சோப்பு டப்பாக்களை நம்பி போகாதீங்க... இந்தியாவின் பாதுகாப்பான கார்கள் இவைதான்... டாடாவை அடிச்சுக்க ஆளே இல்ல!

குளோபல் என்சிஏபி மோதல் சோதனைகளில் முழுமையாக 5 நட்சத்திர பாதுகாப்பு ரேட்டிங் பெற்றுள்ள 4 'மேட் இன் இந்தியா' கார்கள் குறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

சோப்பு டப்பாக்களை நம்பி போகாதீங்க... இந்தியாவின் பாதுகாப்பான கார்கள் இவைதான்... டாடாவை அடிச்சுக்க ஆளே இல்ல!

இந்தியாவில் முன்பெல்லாம் கார் வாங்குபவர்கள் டிசைன், விலை மற்றும் மைலேஜ் போன்ற அம்சங்களுக்குதான் அதிக முக்கியத்துவம் தருவார்கள். ஆனால் வாடிக்கையாளர்கள் அதிகம் கவனிக்கும் விஷயங்களில் தற்போது பாதுகாப்பும் சேர்ந்துள்ளது. எனவே பாதுகாப்பான கார்களை தயாரிப்பதற்கு, வாகன உற்பத்தி நிறுவனங்கள் அதிக முக்கியத்துவம் வழங்குகின்றன.

சோப்பு டப்பாக்களை நம்பி போகாதீங்க... இந்தியாவின் பாதுகாப்பான கார்கள் இவைதான்... டாடாவை அடிச்சுக்க ஆளே இல்ல!

குறிப்பாக இந்தியாவை சேர்ந்த டாடா மற்றும் மஹிந்திரா ஆகிய இரண்டு நிறுவனங்களும் போட்டி போட்டு கொண்டு தங்களது கார்களை பாதுகாப்பு விஷயத்தில் மேம்படுத்தி வருகின்றன. குளோபல் என்சிஏபி (Global NCAP) அமைப்பின் மோதல் சோதனைகளில் டாடா மற்றும் மஹிந்திரா நிறுவனங்களின் கார்கள் நட்சத்திரங்களாக ஜொலிக்கின்றன.

சோப்பு டப்பாக்களை நம்பி போகாதீங்க... இந்தியாவின் பாதுகாப்பான கார்கள் இவைதான்... டாடாவை அடிச்சுக்க ஆளே இல்ல!

கார்களை மோதல் சோதனைகளுக்கு உட்படுத்தி, பாதுகாப்பு ரேட்டிங்கை வழங்கும் பணியை குளோபல் என்சிஏபி அமைப்பு மேற்கொண்டு வருகிறது. இந்த மோதல் சோதனைகளில் 5 நட்சத்திர பாதுகாப்பு ரேட்டிங்கை பெறும் கார்கள் மிகவும் பாதுகாப்பானவையாக கருதப்படுகின்றன. ஆனால் அனைத்து கார்களாலும் 5 நட்சத்திர பாதுகாப்பு ரேட்டிங்கை முழுமையாக பெற்று விட முடியாது.

சோப்பு டப்பாக்களை நம்பி போகாதீங்க... இந்தியாவின் பாதுகாப்பான கார்கள் இவைதான்... டாடாவை அடிச்சுக்க ஆளே இல்ல!

இதுவரை 4 'மேட் இன் இந்தியா' கார்கள் மட்டுமே குளோபல் என்சிஏபி மோதல் சோதனைகளில் முழுமையாக 5 நட்சத்திர பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்றுள்ளன. டாடா நெக்ஸான், டாடா அல்ட்ராஸ், டாடா பன்ச் மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி300 ஆகியவைதான் அந்த 4 கார்கள். இந்த 4 கார்கள் பெற்ற ரேட்டிங் மற்றும் ஸ்கோர் செய்த புள்ளிகள் குறித்த தகவல்களை இந்த செய்தியில் தொகுத்து வழங்கியுள்ளோம்.

சோப்பு டப்பாக்களை நம்பி போகாதீங்க... இந்தியாவின் பாதுகாப்பான கார்கள் இவைதான்... டாடாவை அடிச்சுக்க ஆளே இல்ல!

டாடா நெக்ஸான் (Tata Nexon)

இந்திய கார்கள் பாதுகாப்பு இல்லாதவை என்ற அவப்பெயரை முதன் முதலில் தகர்த்து எறிந்த கார் டாடா நெக்ஸான். ஆம், குளோபல் என்சிஏபி மோதல் சோதனைகளில் 5 நட்சத்திர பாதுகாப்பு ரேட்டிங்கை முழுமையாக தன்வசப்படுத்திய முதல் 'மேட் இன் இந்தியா' கார் என்ற பெருமை டாடா நெக்ஸானைதான் சேரும்.

சோப்பு டப்பாக்களை நம்பி போகாதீங்க... இந்தியாவின் பாதுகாப்பான கார்கள் இவைதான்... டாடாவை அடிச்சுக்க ஆளே இல்ல!

குளோபல் என்சிஏபி மோதல் சோதனைகளில் பெரியவர்களுக்கான பாதுகாப்பில் 5 நட்சத்திரங்களையும், குழந்தைகளுக்கான பாதுகாப்பில் 3 நட்சத்திரங்களையும் டாடா நெக்ஸான் பெற்றுள்ளது. பெரியவர்களுக்கான பாதுகாப்பில் 17க்கு 16.06 புள்ளிகளையும், குழந்தைகளுக்கான பாதுகாப்பில் 49க்கு 25 புள்ளிகளையும் டாடா நெக்ஸான் ஸ்கோர் செய்தது.

சோப்பு டப்பாக்களை நம்பி போகாதீங்க... இந்தியாவின் பாதுகாப்பான கார்கள் இவைதான்... டாடாவை அடிச்சுக்க ஆளே இல்ல!

இது இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி ரக கார் ஆகும். சிறப்பான பாதுகாப்பு ரேட்டிங் காரணமாக இந்தியாவில் டாடா நெக்ஸான் காரின் விற்பனை அமோகமாக இருந்து வருகிறது. நெக்ஸான் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனையும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனை செய்து வருகிறது.

சோப்பு டப்பாக்களை நம்பி போகாதீங்க... இந்தியாவின் பாதுகாப்பான கார்கள் இவைதான்... டாடாவை அடிச்சுக்க ஆளே இல்ல!

டாடா அல்ட்ராஸ் (Tata Altroz)

நெக்ஸான் காரை தொடர்ந்து குளோபல் என்சிஏபி மோதல் சோதனைகளில் முழுமையாக 5 நட்சத்திர பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்ற டாடா நிறுவனத்தின் இரண்டாவது கார் என்ற பெருமை அல்ட்ராஸ் காருக்கு உள்ளது. இது இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் பிரீமியம் ஹேட்ச்பேக் ரக கார்களில் ஒன்றாகும்.

சோப்பு டப்பாக்களை நம்பி போகாதீங்க... இந்தியாவின் பாதுகாப்பான கார்கள் இவைதான்... டாடாவை அடிச்சுக்க ஆளே இல்ல!

குளோபல் என்சிஏபி மோதல் சோதனைகளில் பெரியவர்களுக்கான பாதுகாப்பில் 5 நட்சத்திரங்களையும், குழந்தைகளுக்கான பாதுகாப்பில் 3 நட்சத்திரங்களையும் டாடா அல்ட்ராஸ் கார் பெற்றுள்ளது. பெரியவர்களுக்கான பாதுகாப்பில் 17க்கு 16.13 புள்ளிகளையும், குழந்தைகளுக்கான பாதுகாப்பில் 49க்கு 29 புள்ளிகளையும் டாடா அல்ட்ராஸ் ஸ்கோர் செய்துள்ளது.

சோப்பு டப்பாக்களை நம்பி போகாதீங்க... இந்தியாவின் பாதுகாப்பான கார்கள் இவைதான்... டாடாவை அடிச்சுக்க ஆளே இல்ல!

டாடா பன்ச் (Tata Punch)

நெக்ஸான் மற்றும் அல்ட்ராஸ் ஆகிய கார்களை தொடர்ந்து குளோபல் என்சிஏபி மோதல் சோதனைகளில் முழுமையாக 5 நட்சத்திர பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்ற டாடா நிறுவனத்தின் மூன்றாவது கார் இது. இதன் மூலம் 5 நட்சத்திர பாதுகாப்பு ரேட்டிங் பெற்ற மூன்று 'மேட் இன் இந்தியா' கார்களை விற்பனை செய்யும் ஒரே நிறுவனம் என்ற பெருமையை டாடா பெற்றுள்ளது.

சோப்பு டப்பாக்களை நம்பி போகாதீங்க... இந்தியாவின் பாதுகாப்பான கார்கள் இவைதான்... டாடாவை அடிச்சுக்க ஆளே இல்ல!

குளோபல் என்சிஏபி மோதல் சோதனைகளில் பெரியவர்களுக்கான பாதுகாப்பில் 5 நட்சத்திரங்களையும், குழந்தைகளுக்கான பாதுகாப்பில் 4 நட்சத்திரங்களையும் டாடா பன்ச் பெற்றுள்ளது. பெரியவர்களுக்கான பாதுகாப்பில் 17க்கு 16.45 புள்ளிகளையும், குழந்தைகளுக்கான பாதுகாப்பில் 49க்கு 40.89 புள்ளிகளையும் டாடா பன்ச் கார் ஸ்கோர் செய்துள்ளது.

சோப்பு டப்பாக்களை நம்பி போகாதீங்க... இந்தியாவின் பாதுகாப்பான கார்கள் இவைதான்... டாடாவை அடிச்சுக்க ஆளே இல்ல!

மஹிந்திரா எக்ஸ்யூவி300 (Mahindra XUV300)

குளோபல் என்சிஏபி மோதல் சோதனைகளில் முழுமையாக 5 நட்சத்திர பாதுகாப்பு ரேட்டிங் பெற்ற மஹிந்திரா நிறுவனத்தின் ஒரே கார் இதுதான். டாடா நெக்ஸானை போல், மஹிந்திரா எக்ஸ்யூவி300 காரும், சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி ரகத்தை சேர்ந்ததுதான். மஹிந்திரா எக்ஸ்யூவி300 காரின் விற்பனையும் சிறப்பாக இருந்து வருகிறது.

சோப்பு டப்பாக்களை நம்பி போகாதீங்க... இந்தியாவின் பாதுகாப்பான கார்கள் இவைதான்... டாடாவை அடிச்சுக்க ஆளே இல்ல!

குளோபல் என்சிஏபி மோதல் சோதனைகளில் பெரியவர்களுக்கான பாதுகாப்பில் 5 நட்சத்திரங்களையும், குழந்தைகளுக்கான பாதுகாப்பில் 4 நட்சத்திரங்களையும் மஹிந்திரா எக்ஸ்யூவி300 கார் பெற்றுள்ளது. பெரியவர்களுக்கான பாதுகாப்பில் 17க்கு 16.42 புள்ளிகளையும், குழந்தைகளுக்கான பாதுகாப்பில் 49க்கு 37.44 புள்ளிகளையும் மஹிந்திரா எக்ஸ்யூவி300 ஸ்கோர் செய்துள்ளது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Top 4 safest cars in india as rated by global ncap tata punch mahindra xuv300 tata altroz tata nexon
Story first published: Thursday, October 14, 2021, 19:14 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X