கடந்த நிதியாண்டில் அதிகம் விற்பனையான கார் இதுதானாம்!! எப்போதும்போல் மாருதி சுஸுகி டாப்!

கடந்த 2021ஆம் நிதியாண்டில் இந்தியாவில் அதிகளவில் விற்பனை செய்யப்பட்ட கார்களை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்ப்போம்.

கடந்த நிதியாண்டில் அதிகம் விற்பனையான கார் இதுதானாம்!! எப்போதும்போல் மாருதி சுஸுகி டாப்!

இந்தியாவில் கார்களின் விற்பனை என்றாலே மாருதி சுஸுகி நிறுவனத்தின் கை தான் ஓங்கியுள்ளது. இந்த வகையில் இந்த டாப்-10 லிஸ்ட்டிலும் கிட்டத்தட்ட 7 மாருதி கார்கள் உள்ளன.

கடந்த நிதியாண்டில் அதிகம் விற்பனையான கார் இதுதானாம்!! எப்போதும்போல் மாருதி சுஸுகி டாப்!

இன்னும் சரியாக சொல்ல வேண்டுமென்றால், முதல் ஐந்து இடங்கள் மாருதி சுஸுகி நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. முதல் இடம் மாருதியின் மிக பிரபலமான ஸ்விஃப்ட் ஹேட்ச்பேக் காரிடம் உள்ளது.

கடந்த நிதியாண்டில் அதிகம் விற்பனையான கார் இதுதானாம்!! எப்போதும்போல் மாருதி சுஸுகி டாப்!

2021ஆம் நிதியாண்டு, 2020 ஏப்ரல் 1ஆம் தேதியில் இருந்து 2021 மார்ச் 31ஆம் தேதி வரையிலானது ஆகும். இந்த ஒரு வருடத்தில் மொத்தம் 1,72,671 மாருதி ஸ்விஃப்ட் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

கடந்த நிதியாண்டில் அதிகம் விற்பனையான கார் இதுதானாம்!! எப்போதும்போல் மாருதி சுஸுகி டாப்!

முதலிடத்தில் இருந்தாலும், முந்தைய 2019-20 நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் இந்த விற்பனை எண்ணிக்கை 8 சதவீதம் குறைவு. ஏனெனில் அந்த வருடத்தில் 1,87,916 ஸ்விஃப்ட் கார்களை மாருதி சுஸுகி நிறுவனம் விற்பனை செய்திருந்தது.இதற்கு காரணம், எல்லாருக்கும் தெரிந்ததுதான் கொரோனா வைரஸ்.

Rank Model FY 2021 FY 2020 Growth (%)
1 Maruti Swift 1,72,671 1,87,916 -8
2 Maruti Baleno 1,63,445 1,80,413 -9
3 Maruti Wagonr 1,60,330 1,56,724 2
4 Maruti Alto 1,58,992 1,90,814 -17
5 Maruti Dzire 1,28,251 1,79,159 -28
6 Hyundai Creta 1,20,035 82,074 46
7 Maruti Eeco 1,05,081 1,17,003 -10
8 Hyundai Grand i10 1,00,611 99,592 1
9 Maruti Vitara Brezza 94,635 1,10,641 -14
10 Hyundai Venue 92,972 93,624 -1

Source: Autopunditz

கடந்த நிதியாண்டில் அதிகம் விற்பனையான கார் இதுதானாம்!! எப்போதும்போல் மாருதி சுஸுகி டாப்!

மாருதி ஸ்விஃப்ட்டின் விற்பனை குறைந்ததுபோல் பலேனோவின் விற்பனையும் கடந்த நிதியாண்டில் சற்று குறைந்துள்ளது. இருப்பினும் இரண்டாவது இடத்தில் உள்ள பலேனோ கடந்த நிதியாண்டில் மொத்தம் 1,63,445 பலேனோ கார்கள் விற்கப்பட்டுள்ளன.

கடந்த நிதியாண்டில் அதிகம் விற்பனையான கார் இதுதானாம்!! எப்போதும்போல் மாருதி சுஸுகி டாப்!

இந்த லிஸ்ட்டில் வேகன்ஆர் 1,60,330 யூனிட்களின் விற்பனை உடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. கடந்த இரு ஆண்டுகளாக இதன் விற்பனையில் பெரிய அளவில் எந்த மாற்றமும் இல்லை. முந்தைய நிதியாண்டை காட்டிலும் 17 சதவீத விற்பனையில் சரிந்துள்ள மாருதி ஆல்டோ நான்காவது இடத்தில் உள்ளது.

கடந்த நிதியாண்டில் அதிகம் விற்பனையான கார் இதுதானாம்!! எப்போதும்போல் மாருதி சுஸுகி டாப்!

இதற்கு அடுத்துள்ள மாருதி டிசைர் கார்களின் விற்பனை 28 சதவீதம் குறைந்துள்ளது. இந்த ஐந்து மாருதி கார்களுக்கு அடுத்து ஆறாவது இடத்தில் ஹூண்டாய் காராக க்ரெட்டா உள்ளது. இண்டாம் தலைமுறை க்ரெட்டா கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.

கடந்த நிதியாண்டில் அதிகம் விற்பனையான கார் இதுதானாம்!! எப்போதும்போல் மாருதி சுஸுகி டாப்!

ஏழாவது இடத்தில் மீண்டும் மாருதி காராக ஈக்கோ மொத்தம் 1,05,081 யூனிட்கள் விற்பனை உடன் உள்ளது. கடந்த நிதியாண்டில் 1 லட்ச யூனிட்கள் விற்பனை செய்யப்பட்ட கடைசி மாடலாக ஹூண்டாய் ஐ10 க்ராண்ட் இடம்பிடித்துள்ளது.

கடந்த நிதியாண்டில் அதிகம் விற்பனையான கார் இதுதானாம்!! எப்போதும்போல் மாருதி சுஸுகி டாப்!

இந்த டாப்-10 லிஸ்ட்டில் கடைசி இரு இடங்களில் மாருதி விட்டாரா பிரெஸ்ஸா மற்றும் ஹூண்டாய் வென்யூ மாடல்கள் உள்ளன. இவை இரண்டும் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்து இந்த மார்ச் மாதம் வரையில் கிட்டத்தட்ட 90 ஆயிரம் யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

Most Read Articles

மேலும்... #விற்பனை #sales
English summary
Top selling cars-in FY2021, Maruti Swift, Baleno, Hyundai, Creta Top.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X