவதாகவும் அவர் காரணம் தெரிவித்துள்ளார். இது டெஸ்லா பிரியர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.

 டெஸ்லா மாடல் எஸ் பிளெய்ட் ப்ளஸ் எடிசன் உற்பத்தி திட்டம் ரத்து: எலான் மஸ்க் அறிவிப்பு!

இதனிடையே, உலகின் அதிவேக தயாரிப்பு நிலை மாடலாக கூறப்படும் டெஸ்லா மாடல் எஸ் பிளெய்ட் எலெக்ட்ரிக் காரின் டெலிவிரிப் பணிகள் வரும் 10ந் தேதி முதல் துவங்கப்பட உள்ளதாக டெஸ்லா நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த கார் 0 - 100 கிமீ வேகத்தை 2 வினாடிகளுக்கும் குறைவான நேரத்தில் எட்டிவிடும் என்பதுடன் குவார்ட்டர் மைல் தொலைவை 9.3 வினாடிகளில் கடந்துவிடுமாம்.

 டெஸ்லா மாடல் எஸ் பிளெய்ட் ப்ளஸ் எடிசன் உற்பத்தி திட்டம் ரத்து: எலான் மஸ்க் அறிவிப்பு!

இந்த மாடல் எஸ் பிளெய்ட் எடிசன் கார் மூன்று உயர் திறன் கொண்ட மின்சார மோட்டார்களுடன் வருகிறது. அதிகபட்சமாக 1020 பிஎச்பி பவரை வழங்கும். மணிக்கு 322 கிமீ வேகம் வரை தொடும் வல்லமை வாய்ந்தது. இதன் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 627 கிமீ தூரம் வரை பயணிக்கும் வாய்ப்பை வழங்கும் என்று டெஸ்லா மார் தட்டுகிறது.

Most Read Articles
மேலும்... #டெஸ்லா #tesla
English summary
The production of the Tesla Model S Plaid + has been canceled. A tweet by Elon Musk has confirmed that the production of the much-awaited Plaid + has been canceled. The Model S Plaid + was expected to be the longest range Tesla car yet, but the CEO of Tesla has now tweeted, "Plaid+ is canceled. No need, as Plaid is just so good."
Story first published: Monday, June 7, 2021, 18:20 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X