குறைந்த விலையில் பனோரமிக் சன்ரூஃப் உடன் கிடைக்கும் கார்கள்..!! கார் வாங்கும்முன் இத தெரிஞ்சிக்கோங்க!

சன்ரூஃப், தற்சமயம் பலர் தங்களது கார்களில் எதிர்பார்க்கும் முக்கிய வசதிகளில் ஒன்று. இதன் காரணமாகவே முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்கள் அனைத்தும் எலக்ட்ரிக் மூலம் செயல்படக்கூடிய சன்ரூஃப்-யாவது தங்களது வாகனங்களில் வழங்க முயற்சிக்கின்றன.

குறைந்த விலையில் பனோரமிக் சன்ரூஃப் உடன் கிடைக்கும் கார்கள்..!! கார் வாங்கும்முன் இத தெரிஞ்சிக்கோங்க!

அதேநேரம், எலக்ட்ரிக் சன்ரூஃப்-ஐ காட்டிலும் காஸ்ட்லீயான இரட்டை கண்ணாடியில் பனோரமிக் சன்ரூஃப்-ஐ விற்பனை போட்டி காரணமாக கார்களில் வழங்கவும் அவை மறக்கவில்லை. அவ்வாறு பனோரமிக் சன்ரூஃப் உடன் இந்தியாவில் தற்சமயம் விற்பனைக்கு கிடைக்கும் மலிவான விலை கொண்ட சில கார்களின் பெயர்கள், அவற்றின் எக்ஸ்ஷோரூம் விலைகளுடன் அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளன. அவை இதோ...

Model Variant Price
Hyundai Creta SX 1.5L NA Petrol MT Rs13.79 Lakh
SX 1.5L NA Petrol IVT Rs15.27 Lakh
SX 1.5L Diesel MT Rs14.79 Lakh
SX 1.5L Diesel AT Rs16.27 Lakh
SX 1.4L Turbo Petrol DCT Rs16.49 Lakh
SX(O) 1.5L NA Petrol IVT Rs16.48 Lakh
SX(O) 1.5L Diesel MT Rs16.07 Lakh
X(O) 1.5L Diesel AT Rs17.48 Lakh
SX(O) 1.4L Turbo Petrol DCT Rs17.53 Lakh
MG Hector Sharp 1.5L Turbo Petrol Hybrid MT Rs17.10 Lakh
Sharp 1.5L Turbo Petrol DCT/CVT Rs18.10 Lakh
Sharp 2.0L Diesel MT Rs18.43 Lakh
MG Hector Plus Sharp (6-seat) 1.5L Turbo Petrol Hybrid MT Rs17.85 Lakh
Sharp (6-seat) 1.5L Turbo Petrol DCT/CVT Rs18.90 Lakh
Sharp (6-seat) 2.0L Diesel MT Rs19.23 Lakh
Select (7-seat) 2.0L Diesel MT Rs18.43 Lakh
Tata Harrier XZ+ 2.0L Diesel MT Rs19.05 Lakh
XZ+ Dark Edition 2.0L Diesel MT Rs19.24 Lakh
XZ+ Camo 2.0L Diesel MT Rs19.24 Lakh
XZA+ 2.0L Diesel AT Rs20.25 Lakh
XZA+ Dark Edition 2.0L Diesel AT Rs20.45 Lakh
XZA+ Camo 2.0L Diesel AT Rs20.45 Lakh
Tata Safari XT+ 2.0L Diesel MT Rs18.25 Lakh
XZ+ 2.0L Diesel MT Rs19.99 Lakh
XZ+ Adventure Edition 2.0L Diesel MT Rs20.20 Lakh
XZA+ 2.0L Diesel AT Rs21.25 Lakh
XZA+ Adventure Edition 2.0L Diesel AT Rs21.45 Lakh

பனோரமிக் சன்ரூஃப் பொருத்தப்படும் இந்த ஐந்து எஸ்யூவி கார்களை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

குறைந்த விலையில் பனோரமிக் சன்ரூஃப் உடன் கிடைக்கும் கார்கள்..!! கார் வாங்கும்முன் இத தெரிஞ்சிக்கோங்க!

ஹூண்டாய் க்ரெட்டா

இந்திய சந்தையில் பனோரமிக் சன்ரூஃப் அம்சத்துடன் கிடைக்கும் மிக மலிவான காராக ஹூண்டாய் மோட்டார்ஸின் க்ரெட்டா எஸ்யூவி கார் விளங்குகிறது. எஸ்எக்ஸ் மற்றும் எஸ்எக்ஸ்(O) என்ற இரு விதமான வேரியண்ட்களில் மட்டும் இத்தகைய சன்ரூஃப்-ஐ பெறும் இந்த ஹூண்டாய் காரின் எக்ஸ்ஷோரூம் விலைகள் ரூ.13.79 லட்சத்தில் இருந்து ரூ.17.53 லட்சம் வரையில் உள்ளன.

குறைந்த விலையில் பனோரமிக் சன்ரூஃப் உடன் கிடைக்கும் கார்கள்..!! கார் வாங்கும்முன் இத தெரிஞ்சிக்கோங்க!

கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் புதிய தலைமுறையில் அறிமுகப்படுத்தப்பட்டு தற்போதைக்கு நம் நாட்டு சந்தையில் அதிகளவில் விற்பனையாகும் நடுத்தர-அளவு எஸ்யூவி காராக விளங்கும் க்ரெட்டாவில் 1.5 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்ட டீசல் என்ஜின்களுடன் 1.4 லிட்டர் பெட்ரோல் வேரியண்ட்டும் வழங்கப்படுகிறது.

குறைந்த விலையில் பனோரமிக் சன்ரூஃப் உடன் கிடைக்கும் கார்கள்..!! கார் வாங்கும்முன் இத தெரிஞ்சிக்கோங்க!

எம்ஜி ஹெக்டர்

எம்ஜி ஹெக்டரில் பனோரமிக் சன்ரூஃப் அதன் டாப் ஷார்ப் ட்ரிம்களில் மட்டுமே வழங்கப்படுகிறது. எம்ஜி ஹெக்டரின் ஷார்ப் ட்ரிம்-ஐ 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் ஹைப்ரீட் மேனுவல், 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் டிசிடி/ சிவிடி மற்றும் 2.0 லிட்டர் டீசல் மேனுவல் என்ற மூன்று விதமான தேர்வுகளில் பெறலாம்.

குறைந்த விலையில் பனோரமிக் சன்ரூஃப் உடன் கிடைக்கும் கார்கள்..!! கார் வாங்கும்முன் இத தெரிஞ்சிக்கோங்க!

இவற்றின் எக்ஸ்ஷோரூம் விலைகள் முறையே ரூ.17.10 லட்சம், ரூ.18.10 லட்சம் மற்றும் ரூ.18.43 லட்சம் ஆக உள்ளன. ஹெக்டரின் டர்போ பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 140 பிஎச்பி மற்றும் 250 என்எம் டார்க் திறனையும், டீசல் என்ஜின் 173 பிஎச்பி மற்றும் 350 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்துபவைகளாக உள்ளன.

குறைந்த விலையில் பனோரமிக் சன்ரூஃப் உடன் கிடைக்கும் கார்கள்..!! கார் வாங்கும்முன் இத தெரிஞ்சிக்கோங்க!

எம்ஜி ஹெக்டர் ப்ளஸ்

இது ஹெக்டரின் மூன்று-இருக்கை வரிசை வெர்சனாகும். இதனால் மேற்கூறப்பட்ட என்ஜின் & ட்ரான்ஸ்மிஷன் தேர்வுகளுடன் இதன் ஷார்ப் ட்ரிம்-மிலும் பனோரமிக் சன்ரூஃப் வசதி வழங்கப்படுகிறது. ஹெக்டர் ப்ளஸ் ஷார்ப் ட்ரிம்-இல் 6 இருக்கைகள் வழங்கப்படுகின்றன.

குறைந்த விலையில் பனோரமிக் சன்ரூஃப் உடன் கிடைக்கும் கார்கள்..!! கார் வாங்கும்முன் இத தெரிஞ்சிக்கோங்க!

இவற்றின் விலைகள் ரூ.17.85 லட்சத்தில் இருந்து ரூ.19.23 லட்சம் வரையில் உள்ளன. 7 இருக்கைகள் இந்த காரின் செலக்ட் ட்ரிம்-இல் வழங்கப்படுகிறது. டீசல் என்ஜின் உடன் வழங்கப்படும் இதிலும் பனோரமிக் சன்ரூஃப் வசதியை எம்ஜி நிறுவனம் வழங்குகிறது.

குறைந்த விலையில் பனோரமிக் சன்ரூஃப் உடன் கிடைக்கும் கார்கள்..!! கார் வாங்கும்முன் இத தெரிஞ்சிக்கோங்க!

டாடா ஹெரியர்

பனோரமிக் சன்ரூஃப் வசதி டாடா ஹெரியர் எஸ்யூவி காரின் எக்ஸ்இசட்+ மற்றும் எக்இசட்ஏ+ வேரியண்ட்களில் வழங்கப்படுகின்றன. இத்தகைய சன்ரூஃப் வசதி உடன் கிடைக்கும் இந்த டாடா ஹெரியர் வேரியண்ட்களின் விலைகள் ரூ.19.05 லட்சத்தில் இருந்து ரூ.20.45 லட்சம் வரையில் உள்ளன. அதேநேரம் ஹெரியரின் கமோ மற்றும் டார்க் போன்ற ஸ்பெஷல் எடிசன்களிலும் இந்த வசதி வழங்கப்படுகிறது.

குறைந்த விலையில் பனோரமிக் சன்ரூஃப் உடன் கிடைக்கும் கார்கள்..!! கார் வாங்கும்முன் இத தெரிஞ்சிக்கோங்க!

டாடா சஃபாரி

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தில் இருந்து இந்திய சந்தையில் மிக சமீபத்தில் அறிமுகமான வாகனம் தான் சஃபாரி ஆகும். 2020 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்டு இருந்த இந்த எஸ்யூவி டாடா கார் 5-இருக்கை ஹெரியரின் 6 / 7 இருக்கை வெர்சனாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

குறைந்த விலையில் பனோரமிக் சன்ரூஃப் உடன் கிடைக்கும் கார்கள்..!! கார் வாங்கும்முன் இத தெரிஞ்சிக்கோங்க!

ஹெரியரை போன்று எக்ஸ்இசட்+ மற்றும் எக்ஸ்இசட்ஏ+ வேரியண்ட்களில் மட்டுமில்லாமல் சஃபாரியில் அதன் விலை குறைவான எக்ஸ்டி+ வேரியண்ட்டிலும் பனோரமிக் சன்ரூஃப் வழங்கப்படுகிறது. இவற்றின் எக்ஸ்ஷோரூம் விலைகள் ரூ.18.25 லட்சத்தில் இருந்து ரூ.21.45 லட்சம் வரையில் உள்ளன. இதில் இருந்து ஹெரியரை காட்டிலும் சஃபாரியில் குறைந்த விலையிலேயே இத்தகைய சன்ரூஃப் வசதியை பெறலாம் என்பது தெரிய வருகிறது.

Most Read Articles
English summary
5 Most Affordable Cars With Panoramic Sunroof In 2021. Creta To Safari Details.
Story first published: Sunday, March 7, 2021, 4:35 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X