டொயோட்டா க்ளான்ஸா (அ) அர்பன் க்ரூஸர் காரை வாங்கவுள்ளீர்களா? அப்போ இந்த விலை உயர்வை தெரிஞ்சிக்கோங்க...

இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படும் குறிப்பிட்ட சில டொயோட்டா கார்களின் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளன. இதனை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

டொயோட்டா க்ளான்ஸா (அ) அர்பன் க்ரூஸர் காரை வாங்கவுள்ளீர்களா? அப்போ இந்த விலை உயர்வை தெரிஞ்சிக்கோங்க...

டொயோட்டாவின் தற்போதைய விலை அதிகரிப்பு நடவடிக்கையில் அர்பன் க்ரூஸர் காம்பெக்ட் எஸ்யூவி மற்றும் சப்-4 மீட்டர் ப்ரீமியம் ஹேட்ச்பேக்கான க்ளான்ஸா கார்கள் அடங்குகின்றன.

டொயோட்டா க்ளான்ஸா (அ) அர்பன் க்ரூஸர் காரை வாங்கவுள்ளீர்களா? அப்போ இந்த விலை உயர்வை தெரிஞ்சிக்கோங்க...

இவற்றில் டொயோட்டா க்ளான்ஸா ஜி மற்றும் வி என்ற இரு விதமான வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகிறது. இதில் ஆட்டோமேட்டிக் மற்றும் மேனுவல் கியர்பாக்ஸ் உடன் வழங்கப்படும் ஜி வேரியண்ட்டின் விலை ரூ.16,000 உயர்த்தப்பட்டுள்ளது.

டொயோட்டா க்ளான்ஸா (அ) அர்பன் க்ரூஸர் காரை வாங்கவுள்ளீர்களா? அப்போ இந்த விலை உயர்வை தெரிஞ்சிக்கோங்க...

இந்த விலை அதிகரிப்பிற்கு பிறகு மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் உடனான ஜி வேரியண்ட்டின் விலை ரூ.7.34 லட்சமாகவும், ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் உடன் ரூ.8.54 லட்சமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், மைல்ட்-ஹைப்ரீட் தொழிற்நுட்பத்துடன் ஜி வேரியண்ட் விற்பனை செய்யப்படுகிறது.

டொயோட்டா க்ளான்ஸா (அ) அர்பன் க்ரூஸர் காரை வாங்கவுள்ளீர்களா? அப்போ இந்த விலை உயர்வை தெரிஞ்சிக்கோங்க...

5-ஸ்பீடு மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் உடன் மட்டுமே தற்போதைக்கு விற்பனை செய்யப்படும் இந்த மைல்ட்-ஹைப்ரீட் வேரியண்ட்டின் விலை அதிகப்பட்சமாக ரூ.34,000 உயர்த்தப்பட்டு ரூ.7.99 லட்சமாக கொண்டுவரப்பட்டுள்ளது.

டொயோட்டா க்ளான்ஸா (அ) அர்பன் க்ரூஸர் காரை வாங்கவுள்ளீர்களா? அப்போ இந்த விலை உயர்வை தெரிஞ்சிக்கோங்க...

க்ளான்ஸாவின் வி வேரியண்ட்டின் விலைகள், விலை உயர்வுக்கு பிறகு ரூ.8.10 லட்சம் மற்றும் ரூ.9.30 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன. ஜி வேரியண்ட்டை போல் வி வேரியண்ட்டும் ஆட்டோமேட்டிக் மற்றும் மேனுவல் தேர்வுகளில் கிடைக்கிறது.

டொயோட்டா க்ளான்ஸா (அ) அர்பன் க்ரூஸர் காரை வாங்கவுள்ளீர்களா? அப்போ இந்த விலை உயர்வை தெரிஞ்சிக்கோங்க...

மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா காம்பெக்ட் எஸ்யூவி காரின் ரீபேட்ஜ்டு வெர்சனாக கொண்டுவரப்பட்ட அர்பன் க்ரூஸர் மிட், ஹை & ப்ரீமியம் என்ற மூன்று விதமான கிரேட்களில் விற்பனை செய்யப்படுகிறது. இவை மூன்றிற்கும் ஆட்டோமேட்டிக் மற்றும் மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் தேர்வுகள் கொடுக்கப்படுகின்றன.

டொயோட்டா க்ளான்ஸா (அ) அர்பன் க்ரூஸர் காரை வாங்கவுள்ளீர்களா? அப்போ இந்த விலை உயர்வை தெரிஞ்சிக்கோங்க...

இதில் ப்ரீமியம் வேரியண்ட்டின் விலைகள் வெறும் ரூ.6,000 மட்டுமே அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆட்டோமேட்டிக் தேர்வில் ப்ரீமியம் கிரேடின் புதிய விலை ரூ.9.91 லட்சமாகவும், மேனுவல் தேர்வில் ரூ.11.41 லட்சமாகவும் கொண்டுவரப்பட்டுள்ளது.

டொயோட்டா க்ளான்ஸா (அ) அர்பன் க்ரூஸர் காரை வாங்கவுள்ளீர்களா? அப்போ இந்த விலை உயர்வை தெரிஞ்சிக்கோங்க...

மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் தேர்வுடனான மிட் மற்றும் ஹை கிரேட் வேரியண்ட்களின் விலைகள் சற்று அதிகமாக உயர்த்தப்பட்டுள்ளன. ஆனால் ஆட்டோமேட்டிக் தேர்வுடன் கிடைக்கும் இந்த வேரியண்ட்களின் விலைகள் குறைவாகவே அதிகரிக்கப்பட்டுள்ளன.

டொயோட்டா க்ளான்ஸா (அ) அர்பன் க்ரூஸர் காரை வாங்கவுள்ளீர்களா? அப்போ இந்த விலை உயர்வை தெரிஞ்சிக்கோங்க...

அர்பன் க்ரூஸரை போல் க்ளான்ஸாவும் மாருதி சுஸுகி பலேனோ ப்ரீமியம் ஹேட்ச்பேக் காரின் ரீபேட்ஜ்டு வெர்சனாகும். ஏனெனில் ஜப்பானிய ஆட்டோமொபைல் நிறுவனங்களான சுஸுகி மற்றும் டொயோட்டா கூட்டணியில் உள்ளது உங்களுக்கு தெரிந்திருக்கலாம்.

Most Read Articles

மேலும்... #டொயோட்டா #toyota
English summary
Toyota Glanza & Urban Cruiser Prices Hiked: Price Hike Of Upto Rs 34,000 & Rs 13,000 Respectively
Story first published: Saturday, May 8, 2021, 8:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X