ஹூண்டாய் அல்கஸாரா? அல்லது டாடா சஃபாரியா? எதை தேர்வு செய்வது சிறந்தது? விரிவான தொகுப்பு

ரூ.25 லட்சத்தில், 6 அல்லது 7 இருக்கை தேர்வில் முன்பு மஹிந்திரா எக்ஸ்யூவி500 என்கிற ஒற்றை மாடல் மட்டுமே இருந்தது. ஆனால் தற்போது பல புதிய மாடல்களின் வருகையினால் இந்த பிரிவிலும் விற்பனை போட்டி அதிகரித்து வருகிறது.

ஹூண்டாய் அல்கஸாரா? அல்லது டாடா சஃபாரியா? எதை தேர்வு செய்வது சிறந்தது? விரிவான தொகுப்பு

இந்த வகையில் சமீபத்தில், அதாவது நடப்பு 2021ஆம் வருடத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட நீளமான எஸ்யூவி கார்களாக டாடா சஃபாரி மற்றும் ஹூண்டாய் அல்கஸார் விளங்குகின்றன. இதனால் இவை இரண்டில் எதை தேர்வு செய்வது என்பதில் சிலருக்கு குழப்பமாக இருக்கலாம்.

ஹூண்டாய் அல்கஸாரா? அல்லது டாடா சஃபாரியா? எதை தேர்வு செய்வது சிறந்தது? விரிவான தொகுப்பு

அவற்றை தீர்க்கவே சஃபாரி ஆட்டோமேட்டிக் மற்றும் அல்கஸார் ஆட்டோமேட்டிக் கார்களுக்கு இடையேயான ஒற்றுமையையும் வேற்றுமையையும் இந்த செய்தியில் கூறியுள்ளோம். வாருங்கள் செய்திக்குள் போகலாம்.

ஹூண்டாய் அல்கஸாரா? அல்லது டாடா சஃபாரியா? எதை தேர்வு செய்வது சிறந்தது? விரிவான தொகுப்பு

வெளிப்புற தோற்றம்

ஹூண்டாய் அல்கஸாரை காட்டிலும் சற்று உயரமானதாகவும், அளவில் பெரியதாகவும் டாடா சஃபாரி இருப்பது, இந்த இரு கார்களையும் ஒன்றோடு ஒன்று நெருங்கி நிற்க வைத்து பார்க்கும்போது தெரிய வருகிறது. அதிகமான வளைவுகளுடன் மிகவும் முரட்டுத்தனமானதாக சஃபாரி வடிவமைக்கப்படுகிறது.

ஹூண்டாய் அல்கஸாரா? அல்லது டாடா சஃபாரியா? எதை தேர்வு செய்வது சிறந்தது? விரிவான தொகுப்பு

மறுபக்கம் அல்கஸார், நேர்த்தியான லைன்களுடன், மிகவும் எளிமையாக, அதேநேரம் பிரீமியம் உணர்வை தரும் வகையில் வடிவமைக்கப்படுகிறது. இவை இரண்டில் டாடா சஃபாரி சற்று அதிகமாக 205மிமீ-இல் க்ரவுண்ட் க்ளியரென்ஸை பெறுகிறது.

ஹூண்டாய் அல்கஸாரா? அல்லது டாடா சஃபாரியா? எதை தேர்வு செய்வது சிறந்தது? விரிவான தொகுப்பு

உட்புற கேபின்

வெளிப்புற தோற்றத்தில் சஃபாரி கூடுதல் புள்ளிகளை பெற்றாலும், உட்புற கேபின் என்று வரும்போது, ஹூண்டாய் அல்கஸாரின் கை தான் ஓங்கி உள்ளது. பழுப்பு நிற லெதர் மற்றும் அதிகளவில் சில்வர் நிற தொடுதல்களுடன் அல்கஸாரின் கேபின் பார்ப்போர் எவரையும் கவர்ந்து இழுக்கக்கூடிய வகையில் வடிவமைக்கப்படுகிறது.

ஹூண்டாய் அல்கஸாரா? அல்லது டாடா சஃபாரியா? எதை தேர்வு செய்வது சிறந்தது? விரிவான தொகுப்பு

மேலும் இவற்றினால் சஃபாரியின் கேபினை காட்டிலும் அல்கஸாரின் கேபின் கூடுதல் காஸ்ட்லீ உணர்வை வழங்குகிறது. அதேபோல் தொழிற்நுட்ப அம்சங்களிலும் சில வசதிகள் டாடா ஹெரியரை போன்று சஃபாரியிலும் பயன்படுத்துவதற்கு கடினமானவைகளாக உள்ளதாக பயன்படுத்துவோர் தெரிவிக்கின்றனர்.

ஹூண்டாய் அல்கஸாரா? அல்லது டாடா சஃபாரியா? எதை தேர்வு செய்வது சிறந்தது? விரிவான தொகுப்பு

குறிப்பாக மொபைல் போன் உடன் காரை இணைப்பது இரவு நேரங்களில் சற்று சிரமமானதாக உள்ளதாம். மேலும், பின்பக்கத்தை காட்டும் கண்ணாடிகள் சஃபாரியில் அளவில் பெரியதாக சிறிது உயரமாக பொருத்தப்படுகின்றன. இதனால் ஓட்டுனரால் பார்க்க முடியாத பகுதி இந்த டாடா காரில் அதிகமாகிறது.

ஹூண்டாய் அல்கஸாரா? அல்லது டாடா சஃபாரியா? எதை தேர்வு செய்வது சிறந்தது? விரிவான தொகுப்பு

ஆனால் அல்கஸாரில் இவ்வாறான பிரச்சனைகள் எதுவும் பெரிய அளவில் இல்லை. வெளிப்பக்கத்தை போல் சஃபாரியின் உட்புறமும் பெரியதாக, அதிக இட வசதியுடன் வடிவமைப்படுவதால், சிலருக்கு வேன் போன்ற உணர்வு ஏற்படலாம். ஆனால் இந்த அம்சமே, உட்புறத்தில் அதிக இட வசதியை வேண்டுவோரை வெகுவாக கவர்ந்துவிடுகிறது.

ஹூண்டாய் அல்கஸாரா? அல்லது டாடா சஃபாரியா? எதை தேர்வு செய்வது சிறந்தது? விரிவான தொகுப்பு

குறிப்பாக பின் இருக்கைகள் அல்கஸாரில் இருப்பதை காட்டிலும் டாடா சஃபாரியில் நன்கு அகலமானதாக, சவுகரியமாக இருக்கிறது என சொல்ல வைக்கின்றன. இருக்கைகளில் முதுகு தலையணை பகுதியும் சஃபாரியில் நன்கு மேம்படுத்தப்பட்டுள்ளது. இருக்கை அமைப்பில் சொல்லும் அளவிலான சவுகரியம் சஃபாரி அளவிற்கு அல்கஸாரில் இல்லை.

ஹூண்டாய் அல்கஸாரா? அல்லது டாடா சஃபாரியா? எதை தேர்வு செய்வது சிறந்தது? விரிவான தொகுப்பு

தொழிற்நுட்ப அம்சங்களில், வெளியில் அலாய் சக்கரங்கள், உள்ளே க்ளைமேட் கண்ட்ரோல், ஸ்டேரிங் சக்கரத்தில் கண்ட்டோல்கள், உயரத்தை அட்ஜெஸ்ட் செய்யும் வசதியுடன் ஓட்டுனர் இருக்கை மற்றும் மல்டிமீடியா சிஸ்டம் உள்ளிட்டவற்றில் இரண்டும் ஒரே மாதிரியாகவே உள்ளன.

ஹூண்டாய் அல்கஸாரா? அல்லது டாடா சஃபாரியா? எதை தேர்வு செய்வது சிறந்தது? விரிவான தொகுப்பு

தொழிற்நுட்ப வசதிகளின் எண்ணிக்கையில் அல்கஸார் தான் முன்னிலையில் உள்ளது. இந்த ஹூண்டாய் காரில் பெரிய பனோராமிக் சன்ரூஃப், எலக்ட்ரிக் மூலமாக அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய ஓட்டுனர் இருக்கை, இரட்டை வயர் இல்லா சார்ஜிங் பேட்கள், முன் & பின்பக்க பார்க்கிங் சென்சார்கள், 360-கோண கேமிரா உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.

ஹூண்டாய் அல்கஸாரா? அல்லது டாடா சஃபாரியா? எதை தேர்வு செய்வது சிறந்தது? விரிவான தொகுப்பு

டாடா சஃபாரியிலும் பெரிதாக குறையில்லை. நிலையான வசதியாக, மூன்று ஆஃப்-ரோடு மோட்கள் வழங்கப்படுகின்றன. இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் அல்கஸாரில் மிகவும் அட்வான்ஸாக உள்ளது. மறுபக்கம் சஃபாரியில் சற்று மெதுவாக செயல்படுகிறது.

ஹூண்டாய் அல்கஸாரா? அல்லது டாடா சஃபாரியா? எதை தேர்வு செய்வது சிறந்தது? விரிவான தொகுப்பு

இயக்கம்

செயல்படு ஆற்றலில் டாடா சஃபாரி ஆற்றல்மிக்கதாக உள்ளது. இந்த டாடா எஸ்யூவி காரில் அதிகப்பட்சமாக 170 பிஎச்பி மற்றும் 350 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய 2.0 லிட்டர் என்ஜின் பொருத்தப்படுகிறது. பிரிவிலேயே ஆற்றல்மிக்கதாக சஃபாரி விளங்குகிறது.

ஹூண்டாய் அல்கஸாரா? அல்லது டாடா சஃபாரியா? எதை தேர்வு செய்வது சிறந்தது? விரிவான தொகுப்பு

ஹூண்டாய் அல்கஸாரில் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் பொருத்தப்படுகிறது. இது அதிகப்பட்ச 115 பிஎச்பி மற்றும் 250 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. இவை இரண்டிலும் ஒரே மாதிரியாக, ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனாக 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது.

ஹூண்டாய் அல்கஸாரா? அல்லது டாடா சஃபாரியா? எதை தேர்வு செய்வது சிறந்தது? விரிவான தொகுப்பு

இருப்பினும் என்ஜினின் ஆற்றலுக்கு ஏற்ப புதிய தலைமுறை டாடா சஃபாரி காரின் எடை 1860 கிலோவாக உள்ளது. ஆனால் அல்கஸாரின் எடை 1490 கிலோ மட்டுமே ஆகும். டீசல் ஆட்டோமேட்டிக் எஸ்யூவிகளாக இவை இருப்பினும் பயண அனுபவத்தில் இரண்டும் பெரிய அளவில் வித்தியாசப்படுகின்றன.

ஹூண்டாய் அல்கஸாரா? அல்லது டாடா சஃபாரியா? எதை தேர்வு செய்வது சிறந்தது? விரிவான தொகுப்பு

பொதுவாக டீசல் கார்கள் என்றாலே குலுக்கல் சற்று அதிகமாக இருக்கும். ஆனால் அல்கஸார் ஆட்டோமேட்டிக் காரில் ஒரே இடத்தில் நின்று கொண்டிருக்கும்போதும், குறைந்த வேகத்தை நகரும் போதும் கூட குலுக்கல் பெரிய அளவில் தவிர்க்கப்பட்டுள்ளது. இதற்கு காரணம், காப்பிடப்பட்ட கேபினை அல்கஸார் கொண்டிருக்கிறது.

ஹூண்டாய் அல்கஸாரா? அல்லது டாடா சஃபாரியா? எதை தேர்வு செய்வது சிறந்தது? விரிவான தொகுப்பு

அதிகப்படியான என்ஜின் ஆற்றலை பெற்றாலும், வேகத்தில் அல்கஸாரை சில வினாடிகளில் மட்டுமே சஃபாரி முந்தியுள்ளது. அதாவது ஹூண்டாய் அல்கஸாரில் 20kmph-இல் இருந்து 80kmph வேகத்தை எட்ட குறைந்தப்பட்சமாக 7.52 வினாடிகள் ஆகும். அதுவே சஃபாரியில் 6.84 வினாடிகள் தேவைப்படும்.

ஹூண்டாய் அல்கஸாரா? அல்லது டாடா சஃபாரியா? எதை தேர்வு செய்வது சிறந்தது? விரிவான தொகுப்பு

சஃபாரி ஆட்டோமேட்டிக் காரில் வேக அதிகரிப்பிற்கு உடனடியாக பதில் கிடைக்கிறது. க்ரவுண்ட் க்ளியரென்ஸை அதிகமாக கொண்டுள்ளது, அதனால் அனைத்து விதமான சாலைகளிலும் சஃபாரி எந்தவொரு தடையுமின்றி இயங்கும். ஹூண்டாயை பொறுத்தவரையில், அல்கஸார் ஆட்டோமேட்டிக் காரின் டிரான்ஸ்மிஷன் அமைப்பில் கியர் விகிதத்தை அதிகரிக்க இந்த நிறுவனம் தயாராகி வருவதாக செய்திகள் கூறுகின்றன.

ஹூண்டாய் அல்கஸாரா? அல்லது டாடா சஃபாரியா? எதை தேர்வு செய்வது சிறந்தது? விரிவான தொகுப்பு

இந்த ஹூண்டாய் காரையும் கார் ஓட்டுவதில் கில்லாடி என்றால் சஃபாரியை போல் எந்தவொரு சாலைக்கும் தைரியமாக எடுத்து செல்லலாம். ஹூண்டாய் அல்கஸாரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.16.30 லட்சத்தில் இருந்து ரூ.20.15 லட்சம் வரையில் உள்ளன.

ஹூண்டாய் அல்கஸாரா? அல்லது டாடா சஃபாரியா? எதை தேர்வு செய்வது சிறந்தது? விரிவான தொகுப்பு

அதுவே டாடா மோட்டார்ஸின் தயாரிப்பான சஃபாரியின் விலைகள் ரூ.14.99 லட்சத்தில் இருந்து ரூ.21.83 லட்சம் வரையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இவை இரண்டை பற்றியும் ஓரளவிற்கு விளக்கிவிட்டேன் என்றுதான் நினைக்கிறேன். இதன்பின் தேர்வு செய்வது உங்களது பொறுப்பு.

Most Read Articles
English summary
Top difference between Hyundai Alcazar and Tata Safari. Read in Tamil.
Story first published: Saturday, July 31, 2021, 2:53 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X