அலசி ஆராயப்பட்ட டொயோட்டா ஃபார்ச்சூனர் லெஜண்டர்... எப்படி இருக்கு இந்த கார்?... ரோட் டெஸ்ட் ரிவியூ!!

நமது டிரைவ்ஸ்பார்க் குழு அண்மையில் விற்பனைக்கு அறிமுகமான டொயோட்டா ஃபார்ச்சூனர் லெஜண்டர் காரை சாலையில் வைத்து டெஸ் ரிவியூ செய்து பார்த்தது. அப்போது கிடைக்கப்பெற்ற சுவாரஷ்ய தகவல்களை வாசகர்களுக்கு வழங்கும் பிரத்யேக விரிவான தகவலை இப்பதிவில் வழங்கியுள்ளோம். வாருங்கள் பார்க்கலாம்.

அலசி ஆராயப்பட்ட டொயோட்டா ஃபார்ச்சூனர் லெஜண்டர்... எப்படி இருக்கு இந்த கார்?... ரோட் டெஸ் ரிவியூ!!

இந்தியாவில் மிக வலுவான வரவேற்பைப் பெற்று வரும் எஸ்யூவி கார்களில் ஃபார்ச்சூனர் மாடலும் ஒன்று. இந்த கார் ஒரு தசாப்தத்திற்கும் அதிகமாக இந்திய சந்தையில் விற்பனையில் இருந்து வருகின்றது. இந்த வலுவான வரவேற்பை தக்க வைத்துக் கொள்ளும் வகையில் புதிய தலைமுறை ஃபார்ச்சூனர் மாடலை டொயோட்டா நிறுவனம் மிக சமீபத்தில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது.

அலசி ஆராயப்பட்ட டொயோட்டா ஃபார்ச்சூனர் லெஜண்டர்... எப்படி இருக்கு இந்த கார்?... ரோட் டெஸ் ரிவியூ!!

அப்போது, அதன் வழக்கமான ஃபார்ச்சூனர் எஸ்யூவி காரைக் காட்டிலும் சற்று ஸ்போர்ட்டியான தோற்றம் கொண்ட ஃபார்ச்சூனர் லெஜண்டர் எனும் மாடலையும் நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இக்காரையே நமது டிரைவ் குழு ஓட்டுவதற்கு எப்படி இருக்கின்றது என்பதை பரிசோதித்து பார்த்தது.

அலசி ஆராயப்பட்ட டொயோட்டா ஃபார்ச்சூனர் லெஜண்டர்... எப்படி இருக்கு இந்த கார்?... ரோட் டெஸ் ரிவியூ!!

இதுமட்டுமின்றி தொழில்நுட்ப வசதி மற்றும் சொகுசு வசதி ஆகியவற்றிலும் இக்கார் எப்படி இருக்கின்றது என்பதையும் இந்த டிரைவின் வாயிலாக நாங்கள் பரிசோதித்து பார்த்தோம். அப்போது எங்களுக்கு கிடைத்த சுவாரஷ்ய தகவலையே இந்த பதிவில் ரிவியூவாக வழங்கியுள்ளோம். வாருங்கள் இப்புதிய டொயோட்டா ஃபார்ச்சூனர் லெஜண்டர் எப்படி இருக்கின்றது என்பதுகுறித்த தகவலைக் கீழே காணலாம்.

அலசி ஆராயப்பட்ட டொயோட்டா ஃபார்ச்சூனர் லெஜண்டர்... எப்படி இருக்கு இந்த கார்?... ரோட் டெஸ் ரிவியூ!!

டிசைன் மற்றும் ஸ்டைல்:

வழக்கமான ஃபார்ச்சூனர் காரைக் காட்டிலும் லேசான மாறுபட்ட தோற்றத்திலேயே லெஜண்டர் வெர்ஷன் ஃபார்ச்சூனர் காட்சியளிக்கின்றது. கூடுதல் ஸ்போர்ட்டி தோற்றத்தையே லெஜண்டர் வெர்ஷன் ஃபார்ச்சூனருக்கு டொயோட்டா வழங்கியுள்ளது. இதற்காக, மாற்று ஸ்டைல் கொண்ட கிரில் மற்றும் உடல் பேனல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

அலசி ஆராயப்பட்ட டொயோட்டா ஃபார்ச்சூனர் லெஜண்டர்... எப்படி இருக்கு இந்த கார்?... ரோட் டெஸ் ரிவியூ!!

தொடர்ந்து, வழக்கமான ஃபார்ச்சூனர் காரில் இருந்து மாறுபட்டு காணப்பட வேண்டும் என்பதற்காக குரோம் பூச்சுக் கொண்ட அணிகலன்களை நீக்கியிருக்கின்றது. வழக்கமான ஃபார்ச்சூனரில் இந்த அணிகலன்கள் அதிக கவர்ச்சியை வழங்கும் நோக்கில் பயன்படுத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தகுந்தது.

அலசி ஆராயப்பட்ட டொயோட்டா ஃபார்ச்சூனர் லெஜண்டர்... எப்படி இருக்கு இந்த கார்?... ரோட் டெஸ் ரிவியூ!!

அதேசமயம், லெக்சஸ் கார்களில் பயன்படுத்துவதைப் போல கிரில், எக்ஸ் வடிவத்திலான பேட்டர்ன்கள் இக்காரில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. தொடர்ந்து, அதிக ஸ்போர்ட்டி தோற்றத்தைக் கொடுக்கும் வகையில் ஆங்காங்கே கருப்பு நிற கூறுகள் பொருத்தப்பட்டுள்ளன.

அலசி ஆராயப்பட்ட டொயோட்டா ஃபார்ச்சூனர் லெஜண்டர்... எப்படி இருக்கு இந்த கார்?... ரோட் டெஸ் ரிவியூ!!

மறு வடிவமைப்பு செய்யப்பட்ட ஹெட்லேம்ப் க்ளஸ்டர் இக்காரில் பயன்படுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து, காரின் கவர்ச்சியான தோற்றத்திற்காக 'நீர் வீழ்ச்சி' போன்ற டிஆர்எல்-கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இத்துடன், இரு புரஜெக்டர் மின் விளக்குகள் ஹெட்லேம்பிற்காக பயன்படுத்தப்பட்டுள்ளன. ஒன்று லோ பீம் மின் விளக்காகவும், மற்றொன்று ஹை பீம் மின் விளக்காகவும் செயல்படும்.

அலசி ஆராயப்பட்ட டொயோட்டா ஃபார்ச்சூனர் லெஜண்டர்... எப்படி இருக்கு இந்த கார்?... ரோட் டெஸ் ரிவியூ!!

இதுமட்டுமின்றி பனி மின் விளக்கும் இக்காரின் முகப்பு பகுதியில் பொருத்தப்பட்டிருக்கின்றது. இது பம்பரின் கீழ் இரு முனைப் பகுதியில் இடம் பெற்றிருக்கின்றது. தொடர்ந்து, இதற்கும் கீழாக மிக அடிப்பகுதியில் இரு முனைகளில் பார்க்கிங் மின் விளக்குகள் பொருத்தப்பட்டிருக்கின்றன. இவை, இரண்டாவது டிஆர்எல்களாகவும் செயல்படும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த அனைத்து மின் விளக்குகளுமே எல்இடி தரத்திலானவை என்பது குறிப்பிடத்தகுந்தது.

அலசி ஆராயப்பட்ட டொயோட்டா ஃபார்ச்சூனர் லெஜண்டர்... எப்படி இருக்கு இந்த கார்?... ரோட் டெஸ் ரிவியூ!!

முகப்பு பகுதியைப் போலவே டொயோட்டா ஃபார்ச்சூனர் லெஜண்டர் மாடலின் பக்கவாட்டு பகுதியும் கண்கவர் அம்சங்கள் சிலவற்றைப் பெற்றிருக்கின்றன. அந்தவகையில், பக்கவாட்டு பகுதியை நோக்கி நகர்ந்த உடன் நம் கண்களைக் கவரும் வகையில் 18 இன்சில், இரு நிறங்களில் பொருத்தப்பட்டிருக்கும் அலாய் வீல் இருக்கின்றது.

அலசி ஆராயப்பட்ட டொயோட்டா ஃபார்ச்சூனர் லெஜண்டர்... எப்படி இருக்கு இந்த கார்?... ரோட் டெஸ் ரிவியூ!!

இதற்கு அடுத்தபடியாக காரில் ஏறி, இறங்குவதை எளிதாக்கும் வகையில் ஏறுமேடை காரின் இரு பக்காவட்டு பகுதியிலும் பொருத்தப்பட்டிருக்கின்றன. தொடர்ந்து, காரின் ஹேண்டில் பார் குரோம் பூச்சுடன் பயன்படுத்தப்பட்டிருப்பதை நம்மால் காண முடிகின்றது. இவையனைத்தும் சேர்ந்து லெஜண்டரின் பக்கவாட்டு பகுதிக்கு அதிக கவர்ச்சியான மற்றும் ஸ்போர்ட்டி லுக்கை வழங்கும் வகையில் அமைந்துள்ளது.

அலசி ஆராயப்பட்ட டொயோட்டா ஃபார்ச்சூனர் லெஜண்டர்... எப்படி இருக்கு இந்த கார்?... ரோட் டெஸ் ரிவியூ!!

முகப்பு மற்றும் பக்கவாட்டு பகுதியைப் போல காரின் மேற்கூரையையும் அதிக கவனத்துடன் கட்டமைத்திருக்கின்றது டொயோட்டா. ஆமாங்க, மேற்கூரைக்கு மேட் கருப்பு நிறத்தை வழங்கியிருக்கின்றது. இது எதிர்மறையான நிறமாக அமைந்திருந்தாலும் படுகவர்ச்சியான தோற்றத்திற்கு வழி வகுக்கும் வகையில் இது அமைந்துள்ளது. இத்துடன், ரூஃப் ரெயில்கள் மற்றும் சுறா மீனின் துடுப்பு போன்ற ஆன்டெனா ஆகியவையும் மேற்கூரை பகுதியில் இடம்பிடித்துள்ளன.

அலசி ஆராயப்பட்ட டொயோட்டா ஃபார்ச்சூனர் லெஜண்டர்... எப்படி இருக்கு இந்த கார்?... ரோட் டெஸ் ரிவியூ!!

லெஜண்டர் ஃபார்ச்சூனர் காரின் பின் பகுதி; அனைத்து பகுதிகளையும் பார்த்து பார்த்து வடிவமைத்திருக்கும் டொயோட்டா இதன் பின்பக்கத்தை மட்டும் விட்டு வைக்குமா என்ன?, இங்கும் கூடுதல் கவர்ச்சியைச் சேர்த்திருக்கின்றது நிறுவனம். ஸ்டாப் (சிவப்பு) மின் விளக்கை இணைக்கும் வகையில் ஒரு கருப்பு நிற பட்டை பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. மினு மினுப்பான கருப்பு நிறம் கொண்ட இந்த பட்டையிலேயே பிராண்ட் பெயரான ஃபார்ச்சூனர் எனும் பெயர் இடம் பெற்றிருக்கின்றது. இதற்கு கீழே லெஜண்டர் எனும் பேட்ஜ் ஒட்டப்பட்டுள்ளது.

அலசி ஆராயப்பட்ட டொயோட்டா ஃபார்ச்சூனர் லெஜண்டர்... எப்படி இருக்கு இந்த கார்?... ரோட் டெஸ் ரிவியூ!!

காரின் உட்பகுதி

கருப்பு மற்றும் பழுப்பு நிறத்தால் காரின் உட்பகுதி அலங்கரிக்கப்பட்டுள்ளது. லெஜண்டர் வெர்ஷன் ஃபார்ச்சூனர் காரில் மட்டுமே இந்த இரு நிற தேர்வை நம்மால் பெற முடியும். காரின் உட்பகுதியையும் ஸ்போர்ட்டி லுக்கிற்கு உயர்த்த வேண்டும் என்பதற்காக டொயோட்டா இந்த இரு நிற கலவையைப் பயன்படுத்தியுள்ளது.

அலசி ஆராயப்பட்ட டொயோட்டா ஃபார்ச்சூனர் லெஜண்டர்... எப்படி இருக்கு இந்த கார்?... ரோட் டெஸ் ரிவியூ!!

இத்துடன், மிருதுவமான தொடுதல் உணர்வை வழங்கும் வேண்டும் என்பதற்காக டேஷ்போர்டு மற்றும் உட்பகுதி பேனல்கள் பலவற்றில் மிருதுவான மெட்டீரியல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. இத்துடன், ஆம்பிசியன்ட் மின் விளக்கு, 8 இன்சிலான இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளது.

அலசி ஆராயப்பட்ட டொயோட்டா ஃபார்ச்சூனர் லெஜண்டர்... எப்படி இருக்கு இந்த கார்?... ரோட் டெஸ் ரிவியூ!!

இந்த திரை ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே வசதிக் கொண்டது என்பது குறிப்பிடத்தகுந்தது. தொடர்ந்து, தானியங்கி க்ளைமேட் கன்ட்ரோல் எல்இடி திரை வதியுடன் வழங்கப்பட்டுள்ளது. இந்த திரை காரின் வெப்ப நிலை பற்றிய தகவல் மற்றும் மின் விசிறி இயங்கும் வேகம் ஆகியவற்றை அறிந்து கொள்ள உதவும்.

அலசி ஆராயப்பட்ட டொயோட்டா ஃபார்ச்சூனர் லெஜண்டர்... எப்படி இருக்கு இந்த கார்?... ரோட் டெஸ் ரிவியூ!!

தொடர்ந்து, கியருக்கு வலது பக்கம் இரு கப் ஹோல்டர்கள் வழங்கப்பட்டுள்ளன. இதுமட்டுமின்றி ஸ்மார்ட்போன் சார்ஜர், ஆக்ஸ் கேபிள் இணைப்பு வசதி உள்ளிட்டவையும் இக்காரில் கொடுக்கப்பட்டிருக்கின்றது. திசையைக் கட்டுப்படுத்த உதவும் ஸ்டியரிங் வீல் லெதர் போர்வையில் போர்த்தப்பட்டிருக்கின்றது.

அலசி ஆராயப்பட்ட டொயோட்டா ஃபார்ச்சூனர் லெஜண்டர்... எப்படி இருக்கு இந்த கார்?... ரோட் டெஸ் ரிவியூ!!

இந்த வீல் பல்வேறு கன்ட்ரோல் பொத்தான்களை உள்ளடக்கியதாக இருக்கின்றது. அதாவது, செல்போனுக்கு வரும் அழைப்புகளை ஏற்றல் மற்றும் தவிர்க்க செய்தல், ஒலியை உயர்த்துதள் மற்றும் குறைத்தல் என பல்வேறு அம்சங்களைக் கன்ட்ரோல் செய்யக் கூடிய பொத்தான்கள் இதில் இடம் பெற்றிருக்கின்றன.

அலசி ஆராயப்பட்ட டொயோட்டா ஃபார்ச்சூனர் லெஜண்டர்... எப்படி இருக்கு இந்த கார்?... ரோட் டெஸ் ரிவியூ!!

மேலும், வழக்கமான ஃபார்ச்சூனர் காரில் இடம்பெற்றிருப்பதைப் போன்ற இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்டர் இக்காரில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இது துளியும் வித்தியாசமின்றி செயல்படும். குறிப்பாக, ஸ்பீடோ மீட்டர் மற்றும் டேக்கோ மீட்டர் ஆகியவற்றை காண்பிக்க இந்த க்ளஸ்டர் திரை உதவும். இது டிஎஃப்டி எம்ஐடி வசதிக் கொண்டது என்பது குறிப்பிடத்தகுந்தது.

அலசி ஆராயப்பட்ட டொயோட்டா ஃபார்ச்சூனர் லெஜண்டர்... எப்படி இருக்கு இந்த கார்?... ரோட் டெஸ் ரிவியூ!!

காரின் முன்பக்கத்தில் வழங்கப்பட்டிருக்கும் இரு இருக்கைககளில் எலக்ட்ரானிக் பொத்தான்களால் கட்டுப்படுத்தும் வசதியைக் கொண்டிருக்கின்றது. மேலும், இந்த முன்னிருக்கைகளுக்கு கூடுதல் காற்றோட்டத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் இரு ஏசி வெண்டுகள் இடம்பெற்றிருக்கின்றன. இதில் அளவைக் கட்டுப்படுத்தக்கூடிய கருவிகள் இடம்பெற்றிருக்கின்றன.

அலசி ஆராயப்பட்ட டொயோட்டா ஃபார்ச்சூனர் லெஜண்டர்... எப்படி இருக்கு இந்த கார்?... ரோட் டெஸ் ரிவியூ!!

இரண்டாம் வரிசையில் இருக்கும் இருக்கைகளுக்கு அதி லெக் மற்றும் ஹெட்ரூம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆகையால், அசௌகரியம் என்பது துளியளவும் இக்காரில் இருக்காது. இத்துடன், இவர்களுக்கும் குளிர்ச்சியான அனுபவத்தை வழங்கும் வகையில் ஏசி வெண்டுகள் இடம்பெற்றிருக்கின்றன. தொடர்ந்து, சாய்ந்து கொள்ளும் வசதி, கப்புகளை வைக்கும் ஹோல்டர்கள், கைகளுக்கு ரெஸ்ட் கொடுக்கும் பேட்கள் உள்ளிட்டவையும் வழங்கப்பட்டுள்ளன.

அலசி ஆராயப்பட்ட டொயோட்டா ஃபார்ச்சூனர் லெஜண்டர்... எப்படி இருக்கு இந்த கார்?... ரோட் டெஸ் ரிவியூ!!

இக்காரில் மூன்றாம் வரிசை இருக்கை ஸ்பெஷலாக சிறுவர்களுக்காகவே வடிவமைக்கப்பட்டிருக்கின்றது. ஆகையால், பெரியவர்களால் பின்னிருக்கையில் சௌகரியமாக உணர முடியதே என்பதே உண்மை. இத்துடன், இந்த இருக்கையை மடித்து வைத்துக் கொள்ளும் வசதிக் கொடுக்கப்பட்டிருக்கின்றது.

அலசி ஆராயப்பட்ட டொயோட்டா ஃபார்ச்சூனர் லெஜண்டர்... எப்படி இருக்கு இந்த கார்?... ரோட் டெஸ் ரிவியூ!!

அவ்வாறு இதனை மடித்து வைத்துக் கொண்டால் இதன் பூட் ஸ்பேஸை அதிகப்படுத்திக் கொள்ள முடியும். வழக்கமாக நிலையில் 300 லிட்டர் வரை பொருட்களை பின் பகுதியில் ஏற்றிக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இதனை பெரிதாக்கிக் கொள்ள வேண்டும், மூன்றாம் வரிசை இருக்கைகளை நிச்சயம் மடித்து வைத்தே ஆக வேண்டும்.

அலசி ஆராயப்பட்ட டொயோட்டா ஃபார்ச்சூனர் லெஜண்டர்... எப்படி இருக்கு இந்த கார்?... ரோட் டெஸ் ரிவியூ!!

எஞ்ஜின் மற்றும் அதன் செயல் திறன்

டொயோட்டா ஃபார்ச்சூனர் லெஜண்டர் காரில் 2.8 லிட்டர் டர்போசார்ஜட் டீசல் எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 201 பிஎச்பி-யை 3,000 ஆர்பிஎம்மிலும், 500 என்எம் டார்க்கை 2,800 ஆர்பிஎம்மிலும் வெளிப்படுத்தும். இந்த எஞ்ஜின் வெறும் 10 செகண்டுகளிலேயே பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100கிமீ எனும் வேகத்தை எட்டிவிடும் திறன் கொண்டதாக இருக்கின்றது.

அலசி ஆராயப்பட்ட டொயோட்டா ஃபார்ச்சூனர் லெஜண்டர்... எப்படி இருக்கு இந்த கார்?... ரோட் டெஸ் ரிவியூ!!

பின் பக்க வீல் இயங்கும் வசதியுடன் மட்டுமே லெஜண்டர் கார் விற்பனைக்குக் கிடைக்கின்றது என்பதை நாம் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும். அதேசமயம், வழக்கமான ஃபார்ச்சூனர் 4X4 வசதியில் விற்பனைக்குக் கிடைத்து வருகின்றது. லெஜண்டர் ஃபார்ச்சூனர் 6 ஸ்பீடு தானியங்கி கியர்பாக்ஸ் தேர்வில் மட்டுமே விற்பனைக்குக் கிடைக்கின்றது.

அலசி ஆராயப்பட்ட டொயோட்டா ஃபார்ச்சூனர் லெஜண்டர்... எப்படி இருக்கு இந்த கார்?... ரோட் டெஸ் ரிவியூ!!

லெஜண்டர் ஃபார்ச்சூனர் காரில் இடம்பெற்றிருக்கும் கியர்பாக்ஸ் விரைவான செயல்பாடு கொண்ட கருவி அல்ல. அதேசமயம், இதனை கை ஏற்றதாகக் கொண்டு வந்துவிட்டால், எந்தமாதிரியான காராக அதனை ஓவர் டேக் செய்து செல்ல இக்கியர்பாக்ஸ் உதவும்.

அலசி ஆராயப்பட்ட டொயோட்டா ஃபார்ச்சூனர் லெஜண்டர்... எப்படி இருக்கு இந்த கார்?... ரோட் டெஸ் ரிவியூ!!

இந்த கியர்பாக்ஸில் எஞ்ஜின் பிரேக்கிங் வலுவாக இல்லை என்பதையும் நாம் இங்கு கவனிக்க வேண்டும். அதேசமயம், இந்த கியர்பாக்ஸில் பேட்டில் ஷிஃப்டர்கள் கியர்பாக்ஸைக் கட்டுப்படுத்துவதைச் சுலபமாக்க வழங்கப்பட்டுள்ளது.

அலசி ஆராயப்பட்ட டொயோட்டா ஃபார்ச்சூனர் லெஜண்டர்... எப்படி இருக்கு இந்த கார்?... ரோட் டெஸ் ரிவியூ!!

டொயோட்டா லெஜண்டர் ஃபார்ச்சூனர் காரில் மூன்று விதமான டிரைவிங் மோட்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ஈகோ, வழக்கமானது மற்றும் ஸ்போர்ட் ஆகியவை அவை ஆகும். இவை, ஸ்டியரிங் வீலை கட்டுப்படுத்தும் விதம் மற்றும் உயர் வேக இயக்கத்தை வழங்க உதவும். ஒவ்வொரு மோடிலும் தனித்துவமான ரெஸ்பான்ஸை ஸ்டியரிங் வீல் வழங்குவதை நம்மால் உணர முடிகின்றது. குறிப்பாக சில குறிப்பிட்ட மோட்கள் ஸ்டியரிங் வீலை சற்று கடினமானதாக மாற்றும் வகையில் உள்ளது.

அலசி ஆராயப்பட்ட டொயோட்டா ஃபார்ச்சூனர் லெஜண்டர்... எப்படி இருக்கு இந்த கார்?... ரோட் டெஸ் ரிவியூ!!

சஸ்பென்ஷனைப் பொருத்தவரை எந்தவொரு மாற்றமுமின்றி வழக்கமான ஃபார்ச்சூனர் மற்றும் லெஜண்டர் ஃபார்ச்சூனர்கள் இருக்கின்றன. இதன் கிரவுண்ட் கிளியரன்ஸ் 225மிமீ ஆக உள்ளது. ஆகையால், இதனை ஆஃப்-ரோடுகளில் வைத்து இயக்குவது மிக சுலபம்.

அலசி ஆராயப்பட்ட டொயோட்டா ஃபார்ச்சூனர் லெஜண்டர்... எப்படி இருக்கு இந்த கார்?... ரோட் டெஸ் ரிவியூ!!

மைலேஜ்

புதிய லெஜண்டர் ஃபார்ச்சூனர் கார் நகரங்களில் லிட்டர் ஒன்றிற்கு 9-10 கிமீ வரையில் மைலேஜை வழங்கும் என தெரிய வந்திருக்கின்றது. அதேசமயம், போக்குவரத்து நெரிசல்கள் அதிகம் இல்லாத நெடுஞ்சாலைகளில் வைத்து இயக்கும்போது 13 முதல் 14.5 கிமீ வரையில் ஒரு லிட்டர் டீசலுக்கு மைலேஜை வழங்கும். ஒரு முறை முழுமையாக டேங்கை நிரப்பினால் 550கிமீ வரை பயணிக்கலாம்.

அலசி ஆராயப்பட்ட டொயோட்டா ஃபார்ச்சூனர் லெஜண்டர்... எப்படி இருக்கு இந்த கார்?... ரோட் டெஸ் ரிவியூ!!

இக்காருக்கு இந்திய மதிப்பில் ரூ. 46 லட்சம் என்ற விலையை நிறுவனம் நிர்ணித்துள்ளது. இது வழக்கமான ஃபார்ச்சூனர் காரைக் காட்டிலும் அதிக சிறப்பு வசதிகளைக் கொண்டிருக்கின்ற காரணத்தினால் சற்று அதிக விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. தொடர்ந்து, தற்போது இந்தியாவில் விற்பனையில் இருக்கும் எம்ஜி குளோஸ்டர் மற்றும் ஃபோர்டு என்டீயோவர் ஆகிய கார்களுக்கு இது போட்டியாளனாக அமைந்துள்ளது.

Most Read Articles
மேலும்... #டொயோட்டா #toyota
English summary
Toyota Fortuner Legender Road Test Review: Here Is Full Report About Most Powerful SUV In Its Segment. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X