வீலை சுலபமாகவும், பாதுகாப்பாகவும் கழட்டி மாட்டலாம்... இதோ எளிய வழிகள்.. ச்சே, இத்தன நாளா இது தெரியாம போச்சே...

டயர் மாற்றுவதை எப்படி சுலபமாக்குவது இதுகுறித்த தகவலைதான் இப்பதிவில் நாம் காண இருக்கின்றோம்.

நாம் இளைய தளபதி விஜயோ அல்லது தல அஜித்தோ கிடையாதுங்க. ஒரு வாய்ல சிகரெட்ட (உடலுக்கும், உடல் நலத்திற்கும் தீங்கு விளைவிக்கும்) வச்சுகிட்டு ஸ்டெப்னியே இல்லாம ஒத்த கையால கார தூக்கி நிறுத்தி டயரை மாற்றவும் முடியாது. அதேசமயம், பெரியளவில் சிரமப்படாமல் டயர்களை நம்மால் மாற்ற முடியும்.

இதுகுறித்த ஹேக் எனப்படும் குறுக்கு வழி யோசனைகள் பற்றிய தகவலை இப்பதிவில் நாம் பார்க்க இருக்கின்றோம். அதாவது, பஞ்சர் அல்லது பழுதான டயர் கொண்ட வீலை எப்படி சுலபமாக மாற்றுவது என்பதுகுறித்த எளிய டிப்ஸ்களை இதில் வழங்கியிருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் செல்லலாம்.

குறிப்பு நம்பர் 1

பொதுவாகவே நம்மில் பலர் ஸ்பேர் டயரை வெளியில் எடுப்பதற்கு முன்னரே பழுதான டயரை அகற்றும் வேலையில் இறங்கிவிடுவோம். அவ்வாறு இருக்கக் கூடாது என நாங்கள் கூறவில்லை. இருப்பினும், ஸ்பேர் டயரை முன்னரே எடுத்து வைப்பது நல்லது.

பழுதான டயரை வெளியேற்றுவதற்கு லேசான உடல் உழைப்பைக் கொடுக்க வேண்டியிருக்கும். அது உங்களுக்கு வியர்வை வரவழைக்கலாம். இந்த மாதிரியான நேரத்தில் வியர்த்துபோன கைகளுடன் ஸ்பேர் டயரை வெளியேற்றுவது சற்று கடினம். வழுக்குதல் போன்ற சிரமங்களை அனுபவிக்க நேரிடும்.

இதுமட்டுமின்றி, ஸ்பேர் டயரை முன்கூட்டியே வெளியே எடுத்து வைத்துவிட்டால், பழுதான டயரை நீக்கிய உடன் ஸ்பேர் டயரை நொடிப் பொழுதில் பொருத்திவிடலாம். இல்லை எனில் ஜாக்கி நகர்ந்து விடுமோ என்ற அச்சம் நம்மை அறியமாலே நமக்கு வந்துவிடும். ஆகையால், ஸ்பேர் டயரை தயார்நிலையில் வைத்து பழுதான டயரை அகற்றும் பணியில் இறங்குவது மிக சிறந்தது.

குறிப்பு நம்பர் 2

ஒரு சிலருக்கு ஜாக்கியை எங்கு பொருத்துவது என்பதே சந்தேகம். புதிய கார்களில் ஜாக்கியை எங்கு பொருத்த வேண்டும் என்பதற்கான குறியீடு வழங்கப்பட்டிருக்கும். இந்த இடத்திற்கு பதிலாக வேறு எங்கேவாது ஜாக்கியைப் பொருத்தினால் சிக்கல்தான். ஆகையால், கசப்பான அனுபவங்களைத் தவிர்க்க ஜாக்கிக்கான சரியான பகுதியில் பயன்படுத்துவது அவசியம்.

அதேசமயம், உங்களால் ஜாக்கியை பொருத்துவதற்கான சரியான இடத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் வீலுக்கு மிக அருகில் கட்டை விரல் வைக்கக் கூடிய வெளியில் இருக்கும் காரின் அடிப்பாகத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். முன்னதாக அப்பகுதிய உறுதியானதா என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும்.

குறிப்பு நம்பர் 3

வீல்களில் பொருத்தப்பட்டிருக்கும் போல்டுகளை (bolt) கழற்றுவதற்கு முன்னர் ஜாக்கி காரை உயரமாக தாங்கி பிடித்துள்ளது என்பதையும் உறுதி செய்து கொள்ள வேண்டும். ஏனெனில், சிலர் ஞயாபக மறதியில் ஜாக்கியை உயர்த்துவதற்கு மறந்து விடுகின்றனர். இதன் விளைவாக சில நேரங்களில் மிக இக்கட்டான சூழ்நிலையை சந்திக்கும் நிலைக்கு அவர்கள் ஆளாகிவிடுகின்றனர்.

குறிப்பு நம்பர் 4

வீலுக்கும் தரைக்கும் தொடர்பு இல்லாத வகையில் ஜாக்கியை உயர்த்த வேண்டும். சில டயர்களை அவ்வளவு எளிதில் கழற்றிவிட முடியாது. ஆகையால், அதனை கழற்ற வேண்டும் என்றால் சில விரல் சூழ்ச்சமங்களை செய்ய வேண்டும். அதாவது இரு விரல்களைக் கொண்டு வீலை சுற்றிவிட வேண்டும். அவ்வாறு, வீலை சுழற்ற லேசாக இடைவெளி இருத்தல் அவசியம்.

எனவேதான் டயருக்கும், தரைக்கும் தொடர்பு இல்லாத வகையில் ஜாக்கியை அதிகளவு உயர்த்த வேண்டும் என நாங்கள் கூறுகின்றோம். அதேசமயம், புதிய டயரை மாற்றிய பின்னர் அனைத்து போல்டுகளும் டைட்டான முறையில் நெருக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும். சிலர் இதைக்கூட மறந்து வாகனத்தை ஓட்ட விடுகின்றனர்.

இப்பதிவு, முதல் முறையாக காரை வாங்கியிருக்கும் நபர்களுக்கானது ஆகும். அவர்களுக்கு நிச்சயம் இது உதவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. முதல் முறையாக காரை வாங்குவோர் பலருக்கு டயர் மாற்றுவதுகுறித்து அனுபவம் இருக்காது. அவர்களே சுயமாகவும், சுலபமாகவும் டயரை மாற்றுவதற்கு உதவும் நோக்கிலேயே இப்பதிவு வெளியிடப்பட்டுள்ளது.

மிக முக்கியமாக சாலையோரத்தில் காரை நிறுத்தி வீலை மாற்றுகின்றீர்கள் என்றால், கவனம் கொள்ளுங்கள், உங்கள் கார் நிற்பதை அறிவிக்கும் வகையில் ஓர் குறியை காருக்கு முன் மற்றும் பின் பகுதிகளில் வைப்பது நல்லது. இது பிற வாகனங்கள் உங்களை அடையாளம் காண உதவும்.

Most Read Articles

English summary
Top Four Hacks To Make Tyre Change Easier And Faster. Read In Tamil.
Story first published: Sunday, May 16, 2021, 9:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X