Just In
- 9 min ago
மக்களை தைரியமாக எலெக்ட்ரிக் கார் வாங்க வைக்க அதிரடி... கோவையை தொடர்ந்து மற்றொரு நகரிலும் தரமான சம்பவம்...
- 1 hr ago
வாகனத்தில் தனியாக செல்லும்போது மாஸ்க் அணிவது கட்டாயமா, இல்லையா? - மத்திய அரசு விளக்கம்
- 12 hrs ago
சூப்பர்... மஹிந்திரா நிறுவனத்தின் பாதுகாப்பான கார் செய்த தரமான சம்பவம்... என்னனு தெரியுமா?
- 13 hrs ago
ப்பா... பைக்குகள் என்ன இப்படி இருக்கு!! உலகளவில் அறிமுகமான 2021 மோட்டோ குஸ்ஸி வி9 ரோமர் & வி9 பாப்பர்
Don't Miss!
- News
ஜோ பிடன் அமைச்சரவையில் முக்கிய பதவிக்கு அமெரிக்க வாழ் இந்தியர் நியமனம்
- Movies
தமிழில் ரீஎன்ட்ரி.. நெல்சன் இயக்கும் படம்.. 'தளபதி' விஜய் ஜோடியாகிறாரா நடிகை பூஜா ஹெக்டே?
- Sports
அதிரடி மன்னர்களின் அதிரடி அரைசதங்கள்... ஏமாற்றம் அளிக்காத இந்திய அணியின் பேட்டிங்
- Finance
அதிரடி ஆஃபர்.. ரூ.877 ரூபாயில் விமானத்தில் போகலாம்.. இண்டிகோவின் சரவெடி சலுகை..!
- Education
ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Lifestyle
வார ராசிபலன் 17.01.2021 முதல் 23.01.2021 வரை – இந்த ராசிக்காரர்களுக்கு லாபம் நிறைந்த வாரமிது…
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
கை நழுவிய வாய்ப்பு! போட்டியில் வென்றது கர்நாடகா... தமிழ்நாடு, மஹாராஷ்டிரா மாநிலங்களுக்கு டாடா காட்டிய டெஸ்லா!
டெஸ்லா நிறுவனத்தின் மின்சார கார் உற்பத்தி ஆலை எங்கு அமைய இருக்கின்றது என்கிற தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

இந்தியர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளில் ஒன்றாக டெஸ்லா நிறுவனத்தின் மின்சார கார்கள் இருக்கின்றன. பல ஆண்டுகளாக இந்நிறுவனத்தின் தயாரிப்புகள் எதிர்பார்க்கப்பட்டு வந்தநிலையில் இப்போதே இக்காரை பெறுவதற்கான சூழல் உருவாகியிருக்கின்றது. டெஸ்லா நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார்கள் இந்தியாவில் அறிமுகமாக இருப்பதாக மிக சமீபத்தில் உறுதி செய்யப்பட்டது.

இந்த தகவலை டெஸ்லா நிறுவனத்தின் சிஇஓ மற்றும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி ஆகியோர் கடந்த சில வாரங்களுக்கு முன்பு உறுதி செய்தனர். இந்த நிலையில் இந்நிறுவனத்தின் வாகன தயாரிப்பு ஆலை எங்கு அமைய இருக்கின்றது என்பதே பெருத்த சந்தேகமாக இருந்து வந்தது.

உற்பத்தி ஆலையை தொடங்குவதற்கான அழைப்பை பல மாதங்களுக்கு முன்பே தமிழகம் விடுத்திருந்த நிலையில், போட்டியாக மஹாராஷ்டிரா மாநிலமும் இதற்கான அழைப்பை டெஸ்லாவிற்கு கொடுத்திருந்தது. ஆனால், டெஸ்லா நிறுவனமே தங்களின் ஆராய்ச்சி மற்றும் தொழிற்நுட்ப மையத்தை கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் அமைக்க இருப்பதாக சமீபத்தில் அறிவித்திருந்தது.

இது இந்தியர்களுக்கு மேலும் பெருத்த சந்தேகத்தை எழுப்பியது. தமிழகம் மற்றும் மஹாராஷ்டிரா ஆகிய இரு மாநில அரசுகளும் போட்டிக் கொண்டிருக்கின்ற வேலையில் அதன் பார்வை கர்நாடகா பக்கம் திரும்பியது வியப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில்தான் இந்த மூன்று மாநிலங்களில் எந்த மாநிலத்தில் டெஸ்லா உற்பத்தி ஆலை தொடங்கப்படும் என்ற கேள்வியெழும்பியது. இந்த கேள்விக்கே தற்போது முற்று வைக்கப்பட்டுள்ளது. விரைவில் அமெரிக்க மின்சார கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா அதன் எலெக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலையை கர்நாடகாவில் அமைக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

டெஸ்லா பதிவு செய்த விண்ணப்பத்தின் வாயிலாக இந்த தகவல் வெளியாகியுள்ளது. பெங்களூருவில் உள்ள ஆர்&டி யூனிட்டிலேயே இந்நிறுவனம் தயாரிப்பு ஆலையை தொடங்கப்பட இருக்கின்றது. இதுகுறித்த தகவலை கர்நாடகா முதலமைச்சர் எடியூரப்பா தனது டுவிட்டர் பதிவின் வாயிலாக உறுதி செய்திருக்கின்றார்.

இதுகுறித்து அவர் கூறியாதவது, "பசுமை இயக்கத்தை நோக்கிய இந்தியாவின் பயணத்தை கர்நாடகா வழிநடத்தும். மின்சார வாகன உற்பத்தியாளர் டெஸ்லா விரைவில் இந்தியாவில் பெங்களூருவின் ஆர்&டி பிரிவில் தனது செயல்பாடுகளை தொடங்கவுள்ளார். நான் எலன்மஸ்கினை இந்தியா மற்றும் கர்நாடகாவிற்கு வரவேற்கிறேன், அவருக்கு நல்வாழ்த்துக்கள்" என கூறியிருக்கின்றார்.

கடந்த மாதம் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் 2021ம் ஆண்டில் கால் தடம் பதிக்க இருப்பதாக அறிவித்திருந்தார். இந்த நிலையிலேயே உற்பத்தி ஆலை எங்கு அமைய இருக்கின்றது என்கிற தகவல் வெளியாகியுள்ளது.