டோஜ் காயினை பணமாக ஏற்றுக்கொள்கிறதா டெஸ்லா? எலன் மஸ்க்கின் வித்தியாசமான திட்டம்!!

மீம்ஸ்களின் மூலம் பிரபலமான நாயின் படத்தை கொண்ட டோஜ்காய்ன் (Dogecoin)-ஐ பணப்பரிவர்த்தனைக்கு பயன்படுத்த டெஸ்லா நிறுவனம் திட்டமிட்டு வருகிறது. இது தொடர்பான எலன் மஸ்க்கின் டிவிட்டர் பதிவை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

டோஜ் காயினை பணமாக ஏற்றுக்கொள்கிறதா டெஸ்லா? எலன் மஸ்க்கின் வித்தியாசமான திட்டம்!!

உலகிலேயே வணிகத்திற்கு பிட்காயினை ஏற்று கொண்ட முதல் கார் தயாரிப்பு நிறுவனம் டெஸ்லா ஆகும். அமெரிக்க சந்தைகளில் தனது எலக்ட்ரிக் கார்களுக்கான தொகையை வாடிக்கையாளர்கள் பிட்காய்ன் மூலமாக செலுத்தவும் இந்த நிறுவனம் அனுமதிக்கிறது.

டோஜ் காயினை பணமாக ஏற்றுக்கொள்கிறதா டெஸ்லா? எலன் மஸ்க்கின் வித்தியாசமான திட்டம்!!

பிட் காயின் என்பது டிஜிட்டல் பரிவர்த்தனை ஆகும். ஒரு பிட் காயின் தற்போதைய இந்திய ரூபாய் மதிப்பு சுமார் ரூ.41 லட்சத்திற்கும் அதிகமாக உள்ளது. டாலர், யூரோ போன்று இதன் மதிப்பும் அவ்வப்போது மாற்றம் அடைந்து கொண்டே வருகிறது.

டோஜ் காயினை பணமாக ஏற்றுக்கொள்கிறதா டெஸ்லா? எலன் மஸ்க்கின் வித்தியாசமான திட்டம்!!

கிட்டத்தட்ட பிட் காயின் போன்றது தான் டோஜ் காய்ன் ஆகும். இந்த காயினின் படத்தில் இடம் பெற்றுள்ள நாயின் முகத்தை பல மீம்ஸ்களில் பார்த்திருப்போம். உலகம் முழுவதிலும் பிரபலமாகியுள்ள இந்த நாயின் பெயர் ஷிபா இனு ஆகும்.

டோஜ் காயினை பணமாக ஏற்றுக்கொள்கிறதா டெஸ்லா? எலன் மஸ்க்கின் வித்தியாசமான திட்டம்!!

பில்லி மர்க்கஸ் மற்றும் ஜாக்சன் பல்மர் என்ற இருவர் டோஜ்காயினை வடிவமைத்தனர். இந்த நாயின் படம் மீம்களில் நகைச்சுவைக்காக பயன்படுத்தலாம், ஆனால் டோஜ் காயினின் மதிப்பும் பிட் காயினை போன்று வேகமாக உயர்ந்து வருகிறது.

டோஜ் காயினை பணமாக ஏற்றுக்கொள்கிறதா டெஸ்லா? எலன் மஸ்க்கின் வித்தியாசமான திட்டம்!!

பிட் காயினை தயாரிப்பதில் வரைமுறைகள் உள்ளன. ஆனால் டோஜ் காயினை எவ்வளவு வேண்டுமேனாலும் உருவாக்கி கொள்ளலாம். இதுவும் அதிவேகமாக அதிகரித்துவரும் டோஜ் காயின் பயன்பாட்டிற்கு முக்கிய காரணமாகும்.

டோஜ் காயினை பணமாக ஏற்றுக்கொள்கிறதா டெஸ்லா? எலன் மஸ்க்கின் வித்தியாசமான திட்டம்!!

பிட் காயின் பயன்படுத்தவதை ஊக்கப்படுத்துவதில் முதன்மையானவராக டெஸ்லா நிறுவனர் எலன் மஸ்க் உள்ளார். இதனாலேயே தனது வணிகத்திற்கு இவற்றை பயன்படுத்தி வருகிறார். பிட் காயினை போல டோஜ் காயினை ஏற்று கொள்வதை குறித்தும் எலன் மஸ்க் யோசித்து வருகிறார்.

டோஜ் காயினை பணமாக ஏற்றுக்கொள்கிறதா டெஸ்லா? எலன் மஸ்க்கின் வித்தியாசமான திட்டம்!!

இதன் வெளிப்பாடாக சமீபத்தில், டெஸ்லா டோஜ் காயினை ஒரு வகை கட்டணமாக ஏற்று கொள்ள வேண்டுமா என அவர் டிவிட்டரில் கேட்ட கேள்விக்கு, பதிலளித்தவர்களில் சுமார் 71 சதவீதத்தினர் ஏற்று கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

டோஜ் காயினை பணமாக ஏற்றுக்கொள்கிறதா டெஸ்லா? எலன் மஸ்க்கின் வித்தியாசமான திட்டம்!!

மீம்களில் இருந்து தான் தோன்றி நகைச்சுவைக்காக உருவாக்கப்பட்ட டோஜ் காய்ன் க்ரிப்டோகரன்ஸி, குறிப்பாக கடந்த சில மாதங்களில் மிக பெரிய அளவில் வளர்ந்துள்ளது. இந்த ஆண்டு துவக்கத்தில், ஜனவரியில் 1 பில்லியன் டாலர்களாக இருந்த இதன் சந்தை மூலத்தனம் கடந்த ஏப்ரல் மாதம் முடியும் போது சுமார் 45 பில்லியன் டாலர்களாக உயர்ந்துள்ளது.

Most Read Articles
மேலும்... #டெஸ்லா #tesla
English summary
Tesla to accept Dogecoin as payment? Elon Musk tweets to gauge response.
Story first published: Wednesday, May 12, 2021, 16:09 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X