கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் இத்தனை கார்கள் அறிமுகமா? பொலிரோ நியோ முதல் லம்போர்கினி ஹீராகென் எஸ்டிஓ வரை!!

இந்தியாவில் கொரோனா வைரஸ் கட்டுக்குள் உள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த மே மாதத்தில் கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் அதிகமாக இருந்தாலும், அதற்கடுத்த ஜூன் மாதமே பரவலை ஓரளவிற்கு கட்டுக்குள் அரசாங்கம் கொண்டுவந்துவிட்டது.

இதனாலேயே கொரோனா பரவலால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்கள் தொடர்ச்சியாக அறிமுகமாகி வருகின்றன. இந்த வகையில் கடந்த 2021 ஜூலை மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட கார்களில், மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் அறிமுகப்படுத்தப்பட்ட 10 கார்களை பற்றி தான் இந்த செய்தியில் பார்க்கவுள்ளோம்.

கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் இத்தனை கார்கள் அறிமுகமா? பொலிரோ நியோ முதல் லம்போர்கினி ஹீராகென் எஸ்டிஓ வரை!!

1. மஹிந்திரா பொலிரோ நியோ (எக்ஸ்-ஷோரூம் விலை: ரூ.8.48 - 10 லட்சம்)

முன்பு விற்பனையில் இருந்த டியூவி300 மாடலின் ஃபேஸ்லிஃப்ட் வெர்சனாக பொலிரோ நியோவை மஹிந்திரா நிறுவனம் அறிமுகப்படுத்தியது. இந்தியாவில் பொலிரோ வாகனத்திற்கு கிடைக்கும் வரவேற்பால் அதன் பெயரை தனது பெயரில் சேர்த்து கொண்ட இந்த டியூவி300 ஃபேஸ்லிஃப்ட் காரின் முன்பக்கத்தில் முக்கியமாக குறிப்பிடத்தக்க மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.

கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் இத்தனை கார்கள் அறிமுகமா? பொலிரோ நியோ முதல் லம்போர்கினி ஹீராகென் எஸ்டிஓ வரை!!

பொலிரோ நியோவை ஓட்டிப்பார்க்கும் வாய்ப்பு எங்களுக்கு கிடைத்தது. அதன் மூலம் நாங்கள் தெரிந்த கொண்ட விஷயங்களை தொகுப்பு வழங்கியிருந்தோம். அவற்றை காண இங்கே க்ளிக் செய்யவும்.

கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் இத்தனை கார்கள் அறிமுகமா? பொலிரோ நியோ முதல் லம்போர்கினி ஹீராகென் எஸ்டிஓ வரை!!

2. ஆடி இ-ட்ரான் (ரூ.99.99 லட்சம் - ரூ.1.16 கோடி)

உலகளவிலான வெளியீட்டிற்கு சுமார் 2 வருடங்கள் கழித்து ஆடி நிறுவனம் அதன் எலக்ட்ரிக் எஸ்யூவி மாடலான இ-ட்ரானை இந்திய சந்தையில் விற்பனைக்கு களமிறக்கியுள்ளது. கிட்டத்தட்ட 500கிமீ ரேஞ்சை கொண்டுள்ள இந்த ஆடி எலக்ட்ரிக் காருக்கு இந்தியாவில் விற்பனையில் மெர்சிடிஸ்-பென்ஸ் இக்யூசி இ-கார் போட்டியாக உள்ளது. எங்களது ஆடி இ-ட்ரான் காரின் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூவை காண இங்கே க்ளிக் செய்யவும்.

கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் இத்தனை கார்கள் அறிமுகமா? பொலிரோ நியோ முதல் லம்போர்கினி ஹீராகென் எஸ்டிஓ வரை!!

3. லம்போர்கினி ஹூராகென் எஸ்டிஓ (ரூ.4.99 கோடி)

லம்போர்கினி பிராண்ட் கடந்த ஜூலை மாதத்தில் அதன் பின்சக்கர ட்ரைவ் ஸ்போர்ட்ஸ் காரான ஹூராகென் முழு-ட்ராக் வெர்சனை ஹூராகென் எஸ்டிஓ என்கிற பெயரில் அறிமுகப்படுத்தி உள்ளது.

கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் இத்தனை கார்கள் அறிமுகமா? பொலிரோ நியோ முதல் லம்போர்கினி ஹீராகென் எஸ்டிஓ வரை!!

ஹூராகென் எவோ காரை காட்டிலும் பல அம்சங்களில் முன்னோக்கி உள்ள ஹூராகென் எஸ்டிஓ-வின் விலை தான் பெரும்பாலானோருக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த லம்போர்கினி காரை பற்றிய கூடுதல் விபரங்களுக்கு இங்கே க்ளிக் செய்யவும்.

கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் இத்தனை கார்கள் அறிமுகமா? பொலிரோ நியோ முதல் லம்போர்கினி ஹீராகென் எஸ்டிஓ வரை!!

4. ஃபோர்டு ஃபிகோ ஆட்டோமேட்டிக் (ரூ.7.75- 8.20 லட்சம்)

நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் ஃபிகோவில் பெட்ரோல்-ஆட்டோமேட்டிக் தேர்வை ஃபோர்டு நிறுவனம் கொண்டுவந்துள்ளது. இம்முறை சிறிய 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் உடன் (முன்பு 1.5 லிட்டர் பெட்ரோல் வழங்கப்பட்டிருந்தது) 2-பெடல் உள்ளமைவு ஃபோர்டு ஃபிகோ ஹேட்ச்பேக் காரில் வழங்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் இத்தனை கார்கள் அறிமுகமா? பொலிரோ நியோ முதல் லம்போர்கினி ஹீராகென் எஸ்டிஓ வரை!!

ஃபிகோ மட்டுமே அதன் பிரிவில் 6 காற்றுப்பைகளை பெறும் ஒரே மாடல் என்பது குறிப்பிடத்தக்கது. ஃபோர்டு ஃபிகோவின் இந்த புதிய ஆட்டோமேட்டிக் வேரியண்ட் குறித்த கூடுதல் விபரங்களுக்கு இங்கே க்ளிக் செய்யவும்.

கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் இத்தனை கார்கள் அறிமுகமா? பொலிரோ நியோ முதல் லம்போர்கினி ஹீராகென் எஸ்டிஓ வரை!!

5. லேண்ட் ரோவர் டிஃபெண்டர் 90 (ரூ.76.57 லட்சம் - ரூ.1.12 கோடி)

புதிய தலைமுறை லேண்ட் ரோவர் டிஃபெண்டர் வாகனம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு பல மாதங்களாகிவிட்டன. அப்போது அறிமுகம் செய்யப்பட்ட டிஃபெண்டர் அதன் நீண்ட-வீல்பேஸ் (110) வெர்சனாகும்.

கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் இத்தனை கார்கள் அறிமுகமா? பொலிரோ நியோ முதல் லம்போர்கினி ஹீராகென் எஸ்டிஓ வரை!!

குறைந்த வீல்பேஸ் (90) உடனான புதிய தலைமுறை லேண்ட் ரோவர் டிஃபெண்டர் மாடல் கடந்த ஜூலை மாதத்தில் தான் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய லேண்ட் ரோவர் டிஃபெண்டர் காரை பற்றிய கூடுதல் தகவல்களுக்கு இங்கே க்ளிக் செய்யவும்.

கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் இத்தனை கார்கள் அறிமுகமா? பொலிரோ நியோ முதல் லம்போர்கினி ஹீராகென் எஸ்டிஓ வரை!!

6. மெர்சிடிஸ்-பென்ஸ் ஏஎம்ஜி இ53 மற்றும் இ63எஸ் (ரூ.1.02 கோடி & ரூ.1.7 கோடி)

கடந்த மார்ச் மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட மெர்சிடிஸ் இ-கிளாஸின் அடிப்படையிலான இரு ஏஎம்ஜி கார்கள் இ53 மற்றும் இ63 எஸ் என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்த லக்சரி செடான் கார் வரிசையில் இ53 வேரியண்ட் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது இதுவே முதல்முறையாகும். இந்த புதிய மெர்சிடிஸ்-ஏஎம்ஜி கார்களை பற்றிய கூடுதல் தகவல்களுக்கு இங்கே க்ளிக் செய்யவும்.

கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் இத்தனை கார்கள் அறிமுகமா? பொலிரோ நியோ முதல் லம்போர்கினி ஹீராகென் எஸ்டிஓ வரை!!

7. 2021 ரேஞ்ச் ரோவர் எவோக் (ரூ.64.12- 66.60 லட்சம்)

லேண்ட் ரோவரின் பேபி பிராண்ட் எனப்படும் ரேஞ்ச் ரோவரின் எவோக் மாடல் இந்திய சந்தையில் அதன் 2021ஆம் ஆண்டிற்கான அப்கிரேட்களை கடந்த மாதத்தில் பெற்றுள்ளது. இந்த அப்கிரேட்களின்படி, எவோக்கில் சில வசதிகள் நீக்கப்பட்டுள்ளன மற்றும் உட்புற கேபினிற்கு புதிய நிறத்தேர்வுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் இத்தனை கார்கள் அறிமுகமா? பொலிரோ நியோ முதல் லம்போர்கினி ஹீராகென் எஸ்டிஓ வரை!!

8. பிஎம்டபிள்யூ எக்ஸ்1 20ஐ டெக் எடிசன் (ரூ.43 லட்சம்)

பிஎம்டபிள்யூ நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்துவரும் விலை குறைவான எஸ்யூவி காராக எக்ஸ்1 விளங்குகிறது. இதன் டாப் வேரியண்ட்டாக பெட்ரோல் என்ஜின் உடன் எக்ஸ்1 20 டெக் எடிசன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் இத்தனை கார்கள் அறிமுகமா? பொலிரோ நியோ முதல் லம்போர்கினி ஹீராகென் எஸ்டிஓ வரை!!

பிஎம்டபிள்யூ பிராண்டில் புத்தம் புதியதாக சந்தைக்கு வந்த எஸ்யூவி வாகனத்தை வாங்க விரும்புகிறீர்கள் என்றால், எக்ஸ்1 எஸ்.டிரைவ் 20ஐ டெக் எடிசன் காரை பற்றி நமது செய்திதளத்தில் ஒரு கண்ணோட்டம் பார்க்க இங்கே க்ளிக் செய்யவும்.

கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் இத்தனை கார்கள் அறிமுகமா? பொலிரோ நியோ முதல் லம்போர்கினி ஹீராகென் எஸ்டிஓ வரை!!

9. லேண்ட் ரோவர் டிஸ்கவரி ஃபேஸ்லிஃப்ட் (ரூ.88.06 லட்சம்- ரூ.1.20 கோடி)

லேண்ட் ரோவர் பிராண்டில் இருந்து கடந்த மாதத்தில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்ட மூன்றாவது மாடல் டிஸ்கவரியின் புதிய ஃபேஸ்லிஃப்ட் காராகும். இதனால் திருத்தியமைக்கப்பட்ட முன்பக்கத்தை பெற்றுவந்துள்ள புதிய டிஸ்கவரி ஃபேஸ்லிஃப்ட்டில் காற்று வடிக்கட்டி மற்றும் ஜேஎல்ஆரின் அதிநவீன இன்ஃபோடெயின்மெண்ட் அமைப்புகளும் அப்டேட் செய்யப்பட்டுள்ளன.

கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் இத்தனை கார்கள் அறிமுகமா? பொலிரோ நியோ முதல் லம்போர்கினி ஹீராகென் எஸ்டிஓ வரை!!

10. டாடா எக்ஸ்.பிரெஸ்-டி

டிகோர் இவி-யின் ஃபேஸ்லிஃப்ட் மாடலாக கொண்டுவரப்பட்டுள்ள எக்ஸ்.பிரெஸ்-டி எலக்ட்ரிக் கார் டாடா டியாகோ ஹேட்ச்பேக் மற்றும் டிகோர் செடான் என இரண்டின் தோற்றத்தையும் ஒத்திருக்கின்றது. ஒரு குறிப்பிட்ட பயன்பாட்டிற்காக மட்டுமே தற்போதைக்கு விற்பனை செய்யப்படுகின்ற டாடா எக்ஸ்.பிரெஸ்-டி காரில் இரு வெவ்வேறான பேட்டரி தொகுப்பு வழங்கப்படுகிறது.

Most Read Articles
English summary
Top-10 Car Launches Of July 2021, Mahindra Bolero To Lamborghini Huracan STO.
Story first published: Sunday, August 1, 2021, 4:16 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X