Just In
- 7 hrs ago
17 இன்ச் அலாய் சக்கரங்களுடன், கேமிரா கண்களில் மீண்டும் சிக்கிய 2021 மஹிந்திரா ஸ்கார்பியோ!!
- 9 hrs ago
பிஎஸ்-6 கவாஸாகி நின்ஜா 300 விற்பனைக்கு அறிமுகம்... விலை அதிரடியாக உயர்வு... எவ்ளோனு தெரியுமா?
- 10 hrs ago
ஐரோப்பியர்களுக்கு குறி... ஹூண்டாய் பையான் எஸ்யூவி வெளியீடு... இந்திய சந்தையில் விற்பனைக்கு வருமா?
- 10 hrs ago
ஒரு வழியாக இந்தியாவில் அறிமுகமானது சிஎஃப் மோட்டோ 300என்கே பைக்!! ஷோரூம் விலை ரூ.2.29 லட்சம்
Don't Miss!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 03.03.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் வார்த்தைகளை கவனமாக பயன்படுத்தவும்…
- News
ஒரு இடத்தில்கூட வெல்லவிட மாட்டோம்.. 5 மாநில தேர்தலில்.. பாஜகவுக்கு எதிராக களமிறங்கும் விவசாயிகள்
- Finance
டெஸ்லா-வை மிஞ்சும் அமெரிக்க நிறுவனம்.. பிட்காயின் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி..!
- Movies
கடைக்குட்டி சிங்கம் டு சில்லுனு ஒரு காதல்.. நடிகை இந்துமதி பேட்டி!
- Sports
கட்டைவிரல் இன்னும் சாரியாகலனு ஜடேஜா யோசிப்பார்.. காயத்துல கூட கிண்டலா..கவாஸ்கர் சுவாரஸ்ய பதில்
- Education
ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் தேசிய நல்வாழ்வு மற்றும் குடும்பநல நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
இந்தியாவிலேயே இந்த அம்சத்தை பெறும் முதல் ஹூண்டாய் க்ரெட்டா இதுதான்.. அப்படி என்ன அம்சம் அது? வாங்க பார்ப்போம்!
எந்தவொரு ஹூண்டாய் க்ரெட்டா காரிலும் இடம்பெறாத சிறப்பு அம்சம் ஒன்று தற்போது நாம் பார்க்கவிருக்கும் க்ரெட்டா காரில் இடம்பெற்றிருக்கின்றது. அப்படி என்ன வசதியை இது பெற்றிருக்கின்றது என்பது பற்றிய தகவலைக் கீழே காணலாம்.

ஹூண்டாய் நிறுவனத்தின் பிரபலமான கார் மாடலாகவும், நாட்டின் அதிகம் விற்பனையாகும் எஸ்யூவி கார்களில் ஒன்றாகவும் க்ரெட்டா மாடல் கார் இருக்கின்றது. இது ஓர் மிட்-சைஸ் எஸ்யூவி ரக காரே ஆகும். இந்தியாவில் கியா செல்டோஸ், எம்ஜி ஹெக்டர் மற்றும் டாடா ஹாரியர் ஆகிய கார்களுக்கு செம்ம டஃப் கொடுக்கும் வகையில் விற்பனையில் இருந்து வருகின்றது.

இந்த காரையே இளைஞர் ஆட்டோமேட்டிக் டெயில்கேட் வசதிக்கு அப்கிரேட் செய்திருக்கின்றார். ஹூண்டாய் க்ரெட்டா காரில் எண்ணற்ற வசதிகள் இருக்கின்றன. ஆனால், குறிப்பிட்ட சில அம்சங்கள் மட்டும் விடுபட்டுள்ளன. அந்தவகையில், விலையுயர்ந்த மற்றும் சொகுசு கார்களில் மட்டுமே காணப்படக்கூடிய தானியங்கி டெயில் கேட் வசதி இக்காரில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது.

இந்த அம்சத்தையே மாடிஃபிகேஷன் செயலின் வாயிலாக ஹூண்டாய் க்ரெட்டா காரின் உரிமையாளர் கொண்டு வந்திருக்கின்றார். ஆகையால், நாட்டிலேயே தானியங்கி டெயில் கேட் வசதியைப் பெறும் முதல் காராக தற்போது நாம் பார்த்துக் கொண்டிருக்கும் இந்த க்ரெட்டா கார் மாறியிருக்கின்றது.

இந்த வசதியைப் பெற்றிருப்பது ஹூண்டாய் க்ரெட்டா காரின் ஆரம்ப நிலை வேரியண்ட் ஆகும். புதிய வசதிகளின் காரணமாக இக்கார் உயர்நிலை வேரியண்டில் விற்பனைக்குக் கிடைக்கும் க்ரெட்டா காருக்கே டஃப் கொடுக்கின்ற வகையில் மாறியிருக்கின்றது. அதாவது மாடிஃபிகேஷன் வாயிலாக சேர்க்கப்பட்டிருக்கும் சிறப்பு அணிகலன்கள் இக்காரை விலையுயர்ந்த க்ரெட்டா காராக மாற்றியிருக்கின்றது.

இக்கார் பற்றிய வீடியோவை விக் ஆட்டோ அக்ஸசெரீஸ் எனும் யுட்யூப் சேனல் வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவின் வாயிலாக இந்தியாவிலேயே முதல் முறையாக தானியங்கி டெயில் கேட் வசதியைப் பெற்றிருக்கும் ஹூண்டாய் க்ரெட்டா கார் பற்றிய தகவல் தெரியவந்திருக்கின்றது. தானியங்கி டெயில்கேட் வசதி மட்டுமின்றி இன்னும் சில சிறப்பு வசதிகளும் இக்காரில் சேர்க்கப்பட்டிருக்கின்றன.

அந்தவகையில், ட்ரி-பீம் புரஜெக்டர் எல்இடி ஹெட்லேம்ப், அதிக பார்வைத் திறன் கொண்ட பனி மின் விளக்கு, 17 இன்சிலான ஸ்போக் அலாய் வீல், மேட்ரிக்ஸ் டைப்பிலான ஓஆர்விஎம்-கள், ஆஃப்டர் மார்க்கெட் பம்பர் என பல்வேறு சிறப்பு அணிகலன்கள் சேர்க்கப்பட்டிருக்கின்றன. இதனால், இக்கார் உயர்நிலை வேரியண்டா மாறியிருக்கின்றது.

இதேபோன்று காரின் உட்பகுதியிலும் சில சிறப்பு வேலைப்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. அந்தவகையில்,, ஆம்பிசியன்ட் மின் விளக்கு, இலுமினேடட் ஸ்கஃப் பிளேட், ஸ்டியரிங் வீலில் ஆடியோ கன்ட்ரோல் மற்றும் அதிக சொகுசு வசதிக் கொண்ட இருக்கைகள் என பல்வேறு ஸ்பெஷல் அம்சங்கள் சேர்க்கப்பட்டிருக்கின்றன.

இந்த மாற்றங்கள் அனைத்தும் வசதி மற்றும் தோற்றம் சார்ந்து மட்டுமே செய்யப்பட்டிருக்கின்றது. ஆகையால், இதன் எஞ்ஜின் விஷயத்தில் மாடிஃபிகேஷன் குழுவினர் எதுவும் செய்யவில்லை. எனவே, 1.5 லிட்டர் டீசல் எஞ்ஜினிலேயே இக்கார் காட்சியளிக்கின்றது.
ஹூண்டாய் நிறுவனம் க்ரெட்டா கார பன்முக எஞ்ஜின் தேர்வில் விற்பனைக்கு வழங்கி வருகின்றது. 1.5 லிட்டர் நேட்சுரல்லி அஸ்பயர்ட் பெட்ரோல் எஞ்ஜினை சிவிடி மற்றும் மேனுவல் கியர்பாக்ஸ் வசதியிலும், 1.5 லிட்டர் டீசல் எஞ்ஜினை மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்விலும், 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்ஜினை 7 ஸ்பீடு டிசிடி கியர்பாக்ஸ் தேர்விலும் வழங்கி வருவது குறிப்பிடத்தகுந்தது.