மாருதி கார்களின் நிலைமை படுமோசம்... தனி ஆளாக கெத்து காட்டிய டாடா நெக்ஸான்... சம்பவம் பண்ணியிருக்கு!

இந்தியாவில் கடந்த நவம்பர் மாதம் அதிகம் விற்பனை செய்யப்பட்ட டாப்-10 கார்களின் பட்டியலை இந்த செய்தியில் பார்க்கலாம்.

மாருதி கார்களின் நிலைமை படுமோசம்... தனி ஆளாக கெத்து காட்டிய டாடா நெக்ஸான்... சம்பவம் பண்ணியிருக்கு!

இந்தியாவில் நடப்பாண்டு நவம்பர் மாதம் அதிகம் விற்பனை செய்யப்பட்ட டாப்-10 கார்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில், மாருதி சுஸுகி வேகன் ஆர் முதலிடத்தை பிடித்துள்ளது. கடந்த 2020ம் ஆண்டு நவம்பர் மாதம் 16,256 ஆக இருந்த மாருதி சுஸுகி வேகன் ஆர் காரின் விற்பனை எண்ணிக்கை நடப்பாண்டு நவம்பர் மாதம் 16,853 ஆக உயர்ந்துள்ளது. இது 3.6 சதவீத வளர்ச்சியாகும்.

மாருதி கார்களின் நிலைமை படுமோசம்... தனி ஆளாக கெத்து காட்டிய டாடா நெக்ஸான்... சம்பவம் பண்ணியிருக்கு!

இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தை மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் பிடித்துள்ளது. கடந்த 2020ம் ஆண்டு நவம்பர் மாதம் 18,498 ஆக இருந்த மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரின் விற்பனை எண்ணிக்கை நடப்பாண்டு நவம்பரில் 14,568 ஆக சரிந்துள்ளது. இது 21 சதவீத வீழ்ச்சியாகும். இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தை மாருதி சுஸுகி ஆல்டோ பிடித்துள்ளது.

மாருதி கார்களின் நிலைமை படுமோசம்... தனி ஆளாக கெத்து காட்டிய டாடா நெக்ஸான்... சம்பவம் பண்ணியிருக்கு!

கடந்த 2020ம் ஆண்டு நவம்பரில் 15,321 ஆக இருந்த மாருதி சுஸுகி ஆல்டோ காரின் விற்பனை எண்ணிக்கை நடப்பாண்டு நவம்பரில் 13,812 ஆக சரிந்துள்ளது. இது 9.8 சதவீத சரிவாகும். இந்த பட்டியலில் முதல் மூன்று இடங்களையும் ஹேட்ச்பேக் ரக கார்கள் பிடித்துள்ள நிலையில், நான்காவது இடத்தை சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி ரக கார் பிடித்துள்ளது.

மாருதி கார்களின் நிலைமை படுமோசம்... தனி ஆளாக கெத்து காட்டிய டாடா நெக்ஸான்... சம்பவம் பண்ணியிருக்கு!

அது மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா ஆகும். கடந்த 2020ம் ஆண்டு நவம்பரில் வெறும் 7,838 ஆக இருந்த மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா காரின் விற்பனை எண்ணிக்கை நடப்பாண்டு நவம்பரில் 10,760 ஆக உயர்ந்துள்ளது. இது 37.2 சதவீத வளர்ச்சியாகும். டாப்-10 பட்டியலில் முதல் நான்கு இடங்களையும் மாருதி சுஸுகி நிறுவன கார்களே பிடித்துள்ளன.

மாருதி கார்களின் நிலைமை படுமோசம்... தனி ஆளாக கெத்து காட்டிய டாடா நெக்ஸான்... சம்பவம் பண்ணியிருக்கு!

ஐந்தாவது இடத்தை ஹூண்டாய் நிறுவனத்தின் மிட்-சைஸ் எஸ்யூவி ரக காரான கிரெட்டா பிடித்துள்ளது. கடந்த 2020ம் ஆண்டு நவம்பரில் 12,017 ஆக இருந்த ஹூண்டாய் கிரெட்டா காரின் விற்பனை எண்ணிக்கை நடப்பாண்டு நவம்பரில் 10,300 ஆக சரிந்துள்ளது. இது 14.2 சதவீத வீழ்ச்சியாகும். இந்த பட்டியலில் ஆறாவது இடத்தை மாருதி சுஸுகி நிறுவனத்தின் பிரீமியம் ஹேட்ச்பேக் ரக காரான பலேனோ பிடித்துள்ளது.

மாருதி கார்களின் நிலைமை படுமோசம்... தனி ஆளாக கெத்து காட்டிய டாடா நெக்ஸான்... சம்பவம் பண்ணியிருக்கு!

கடந்த 2020ம் ஆண்டு நவம்பரில் 17,872 ஆக இருந்த பலேனோ காரின் விற்பனை எண்ணிக்கை நடப்பாண்டு நவம்பரில் 9,931 ஆக குறைந்துள்ளது. இது 44.4 சதவீத வீழ்ச்சியாகும். மாருதி சுஸுகி பலேனோ பிரீமியம் ஹேட்ச்பேக்தான் இந்த பட்டியலில் மிக மோசமான வீழ்ச்சியை சந்தித்த கார் என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

மாருதி கார்களின் நிலைமை படுமோசம்... தனி ஆளாக கெத்து காட்டிய டாடா நெக்ஸான்... சம்பவம் பண்ணியிருக்கு!

அதே சமயம் ஏழாவது இடத்தை பிடித்துள்ள டாடா நெக்ஸான்தான் இந்த பட்டியலில் சதவீத அடிப்படையில் மிகவும் அதிகமான விற்பனை வளர்ச்சியை பதிவு செய்துள்ள கார் ஆகும். கடந்த 2020ம் ஆண்டு நவம்பரில் 6,021 ஆக இருந்த டாடா நெக்ஸான் காரின் விற்பனை எண்ணிக்கை நடப்பாண்டு நவம்பரில் 9,831 ஆக உயர்ந்துள்ளது. இது 63.2 சதவீத வளர்ச்சியாகும்.

மாருதி கார்களின் நிலைமை படுமோசம்... தனி ஆளாக கெத்து காட்டிய டாடா நெக்ஸான்... சம்பவம் பண்ணியிருக்கு!

இந்த பட்டியலில் எட்டாவது இடத்தை மாருதி சுஸுகி ஈக்கோ பிடித்துள்ளது. கடந்த 2020ம் ஆண்டு நவம்பரில் 11,183 ஆக இருந்த மாருதி சுஸுகி ஈக்கோ காரின் விற்பனை எண்ணிக்கை நடப்பாண்டு நவம்பரில் 9,571 ஆக குறைந்துள்ளது. இது 14.4 சதவீத வீழ்ச்சியாகும். இந்த பட்டியலில் ஒன்பதாவது இடத்தை மாருதி சுஸுகி எர்டிகா பிடித்துள்ளது.

மாருதி கார்களின் நிலைமை படுமோசம்... தனி ஆளாக கெத்து காட்டிய டாடா நெக்ஸான்... சம்பவம் பண்ணியிருக்கு!

கடந்த 2020ம் ஆண்டு நவம்பரில் 9,557 ஆக இருந்த மாருதி சுஸுகி எர்டிகா காரின் விற்பனை எண்ணிக்கை நடப்பாண்டு நவம்பரில் 8,752 ஆக குறைந்துள்ளது. இது 8.4 சதவீத வீழ்ச்சியாகும். இந்த பட்டியலில் கடைசி மற்றும் பத்தாவது இடத்தை கியா செல்டோஸ் பிடித்துள்ளது. கடந்த 2020ம் ஆண்டு நவம்பரில் 9,205 ஆக இருந்த கியா செல்டோஸ் காரின் விற்பனை எண்ணிக்கை நடப்பாண்டு நவம்பரில் 8,659 ஆக குறைந்துள்ளது.

மாருதி கார்களின் நிலைமை படுமோசம்... தனி ஆளாக கெத்து காட்டிய டாடா நெக்ஸான்... சம்பவம் பண்ணியிருக்கு!

இது 5.9 சதவீத வீழ்ச்சியாகும். டாப்-10 பட்டியலில் மாருதி சுஸுகி நிறுவனம்தான் முழுமையாக ஆதிக்கம் செலுத்துகிறது. இந்த பட்டியலில் மொத்தம் 7 இடங்களை மாருதி சுஸுகி நிறுவனம் தன்வசப்படுத்தியுள்ளது. அதே நேரத்தில் ஹூண்டாய், டாடா மற்றும் கியா ஆகிய மூன்று நிறுவனங்களும் தலா ஒரு இடத்தை பிடித்துள்ளன.

மாருதி கார்களின் நிலைமை படுமோசம்... தனி ஆளாக கெத்து காட்டிய டாடா நெக்ஸான்... சம்பவம் பண்ணியிருக்கு!

இதற்கிடையே டாப்-10 பட்டியலில் உள்ள பெரும்பாலான கார்கள் வீழ்ச்சியைதான் சந்தித்துள்ளன. இதற்கு செமிகண்டக்டர் சிப் பற்றாக்குறையால் உற்பத்தி பாதிக்கப்பட்டிருப்பது மிகவும் முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது. செமிகண்டக்டர் சிப் பற்றாக்குறை உலகம் முழுவதும் கார் உற்பத்தியை பாதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles

English summary
Top 10 cars in november 2021 maruti suzuki wagonr leads chart
Story first published: Thursday, December 2, 2021, 18:06 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X