உலகளாவிய அறிமுகத்திற்கு தயாராக டொயோட்டாவின் புதிய எலக்ட்ரிக் எஸ்யூவி!! முன்பகுதி இப்படிதான் இருக்கும்!

டொயோட்டா எலக்ட்ரிக் எஸ்யூவி காரின் புதிய டீசர் படங்கள் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளன. அவற்றின் முலம் தயாரிப்பு நிறுவனம் கூறவந்துள்ள விஷயத்தை பற்றி தொடர்ந்து பார்க்கலாம்.

உலகளவிய அறிமுகத்திற்கு தயாராக டொயோட்டாவின் புதிய எலக்ட்ரிக் எஸ்யூவி!! முன்பகுதி இப்படிதான் இருக்கும்!

ஜப்பானிய ஆட்டோமொபைல் நிறுவனமான டொயோட்டா வருகிற 19ஆம் தேதி ஷாங்காய் ஆட்டோ கண்காட்சியின் மூலம் அதன் புதிய எலக்ட்ரிக் எஸ்யூவி காரை உலகளவில் வெளியிட தயாராகி வருகிறது.

இதற்கிடையில் தான் தற்போது இந்த எலக்ட்ரிக் காரின் டீசர் படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. மாசு உமிழ்வு இல்லாத வாகனமாக டொயோட்டாவின் "ஜீரோவிற்கு அப்பால்" துணை-பிராண்டில் இந்த எலக்ட்ரிக் எஸ்யூவி கார் கொண்டுவரப்படுகிறது.

உலகளவிய அறிமுகத்திற்கு தயாராக டொயோட்டாவின் புதிய எலக்ட்ரிக் எஸ்யூவி!! முன்பகுதி இப்படிதான் இருக்கும்!

தற்போது வெளியிடப்பட்டுள்ள படங்களில் டொயோட்டாவின் புதிய எலக்ட்ரிக் காரின் முன்பக்கத்தை மட்டுமே பார்க்க முடிகிறது. இதன் முன்பக்கத்தில் டொயோட்டா லோகோ, இது எலக்ட்ரிக் கார் என்பதை குறிக்கும் விதத்தில் நீல நிறம் கொடுக்கப்பட்டுள்ளது.

எலக்ட்ரிக் வாகனங்களுக்கான இ-டிஎன்ஜிஏ ப்ளாட்ஃபாரத்தின் அடிப்படையில் கொண்டுவரப்படும் இந்த எலக்ட்ரிக் கார் டொயோட்டா மற்றும் சுபாரு ஆட்டோமொபைல் நிறுவனங்களின் கூட்டணியில் உருவாக்கப்பட்டு வருகிறது.

உலகளவிய அறிமுகத்திற்கு தயாராக டொயோட்டாவின் புதிய எலக்ட்ரிக் எஸ்யூவி!! முன்பகுதி இப்படிதான் இருக்கும்!

இதனால் இந்த எலக்ட்ரிக் எஸ்யூவி கார் சுபாரு வெர்சனிலும் எவோல்டிஸ் என்ற பெயரில் கொண்டுவரப்படவுள்ளது. எலக்ட்ரிக் வாகனம் என்பதால், இந்த டொயோட்டா எஸ்யூவி கார் வழக்கமான க்ரில்-ஐ பெறவில்லை.

இருப்பினும் க்ரில் வழங்கப்படும் இடத்தில் சில துளைகளை பார்க்க முடிகிறது. இவை எலக்ட்ரிக் மோட்டாரை குளிர்விப்பதற்காக இருக்கலாம். எல்இடி டிஆர்எல்களுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ள ஹெட்லேம்ப்கள் நேர்த்தியான வடிவில், எல்இடி தரத்தில் உள்ளன.

உலகளவிய அறிமுகத்திற்கு தயாராக டொயோட்டாவின் புதிய எலக்ட்ரிக் எஸ்யூவி!! முன்பகுதி இப்படிதான் இருக்கும்!

ஒட்டுமொத்தமாக இந்த எலக்ட்ரிக் டொயோட்டா காரின் முன்பகுதி கூர்மையான தோற்றத்தில் உள்ளது. இதேபோன்று தான் காரின் மற்ற பக்கங்களும் இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.

இந்த எலக்ட்ரிக் எஸ்யூவி கார் முழுக்க முழுக்க ஐரோப்பிய சந்தைகளை குறிவைத்து வடிவமைக்கப்பட்டுள்ளதாக டொயோட்டா நிறுவனம் ஏற்கனவே கூறியிருந்தது. ஆனால் காரின் செயல்படுதிறன் குறித்த விபரங்கள் எதுவும் தற்போது வரையில் வெளியிடப்படவில்லை.

உலகளவிய அறிமுகத்திற்கு தயாராக டொயோட்டாவின் புதிய எலக்ட்ரிக் எஸ்யூவி!! முன்பகுதி இப்படிதான் இருக்கும்!

இ-டிஎன்ஜிஏ ப்ளாட்ஃபாரம் முன், பின் மற்றும் அனைத்து-சக்கர-ட்ரைவ் உள்ளமைவுகளை வழங்கக்கூடியது. அதேபோல் இந்த ப்ளாட்ஃபாரத்தில் 50kWh-ல் இருந்து 100kWh வரையில் ரேஞ்சை கொண்ட பேட்டரி பொருத்தப்பட்ட எலக்ட்ரிக் வாகனங்களை உருவாக்கலாம்.

டொயோட்டாவின் இந்த எலக்ட்ரிக் எஸ்யூவி காரின் இறுதி விற்பனை மாடல் 2023ல் விற்பனைக்கு வரலாம். 2030க்குள் சுஸுகி/டைஹாட்சு உடன் இணைந்து தயாரிக்கப்படவுள்ளதாக டொயோட்டா அறிவித்துள்ள 6 பேட்டரி எலக்ட்ரிக் வாகனங்களில் இது முதல் வாகனமாகும்.

Most Read Articles
மேலும்... #டொயோட்டா #toyota
English summary
Toyota electric SUV teased; unveil on April 19.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X