இந்த டிராக்டர்கள் இருந்தா விவசாயிங்க ரொம்ப கூலா வேலை செய்யலாம்... எல்லாமே குளு குளு ஏசி பெட்டி வசதி கொண்டவை...

இந்தியாவில் ஏர்-கூலர் (ஏசி) வசதியுடன் விற்பனைக்குக் கிடைக்கும் டிராக்டர்கள் பற்றிய தகவலை இப்பதிவில் தொகுத்து வழங்கியுள்ளோம் வாருங்கள் பதிவிற்குள் செல்லலாம்.

என்னாது டிராக்டர்ல ஏசியா... குளு குளு ஏசி பெட்டி வசதி கொண்ட டிராக்டர்கள் பட்டியல்...

இந்தியா ஓர் விவசாயம் சார்ந்த நாடு. இதில் நம்மில் எவருக்கும் எந்த சந்தேகமும் இருக்காது என்றே நம்புகின்றோம். நாட்டின் பொருளாதாரத்தில் தொழில்மயமாக்கல் எந்தளவு முக்கிய பங்கினைக் கொண்டிருக்கின்றதோ, அதேபோன்று விவசாயமும் பல மடங்கு முக்கிய பங்களிப்பை கொண்டிருக்கின்றது (வழங்கி வருகின்றது).

என்னாது டிராக்டர்ல ஏசியா... குளு குளு ஏசி பெட்டி வசதி கொண்ட டிராக்டர்கள் பட்டியல்...

எனவேதான் இந்தியாவின் விவசாய சந்தையை மையப்படுத்தி பல்வேறு தொழில்நுட்பங்களை பன்னாட்டு வாகன உற்பத்தி நிறுவனங்கள் களமிறக்கி வருகின்றன. விவசாயிகளின் பணி சுமையைக் குறைக்கும் வகையில் அந்த தொழில்நுட்பங்கள் அமைந்திருப்பது குறிப்பிடத்தகுந்தது.

என்னாது டிராக்டர்ல ஏசியா... குளு குளு ஏசி பெட்டி வசதி கொண்ட டிராக்டர்கள் பட்டியல்...

விவசாயிகளின் பணி சுமையைக் குறைக்க மட்டுமல்ல, ஒரு சில தயாரிப்புகள் அவர்களை சொகுசாக பணி மேற்கொள்ளவும் உதவுகின்றன. ஆமாங்க, சொகுசு கார்களில் இருப்பதைப் போன்று பிரீமியம் வசதிகளுடன் இந்தியாவில் டிராக்டர்கள் விற்பனைக்குக் கிடைத்து வருகின்றன.

என்னாது டிராக்டர்ல ஏசியா... குளு குளு ஏசி பெட்டி வசதி கொண்ட டிராக்டர்கள் பட்டியல்...

அந்தவகையில், ஏசி கேபின் வசதியுடன் விற்பனைக்குக் கிடைக்கும் டிராக்டர்கள் பற்றிய தகவலையே இப்பதிவில் நாம் பார்க்க வருகின்றோம். என்ன சொல்றீங்க, டிராக்டர்ல ஏசியா?, என உங்களுக்கு கேட்க தோன்றலாம், இந்த ஆச்சரியத்திற்கு பதிலளிக்கும் வகையில், நமது நாட்டில் விற்பனைக்குக் கிடைக்கும் 5 ஏசி கேபின் வசதிக் கொண்ட டிராக்டர்கள் பற்றிய தகவலையே இப்பதிவில் வழங்கியுள்ளோம். வாருங்கள் பதிவிற்குள் செல்லலாம்.

என்னாது டிராக்டர்ல ஏசியா... குளு குளு ஏசி பெட்டி வசதி கொண்ட டிராக்டர்கள் பட்டியல்...

மஹிந்திரா அர்ஜூன் நோவோ605 டிஐ-ஐ (Mahindra Arjun Novo 605 DI-i)

விலை: ரூ. 9.40 லட்சம் முதல் ரூ. 9.80 லட்சம் வரை

ஏசி கேபின் வசதியுடன் சற்று குறைந்த விலையில் கிடைக்கும் விவசாயப் பணி சார்ந்த வாகனம் மஹிந்திரா அர்ஜூன் நோவோ605 டிஐ-ஐ. இந்த வாகனத்தில் 3.5 லிட்டர், இன்லைன் 4, டர்போசார்ஜட் டீசல் எஞ்ஜினை மஹிந்திரா பயன்படுத்தியுள்ளது.

என்னாது டிராக்டர்ல ஏசியா... குளு குளு ஏசி பெட்டி வசதி கொண்ட டிராக்டர்கள் பட்டியல்...

இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 57 எச்பி மற்றும் 213 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது. இதன் கியர்பாக்ஸ் 15 முன்னோக்கிய மற்றும் 3 தலைகீழ் விகிதங்களைக் கொண்டிருக்கின்றது. தொடர்ந்து, ஹைட்ராலிக் தூக்கும் வசதியும் இந்த டிராக்டரில் கொடுக்கப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 50.3 எச்பி திறனுடன் 2,200கிலோ வரை தூக்கும்.

என்னாது டிராக்டர்ல ஏசியா... குளு குளு ஏசி பெட்டி வசதி கொண்ட டிராக்டர்கள் பட்டியல்...

சோனாலிகா வோர்ல்ட்டிராக் 90ஆர்எக்ஸ் 4 டபிள்யூடி (Sonalika Worldtrac 90 RX 4WD)

விலைச ரூ. 12.30 லட்சம் முதல் ரூ. 12.60 லட்சம் வரை

நமது பட்டியலில் நாம் பார்க்க இருக்கும் அடுத்த ஏசி வைத்த டிராக்டர் சோனாலிகா வோர்ல்ட்டிராக் 90ஆர்எக்ஸ் 4 டபிள்யூடி ஆகும். இந்த டிராக்டரில் 4.1 லிட்டர் டர்போசார்ஜட், இன்லைன் 4 டீசல் எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 90 எச்பி பவரை வெளியேற்றும் திறன் கொண்டது.

என்னாது டிராக்டர்ல ஏசியா... குளு குளு ஏசி பெட்டி வசதி கொண்ட டிராக்டர்கள் பட்டியல்...

இந்த டிராக்டரில் 12 முன்னோக்கிய மற்றும் 12 பின்னோக்கிய கியர்பாக்ஸ் வசதி கொடுக்கப்பட்டிருக்கின்றது. இதில் இடம்பெற்றிருக்கும் ஹைட்ராலிக் சுமார் 2,500 கிலோ எடையுள்ள பொருட்களைக்கூட அசால்டாக தூக்கிவிடும்.

என்னாது டிராக்டர்ல ஏசியா... குளு குளு ஏசி பெட்டி வசதி கொண்ட டிராக்டர்கள் பட்டியல்...

ஜான் டீயர் 5060இ (John Deere 5060 E)

விலை: ரூ. 13.60 லட்சம் முதல் ரூ. 14.20 லட்சம்

ஜான் டீயர் 5060இ டிராக்டரை நிறுவனம் இரு விதமான தேர்வுகளில் விற்பனைக்கு வழங்குகின்றது. அதாவது, இரட்டை வீல் இயக்கம் அல்லது நான்கு வீல்கள் இயக்கம் கொண்ட ஆகிய இரு விதமான தேர்வுகளில் இந்த டிராக்டர் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

என்னாது டிராக்டர்ல ஏசியா... குளு குளு ஏசி பெட்டி வசதி கொண்ட டிராக்டர்கள் பட்டியல்...

இந்த விவசாய வாகனத்தில் டர்போசார்ஜட் வசதிக் கொண்ட எஞ்ஜினை நிறுவனம் பயன்படுத்தியுள்ளது. இது அதிகபட்சமாக 60 எச்பி திறனை வெளியேற்றும். இதன் கியர்பாக்ஸ் 9 - 3 என்ற விகித வசதியுடன் விற்பனைக்குக் கிடைக்கின்றது. மேலும், இதன் ஹைட்ராலிக் 2,000 கிலோவரை தூக்குமாம்.

என்னாது டிராக்டர்ல ஏசியா... குளு குளு ஏசி பெட்டி வசதி கொண்ட டிராக்டர்கள் பட்டியல்...

ஜான் டீயர் 5065 இ (John Deere 5065 E [4WD])

விலை: ரூ. 17.0 லட்சம் முதல் ரூ. 18.10 லட்சம் வரை

ஜான் டீயர் 5065 நமது பட்டியில் இடம்பெற்றிருக்கும் நான்காவது ஏசி கேபின் வசதிக் கொண்ட டிராக்டர் ஆகும். இந்த வாகனத்தில் 65 எச்பி திறனை வெளியேற்றக்கூடிய 3 சிலிண்டர் டர்போசார்ஜட் எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் ஹைட்ராலிக் லிஃப்ட் சுமார் 2,000 கிலோ வரையிலான எடையுள்ள பொருட்களை தூக்கும். இந்த டிராக்டர் நான்கு வீல்கள் இயங்கும் திறனில் மட்டுமே விற்பனைக்குக் கிடைக்கின்றது.

என்னாது டிராக்டர்ல ஏசியா... குளு குளு ஏசி பெட்டி வசதி கொண்ட டிராக்டர்கள் பட்டியல்...

ப்ரீத் 9049 ஏசி

விலை: ரூ. 20.20 லட்சம் முதல் ரூ. 22.10 லட்சம்

ப்ரீத் 9049 நமது பட்டியலின் கடைசி மற்றும் விலையுயர்ந்த ஏசி வசதிக் கொண்ட டிராக்டர் ஆகும். இந்த டிராக்டர் விவசாயம், உழவு, விதைப்பு, அறுவடை என பல்வேறு பணிகளை செய்யும் திறன் கொண்டது. இதில் 4.1 லிட்டர், டர்போசார்ஜ் செய்யப்பட்ட இன்லைன் 4 வசதிக் கொண்ட டீசல் எஞ்ஜினை நிறுவனம் பயன்படுத்தியிருக்கின்றது.

என்னாது டிராக்டர்ல ஏசியா... குளு குளு ஏசி பெட்டி வசதி கொண்ட டிராக்டர்கள் பட்டியல்...

இது அதிகபட்சமாக 90 எச்பி பவரை வெளியேற்றும். இதன் டிரான்ஸ்மிஷன் 12 முன்னோக்கி மற்றும் 12 தலைகீழ் விகிதங்களைக் கொண்டுள்ளது. மேலும், இதன் ஹைட்ராலிக் தூக்கும் எந்திரம் 2,400 கிலோ வரையில் தூக்கும் திறனைக் கொண்டிருக்கின்றது.

மேலே கூறப்பட்ட அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் என்பது குறிப்பிடத்தகுந்தது.

Most Read Articles
English summary
Top 5 Tractors With AC Cabins: Here Is Full Details. Read In Tamil.
Story first published: Friday, May 14, 2021, 11:15 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X