ஏமாற வேண்டாம், இது லம்போர்கினி கார் கிடையாது!! ஹோண்டா சிவிக் செடானின் மறுவடிவம்

லம்போர்கினி கார்கள் உலகளவில் பிரபலமானவை. இதனாலேயே அவற்றிற்கு ரசிகர்கள் ஏராளம். ரசிகர்களில் சிலர் லம்போர்கினி காரை கோடி ரூபாய் கொடுத்து வாங்கும் அளவிற்கு வசதி படைத்திருப்பர்.

ஏமாற வேண்டாம், இது லம்போர்கினி கார் கிடையாது!! ஹோண்டா சிவிக் செடானின் மறுவடிவம்

ஆனால் சிலர் அத்தகைய வசதி இல்லாததினால் எப்போதும் லம்போர்கினி கார் கனவோடு உள்ளனர். இத்தகையவர்களில் சிலரும் நமக்கு வேண்டிய லம்போர்கினி காரை நாமே உருவாக்கி கொண்டால் என்ன யோசிக்க ஆரம்பிக்கின்றனர்.

ஏமாற வேண்டாம், இது லம்போர்கினி கார் கிடையாது!! ஹோண்டா சிவிக் செடானின் மறுவடிவம்

இவ்வாறு யோசித்ததன் விளைவாக ஹோண்டா சிட்டியிலிருந்து உருவான லம்போர்கினி அவெண்டடோர் காரை பற்றி தான் இந்த செய்தியில் பார்க்கவுள்ளோம். ட்ரீம் கஸ்டம்ஸ் இந்தியா என்ற யுடியூப் சேனலில் வெளியிடப்பட்டுள்ள இந்த போலி லம்போர்கினி அவண்டடோர் எஸ்விஜே காரை பார்க்கும் முன், எஸ்விஜே என்றால் என்ன என்று பார்த்து விடுவோம்.

Image Courtesy: Dream customs india /Instagram

எஸ்.வி.ஜே (SVJ) என்பது சூப்பர்வெலோஸ் ஜோடா என்பதன் சுருக்கமாகும். இத்தாலி மொழியில் சூப்பர்வெலோஸ் என்பதற்கு சூப்பர் ஃபாஸ்ட் என்றும், ஜோடா என்பது லம்போரிகினி நிறுவனம் தனது டிராக் வெர்சன் கார்களுக்கு வழங்கிய உயர் அந்தஸ்தாகும்.

ஏமாற வேண்டாம், இது லம்போர்கினி கார் கிடையாது!! ஹோண்டா சிவிக் செடானின் மறுவடிவம்

ஸ்டாண்டர்ட் அவெண்டடோரை காட்டிலும் அவெண்டடோர் எஸ்விஜே கூடுதல் ஆற்றல்மிக்கது, முரட்டுத்தனமான தோற்றத்தை கொண்டது. இதனால் பயன்படுத்தபட்ட கார்கள் சந்தையிலும் அவெண்டடோர் எஸ்விஜே காரின் விலை நிச்சயம் ரூ.5 கோடிக்கு மேல் இருக்கும்.

ஏமாற வேண்டாம், இது லம்போர்கினி கார் கிடையாது!! ஹோண்டா சிவிக் செடானின் மறுவடிவம்

இதன் ஆன்ரோடு விலை ரூ.9.5 கோடி என்ற அளவில் உள்ளது. இவ்வளவு விலை கொடுத்து வாங்கிய முடியாத காரணத்தினால் தான் ஹோண்டா சிவிக்கின் உரிமையாளர் தனது காரை அவெண்டடோர் தோற்றத்திற்கு மாற்றியுள்ளார்.

ஏமாற வேண்டாம், இது லம்போர்கினி கார் கிடையாது!! ஹோண்டா சிவிக் செடானின் மறுவடிவம்

மேலுள்ள வீடியோவில் சிவிக் செடான் கார் எவ்வாறு மஞ்சள் நிற அவெண்டடோரின் தோற்றத்திற்கு மாற்றப்பட்டது என்பது காட்டப்படவில்லை. வேலை அனைத்தும் முடிக்கப்பட்டு கடைசியில் கார் இவ்வாறான தோற்றத்திற்கு வந்துள்ளது என்று மட்டுமே கூறியுள்ளனர்.

ஏமாற வேண்டாம், இது லம்போர்கினி கார் கிடையாது!! ஹோண்டா சிவிக் செடானின் மறுவடிவம்

ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம் இந்த லம்போர்கினி தோற்றம் கொண்ட கார் முன்பு ஹோண்டா சிவிக் காராக இருந்தது என்று சொன்னால் பெரும்பாலானவர்கள் நம்பவே மாட்டார்கள். ஏனெனில் செடான் கார் என்பதால், தாழ்வான உயரம் கணக்கச்சிதமாக இந்த மாடிஃபிகேஷனுக்கு செட் ஆகி உள்ளது.

இந்த ஹோண்டா சிவிக் காரில் பொருத்தப்பட்டுள்ள அத்தனை பேனல்களும் கஸ்டமைஸ்ட் நிறுவனத்தால் பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டுள்ளன. முன் பம்பர், பொனெட், பிரிப்பான் மற்றும் ஃபெண்டர்கள் உள்ளிட்டவை அனைத்தும் கஸ்டம் பாகங்கள் ஆகும். ஹெட்லைட் மற்றும் டெயில்லைட்கள் அச்சு அசல் உண்மையான எஸ்விஜே காரில் வழங்கப்படுவதை போல் உள்ளன.

ஏமாற வேண்டாம், இது லம்போர்கினி கார் கிடையாது!! ஹோண்டா சிவிக் செடானின் மறுவடிவம்

லம்போர்கினி பிராண்டின் அடையாளமான கத்திரிக்கோல் வடிவிலான கதவுகள் இந்த கஸ்டமைஸ்ட் காரிலும் கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால் நுழைவதற்கு தடையாக ஃப்ரேம்கள் உள்ளன. வீடியோவில், எக்ஸாஸ்ட் குழாயில் இருந்து மிரள வைக்கும் சத்தத்தை கேட்க முடிகிறது.

சக்கரங்களுக்கு மேல் பெரிய சக்கர வளைவுகள், அதிகரிக்கப்பட்ட க்ரவுண்ட் க்ளியரென்ஸ் உள்ளிட்டவை கஸ்டமைஸ்ட் பணிகளில் கோட்டை விடப்பட்டவை என கூறலாம். உட்புறத்தில் கஸ்டம் ஸ்டேரிங் சக்கரத்தை கொண்டுள்ள இந்த மாடிஃபை சிவிக் கார், டெஸ்லா போன்றதான தொடுத்திரையை டேஸ்போர்டின் மத்தியில் கொண்டுள்ளது.

Most Read Articles
English summary
This Lamborghini Aventador SVJ is actually a Honda Civic.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X