செடான் கார்களின் இராஜ்ஜியம் முடிந்துவிட்டது என்று யார் சொன்னது!! இப்போதும் விற்றுத்தள்ளும் மாருதி சுஸுகி!

கடந்த 2021 பிப்ரவரி மாதத்தில் அதிகளவில் விற்பனை செய்யப்பட்ட டாப்-10 செடான் கார்களை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

செடான் கார்களின் இராஜ்ஜியம் முடிந்துவிட்டது என்று யார் சொன்னது!! இப்போதும் விற்றுத்தள்ளும் மாருதி சுஸுகி!

இந்திய பயணிகள் கார் சந்தையில் 2020 பிப்ரவரியை காட்டிலும் கடந்த பிப்ரவரி மாதத்தில் சுமார் 23.1 சதவீதம் அதிகமாக கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இந்த வளர்ச்சிக்கு காம்பெக்ட் மற்றும் நடுத்தர அளவு எஸ்யூவி கார்களின் பங்கு தான் அதிகம் என்றால் அது மிகையில்லை.

செடான் கார்களின் இராஜ்ஜியம் முடிந்துவிட்டது என்று யார் சொன்னது!! இப்போதும் விற்றுத்தள்ளும் மாருதி சுஸுகி!

ஏனெனில் கடந்த சில வருடங்களாக எஸ்யூவி கார்களுக்கே இந்திய வாடிக்கையாளர்கள் அதிக முக்கியத்துவம் தருகின்றனர். ஆனால் ஒரு காலத்தில் இந்திய சாலைகள் முழுக்க செடான் ரக கார்களே உலா வந்து கொண்டிருந்ததை நாம் மறக்க முடியாது.

செடான் கார்களின் இராஜ்ஜியம் முடிந்துவிட்டது என்று யார் சொன்னது!! இப்போதும் விற்றுத்தள்ளும் மாருதி சுஸுகி!

அதற்காக இப்போது எந்த செடான் காரும் விற்பனையில் இல்லை என்று நினைத்துவிட வேண்டாம். ஏனெனில் இப்போதும் மாருதி சுஸுகி, ஹூண்டாய் மற்றும் டாடா போன்ற முன்னணி கார் பிராண்ட்கள் அவற்றின் செடான் கார்களை விற்பனை செய்து வருகின்றனர்.

செடான் கார்களின் இராஜ்ஜியம் முடிந்துவிட்டது என்று யார் சொன்னது!! இப்போதும் விற்றுத்தள்ளும் மாருதி சுஸுகி!

ஆனால் என்ன, 10, 15 வருடங்களுக்கு முன் விற்பனையான அளவிற்கு தற்போது செடான் கார்கள் விற்பனையாகுவதில்லை. கடந்த 2021 பிப்ரவரி மாதத்தில் அதிகளவில் விற்பனை செய்யப்பட்ட செடான் கார் என்று பார்த்தால், இந்த லிஸ்ட்டில் முதலிடத்தில் மாருதி சுஸுகி டிசைர் உள்ளது.

செடான் கார்களின் இராஜ்ஜியம் முடிந்துவிட்டது என்று யார் சொன்னது!! இப்போதும் விற்றுத்தள்ளும் மாருதி சுஸுகி!

கடந்த மாதத்தில் இந்த இந்திய-ஜப்பானிய கூட்டணி தயாரிப்பு வாகனம் சுமார் 11,901 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. வழக்கமாக டிசைர் சற்று அதிகமாக விற்பனை செய்யப்படும் கார் தான் என்றாலும், ஒரு மாதத்தில் 11 ஆயிரம் மாதிரிகளுக்கும் அதிகமாக விற்பனை செய்யப்பட்டிருப்பது உண்மையில் ஆச்சிரியத்தை ஏற்படுத்துகிறது.

செடான் கார்களின் இராஜ்ஜியம் முடிந்துவிட்டது என்று யார் சொன்னது!! இப்போதும் விற்றுத்தள்ளும் மாருதி சுஸுகி!

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இந்த மாருதி செடான் கார் 7,296 யூனிட்கள் விற்கப்பட்டுள்ளன. இந்த வகையில் இதன் விற்பனையில் மாருதி சுஸுகி நிறுவனம் சுமார் 63 சதவீத முன்னேற்றத்தை கண்டுள்ளது. இதற்கு அடுத்து இந்த வரிசையில் இரண்டாவது இடத்தில் உள்ள ஹோண்டா அமேஸிற்கும் டிசைருக்கும் விற்பனை எண்ணிக்கையில் கிட்டத்தட்ட 7 ஆயிரம் அளவில் வித்தியாசம் உள்ளது.

செடான் கார்களின் இராஜ்ஜியம் முடிந்துவிட்டது என்று யார் சொன்னது!! இப்போதும் விற்றுத்தள்ளும் மாருதி சுஸுகி!

ஹோண்டா அமேஸின் கடந்த மாத விற்பனை எண்ணிக்கை 4,939 ஆகும். அதேநேரம் 2020 பிப்ரவரியில் இதனை காட்டிலும் சற்று அதிகமாக 5,814 அமேஸ் செடான் கார்களை ஹோண்டா நிறுவனம் விற்பனை செய்திருந்தது. மூன்றாவது இடத்தை அமேஸை நெருக்கமாக பின் தொடர்ந்தவாறு ஹூண்டாய் எக்ஸ்செண்ட்/ அவ்ரா உள்ளது.

செடான் கார்களின் இராஜ்ஜியம் முடிந்துவிட்டது என்று யார் சொன்னது!! இப்போதும் விற்றுத்தள்ளும் மாருதி சுஸுகி!

2020 பிப்ரவரியில் 4,968 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்த அவ்ராவை கடந்த மாதத்தில் 13.4 சதவீதம் குறைவாக 4,300 யூனிட்கள் ஹூண்டாய் விற்றுள்ளது. இவற்றிற்கு அடுத்து 101 சதவீத வளர்ச்சி உடன் பிரபலமான செடான் கார்களுள் ஒன்றான ஹோண்டா சிட்டி 4வது இடத்தில் உள்ளது.

செடான் கார்களின் இராஜ்ஜியம் முடிந்துவிட்டது என்று யார் சொன்னது!! இப்போதும் விற்றுத்தள்ளும் மாருதி சுஸுகி!

கடந்த பிப்ரவரியில் 2,524 யூனிட்கள் விற்கப்பட்டுள்ள இந்த ஹோண்டா செடான் கார் 2020 பிப்ரவரியில் இதில் பாதி யூனிட்களே விற்பனை செய்யப்பட்டது. அதேபோல், ஐந்தாவது மற்றும் ஆறாவது இடங்களில் உள்ள ஹூண்டாய் வெர்னா மற்றும் டாடா டிகோர் செடான் கார்களும் முந்தைய ஆண்டு பிப்ரவரியை காட்டிலும் கடந்த மாதத்தில் முறையே 259% மற்றும் 148% அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன.

செடான் கார்களின் இராஜ்ஜியம் முடிந்துவிட்டது என்று யார் சொன்னது!! இப்போதும் விற்றுத்தள்ளும் மாருதி சுஸுகி!

இவை இரண்டின் கடந்த மாத விற்பனை எண்ணிக்கை முறையே 2,047 மற்றும் 1,939 ஆகும். ஆனால் ஏழாவது இடத்தில் உள்ள மாருதி சுஸுகி சியாஸின் விற்பனை வருடம்- வருடம் ஒப்பிடுகையில் 40.6 சதவீதம் குறைந்துள்ளது.

செடான் கார்களின் இராஜ்ஜியம் முடிந்துவிட்டது என்று யார் சொன்னது!! இப்போதும் விற்றுத்தள்ளும் மாருதி சுஸுகி!

மாருதி சுஸுகி நிறுவனம் கடந்த மாதத்தில் 1,510 சியாஸ் செடான் கார்களை விற்பனை செய்துள்ளது. இவற்றிற்கு அடுத்து இந்த டாப்-10 லிஸ்ட்டில் கடைசி மூன்று இடங்களில் உள்ள டொயோட்டா யாரிஸ், ஸ்கோடா ரேபிட் மற்றும் ஃபோர்டு அஸ்பியரின் விற்பனை எண்ணிக்கை வழக்கம்போல் 1000-ஐ கூட தொடவில்லை.

Most Read Articles
மேலும்... #விற்பனை #sales
English summary
Top 10 Most Sold Sedans In Feb 2021. Read In Tamil.
Story first published: Saturday, March 6, 2021, 2:22 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X