டொயோட்டா அய்கோ எக்ஸ் மினி எஸ்யூவி வெளியீடு... படங்களுடன் தகவல்கள்!

டொயோட்டா நிறுவனம் அய்கோ எக்ஸ் என்ற மினி எஸ்யூவி காரை உலக அளவவில் பொது பார்வைக்கு வெளியிட்டுள்ளது. இந்த கார் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டால், அண்மையில் வந்த டாடா பன்ச் காருக்கு போட்டியாக இருக்கும். இந்த புதிய மினி எஸ்யூவி கார் குறித்த தகவல்கள், படங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

டொயோட்டா அய்கோ எக்ஸ் மினி எஸ்யூவி வெளியீடு... படங்களுடன் தகவல்கள்!

டொயோட்டா நிறுவனத்தின் குளோபல் ஆர்க்கிடெக்ச்சர் என்ற உலகளாவிய அளவில் செல்லும் கார்களுக்கான கட்டமைப்புக் கொள்கையில் இந்த கார் உருவாக்கப்பட்டு இருக்கிறது. டொயோட்டா யாரிஸ் க்ராஸ் கார் உருவாக்கப்பட்ட அதே கட்டமைப்பு தாத்பரியங்களில் புதிய வடிவமைப்புடன் இந்த கார் டிசைன் செய்யப்பட்டு இருக்கிறது.

டொயோட்டா அய்கோ எக்ஸ் மினி எஸ்யூவி வெளியீடு... படங்களுடன் தகவல்கள்!

புதிய டொயோட்டா அய்கோ எக்ஸ் கார் 3,700 மிமீ நீளமும், 1,740 மிமீ அகலமும், 1,510 மிமீ உயரமும் கொண்டதாக இருக்கிறது. அதாவது, டாடா பன்ச் எஸ்யூவியைவிட இது பரிமாணத்தில் குறைவாக இருக்கிறது. இந்த கார் இரண்டு விதமான டியூவல் டோன் வண்ணத் தேர்வுகளில் கிடைக்கிறது.

டொயோட்டா அய்கோ எக்ஸ் மினி எஸ்யூவி வெளியீடு... படங்களுடன் தகவல்கள்!

புதிய டொயோட்டா அய்கோ எக்ஸ் காரில் பெரிய க்ரில் அமைப்பு, எல்இடி பகல்நேர விளக்குகளுடன் கூடிய ஹெட்லைட் க்ளஸ்ட்டர்கள், 18 அங்குல அலாய் வீல்களுடன் பல கூடுதல் ஆக்சஸெரீகள் சிறப்பான வடிவமைப்பு மூலமாக முதல் பார்வையிலேயே வசீகரிக்கிறது.

டொயோட்டா அய்கோ எக்ஸ் மினி எஸ்யூவி வெளியீடு... படங்களுடன் தகவல்கள்!

புதிய டொயோட்டா அய்கோ எக்ஸ் காரில் மல்டிஃபங்ஷன் ஸ்டீயரிங் வீல் இடம்பெற்றுள்ளது. 9 அங்குல டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே, ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே செயலிகளை சப்போர்ட் செய்யும் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், வயர்லெஸ் சார்ஜர், கனெக்ட்டிவிட்டி வசதிகளும் உள்ளன. இந்த காரில் 231 லிட்டர் கொள்ளளவு கொண்ட பூட்ரூம் இடவசதி உள்ளது.

டொயோட்டா அய்கோ எக்ஸ் மினி எஸ்யூவி வெளியீடு... படங்களுடன் தகவல்கள்!

டொயோட்டா அய்கோ எக்ஸ் காரில் 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 72 பிஎச்பி பவரையும், 205 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். மேனுவல் அல்லது சிவிடி கியர்பாக்ஸ் தேர்வுகள் கொடுக்கப்படும்.

டொயோட்டா அய்கோ எக்ஸ் மினி எஸ்யூவி வெளியீடு... படங்களுடன் தகவல்கள்!

இந்த காரின் மேனுவல் மாடல் மணிக்கு 158 கிமீ வேகத்திலும், சிவிடி மாடல் மணிக்கு 151 கிமீ வேகத்திலும் செல்லும் திறன் வாய்ந்தது. மேனுவல் மாடல் 100 கிமீ செல்வதற்கு 4.7 லிட்டர் பெட்ரோலும், சிவிடி மாடலுக்கு 4.9 லிட்டர் பெட்ரோலும் செலவாகும் என்று கணக்கீடுகளின்படி, இதன் மைலேஜ் அளவு தெரிவிக்கப்படுகிறது.

டொயோட்டா அய்கோ எக்ஸ் மினி எஸ்யூவி வெளியீடு... படங்களுடன் தகவல்கள்!

புதிய டொயோட்டா அக்கோ எக்ஸ் எஸ்யூவி ஐரோப்பிய நாடுகளுக்கான அம்சங்களுடன் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்தியாவில் இந்த காரை டொயோட்டா கொண்டு வந்தால், டாடா பன்ச், மாருதி இக்னிஸ் உள்ளிட்ட கார்களுக்கு போட்டியாக இருக்கும். ஆனால், உடனடியாக இந்த கார் இந்தியாவில் வருவதற்கான வாய்ப்புகள் குறைவாக இருக்கின்றன.

Most Read Articles
மேலும்... #டொயோட்டா #toyota
English summary
Toyota Aygo X Mini Crossover revealed.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X