எதிர்பார்ப்புகளுக்கு ஆப்பு வைத்த இரண்டாம் அலை வைரஸ் பரவல்... வரிசையாக தள்ளி போன புதிய கார்களின் அறிமுகம்!!

இந்தியாவை கொரோனா வைரஸ் இரண்டால் அலை பரவல் மிகக் கடுமையாக பாதிக்க தொடங்கியுள்ளது. இந்த நிலையால் நாட்டில் அறிமுகமாக இருந்து புதுமுக கார்களின் அரங்கேற்றம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. எந்த கார்களின் அறிமுகம் தள்ளி போயுள்ளது என்பது பற்றிய தகவலையே இப்பதிவில் நாம் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் செல்லலாம்.

எதிர்பார்ப்புகளுக்கு ஆப்பு வைத்த இரண்டாம் அலை பரவல்... வரிசையாக புதிய கார்களின் அறிமுகத்தை தள்ளி போடும் நிறுவனங்கள்...

கோவிட்-19 வைரசின் கொடிய இரண்டாம் அலை பரவலில் சிக்கி இந்தியா தவித்து வருகின்றது. அதிக உயிரிழப்பு, ஆக்சிஜன் பற்றாக்குறை, மருத்துவ கட்டமைப்பு வசதி குறைபாடு ஆகியவற்றால் நாடு பெரும் இன்னல்களுக்கு ஆளாகியுள்ளது. இதுதவிர வைரசால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் மிக கடுமையாக உயர்ந்து வருகின்றது.

எதிர்பார்ப்புகளுக்கு ஆப்பு வைத்த இரண்டாம் அலை பரவல்... வரிசையாக புதிய கார்களின் அறிமுகத்தை தள்ளி போடும் நிறுவனங்கள்...

இதன் விளைவாக நாட்டின் ஒரு சில மாநிலங்கள் முழு முடக்கத்தை நோக்கி நகர்ந்திருக்கின்றன. நமது அண்டை மாநிலமான கேரளா தொடங்கி மஹாராஷ்டிரா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட சில மாநிலங்கள் முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன.

எதிர்பார்ப்புகளுக்கு ஆப்பு வைத்த இரண்டாம் அலை பரவல்... வரிசையாக புதிய கார்களின் அறிமுகத்தை தள்ளி போடும் நிறுவனங்கள்...

இதன் விளைவாக நாட்டில் வர்த்தகம் மிக கடுமையாகப் பாதிப்படைந்துள்ளது. குறிப்பாக, வாகனத்துறை மிகப்பெரிய சரிவைச் சந்திக்கத் தொடங்கியுள்ளது. இதுமட்டுமின்றி, புதுமுக கார்களின் அறிமுகங்களும் நிறுத்தி வைக்கப்பட்டு வருகின்றது. அந்தவகையில், எந்த நிறுவனங்களின் புதிய கார்களின் தள்ளி போயிருக்கின்றன என்பது குறித்த தகவலையே இப்பதிவில் நாம் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் செல்லலாம்.

எதிர்பார்ப்புகளுக்கு ஆப்பு வைத்த இரண்டாம் அலை பரவல்... வரிசையாக புதிய கார்களின் அறிமுகத்தை தள்ளி போடும் நிறுவனங்கள்...

மாருதி சுசுகி செலிரியோ

மாருதி சுசுகி நிறுவனம் அதன் புகழ்வாய்ந்த கார் மாடல்களில் ஒன்றான செலிரியோவை புதுப்பித்து வருகின்றது. இப்புதுப்பிக்கப்பட்ட மாடலை விரைவில் இந்தியாவில் களமிறக்க நிறுவனம் திட்டமிட்டிருக்கின்றது. இந்த ஆண்டே இந்நிகழ்வு அரங்கேறும் என நிறுவனம் கூறி வந்தநிலையில் தற்போது தீவிரமாக பரவலை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் புதுப்பிக்கப்பட்ட செலிரியோவின் அறிமுகத்திற்கு ஆப்பு வைத்துள்ளது.

எதிர்பார்ப்புகளுக்கு ஆப்பு வைத்த இரண்டாம் அலை பரவல்... வரிசையாக புதிய கார்களின் அறிமுகத்தை தள்ளி போடும் நிறுவனங்கள்...

மாருதி சுசுகி செலிரியோ கார் நடப்பு மே மாதத்தில் அறிமுகமாக இருந்தது. தற்போது, இந்தியாவின் முடக்க நிலை இதனை கேள்விக் குறியாக மாற்றியுள்ளது. மேலும், தேதி குறிப்பிடப்படாமல் இதன் அறிமுக ஒத்தி வைப்பு செய்யப்பட்டுள்ளது.

எதிர்பார்ப்புகளுக்கு ஆப்பு வைத்த இரண்டாம் அலை பரவல்... வரிசையாக புதிய கார்களின் அறிமுகத்தை தள்ளி போடும் நிறுவனங்கள்...

ஸ்கோடா ஆக்டோவியா

ஸ்கோடா நிறுவனம் அதன் நான்காம் தலைமுறை ஆக்டோவியா காரை இந்தியாவில் நடப்பாண்டிலேயே அறிமுகம் செய்ய திட்டமிட்டிருந்தது. இதற்கான வேலையில் நிறுவனம் மிக தீவிரமாக ஈடுபட்டு வந்தநிலையில் தற்போது கொரோனா வைரஸ் வைரஸ் பரவல் இரண்டாம் அலை முட்டுக் கட்டைப் போட்டுள்ளது.

எதிர்பார்ப்புகளுக்கு ஆப்பு வைத்த இரண்டாம் அலை பரவல்... வரிசையாக புதிய கார்களின் அறிமுகத்தை தள்ளி போடும் நிறுவனங்கள்...

கடந்த ஏப்ரல் மாதமே எதிர்பார்க்கப்பட்ட நான்காம் தலைமுறை ஸ்கோடா ஆக்டோவியா காரின் அறிமுகம் தற்போது தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இம்மாத இறுதி அல்லது வரும் மாதங்களில் இக்காரின் அறிமுகம் அரங்கேறலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

எதிர்பார்ப்புகளுக்கு ஆப்பு வைத்த இரண்டாம் அலை பரவல்... வரிசையாக புதிய கார்களின் அறிமுகத்தை தள்ளி போடும் நிறுவனங்கள்...

ஹூண்டாய் அல்கஸார்

பெரிதும் எதிர்பார்ப்பை தூண்டி வரும் கார்களில் ஹூண்டாய் அல்கஸார் மாடலும் ஒன்று. இது ஓர் 7 இருக்கை வசதிக் கொண்ட எஸ்யூவி காராகும். தனது பிரபல கார் மாடல்களில் ஒன்றான க்ரெட்டாவின் அடிப்படையிலேயே அல்கஸார் எஸ்யூவியை ஹூண்டாய் உருவாக்கியிருக்கின்றது.

எதிர்பார்ப்புகளுக்கு ஆப்பு வைத்த இரண்டாம் அலை பரவல்... வரிசையாக புதிய கார்களின் அறிமுகத்தை தள்ளி போடும் நிறுவனங்கள்...

ஆனால், இக்கார் ஹூண்டாய் க்ரெட்டாவை விட 150மிமீ நீளமான கார் என்பது குறிப்பிடத்தகுந்தது. கடந்த ஏப்ரல் 29ம் தேதி இக்காரின் அறிமுகம் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது இம்மாத இறுதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

எதிர்பார்ப்புகளுக்கு ஆப்பு வைத்த இரண்டாம் அலை பரவல்... வரிசையாக புதிய கார்களின் அறிமுகத்தை தள்ளி போடும் நிறுவனங்கள்...

மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்ஏ

சொகுசு வாகன பிரியர்களின் மிகுந்த எதிர்பார்ப்புகளில் ஒன்றாக மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்ஏ கார் இருக்கின்றது. இக்காரின் அறிமுக அரங்கேற்றமும் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை பரவலால் தள்ளி போயிருக்கின்றது. ஏப்ரல் மாதமே அரங்கேற இருந்த அறிமுகம் தற்போது நடப்பு மே மாத இறுதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

எதிர்பார்ப்புகளுக்கு ஆப்பு வைத்த இரண்டாம் அலை பரவல்... வரிசையாக புதிய கார்களின் அறிமுகத்தை தள்ளி போடும் நிறுவனங்கள்...

ஆடி இ-ட்ரான்

பிரீமியம் தர எலெக்ட்ரிக் காராக இந்திய மின்சார வாகன சந்தையில் கால் தடம் பதிக்க இருந்ததே இந்த ஆடி இ-ட்ரான். இக்காரின் அறிமுகத்திற்கு முழுமையாக தயாராக இருந்தது ஆடி. மே மாதத்தை நிறுவனம் தேர்வு செய்திருந்தது. ஆனால், தற்போது இதன் அறிமுகத்தை ஜூன் மாதத்திற்கு நிறுவனம் ஒத்தி வைத்துள்ளது. ஆனால், தேதி குறிப்பிடப்படவில்லை.

Most Read Articles

English summary
Top Upcoming Car Launches Delayed Due To COVID-19 Second Wave Pandemic. Read In Tamil.
Story first published: Friday, May 7, 2021, 13:19 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X