10,000 அடி உயரத்தில் இருந்து கீழே விடப்பட்ட டொயோட்டா ஹைலக்ஸ்... வீடியோவ பாத்தீங்க மிரண்டுருவீங்க!!

டொயோட்டா ஹைலக்ஸ் பிக்-அப் டிரக் 10 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து கீழே விழும் அதிர்ச்சி காட்சிகள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம்.

10,000 அடி உயரத்தில் இருந்து கீழே விடப்பட்ட விலையுயர்ந்த டொயோட்டா ஹைலக்ஸ்... காருக்கு என்ன ஆச்சுனு பாருங்க!!

டொயோட்டா நிறுவனத்தின் புகழ்வாய்ந்த வாகன மாடல்களில் ஹைலக்ஸ் பிக்-அப் ட்ரக்கும் ஒன்று. இந்த வாகனத்தை மிக விரைவில் இந்தியாவில் விற்பனைக்குக் களமிறக்க டொயோட்டா திட்டமிட்டிருக்கின்றது. இசுஸு வி-க்ராஸ் பிக்-அப் ட்ரக்கிற்கு போட்டியாக இரு விதமான மாடல்களில் இவ்வாகனம் இந்தியாவில் விரைவில் விற்பனைக்கு வர உள்ளது.

10,000 அடி உயரத்தில் இருந்து கீழே விடப்பட்ட விலையுயர்ந்த டொயோட்டா ஹைலக்ஸ்... காருக்கு என்ன ஆச்சுனு பாருங்க!!

இந்த மாடல் வாகனத்தையே இளைஞர்கள் சிலர் 10 ஆயிரம் அடி உயரத்தில் கீழே விட்டிருக்கின்றனர். இதற்காக அவர்கள் ஹெலிகாப்டரை பயன்படுத்தியிருக்கின்றனர். டொயோட்டா ஹைலக்ஸ் பிக்-அப் ட்ரக்கின் உறுதி தன்மையை ஆய்வு செய்வதற்காகவே இளைஞர்கள் இவ்வாறு செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

10,000 அடி உயரத்தில் இருந்து கீழே விடப்பட்ட விலையுயர்ந்த டொயோட்டா ஹைலக்ஸ்... காருக்கு என்ன ஆச்சுனு பாருங்க!!

விஷில்இன்டீசல் (WhistlinDiesel) யுட்யூப் சேனலைச் சேர்ந்த இளைஞர்களே இந்த விநோத செயலில் ஈடுபட்டிருக்கின்றனர். இதுகுறித்த வீடியோவே தற்போது இணையத்தில் வைரலாகத் தொடங்கியுள்ளது. இந்த ஆய்வு பணிக்காக திறந்தவெளி இடத்தை அவர்கள் பயன்படுத்தியிருக்கின்றனர்.

10,000 அடி உயரத்தில் இருந்து கீழே விடப்பட்ட விலையுயர்ந்த டொயோட்டா ஹைலக்ஸ்... காருக்கு என்ன ஆச்சுனு பாருங்க!!

அங்கு அதிக எடைக் கொண்ட பொருட்களை தூக்கும் திறன் கொண்ட கமன் கே-மேக்ஸ் ஹெலிகாப்டரைப் பயன்படுத்தி அவர்கள் டொயோட்டா ஹைலக்ஸ் பிக்-அப் ட்ரக்கை 10 ஆயிரம் அடியில் இருந்து கீழே விட்டிருக்கின்றனர். முன்னதாக, இளைஞர்கள் 500 அடி உயரத்தில் இருந்து காரை அவிழ்த்து விட்டு சோதனைக்கு உட்படுத்தியிருக்கின்றனர்.

10,000 அடி உயரத்தில் இருந்து கீழே விடப்பட்ட விலையுயர்ந்த டொயோட்டா ஹைலக்ஸ்... காருக்கு என்ன ஆச்சுனு பாருங்க!!

இந்த சோதனையிலேயே ஹைலக்ஸ் பிக்-அப் ட்ரக் மிகக் கடுமையாக சேதமடைந்திருக்கின்றது. இதையடுத்து, அதே வாகனம் மீண்டும் 10 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து விடப்பட்டது. இந்த இடைவெளியில் இருந்து அவ்வாகனம் தரையை அடையவே 29 செகண்டுகளுக்கும் அதிகமாக எடுத்துக் கொண்டது. இந்த சோதனையில் கார் தரையுடன் தரையாக மாறியது.

10,000 அடி உயரத்தில் இருந்து கீழே விடப்பட்ட விலையுயர்ந்த டொயோட்டா ஹைலக்ஸ்... காருக்கு என்ன ஆச்சுனு பாருங்க!!

ஆமாங்க, டயர், வீல், காரின் உலோக உடல் என அனைத்தும் கசக்கிப் போட்ட காகிதத்தைப் போல் உருக்குலைந்து காணப்பட்டன. இதுகுறித்த காட்சிகளை கோ ப்ரோ மற்றும் வழக்கமான வீடியோ கேமிராக்கள் வாயிலாக யுட்யூப் சேனலைச் சேர்ந்தவர்கள் படம் பிடித்து அவற்றை தங்களின் சேனலில் வெளியிட்டும் இருக்கின்றனர்.

10,000 அடி உயரத்தில் இருந்து கீழே விடப்பட்ட விலையுயர்ந்த டொயோட்டா ஹைலக்ஸ்... காருக்கு என்ன ஆச்சுனு பாருங்க!!

இதேபோன்றதொரு சோதனையை பிரபல சொகுசு கார் உற்பத்தி நிறுவனமான வால்வோ அண்மையில் மேற்கொண்டது. இது கிரேன் வாகனங்களைப் பயன்படுத்தி தனது புதுமுக சொகுசு காரை 30 மீட்டர் உயரத்தில் இருந்து அவிழ்த்துவிட்டு விபத்து பரிசோதனையை மேற்கொண்டது.

இதனைத் தொடர்ந்து, தனியார் யுட்யூப் சேனலைச் சேர்ந்த இளைஞர்கள் அதிக பார்வையாளர்களுக்காகவும், காரின் உறுதித் தன்மையை ஆய்வு செய்வதற்காகவும் இந்த விநோத முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றனர். இது ஓர் மிக அதிகபட்ச வேகத்தில் வந்து விபத்தைச் சந்திப்பதற்கு சமம் ஆகும்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Toyota Hilux Is Dropped From A Height Of 10,000 Feet. Read In Tamil.
Story first published: Saturday, June 19, 2021, 13:21 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X