கார்கள் ஏற்றுமதியில் ஃபோர்டின் இடத்தை பிடித்த ஹூண்டாய்!! வெர்னா செடான் மாடல் முதலிடம்!

கடந்த 2021 செப்டம்பர் மாதத்தில் அதிகளவில் ஏற்றுமதி செய்யப்பட்ட முதல் 10 கார்கள் குறித்த விபரங்கள் தெரிய வந்துள்ளன. அவற்றை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

கார்கள் ஏற்றுமதியில் ஃபோர்டின் இடத்தை பிடித்த ஹூண்டாய்!! வெர்னா செடான் மாடல் முதலிடம்!

கடந்த செப்டம்பர் மாதத்தில் மொத்தம் 58,586 கார்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. அதுவே கடந்த ஆண்டில் இதே செப்டம்பர் மாதத்தில் 39,126 கார்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு இருந்தன.

கார்கள் ஏற்றுமதியில் ஃபோர்டின் இடத்தை பிடித்த ஹூண்டாய்!! வெர்னா செடான் மாடல் முதலிடம்!

அதிகம் ஏற்றுமதி செய்யப்பட்ட முதல் 10 கார்களில் கிட்டத்தட்ட 3 மூன்று மாடல்கள் ஹூண்டாய் நிறுவனத்துடையது ஆகும். மாருதி சுஸுகியின் இரு மாடல்கள் இருக்க, நிஸான், ஃபோக்ஸ்வேகன், ஹோண்டா, ரெனால்ட் மற்றும் கியா போன்ற நிறுவனங்கள் தலா ஒன்றை கொண்டுள்ளன. இந்த டாப்-10 லிஸ்ட்டில் கியா செல்டோஸின் ஏற்றுமதி மட்டுமே 2020 செப்டம்பரை காட்டிலும் குறைந்துள்ளது.

கார்கள் ஏற்றுமதியில் ஃபோர்டின் இடத்தை பிடித்த ஹூண்டாய்!! வெர்னா செடான் மாடல் முதலிடம்!
Rank Car Exports Sep-21 Sep-20 Growth (%)
1 Verna 4,604 2,805 64.14
2 Dzire 4,277 941 354.52
3 Sunny 3,891 0 -
4 Baleno 3,231 2,285 41.40
5 Creta 2,879 2,712 6.16
6 Vento 2,870 2,259 27.05
7 City 2,703 30 8,910
8 Kwid 2,436 127 1,818
9 Seltos 2,154 5,176 -58.38
10 Grand i10 2,034 1,173 73.40
11 Swift 1,950 412 373.30
12 Magnite 1,682 0 -
13 Jimny 1,670 0 -
14 Spresso 1,596 2,621 -39.11
15 Triber/td> 1,593 133 1,098
16 Sonet 1,398 38 3,579
17 Kiger 1,394 0 -
18 Polo 1,344 274 390.51
19 Brezza 1,296 84 1,443
20 Ciaz 1,099 126 772.22
21 Ertiga 1,070 243 340.33
22 Venue 1,016 519 95.76
23 Santro 897 611 46.81
24 Alto 843 609 38.42
25 Aura 807 1,102 26.77
26 Compass 693 925 -25.08
27 Kuv100 458 517 -11.41
28 Elitei20 316 678 -53.39

மற்றவை அனைத்தும் முன்னேற்றத்தை கண்டுள்ளன. இந்தியாவில் ஏற்றுமதி என்றாலே, ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் மாடல்தான் சமீப ஆண்டுகளாக முன்னிலையில் இருந்து வந்தது. ஆனால் இந்தியாவில் இருந்து ஃபோர்டு நடையை கட்டுவதால் கடந்த மாதத்தில் ஈக்கோஸ்போர்ட், ஃபிகோ மற்றும் அஸ்பியர் என எந்தவொரு ஃபோர்டு காரும் ஏற்றுமதி செய்யப்படவில்லை.

கார்கள் ஏற்றுமதியில் ஃபோர்டின் இடத்தை பிடித்த ஹூண்டாய்!! வெர்னா செடான் மாடல் முதலிடம்!

இந்தியாவில் ஈக்கோஸ்போர்டின் தயாரிப்பு நிறுத்தத்தால், கடந்த மாதத்தில் அதிகம் ஏற்றுமதி செய்யப்பட்ட காராக இந்த லிஸ்ட்டில் முதலிடத்தில் ஹூண்டாய் வெர்னா உள்ளது. கடந்த 2021 செப்டம்பரில் மொத்தம் 4,604 வெர்னா கார்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இது 2020 செப்டம்பர் உடன் ஒப்பிடுகையில் 64.14% அதிகமாகும்.

கார்கள் ஏற்றுமதியில் ஃபோர்டின் இடத்தை பிடித்த ஹூண்டாய்!! வெர்னா செடான் மாடல் முதலிடம்!

ஏனெனில் அந்த மாதத்தில் 2,805 வெர்னா கார்களே இந்தியாவில் தயாரிக்கப்பட்டு வெளிநாட்டு சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு இருந்தன. கடந்த மாதத்தில் ஏற்றுமதி செய்யப்பட்ட மொத்த கார்களில் வெர்னாவின் பங்கு மட்டும் 8.59% ஆகும். இந்தியாவில் உள்நாட்டு விற்பனையில் வெர்னா செடானிற்கு ஹோண்டா சிட்டி, மாருதி சியாஸ் உள்ளிட்டவை போட்டியாக விளங்குகின்றன.

கார்கள் ஏற்றுமதியில் ஃபோர்டின் இடத்தை பிடித்த ஹூண்டாய்!! வெர்னா செடான் மாடல் முதலிடம்!

பிரீமியம் செடான் காரான வெர்னாவை கடந்த மே மாதத்தில் தான் ஹூண்டாய் நிறுவனம் அப்டேட் செய்திருந்தது. இந்த அப்கிரேட்களின்படி வெர்னாவின் எஸ்+ மற்றும் எஸ்.எக்ஸ் ட்ரிம்களும் ஆண்ட்ராய்டு ஆட்டோ & ஆப்பிள் கார்ப்ளே வசதியினை பெற்றுள்ளன. இந்த வரிசையில் இரண்டாவது இடத்தில் மாருதி டிசைர் உள்ளது.

கார்கள் ஏற்றுமதியில் ஃபோர்டின் இடத்தை பிடித்த ஹூண்டாய்!! வெர்னா செடான் மாடல் முதலிடம்!

டிசைரின் ஏற்றுமதி எண்ணிக்கையும் கடந்த மாதத்தில் 4 ஆயிரத்தை கடந்துள்ளது. குறைக்கடத்திகளின் பற்றாக்குறையால் கடந்த சில மாதங்களாக வாகனங்களை விற்பனை செய்ய முடியாமல் மாருதி சுஸுகி போராடி வருவதையும், இதன் எதிரொலியாக மாருதி தொழிற்சாலைகளில் தயாரிப்பு பணிகள் மாதத்திற்கு மாதம் 40%-இல் இருந்து 60% வரையில் குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு வருவதையும் பார்த்து வருகிறோம்.

கார்கள் ஏற்றுமதியில் ஃபோர்டின் இடத்தை பிடித்த ஹூண்டாய்!! வெர்னா செடான் மாடல் முதலிடம்!

இருப்பினும் டிசைரின் ஏற்றுமதி 2020 செப்டம்பரை காட்டிலும் கடந்த செப்டம்பரில் சுமார் 354.52% அதிகரித்துள்ளது. ஏனெனில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் ஆயிரத்திற்கும் குறைவான டிசைர் கார்களே ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. மூன்றாவது இடத்தில் ஒரு காலத்தில் இந்தியாவிலும் விற்பனையில் இருந்த நிஸான் சன்னி உள்ளது.

கார்கள் ஏற்றுமதியில் ஃபோர்டின் இடத்தை பிடித்த ஹூண்டாய்!! வெர்னா செடான் மாடல் முதலிடம்!

ஜப்பானிய செடான் காரான இது கடந்த மாதத்தில் 3,891 யூனிட்கள் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. அதுவே 2020 செப்டம்பரில் ஒரு சன்னி கார் கூட ஏற்றுமதி செய்யப்படவில்லை. அடுத்ததாக மாருதி பலேனோ ஹேட்ச்பேக் கார் 3,231 யூனிட்களின் ஏற்றுமதி உடன் நான்காவது இடத்தை பெற்றுள்ளது. 5வது மற்றும் 6வது இடங்களில் ஹூண்டாய் க்ரெட்டா, ஃபோக்ஸ்வேகன் வெண்டோ உள்ளன.

Most Read Articles

மேலும்... #ஏற்றுமதி #export
English summary
Top 10 Car Exports Sep 2021 – Hyundai Verna No 1, Maruti Dzire At No 2.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X