கடந்த மாதத்தில் அதிகம் விற்கப்பட்ட காராக மாருதி ஆல்டோ!! எர்டிகா எம்பிவி கார்களின் விற்பனை அதிகரிப்பு!

கடந்த 2021 அக்டோபர் மாதத்தில் அதிகளவில் விற்பனை செய்யப்பட்ட டாப்-10 கார்கள் குறித்த விபரங்கள் தெரிய வந்துள்ளன. அவற்றை பற்றி விரிவாக இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

கடந்த மாதத்தில் அதிகம் விற்கப்பட்ட காராக மாருதி ஆல்டோ!! எர்டிகா எம்பிவி கார்களின் விற்பனை அதிகரிப்பு!

பண்டிகை நாட்கள் நெருங்கிவரும் தற்போதைய சூழ்நிலையில் இந்திய ஆட்டோமொபைல் துறை ஊரடங்குகளுக்கு பிறகான இயல்பு நிலையை அடைந்து வருகிறது. கடந்த அக்டோபர் மாதத்தில் மொத்தம் 2,60,162 கார்கள் நம் நாட்டு சந்தையில் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

கடந்த மாதத்தில் அதிகம் விற்கப்பட்ட காராக மாருதி ஆல்டோ!! எர்டிகா எம்பிவி கார்களின் விற்பனை அதிகரிப்பு!

இருப்பினும் 2021 அக்டோபர் மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை 22.10 சதவீதம் குறைவாகும். ஏனெனில் கடந்த ஆண்டு இதே அக்டோபர் மாதத்தில் மொத்தம் 3,33,981 கார்கள் விற்கப்பட்டு இருந்தன. மொத்த கார்கள் விற்பனையில் மாருதி சுஸுகி நிறுவனத்தின் பங்கு மட்டுமே 42 சதவீதமாகும்.

கடந்த மாதத்தில் அதிகம் விற்கப்பட்ட காராக மாருதி ஆல்டோ!! எர்டிகா எம்பிவி கார்களின் விற்பனை அதிகரிப்பு!

ஏனெனில் இனி நாம் பார்க்கவுள்ள டாப்-10 லிஸ்ட்டில் பெரும்பான்மையான மாடல்கள் இந்த இந்திய-ஜப்பானிய நிறுவனத்துடையதாக தான் உள்ளன. இதற்கடுத்த இடங்களில் ஹூண்டாய், டாடா மற்றும் கியா பிராண்ட்கள் உள்ளன. 2021 அக்டோபரில் அதிகம் விற்பனை செய்யப்பட்ட காராக இந்த லிஸ்ட்டில் முதலிடத்தில் இருப்பது மாருதி ஆல்டோ ஆகும்.

Rank Model Oct-21 Oct-20 Growth (%)
1 Maruti Alto 17,389 17,850 -2.58
2 Maruti Baleno 15,573 21,971 -29.12
3 Maruti Ertiga 12,923 7,748 66.79
4 Maruti WagonR 12,335 18,703 -34.05
5 Hyundai Venue 10,554 8,828 19.55
6 Kia Seltos 10,488 8,900 17.84
7 Maruti Eeco 10,320 13,309 -22.46
8 Tata Nexon 10,096 6,888 46.57
9 Maruti Swift 9,180 24,589 -62.67
10 Tata Punch 8,453 - -
கடந்த மாதத்தில் அதிகம் விற்கப்பட்ட காராக மாருதி ஆல்டோ!! எர்டிகா எம்பிவி கார்களின் விற்பனை அதிகரிப்பு!

கடந்த மாதத்தில் மொத்தம் 17,389 ஆல்டோ கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. 2020 அக்டோபரிலும் (17,850) கிட்டத்தட்ட இதே அளவிலான எண்ணிக்கையில் தான் ஆல்டோ கார்களை மாருதி சுஸுகி நிறுவனம் விற்பனை செய்திருந்தது. இருப்பினும் துல்லியமாக பார்த்தால், ஆல்டோ கார்களின் விற்பனை கடந்த ஆண்டு அக்டோபர் உடன் ஒப்பிடுகையில் 2.5% குறைந்துள்ளது.

கடந்த மாதத்தில் அதிகம் விற்கப்பட்ட காராக மாருதி ஆல்டோ!! எர்டிகா எம்பிவி கார்களின் விற்பனை அதிகரிப்பு!

இதற்கடுத்த மூன்று இடங்களில், அதாவது இந்த லிஸ்ட்டில் நான்காவது இடம் வரையில் மாருதி சுஸுகி தயாரிப்புகளே ஆக்கிரமித்துள்ளன. இந்த வகையில் இரண்டாவது இடத்தில் மாருதியின் பிரீமியம் ஹேட்ச்பேக் காரான பலேனோ உள்ளது. இதன் விற்பனை எண்ணிக்கை 15,573 ஆகும். ஆனால் 2020 அக்டோபர் மாத விற்பனையில் 21,971 பலேனோ கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன.

கடந்த மாதத்தில் அதிகம் விற்கப்பட்ட காராக மாருதி ஆல்டோ!! எர்டிகா எம்பிவி கார்களின் விற்பனை அதிகரிப்பு!

இந்த வகையில் பார்த்தோமேயானால், பலேனோ கார்களின் விற்பனை 29.12 சதவீதம் குறைந்துள்ளது. மூன்றாவது மற்றும் நான்காவது இடங்களில் உள்ள மாருதி சுஸுகி கார்களாக எர்டிகா மற்றும் வேகன்ஆர் உள்ளன. இவற்றின் கடந்த மாத விற்பனை எண்ணிக்கை 12,923 மற்றும் 12,335 ஆகும். இவற்றில் ஒன்றின் விற்பனை 2020 அக்டோபர் மாதத்தை காட்டிலும் அதிரடியாக உயர்ந்துள்ளது.

கடந்த மாதத்தில் அதிகம் விற்கப்பட்ட காராக மாருதி ஆல்டோ!! எர்டிகா எம்பிவி கார்களின் விற்பனை அதிகரிப்பு!

மற்றொன்றின் விற்பனை ஒரேடியாக குறைந்துள்ளது. அதாவது இம்முறை சிறந்த விற்பனை கார்கள் லிஸ்ட்டில் 3வது இடத்தை சொந்தமாக்கியுள்ள எர்டிகா எம்பிவி காரின் விற்பனை ஒரேடியாக 66.79% உயர்ந்துள்ளது. மாருதியின் உயரமான ஹேட்ச்பேக் காரான வேகன்ஆரின் விற்பனை ஏறக்குறைய 34% சரிந்துள்ளது.

கடந்த மாதத்தில் அதிகம் விற்கப்பட்ட காராக மாருதி ஆல்டோ!! எர்டிகா எம்பிவி கார்களின் விற்பனை அதிகரிப்பு!

ஐந்தாவது இடத்தில் ஒரு வழியாக மாருதி சுஸுகி அல்லாத காராக ஹூண்டாய் வென்யூ 10,554 யூனிட்களின் விற்பனை உடன் உள்ளது. அதுவே கடந்த 2021 அக்டோபர் மாதத்தில் 8,828 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தது. இந்த வகையில் வென்யூ கார்களின் விற்பனை 19.55% அதிகரித்துள்ளது. ஆறாவது இடத்தில் உள்ள கியா செல்டோஸ் 10,488 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

கடந்த மாதத்தில் அதிகம் விற்கப்பட்ட காராக மாருதி ஆல்டோ!! எர்டிகா எம்பிவி கார்களின் விற்பனை அதிகரிப்பு!

இதன் விற்பனையும் 2020 அக்டோபரை காட்டிலும் 17.84% உயர்ந்துள்ளது. மாருதி ஈக்கோ இந்த லிஸ்ட்டில் 10,320 யூனிட்களின் விற்பனை உடன் உள்ளது. 10 ஆயிரம் யூனிட்களுக்கு மேல் விற்பனை செய்யப்பட்ட கடைசி மாடலாக டாடா நெக்ஸான் காம்பெக்ட் எஸ்யூவி உள்ளது. டாடா பிராண்டில் இருந்து அதிகம் விற்பனை செய்யப்படும் காராக நெக்ஸான் விளங்குவதை இந்த இடத்தில் குறிப்பிட்டே ஆக வேண்டும்.

Most Read Articles

மேலும்... #விற்பனை #sales
English summary
Top 10 Cars, SUVs Oct 2021 – Alto, WagonR, Nexon, Punch, Ertiga.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X