கடந்த ஏப்ரலில் அதிகளவில் விற்பனையான எஸ்யூவி கார் எது தெரியுமா? தொடரும் ஹூண்டாயின் ஆதிக்கம்...

கடந்த 2021 ஏப்ரல் மாதத்தில் அதிகளவில் விற்பனை செய்யப்பட்ட டாப்-10 எஸ்யூவி கார்களை பற்றிய விபரங்கள் கிடைத்துள்ளன. அவற்றை பற்றி இனி இந்த செய்தியில் பார்க்கலாம்.

கடந்த ஏப்ரலில் அதிகளவில் விற்பனையான எஸ்யூவி கார் எது தெரியுமா? தொடரும் ஹூண்டாயின் ஆதிக்கம்...

ஹூண்டாய் மோட்டார்ஸ் க்ரூப்பில் அங்கமாக விளங்கும் ஹூண்டாய் மற்றும் கியா நிறுவனங்களின் காம்பெக்ட் & நடுத்தர-அளவு எஸ்யூவி கார்கள் இந்த டாப்-10 லிஸ்ட்டை ஆக்கிரமித்துள்ளன.

கடந்த ஏப்ரலில் அதிகளவில் விற்பனையான எஸ்யூவி கார் எது தெரியுமா? தொடரும் ஹூண்டாயின் ஆதிக்கம்...

முதலிடத்தை நாம் அனைவரும் எதிர்பார்த்தப்படி ஹூண்டாய் க்ரெட்டா பிடித்துள்ளது. கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய தலைமுறை க்ரெட்டா தான் ஹூண்டாயின் முதன்மையான மாடலாக விளங்கி வருகிறது.

கடந்த ஏப்ரலில் அதிகளவில் விற்பனையான எஸ்யூவி கார் எது தெரியுமா? தொடரும் ஹூண்டாயின் ஆதிக்கம்...

க்ரெட்டா கார்கள் நமது தமிழகத்தில் உள்ள தயாரிப்பு நிறுவனத்தின் தொழிற்சாலையில் தான் தயாரிக்கப்பட்டு வருகின்றன. கடந்த மாதத்தில் மொத்தம் 12,463 க்ரெட்டா கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

Rank Model April 2021
1 Hyundai Creta 12,463
2 Hyundai Venue 11,245
3 Maruti Vitara Brezza 11,220
4 Kia Seltos 8,086
5 Kia Sonet 7,724
6 Tata Nexon 6,938
7 Mahindra XUV300 4,144
8 Ford Ecosport 3,820
9 Mahindra Scorpio 3,577
10 Mahindra Thar 3,406
கடந்த ஏப்ரலில் அதிகளவில் விற்பனையான எஸ்யூவி கார் எது தெரியுமா? தொடரும் ஹூண்டாயின் ஆதிக்கம்...

இந்த விற்பனை எண்ணிக்கையின் மூலம் இந்த லிஸ்ட்டில் முதலாவது இடத்தை பிடித்துள்ள க்ரெட்டா அனைத்து விதமான கார்களின் விற்பனையில் 6வது இடத்தை பெற்றுள்ளது. இரண்டாவது இடத்திலும் ஹூண்டாய் தயாரிப்பாக வென்யூ காம்பெக்ட் எஸ்யூவி கார் உள்ளது.

கடந்த ஏப்ரலில் அதிகளவில் விற்பனையான எஸ்யூவி கார் எது தெரியுமா? தொடரும் ஹூண்டாயின் ஆதிக்கம்...

கடந்த மாதத்தில் மொத்தம் 11,245 வென்யூ கார்களை ஹூண்டாய் விற்பனை செய்துள்ளது. இதற்கு அடுத்து மூன்றாவது இடத்தில் உள்ள மாருதி விட்டாரா பிரெஸ்ஸாவிற்கு வென்யூவிற்கும் இடையே வெறும் 45 யூனிட்கள் மட்டுமே வித்தியாசம் உள்ளதை பார்க்கலாம்.

கடந்த ஏப்ரலில் அதிகளவில் விற்பனையான எஸ்யூவி கார் எது தெரியுமா? தொடரும் ஹூண்டாயின் ஆதிக்கம்...

நான்காவது மற்றும் ஐந்தாவது இடங்களில் மற்றொரு தென்கொரிய கார் தயாரிப்பு நிறுவனமான கியாவின் செல்டோஸ் மற்றும் சொனெட் கார்கள் முறையே 8,086 மற்றும் 7,724 என்ற விற்பனை எண்ணிக்கைகளுடன் உள்ளன.

கடந்த ஏப்ரலில் அதிகளவில் விற்பனையான எஸ்யூவி கார் எது தெரியுமா? தொடரும் ஹூண்டாயின் ஆதிக்கம்...

இந்த இரு கியா எஸ்யூவி கார்கள் சமீபத்தில் தான் பிராண்டின் புதிய லோகோவுடன் புத்துணர்ச்சியான வெர்சன்களாக அறிமுகப்படுத்தப்பட்டன. ஆறாவது இடத்தை கடந்த 2020ஆம் ஆண்டு துவக்கத்தில் ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேடை பெற்ற டாடா நெக்ஸான் பிடித்துள்ளது.

கடந்த ஏப்ரலில் அதிகளவில் விற்பனையான எஸ்யூவி கார் எது தெரியுமா? தொடரும் ஹூண்டாயின் ஆதிக்கம்...

கடந்த மாதத்தில் மொத்தம் 6,938 நெக்ஸான் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. 7வது மற்றும் 8வது இடங்களை மற்ற காம்பெக்ட் எஸ்யூவி கார்களான மஹிந்திரா எக்ஸ்யூவி300 மற்றும் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் கார்கள் பெற்றுள்ளன.

கடந்த ஏப்ரலில் அதிகளவில் விற்பனையான எஸ்யூவி கார் எது தெரியுமா? தொடரும் ஹூண்டாயின் ஆதிக்கம்...

இந்த டாப்-10 லிஸ்ட்டில் கடைசி இரு இடங்களில் மஹிந்திரா & மஹிந்திராவின் ஸ்கார்பியோ மற்றும் தார் எஸ்யூவி வாகனங்கள் உள்ளன. கடந்த 2020ஆம் ஏப்ரலில் கொரோனா வைரஸ் பரவலின் காரணமாக எந்தவொரு காரும் விற்பனை செய்யப்படவில்லை என்பதால், ஒப்பீடு இல்லை.

Most Read Articles
மேலும்... #விற்பனை #sales
English summary
Top 10 Most Sold SUVs In April 2021. Read Full Details In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X