இந்திய ஷோரூம்களில் காட்சி தந்த 14 இருக்கைகள் கொண்ட டொயோட்டா எம்பிவி வாகனம்... செம்மையா இருக்கு!!

14 இருக்கைகள் கொண்ட டொயோட்டா எம்பிவி வாகனம் இந்திய ஷோரூம்களில் காட்சித் தர தொடங்கியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம்.

இந்திய ஷோரூம்களில் காட்சி தந்த 14 இருக்கைகள் கொண்ட டொயோட்டா எம்பிவி வாகனம்... செம்மையா இருக்கு!!

நடப்பாண்டின் தொடக்கத்தில் டொயோட்டாா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம் இந்திய சந்தையில் ஹியாஸ் எனும் புதிய வாகனத்தை அறிமுகப்படுத்தியது. இந்த வாகனத்திற்கு ரூ. 55 லட்சம் என்ற விலையை நிறுவனம் நிர்ணயித்தது. இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.

இந்திய ஷோரூம்களில் காட்சி தந்த 14 இருக்கைகள் கொண்ட டொயோட்டா எம்பிவி வாகனம்... செம்மையா இருக்கு!!

இதனைத் தொடர்ந்து, கடந்த சில நாட்களாக இவ்வாகனம் இந்தியாவின் பொதுசாலைகளில் தனது தரிசனத்தை அவ்வப்போது வழங்கி வந்தது. இந்த நிலையிலேயே தற்போது டொயோட்டாவின் குறிப்பிட்ட ஷோரூம்களில் இவ்வாகனம் முழுமையாக காட்சியளிக்கத் தொடங்கியிருக்கின்றது.

இந்திய ஷோரூம்களில் காட்சி தந்த 14 இருக்கைகள் கொண்ட டொயோட்டா எம்பிவி வாகனம்... செம்மையா இருக்கு!!

இவற்றின் விற்பனை வரவேற்பைப் பொருத்த இன்னும் சில அலகுகளை இறக்குமதி செய்ய நிறுவனம் திட்டமிட்டிருக்கின்றது. சில்வர் மற்றும் வெள்ளை நிற கலவையில் இக்கார் அலங்கரிக்கப்பட்டிருக்கின்றது. இதில், 2.8 லிட்டர், 4 சிலிண்டர் டர்போசார்ஜட் டீசல் எஞ்ஜினே பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்திய ஷோரூம்களில் காட்சி தந்த 14 இருக்கைகள் கொண்ட டொயோட்டா எம்பிவி வாகனம்... செம்மையா இருக்கு!!

இது அதிகபட்சமாக 151 எச்பி மற்றும் 300 என்எம் டார்க்கை வெளிப்படுத்தும். இதே எஞ்ஜினைதான் ஜிடி செரீஸ் ஃபார்ச்சூனர் கார்களில் டொயோட்டா பயன்படுத்தி வருகின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. இக்காரில் 204 குதிரை திறனையும், 500 என்எம் டார்ககையும் அந்த எஞ்ஜின் வெளிப்படுத்துகின்றது.

இந்திய ஷோரூம்களில் காட்சி தந்த 14 இருக்கைகள் கொண்ட டொயோட்டா எம்பிவி வாகனம்... செம்மையா இருக்கு!!

6 ஸ்பீடு தானியங்கி டிரான்ஸ்மிஷனில் ஹியாஸ் விற்பனைக்குக் கிடைக்க இருக்கின்றது. மேலும், ஹியாஸ் வாகனத்தில் கடைசி இருக்கைகளை மடித்து வைத்துக் கொள்ளும் வசதி வழங்கப்பட்டுள்ளது. பூட் இட அளவை அதிகப்படுத்தும் நோக்கில் இந்த வசதி கொடுக்கப்பட்டிருக்கின்றது.

இந்திய ஷோரூம்களில் காட்சி தந்த 14 இருக்கைகள் கொண்ட டொயோட்டா எம்பிவி வாகனம்... செம்மையா இருக்கு!!

இதுதவிர, போஸ்ட்ஸ் நிறுவனத்தின் 2 டின் ஆடியோ சிஸ்டம், இரட்டை ஏர் பேக்குகள், பவர் ஸ்டியரிங், பவர் விண்டோ, அனைத்து வரிசை இருக்கைகளுக்கும் ஏர் கன்டிஷனர் வசதி, இருக்கைகளை சாய்த்து கொள்ளும் வசதி, இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் மற்றும் பவர் ஸ்லைடிங் கதவுகள் என பல்வேறு சிறப்பு வசிகள் ஹியாஸ் எம்பிவியில் வழங்கப்பட்டிருக்கின்றன.

இந்திய ஷோரூம்களில் காட்சி தந்த 14 இருக்கைகள் கொண்ட டொயோட்டா எம்பிவி வாகனம்... செம்மையா இருக்கு!!

டொயோட்டா ஹியாஸ் எம்பிவியில் கியரை மாற்றும் வசதி டேஷ்போர்டில் இடம் பெற்றிருக்கின்றது. அதிக இட வசதியை வழங்கும் பொருட்டு இந்த நடவடிக்கையை டொயோட்டா மேற்கொண்டிருக்கின்றது. இத்துடன், எம்பிவியின் உட்பகுதியை சொகுசானதாக மாற்றும் வகையில் பல்வேறு சிறப்பு வசதிகளும் வழங்கப்பட்டிருக்கின்றன.

இந்திய ஷோரூம்களில் காட்சி தந்த 14 இருக்கைகள் கொண்ட டொயோட்டா எம்பிவி வாகனம்... செம்மையா இருக்கு!!

டொயோட்டா நிறுவனம் ஹியாஸ் வாகன தயாரிப்பில் 1967ம் ஆண்டில் இருந்தே ஈடுபட்டு வருகின்றது. இருப்பினும், இவ்வாகனத்தை 2004ம் ஆண்டிலேயே சர்வதேச சந்தையில் அறிமுகப்படுத்தியது. இதனை புதுப்பிக்கப்பட்ட மாடலாக 2019ம் ஆண்டில் உலக சந்தையில் அறிமுகப்படுத்தியது.

இந்திய ஷோரூம்களில் காட்சி தந்த 14 இருக்கைகள் கொண்ட டொயோட்டா எம்பிவி வாகனம்... செம்மையா இருக்கு!!

Source: Gaadiwale

ஆனால், இந்தியாவிலே இப்போதே அறிமுகம் செய்ய நிறுவனம் தயாராகி வருகின்றது. இதன் அடிப்படையிலேயே 50 அலகு ஹியாஸ் எம்பிவிக்களை நிறுவனம் களமிறக்கியிருக்கின்றது. இது ஐந்தாம் தலைமுறை மாடல் என்பது குறிப்பிடத்தகுந்தது.

Most Read Articles

மேலும்... #டொயோட்டா #toyota
English summary
Toyota Hiace MPV Reaches Dealership Showrooms In India. Read In Tamil.
Story first published: Saturday, May 8, 2021, 15:01 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X