பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தாலும் கவலையில்லை... இந்தியாவில் விரைவில் விற்பனைக்கு வரவுள்ள சிஎன்ஜி கார்கள்!

இந்தியாவில் விரைவில் விற்பனைக்கு வரவுள்ள சிஎன்ஜி கார்கள் குறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தாலும் கவலையில்லை... இந்தியாவில் விரைவில் விற்பனைக்கு வரவுள்ள சிஎன்ஜி கார்கள்!

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து வருகிறது. எனவே மாற்று எரிபொருட்களில் இயங்கும் வாகனங்களை மக்கள் தீவிரமாக பரிசீலிக்க தொடங்கியுள்ளனர். எலெக்ட்ரிக் வாகனங்களை காட்டிலும் மக்கள் அதிக முக்கியத்துவம் கொடுப்பது சிஎன்ஜி வாகனங்களுக்குதான். ஏனெனில் வழக்கமாக வாகனங்களை காட்டிலும் எலெக்ட்ரிக் வாகனங்களின் விலை அதிகம்.

பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தாலும் கவலையில்லை... இந்தியாவில் விரைவில் விற்பனைக்கு வரவுள்ள சிஎன்ஜி கார்கள்!

எனவே முன்னணி நிறுவனங்கள் அனைத்தும் தற்போது சிஎன்ஜி வாகனங்களை விற்பனைக்கு அறிமுகம் செய்வதில் மிகவும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. இந்தியாவில் ஏற்கனவே நிறைய சிஎன்ஜி கார்கள் கிடைக்கின்றன. மேலும் பல்வேறு சிஎன்ஜி கார்கள் விரைவில் விற்பனைக்கு வரவுள்ளன. அவை என்னென்ன? என்பது குறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தாலும் கவலையில்லை... இந்தியாவில் விரைவில் விற்பனைக்கு வரவுள்ள சிஎன்ஜி கார்கள்!

மாருதி சுஸுகி டிசையர் (Maruti Suzuki Dzire)

தற்போதைய நிலையில் அதிக சிஎன்ஜி கார்களை விற்பனை செய்யும் நிறுவனங்களில் ஒன்றாக மாருதி சுஸுகி திகழ்கிறது. இந்த வரிசையில் இன்னும் ஒரு சில சிஎன்ஜி கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கும் மாருதி சுஸுகி நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதில், இந்தியாவில் மிகவும் பிரபலமாக உள்ள டிசையர் காரும் ஒன்று.

பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தாலும் கவலையில்லை... இந்தியாவில் விரைவில் விற்பனைக்கு வரவுள்ள சிஎன்ஜி கார்கள்!

டிசையர் காரின் சிஎன்ஜி வெர்ஷனை மாருதி சுஸுகி நிறுவனம் தற்போது சோதனை செய்து வருகிறது. மாருதி சுஸுகி நிறுவனம் ஏற்கனவே வழங்கிய இன்ஜின் உடன் இது விற்பனைக்கு வரவுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 83 பிஎஸ் பவரையும், 113 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. ஆனால் சிஎன்ஜி வெர்ஷனில் இந்த இன்ஜின் 70 பிஹெச்பி பவரையும், 95 என்எம் டார்க் திறனையும் உருவாக்கும்.

பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தாலும் கவலையில்லை... இந்தியாவில் விரைவில் விற்பனைக்கு வரவுள்ள சிஎன்ஜி கார்கள்!

மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா (Maruti Suzuki Vitara Brezza)

சிஎன்ஜி டிரைவ்ட்ரெயின் உடன் விற்பனைக்கு வரும் முதல் காம்பேக்ட் எஸ்யூவி காராக மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா இருக்கலாம். அதே 1.5 லிட்டர் நான்கு-சிலிண்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் இன்ஜின் உடன்தான் இந்த கார் விற்பனைக்கு வரவுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 104 பிஎஸ் பவரையும், 138 என்எம் டார்க் திறனையும் உருவாக்கும்.

பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தாலும் கவலையில்லை... இந்தியாவில் விரைவில் விற்பனைக்கு வரவுள்ள சிஎன்ஜி கார்கள்!

ஆனால் இந்த இன்ஜின் சிஎன்ஜி எரிபொருளில் இயங்கும்போது, பவர் அவுட்புட் 92 பிஎஸ் மற்றும் 122 என்எம் ஆக குறைந்து விடும். 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் தேர்வுடன் மட்டுமே மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா காரின் சிஎன்ஜி வெர்ஷன் கிடைக்கும். அதிக எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள சிஎன்ஜி கார்களில் இதுவும் முக்கியமானது.

பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தாலும் கவலையில்லை... இந்தியாவில் விரைவில் விற்பனைக்கு வரவுள்ள சிஎன்ஜி கார்கள்!

டாடா நெக்ஸான் (Tata Nexon)

புனேவிற்கு அருகே எமிஷன் டெஸ்ட் கிட் உடன் டாடா நெக்ஸான் கார் கேமரா கண்களில் சிக்கிய நிகழ்வு அரங்கேறியது. இது டாடா நெக்ஸான் காரின் புதிய சிஎன்ஜி வேரியண்ட்டாக இருக்கலாம் என நம்பப்படுகிறது. டாடா நெக்ஸான் காரின் சிஎன்ஜி வேரியண்ட் விற்பனைக்கு வரும்பட்சத்தில், அது மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா சிஎன்ஜி உடன் நேருக்கு நேராக போட்டியிடும்.

பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தாலும் கவலையில்லை... இந்தியாவில் விரைவில் விற்பனைக்கு வரவுள்ள சிஎன்ஜி கார்கள்!

ஆனால் டாடா நிறுவனம் டர்போசார்ஜ்டு பெட்ரோல் இன்ஜினை பயன்படுத்துமா? அல்லது நேச்சுரலி அஸ்பிரேட்டட் இன்ஜினை பயன்படுத்துமா? என்பது உறுதியாக தெரியவில்லை. ஆனால் இங்கு நிறைய பேர் ஏற்கனவே தங்களது டாடா நெக்ஸான் கார்களில் சிஎன்ஜி கிட்களை பயன்படுத்தி வருகின்றனர். தற்போதைய நிலையில் டாடா நெக்ஸான் சிஎன்ஜி பற்றி பெரிய அளவில் தகவல்கள் கிடைக்கவில்லை.

பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தாலும் கவலையில்லை... இந்தியாவில் விரைவில் விற்பனைக்கு வரவுள்ள சிஎன்ஜி கார்கள்!

டாடா டியாகோ (Tata Tiago)

டியாகோ காரின் சிஎன்ஜி வேரியண்ட்டை அறிமுகம் செய்யும் பணிகளிலும் டாடா நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. டியாகோ காரின் சிஎன்ஜி வேரியண்ட்டில் எந்த காஸ்மெட்டிக் மாற்றங்களும் செய்யப்படாது என எதிர்பார்க்கப்படுகிறது. அதே 1.2 லிட்டர் மூன்று-சிலிண்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் இன்ஜின் உடன்தான் இந்த புதிய வேரியண்ட் விற்பனைக்கு வரவுள்ளது.

பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தாலும் கவலையில்லை... இந்தியாவில் விரைவில் விற்பனைக்கு வரவுள்ள சிஎன்ஜி கார்கள்!

இந்த இன்ஜின் அதிகபட்சமாக 86 பிஎஸ் பவரையும், 113 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. ஆனால் சிஎன்ஜி எரிபொருளில் இயங்கும்போது இன்ஜின் குறைவான பவர் மற்றும் டார்க் அவுட்புட்டை மட்டுமே வழங்கும். இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள சிஎன்ஜி கார்களில் டியாகோவும் ஒன்று.

பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தாலும் கவலையில்லை... இந்தியாவில் விரைவில் விற்பனைக்கு வரவுள்ள சிஎன்ஜி கார்கள்!

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா (Toyota Innova Crysta)

இன்னோவா க்ரிஸ்ட்டா காரின் சிஎன்ஜி வேரியண்ட்டை விற்பனைக்கு அறிமுகம் செய்யும் பணிகளில் டொயோட்டா நிறுவனம் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 2.7 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் ஃபேக்டரி-ஃபிட்டட் சிஎன்ஜி உடன் இந்த கார் வரவுள்ளது. 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் உடன் இந்த வேரியண்ட் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தாலும் கவலையில்லை... இந்தியாவில் விரைவில் விற்பனைக்கு வரவுள்ள சிஎன்ஜி கார்கள்!

பெட்ரோலில் இயங்கும்போது இந்த இன்ஜின் அதிகபட்சமாக 166 பிஎஸ் பவரையும், 245 என்எம் டார்க் திறனையும் உருவாக்கும். ஆனால் இந்த இன்ஜின் சிஎன்ஜி எரிபொருளில் இயங்கும்போது பவர் மற்றும் டார்க் அவுட் புட் குறையலாம். இந்திய சந்தையில் மிகவும் பிரபலமான எம்பிவி கார்களில் ஒன்றாக டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா திகழ்கிறது.

Note: Images used are for representational purpose only.

Most Read Articles

English summary
Top 5 upcoming cng cars in india maruti suzuki dzire to toyota innova crysta
Story first published: Sunday, October 17, 2021, 10:39 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X