பெட்ரோல்-டீசல் விலையுயர்வு பற்றிய கவலைய விடுங்க... இந்த கார்கள் சூப்பரா மைலேஜ் தரும்... டாப் 5 மைலேஜ் கார்கள்!

பெட்ரோல் - டீசல் விலையுயர்வைக் கண்டு உறைஞ்சி போயிருக்கீங்களா?, இதோ ரூ. 10 லட்சத்திற்கும் குறைவான விலையில் அதிக மைலேஜ் தரும் டாப் 5 கார்களின் பட்டியல். விலை மற்றும் மைலேஜ் பற்றிய முழு விபரத்தையும் இப்பதிவில் பார்க்கலாம்.

பெட்ரோல்-டீசல் விலையுயர்வு பற்றிய கவலைய விடுங்க... இந்த கார்கள் சூப்பரா மைலேஜ் தரும்... டாப் 5 மைலேஜ் கார்கள்!

பெட்ரோல், டீசல் விலை விண்ணை முட்டுமளவிற்கு உயர்ந்துக் கொண்ட சென்றுக் கொண்டிருக்கின்றது. இதனால் மக்கள் பெரும் வேதனைக்கும், அவஸ்தைக்கும் ஆளாகி வருகின்றனர். குறிப்பாக, தினசரி வாகனங்களைப் பயன்படுத்துவோர் சொல்லிடங்கா இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர். எனவே, இதில் மீள்வதற்கான முயற்யில் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

பெட்ரோல்-டீசல் விலையுயர்வு பற்றிய கவலைய விடுங்க... இந்த கார்கள் சூப்பரா மைலேஜ் தரும்... டாப் 5 மைலேஜ் கார்கள்!

பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு மாற்றாக சிஎன்ஜி, எலெக்ட்ரிக் ஆகியவற்றால் இயங்கக் கூடிய வாகனங்கள் பயன்பாட்டில் வர தொடங்கியிருக்கின்றன. இருப்பினும், இவற்றிற்கான அடிப்படை வசதிகள் இன்னும் முழுமடையாத காரணங்களால் மக்கள் இவற்றின் பக்கம் மாற தயக்கம் காட்டுகின்றனர். எனவேதான் பெட்ரோல், டீசல் விலை விண்ணைத் தொட்டாலும் பரவாயில்லை என நினைத்து ஐசிஇ எஞ்ஜின் கொண்ட வாகனங்களை வாங்கி வருகின்றனர்.

பெட்ரோல்-டீசல் விலையுயர்வு பற்றிய கவலைய விடுங்க... இந்த கார்கள் சூப்பரா மைலேஜ் தரும்... டாப் 5 மைலேஜ் கார்கள்!

என்னதான் ஐசிஇ எஞ்ஜின் கொண்ட வாகனங்களை அவர்கள் வாங்கினாலும், அதிக மைலேஜை பெற வேண்டும் என்பதே அவர்களின் இப்போதைய எண்ணமாக இருக்கின்றது. இத்தகையோருக்கு உதவும் விதமாக நாட்டில் ரூ. 10 லட்சத்திற்கும் குறைவான விலையில் விற்பனைக்குக் கிடைக்கும் அதிக மைலேஜ் தரும் வாகனங்களைப் பற்றிய தகவலை இப்பதிவில் பார்க்க இருக்கின்றோம்.

பெட்ரோல்-டீசல் விலையுயர்வு பற்றிய கவலைய விடுங்க... இந்த கார்கள் சூப்பரா மைலேஜ் தரும்... டாப் 5 மைலேஜ் கார்கள்!

மாருதி சுசுகி டிசையர் ஏஎம்டி - எம்டி

விலை: ரூ. 5.94 லட்சம் - ரூ 8.90 லட்சம்

நாம் பார்க்கிவிருக்கும் அதிக மைலேஜ் தரும் வாகனங்களின் பட்டியலில் மாருதி சுசுகி நிறுவனத்திந் டிசையர் காரே முதல் இடத்தைப் பிடித்திருக்கின்றது. இக்கார், ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வு கொண்ட வேரியண்ட் ஒரு லிட்டருக்கு 24.12 கிமீ மைலேஜை வழங்கும். இதேபோன்று, மேனுவல் கியர்பாக்ஸைக் கொண்ட வேரியண்ட் அதிகபட்சமாக ஒரு லிட்டருக்கு 23.26 கிமீ மைலேஜை வழங்கும். இக்கார் ரூ. 5.94 லட்சம் தொடங்கி ரூ. 8.90 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

பெட்ரோல்-டீசல் விலையுயர்வு பற்றிய கவலைய விடுங்க... இந்த கார்கள் சூப்பரா மைலேஜ் தரும்... டாப் 5 மைலேஜ் கார்கள்!

மாருதி சுசுகி பலினோ மற்றும் டொயோட்டா க்ளான்ஸா:

விலை: ரூ. 5.90 லட்சம்- ரூ. 9.10 லட்சம் (பலினோ), ரூ. 7.18 லட்சம் - ரூ. 9.10 லட்சம் (க்ளான்ஸா).

மாருதி சுசுகி பலினோ காரையே டொயோட்டா நிறுவனம் ரீபேட்ஜ் செய்து க்ளான்ஸா எனும் பெயரில் விற்பனைச் செய்து வருகின்றது. ஆனால், இரு நிறுவனங்களும் சற்று வித்தியாசமான விலையில் விற்பனைச் செய்து வருகின்றன. அந்தவகையில், மாருதியின் பலினோ கார் ரூ. 5.90 லட்சம் தொடங்கி ரூ. 9.10 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்குக் கிடைத்து வருகின்றது.

பெட்ரோல்-டீசல் விலையுயர்வு பற்றிய கவலைய விடுங்க... இந்த கார்கள் சூப்பரா மைலேஜ் தரும்... டாப் 5 மைலேஜ் கார்கள்!

அதேசமயம், டொயோட்டாவின் க்ளான்ஸா கார் ரூ. ரூ. 7.18 லட்சம் தொடங்கி ரூ. 9.10 லட்சம் வரையிலான விலையில் விற்கப்பட்டு வருகின்றது. இது ஓர் பிரீமியம் தர காராகும். இரு விதமான பெயர் மற்றும் மாறுபட்ட விலையில் இக்கார் விற்பனைக்குக் கிடைத்து வந்தாலும் இதன் மைலேஜ் திறன் என்னமோ ஒரே மாதிரியானதாக காட்சியளிக்கின்றது. இக்கார் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 23.87 கிமீ வரை பயணிக்கும்.

பெட்ரோல்-டீசல் விலையுயர்வு பற்றிய கவலைய விடுங்க... இந்த கார்கள் சூப்பரா மைலேஜ் தரும்... டாப் 5 மைலேஜ் கார்கள்!

மாருதி சுசுகி ஸ்விஃப்ட்:

விலை: ரூ. 5.73 - ரூ. 8.41 லட்சம்.

இந்திய இளைஞர்களின் மிகவும் பிடித்தமான கார் மாடல்களில் ஸ்விஃப்ட் காரும் ஒன்று. இது ஓர் ஹேட்ச்பேக் ரக காராகும். இக்காரை இந்திய இளைஞர்கள் ஈ போல் மொய்ப்பதற்கு அதன் கவர்ச்சிகரமா தோற்றம் மற்றும் திறனே முக்கிய காரணமாகும்.

பெட்ரோல்-டீசல் விலையுயர்வு பற்றிய கவலைய விடுங்க... இந்த கார்கள் சூப்பரா மைலேஜ் தரும்... டாப் 5 மைலேஜ் கார்கள்!

ஸ்போர்ட்ஸ் கார்களுக்கு இணையான தோற்றம் மற்றும் வசதிகளைக் கொண்டதே ஸ்விஃப்ட். எனவேதான் இக்காரை இளைஞர்கள் அதிகம் வாங்குகின்றனர். இந்த கார் ஆட்டோமேட்டிக் மற்றும் மேனுவல் என இருவிதமான கியர்பாக்ஸ் தேர்வில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதில், ஆட்டோமேட்டிக் வேரியண்ட் அதிகபட்சமாக ஒரு லிட்டருக்கு 23.76 கிமீட்டரையும், மேனுவல் வேரியண்ட் ஒரு லிட்டருக்கு 23.20 கிமீட்டரையும் மைலேஜாக வழங்குகின்றது.

பெட்ரோல்-டீசல் விலையுயர்வு பற்றிய கவலைய விடுங்க... இந்த கார்கள் சூப்பரா மைலேஜ் தரும்... டாப் 5 மைலேஜ் கார்கள்!

மாருதி சுசுகி ஆல்டோ:

விலை: ரூ. 2.99 லட்சம் - ரூ. 4.48 லட்சம்

இந்தியாவின் அதிகம் விற்பனையாகும் கார் மாருதி ஆல்டோ. இக்காரின் சிறிய உருவம் மற்றும் குறைந்த விலை ஆகியவையே பல தசாப்தங்களைக் கடந்தும் நாட்டின் அதிகம் விற்பனையாகும் காராக நிலை நிறுத்தி வருகின்றது. இக்கார், ரூ. 2.99 லட்சம் தொடங்கி ரூ. 4.48 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இந்த சிறிய உருவம் கொண்ட ஆல்டோ ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 22.05 கிமீ தூரம் வரை பயணிக்கும்.

பெட்ரோல்-டீசல் விலையுயர்வு பற்றிய கவலைய விடுங்க... இந்த கார்கள் சூப்பரா மைலேஜ் தரும்... டாப் 5 மைலேஜ் கார்கள்!

ரெனால்ட் க்விட்:

மாருதி சுசுகி ஆல்டோவிற்கு அடுத்தப்படியான இடத்தை ரெனால்ட் க்விட் பிடித்திருக்கின்றது. இக்கார் மைலேஜ் வழங்கும் திறனில் மட்டுமில்லைங்க விலையிலும் ஆல்டோவிற்கு அடுத்த இடத்தைப் பிடித்திருக்கின்றது. ரெனால்ட் க்விட் ஆரம்ப நிலை மாடலின் விலை ரூ. 3.12 லட்சம் ஆகும். இதன் உச்சபட்ச விலை ரூ. 5.31 லட்சம்.

பெட்ரோல்-டீசல் விலையுயர்வு பற்றிய கவலைய விடுங்க... இந்த கார்கள் சூப்பரா மைலேஜ் தரும்... டாப் 5 மைலேஜ் கார்கள்!

இத்தகையக் குறைந்த விலை மற்றும் அதிக சிறப்பம்சங்களை இக்கார் கொண்டிருக்கின்றன காரணத்தினாலயே மாருதி ஆல்டோவிற்கு இது போட்டியாக அமைந்திருக்கின்றது. மைலேஜ் திறனிலும் இக்கார் லேசான டஃபை வழங்குகின்றது. இந்த காரின் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் வேரியண்ட் ஒரு லிட்டருக்கு அதிகபட்சமாக 22 கிமீட்டரையும், மேனுவல் கியர்பாக்ஸ் வேரியணட் அதிகபட்சமாக 21.74 கிமீட்டர் மைலேஜையும் வழங்கும்.

பெட்ரோல்-டீசல் விலையுயர்வு பற்றிய கவலைய விடுங்க... இந்த கார்கள் சூப்பரா மைலேஜ் தரும்... டாப் 5 மைலேஜ் கார்கள்!

மேற்கூறிய கார்களே நாட்டின் அதிகம் மைலேஜ் தரும் டாப் 5 கார்கள் ஆகும். மேலும், மேலே நாம் பார்த்த அனைத்து கார்களும் பெட்ரோலால் இயங்கக் கூடிய கார்களைப் பற்றிய தகவலாகும். தொடர்ந்து, விலைகள் அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் மதிப்பாகும். ஆகையால், ஆன்-ரோடில் இக்கார்கள் சற்று கூடுதல் விலையிலேயே விற்பனைக்குக் கிடைக்கும். மேலே குறிப்பிடப்பட்ட மைலேஜ் விபரங்கள் அனைத்தும் அராய் (ARAI) அமைப்பின் அதிகாரப்பூர்வ தகவல் என்பது குறிப்பிடத்தகுந்தது.

பெட்ரோல்-டீசல் விலையுயர்வு பற்றிய கவலைய விடுங்க... இந்த கார்கள் சூப்பரா மைலேஜ் தரும்... டாப் 5 மைலேஜ் கார்கள்!

அதிக மைலேஜே தரும் டாப் 10 கார்கள் பற்றிய தகவலை பட்டியலில் பார்க்கலாம்:

வரிசை மாடல் அராய் வெளியிட்ட மைலேஜ் விபரம்
1 மாருதி டிசையர் AMT / MT 24.12 kmpl / 23.26 kmpl
2 மாருதி பலினோ & டொயோட்டா க்ளான்ஸா 23.87 kmpl
3 மாருதி ஸ்விஃப்ட் AMT / MT 23.76 kmpl / 23.20 kmpl
4 மாருதி ஆல்டோ 22.05 kmpl
5 ரெனால்ட் க்விட் 1.0L AMT / 1.0L MT / 0.8L MT 22 kmpl / 21.74 kmpl / 20.71 kmpl
6 மாருதி வேகன்ஆர் 1.0L / 1.2L 21.79 kmpl / 20.52 kmpl
7 மாருதி எஸ்-பிரஸ்ஸோ AMT / MT 21.7 kmpl / 21.4 kmpl
8 மாருதி செலிரியோ 21.63 kmpl
9 மாருதி இக்னிஸ் 20.89 kmpl
10 ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியாஸ் 1.2L MT / 1.2L AMT 20.7 kmpl / 20.5 kmpl
Most Read Articles

English summary
Top 5 Most Fuel-Efficient Petrol Cars India In 2021. Read In Tamil.
Story first published: Monday, March 1, 2021, 17:12 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X