இந்தியாவில் அதிக சொகுசு கார்களை விற்பனை செய்யும் நிறுவனம் எது தெரியுமா? சரியா சொல்லுங்க பார்ப்போம்...

இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் அதிக சொகுசு கார்களை விற்பனை செய்த நிறுவனங்கள் குறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் அதிக சொகுசு கார்களை விற்பனை செய்யும் நிறுவனம் எது தெரியுமா? சரியா சொல்லுங்க பார்ப்போம்...

இந்தியாவில் கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் பிரச்னை விஸ்வரூபம் எடுத்த பிறகு, சொகுசு கார் நிறுவனங்களுக்கு இறங்கு முகமாகதான் உள்ளது. சாதாரண பட்ஜெட் கார்களை விற்பனை செய்யும் நிறுவனங்கள் இந்த பிரச்னையில் இருந்து மீண்டு வந்து விட்டன. அந்த நிறுவனங்களின் கார் விற்பனை நல்ல வளர்ச்சியை காண தொடங்கி விட்டது.

இந்தியாவில் அதிக சொகுசு கார்களை விற்பனை செய்யும் நிறுவனம் எது தெரியுமா? சரியா சொல்லுங்க பார்ப்போம்...

ஆனால் சொகுசு கார் நிறுவனங்கள் இன்னும் வீழ்ச்சியைதான் சந்தித்து வருகின்றன. இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் அதிக கார்களை விற்பனை செய்த சொகுசு கார் நிறுவனங்களின் பட்டியலில் பிஎம்டபிள்யூ முதல் இடத்தை பிடித்துள்ளது. முதல் இடத்தை பிடித்திருந்தாலும் விற்பனையில் 39.6 சதவீத வீழ்ச்சியை பிஎம்டபிள்யூ சந்தித்துள்ளது.

இந்தியாவில் அதிக சொகுசு கார்களை விற்பனை செய்யும் நிறுவனம் எது தெரியுமா? சரியா சொல்லுங்க பார்ப்போம்...

கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதம் 1,367 கார்களை பிஎம்டபிள்யூ விற்பனை செய்திருந்த நிலையில், நடப்பாண்டு மார்ச் மாதம் இந்த எண்ணிக்கை வெறும் 826 ஆக குறைந்துள்ளது. இரண்டாவது இடத்தை பிடித்துள்ள மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனமும் கூட விற்பனையில் 13.8 சதவீத வீழ்ச்சியைதான் பதிவு செய்துள்ளது.

இந்தியாவில் அதிக சொகுசு கார்களை விற்பனை செய்யும் நிறுவனம் எது தெரியுமா? சரியா சொல்லுங்க பார்ப்போம்...

கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதம் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் 942 கார்களை விற்பனை செய்திருந்த நிலையில், நடப்பாண்டு மார்ச் மாதம் இந்த எண்ணிக்கை 812 ஆக குறைந்துள்ளது. இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தை ஜாகுவார் லேண்ட் ரோவர் பிடித்துள்ளது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் இந்நிறுவனம் இந்தியாவில் 518 கார்களை விற்பனை செய்திருந்தது.

இந்தியாவில் அதிக சொகுசு கார்களை விற்பனை செய்யும் நிறுவனம் எது தெரியுமா? சரியா சொல்லுங்க பார்ப்போம்...

ஆனால் நடப்பாண்டு மார்ச் மாதம் இந்த எண்ணிக்கை வெறும் 214 ஆக குறைந்துள்ளது. இது 58.7 சதவீத வீழ்ச்சியாகும். இந்த பட்டியலில் 4வது இடத்தை வால்வோ பிடித்துள்ளது. கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதம் 245 ஆக இருந்த வால்வோ நிறுவனத்தின் கார் விற்பனை எண்ணிக்கை, நடப்பாண்டு மார்ச் மாதம் வெறும் 96 ஆக குறைந்துள்ளது. இது 60.8 சதவீத வீழ்ச்சியாகும்.

இந்தியாவில் அதிக சொகுசு கார்களை விற்பனை செய்யும் நிறுவனம் எது தெரியுமா? சரியா சொல்லுங்க பார்ப்போம்...

இந்த பட்டியலில் ஐந்தாவது இடத்தை ஆடி பிடித்துள்ளது. கடந்தாண்டு மார்ச் மாதம் ஆடி நிறுவனம் 452 கார்களை விற்பனை செய்திருந்தது. ஆனால் நடப்பாண்டு மார்ச்சில் இந்த எண்ணிக்கை 93 ஆக குறைந்துள்ளது. இது 79.4 சதவீத வீழ்ச்சியாகும். 6வது இடத்தை போர்ஷே பிடித்துள்ளது. போர்ஷே நிறுவனமும் விற்பனையில் 50.7 சதவீத வீழ்ச்சியைதான் சந்தித்துள்ளது.

இந்தியாவில் அதிக சொகுசு கார்களை விற்பனை செய்யும் நிறுவனம் எது தெரியுமா? சரியா சொல்லுங்க பார்ப்போம்...

கடந்தாண்டு மார்ச் மாதம் 69 ஆக இருந்த போர்ஷே நிறுவனத்தின் கார் விற்பனை எண்ணிக்கை நடப்பாண்டு மார்ச் மாதம் வெறும் 34 ஆக குறைந்துள்ளது. இந்த பட்டியலில் 7வது இடத்தை லம்போர்கினி பிடித்துள்ளது. கடந்தாண்டு மார்ச் மாதம் 5 ஆக இருந்த லம்போர்கினி நிறுவனத்தின் கார் விற்பனை எண்ணிக்கை நடப்பாண்டு மார்ச் மாதம் 4 ஆக குறைந்துள்ளது. இது 20 சதவீத வீழ்ச்சியாகும்.

இந்தியாவில் அதிக சொகுசு கார்களை விற்பனை செய்யும் நிறுவனம் எது தெரியுமா? சரியா சொல்லுங்க பார்ப்போம்...

இந்த பட்டியலில் 8வது இடத்தை ஃபெராரி பிடித்துள்ளது. கடந்தாண்டு மார்ச் மாதம் ஃபெராரி நிறுவனம் இந்தியாவில் ஒரே ஒரு காரை மட்டும்தான் விற்பனை செய்திருந்தது. ஆனால் நடப்பாண்டு மார்ச் மாதம் 2 கார்களை விற்பனை செய்துள்ளது. இது 100 சதவீத வளர்ச்சியாகும். இந்த பட்டியலில் 9வது மற்றும் கடைசி இடத்தை ரோல்ஸ் ராய்ஸ் பிடித்துள்ளது.

இந்தியாவில் அதிக சொகுசு கார்களை விற்பனை செய்யும் நிறுவனம் எது தெரியுமா? சரியா சொல்லுங்க பார்ப்போம்...

ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் கடந்தாண்டு மார்ச் மாதம் இந்தியாவில் 3 கார்களை விற்பனை செய்திருந்தது. ஆனால் நடப்பாண்டு மார்ச் மாதம் இந்த எண்ணிக்கை வெறும் 1 ஆக குறைந்துள்ளது. இது 66.7 சதவீத வீழ்ச்சியாகும். விற்பனை எண்ணிக்கையை உயர்த்துவதற்காக சொகுசு கார் நிறுவனங்கள் தற்போது பல்வேறு புதிய தயாரிப்புகளை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து வருகின்றன.

Most Read Articles
English summary
Top Luxury Car Brands In March In India: BMW Leads Chart. Read in Tamil
Story first published: Monday, April 12, 2021, 20:53 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X