2017க்கு பிறகு விற்பனையில் முதலிடத்தில் டாடா நெக்ஸான் காம்பெக்ட் எஸ்யூவி!! டாடா தொட்டதெல்லாம் தங்கமா மாறுதே!

கடந்த 2021 செப்டம்பரில் அதிகளவில் விற்பனை செய்யப்பட்ட டாப்-10 சப்-4 மீட்டர் எஸ்யூவி கார்களை பற்றிய விபரங்கள் தெரிய வந்துள்ளன. அவற்றை பற்றி விரிவாக இந்த செய்தியில் பார்ப்போம்.

2017க்கு பிறகு விற்பனையில் முதலிடத்தில் டாடா நெக்ஸான் காம்பெக்ட் எஸ்யூவி!! டாடா தொட்டதெல்லாம் தங்கமா மாறுதே!

இந்திய சந்தையில் சப்காம்பெக்ட் எஸ்யூவி கார்கள் பிரிவு வேகமாக வளர்ந்துவரும் ஒன்றாக உள்ளது. இதனால் தான் இந்த பிரிவில் அனைத்து நிறுவனங்களும் குறைந்தது ஒரு மாடலையாவது கொண்டுள்ளன. எனவே இந்த பிரிவில் போட்டி எப்போதுமே அதிகமாக இருக்கும்.

2017க்கு பிறகு விற்பனையில் முதலிடத்தில் டாடா நெக்ஸான் காம்பெக்ட் எஸ்யூவி!! டாடா தொட்டதெல்லாம் தங்கமா மாறுதே!

கடந்த மாதத்தில் அதிகளவில் விற்பனை செய்யப்பட்ட சப்-4 மீ எஸ்யூவி காராக, அனைவரையும் ஆச்சிரியப்படுத்தும் விதமாக டாடா மோட்டார்ஸின் நெக்ஸான் வந்துள்ளது. கடந்த மாதத்தில் இந்த கார் மொத்தம் 9,211 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

2017க்கு பிறகு விற்பனையில் முதலிடத்தில் டாடா நெக்ஸான் காம்பெக்ட் எஸ்யூவி!! டாடா தொட்டதெல்லாம் தங்கமா மாறுதே!
Rank Model

Sep'21

Sep'20 Growth (%)
1 Tata Nexon 9211 6,007 53.34
2 Hyundai Venue 7,924 8,469 -6.44
3 Kia Sonet 4,454 9,266 -51.93
4 Mahindra XUV300 3,693 3,700 -0.19
5 Nissan Magnite 2,330 0 -
6 Renault Kiger 2,312 0 -
7 Maruti Vitara Brezza 1,874 9,153 -79.53
8 Toyota Urban Cruiser 816 0 -
9 Honda WR-V 687 1,124 -38.88
10 Ford Ecosport 0 3,558 -100.00
- Total 33,301 41,277 -19.32

வழக்கமாக இந்த லிஸ்ட்டில் மாருதி சுஸுகியின் விட்டாரா பிரெஸ்ஸா அல்லது ஹூண்டாய் வென்யூ கார் தான் முதலிடத்தில் இருக்கும். கடந்த சில வருடங்களாக பெரும்பாலும் இவை இரண்டிற்கும் இடையே தான் போட்டி. ஆனால் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில், அப்போதுதான் அறிமுகப்படுத்தப்பட்ட காரணத்தினால், இவை இரண்டையும் முந்திக்கொண்டு கியா சொனெட் முதலிடத்தை பிடித்தது.

2017க்கு பிறகு விற்பனையில் முதலிடத்தில் டாடா நெக்ஸான் காம்பெக்ட் எஸ்யூவி!! டாடா தொட்டதெல்லாம் தங்கமா மாறுதே!

இது எஸ்யூவி கார் பிரியர்களிடையே சற்று கவனத்தை பெற்றது. அதேபோல் கடந்த செப்டம்பரில் டாடா நெக்ஸான் முதலிடத்தை பெற்றுள்ளது. கடந்த 2020 செப்டம்பரில் 6,007 நெக்ஸான் கார்களே விற்பனை செய்யப்பட்டன. ஆனால் கியா சொனெட், விட்டாரா பிரெஸ்ஸா, வென்யூ கார்கள் முறையே 9,266, 9,153 மற்றும் 8,469 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டு முன்னிலையில் இருந்தன.

2017க்கு பிறகு விற்பனையில் முதலிடத்தில் டாடா நெக்ஸான் காம்பெக்ட் எஸ்யூவி!! டாடா தொட்டதெல்லாம் தங்கமா மாறுதே!

2017இல் அறிமுகப்படுத்தப்பட்டதற்கு பிறகு சப்-4மீ எஸ்யூவி கார்களின் விற்பனை லிஸ்ட்டில் டாடா நெக்ஸான் முதலிடத்திற்கு வந்துள்ளது இதுவே முதல்முறையாகும். கடந்த ஆண்டு செப்டம்பரை காட்டிலும் கடந்த 2021 செப்டர்ம்பரில் நெக்ஸானின் விற்பனை கிட்டத்தட்ட 53.34% அதிகரித்துள்ளது. மொத்தமாக விற்பனையான காம்பெக்ட் எஸ்யூவி கார்களின் எண்ணிக்கையில் நெக்ஸான் மட்டும் 27.66 சதவீதத்தை ஆக்கிரமித்துள்ளது.

2017க்கு பிறகு விற்பனையில் முதலிடத்தில் டாடா நெக்ஸான் காம்பெக்ட் எஸ்யூவி!! டாடா தொட்டதெல்லாம் தங்கமா மாறுதே!

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் சில வாரங்களுக்கு முன்பு தான் நெக்ஸான் மற்றும் நெக்ஸான் இவி கார்களின் டார்க் எடிசன்களை விற்பனைக்கு கொண்டுவந்தது. இதற்கு டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு சரியான பலன் கிடைத்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். டாடா நெக்ஸானிற்கு அடுத்து இந்த லிஸ்ட்டில் இரண்டாவது இடத்தில் வென்யூ 7,924 யூனிட்களுடன் உள்ளது.

2017க்கு பிறகு விற்பனையில் முதலிடத்தில் டாடா நெக்ஸான் காம்பெக்ட் எஸ்யூவி!! டாடா தொட்டதெல்லாம் தங்கமா மாறுதே!

மூன்றாவது இடத்தை கியா சொனெட் 4,454 யூனிட்களுடன் பெற்றுள்ளது. இவை இரண்டின் விற்பனையும் 2020 செப்டம்பர் உடன் ஒப்பிடுகையில் கணிசமாக குறைந்துள்ளது. அதிலும் குறிப்பாக 2020 செப்டம்பரில் காம்பெக்ட் எஸ்யூவி கார் விற்பனையில் முதலிடத்தை பிடித்த சொனெட்டின் விற்பனை அதிரடியாக 51.93% சரிந்துள்ளது.

2017க்கு பிறகு விற்பனையில் முதலிடத்தில் டாடா நெக்ஸான் காம்பெக்ட் எஸ்யூவி!! டாடா தொட்டதெல்லாம் தங்கமா மாறுதே!

மஹிந்திரா எக்ஸ்யூவி300 இந்த லிஸ்ட்டில் நான்காவது இடத்தில் உள்ளது. கடந்த மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட எக்ஸ்யூவி300 கார்களின் எண்ணிக்கை 3,693 ஆகும். 2020 செப்டம்பரிலும் கிட்டத்தட்ட இதே எண்ணிக்கையிலான எக்ஸ்யூவி300 கார்கள் தான் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. 5வது மற்றும் 6வது இடங்களில் நிஸான் மேக்னைட் மற்றும் ரெனால்ட் கைகர் காம்பெக்ட் எஸ்யூவி கார்கள் உள்ளன.

2017க்கு பிறகு விற்பனையில் முதலிடத்தில் டாடா நெக்ஸான் காம்பெக்ட் எஸ்யூவி!! டாடா தொட்டதெல்லாம் தங்கமா மாறுதே!

2020 செப்டம்பர் மாதத்திற்கு பிறகு கடந்த ஆண்டு இறுதியில் இருந்து விற்பனை செய்யப்படும் இவை இரண்டும் முறையே 2,330 யூனிட்களும், 2,312 யூனிட்களும் விற்பனை செய்யப்பட்டுள்ளன. என்ன இன்னும் மாருதி சுஸுகியின் காம்பெக்ட் எஸ்யூவி காரை பற்றி கூறவில்லையே, என நீங்கள் கேட்பது புரிகிறது. கடந்த மாத விற்பனையில் 7வது இடத்தை தான் விட்டாரா பிரெஸ்ஸா பிடித்துள்ளது.

Most Read Articles
மேலும்... #விற்பனை
English summary
Top 10 Selling Sub-4M SUVs In September 2021. Tata Nexon No.1 For The First Time After 2017 Debut.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X