என்னங்க சொல்றீங்க... செவ்வாய் கிரகத்தில் டெஸ்லா காரா!! இணையத்தில் வைரலாகும் படம்!

எலக்ட்ரிக் கார் தயாரிப்பில் தற்சமயம் உலகம் முழுவதிலும் கொடிக்கட்டி பறக்கும் நிறுவனம் எதுவென்று பார்த்தால், அது டெஸ்லா தான். வேகமாக வளர்ந்து வரும் நிறுவனங்கள் சந்திக்கும் பிரச்சனைகளை டெஸ்லாவும் சந்தித்து கொண்டுதான் வருகிறது.

என்னங்க சொல்றீங்க... செவ்வாய் கிரகத்தில் டெஸ்லா காரா!! இணையத்தில் வைரலாகும் படம்!

இருப்பினும் அவை எல்லாம் வணிகத்தின் ஒரு பகுதியே. டெஸ்லா கார்களுக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இவ்வளவு ஏன், டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க்கிற்கும் ரசிகர்கள் ஏகப்பட்டோர் உள்ளனர்.

என்னங்க சொல்றீங்க... செவ்வாய் கிரகத்தில் டெஸ்லா காரா!! இணையத்தில் வைரலாகும் படம்!

அத்தகைய ரசிகர்களுள் ஒருவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்த டெஸ்லா மாடல் ஒய் எலக்ட்ரிக் காரின் படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு காரணம், படத்தில் டெஸ்லா மாடல் ஒய் கார் செவ்வாய் கிரகத்தில் நிறுத்தப்பட்டு உள்ளது போன்று பலருக்கு தோன்றுவதே ஆகும்.

என்னங்க சொல்றீங்க... செவ்வாய் கிரகத்தில் டெஸ்லா காரா!! இணையத்தில் வைரலாகும் படம்!

ஆனால் உண்மையில் இந்த இடம் அமெரிக்காவின் உட்டா பகுதியில் உள்ள ஒரு இடமாகும். உட்டாவில் பெரும்பாலான இடங்கள் இவ்வாறு வறண்டது போல் தான் இருக்கும். வேகமாக ட்ரெண்ட்டாகி வரும் இந்த ட்விட்டர் பதிவை பதிவு செய்தவரின் பெயர் பிரைன் ஜென்கின்ஸ் ஆகும்.

என்னங்க சொல்றீங்க... செவ்வாய் கிரகத்தில் டெஸ்லா காரா!! இணையத்தில் வைரலாகும் படம்!

இத்தகைய தோற்றத்திற்காக இந்த எலக்ட்ரிக் காரில் மாடிஃபை மாற்றங்களை அவர் மேற்கொண்டுள்ளார். ஆஃப்-ரோடு பயணங்களுக்காக காரின் சஸ்பென்ஷன் அமைப்பில் சில வேலைப்பாடுகளை செய்துள்ளவர், காரின் பக்கவாட்டில் மலை தொடர் டிசைனில் ஸ்டிக்கர்களை ஒட்டியுள்ளார்.

என்னங்க சொல்றீங்க... செவ்வாய் கிரகத்தில் டெஸ்லா காரா!! இணையத்தில் வைரலாகும் படம்!

இவற்றுடன் அவர் புதியதாக வழங்கியுள்ள பழுப்பு நிற பெயிண்ட், சுற்றியுள்ள மண் தரைக்கும், செவ்வாய் கிரகத்தில் பார்க் செய்யப்பட்டுள்ளது என்ற வதந்திக்கும் மிகவும் எடுப்பாக அமைந்துவிட்டது. இதுவே இந்த படத்தை ஏகப்பட்டோர் லைக் செய்ய காரணமாகும்.

என்னங்க சொல்றீங்க... செவ்வாய் கிரகத்தில் டெஸ்லா காரா!! இணையத்தில் வைரலாகும் படம்!

அதுமட்டுமில்லாமல் உட்டாவின் பாறைகள் கிட்டத்தட்ட செவ்வாயில் இருக்கும் பாறைகள் போல் காட்சி தருகின்றன. இதிலேயே பலர் ஏமாந்துபோய்விட்டனர் என்று தான் சொல்ல வேண்டும். அதேநேரம் மாடல் ஒய் எலக்ட்ரிக் கார் எவ்வாறு ஆஃப்-ரோடுகளில் செயல்படுகிறது என சிலர் அறிவுப்பூர்வமாகவும், ஜென்கின்ஸை கேள்வி கேட்டுள்ளனர்.

என்னங்க சொல்றீங்க... செவ்வாய் கிரகத்தில் டெஸ்லா காரா!! இணையத்தில் வைரலாகும் படம்!

உண்மையை சொல்ல வேண்டுமென்றால், இந்த டெஸ்லா எலக்ட்ரிக் கார் உட்டாவில் கரடுமுரடான ஆஃப்-ரோடு சாலைகளில் குறைவான வேகத்தில் எவ்வாறு மென்மையாக, இரைச்சலின்றி செயல்படுகிறது என்பதை வீடியோவாக பதிவு செய்யவே இந்த மாடல் ஒய் கார் இங்கு எடுத்த செல்லப்பட்டுள்ளது.

என்னங்க சொல்றீங்க... செவ்வாய் கிரகத்தில் டெஸ்லா காரா!! இணையத்தில் வைரலாகும் படம்!

ஆனால் அது இவ்வாறு வேறு விதத்தில் வைரலாகும் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். இந்தியாவில் டெஸ்லா கார்கள் விற்பனையில் இல்லை. நம் நாட்டிலும் தொழிற்சாலையை கர்நாடகாவில் உருவாக்க டெஸ்லா திட்டமிட்டு வந்தது, ஆனால் அதற்குள் கொரோனா வைரஸ் பரவவே இந்த திட்டம் அப்படியே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

Most Read Articles
மேலும்... #டெஸ்லா #tesla
English summary
Tesla Model Y on Mars EV on off-road trail paints the near-perfect illusion.
Story first published: Wednesday, May 26, 2021, 2:13 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X