2 மாடல்களில் வருகிறது ஹைலக்ஸ் ஆஃப்ரோடு பிக்கப் டிரக்... இசுஸு வி க்ராஸுக்கு 'செக்' வைக்க டொயோட்டா திட்டம்!

இசுஸு ஹை லேண்டர் மற்றும் வி க்ராஸ் மாடல்களுக்கு நேருக்கு நேர் போட்டி போடும் வகையில், இரண்டு விதமான மாடல்களில் ஹைலக்ஸ் பிக்கப் டிரக்கை கொண்டு வருவதற்கு டொயோட்டா திட்டமிட்டுள்ளது.

2 மாடல்களில் வருகிறது ஹைலக்ஸ்... இசுஸு வி க்ராஸுக்கு செக் வைக்க டொயோட்டா திட்டம்!

ஆஃப்ரோடு பயன்பாட்டு வாகனங்களுக்கு இந்தியர்கள் மத்தியில் மவுசு அதிகரித்துள்ளது. இந்த சந்தையில் ஆஃப்ரோடு பயன்பாட்டுக்கு உகந்த எஸ்யூவி மாடல்கள்தான் வாடிக்கையாளர்களின் தேர்வாக இருந்து வருகிறது.

2 மாடல்களில் வருகிறது ஹைலக்ஸ்... இசுஸு வி க்ராஸுக்கு செக் வைக்க டொயோட்டா திட்டம்!

இந்த போக்கை மாற்றும் வகையில் ஆஃப்ரோடு பிரியர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தனது வி க்ராஸ் பிக்கப் டிரக்கை தனிநபர் பயன்பாட்டு அம்சங்களுடன் இசுஸு நிறுவனம் களமிறக்கியது. எதிர்பாராத வகையில், வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

2 மாடல்களில் வருகிறது ஹைலக்ஸ்... இசுஸு வி க்ராஸுக்கு செக் வைக்க டொயோட்டா திட்டம்!

இதனை பார்த்து தற்போது டொயோட்டா நிறுவனம் வெளிநாடுகளில் விற்பனையில் உள்ள தனது ஹைலக்ஸ் பிக்கப் டிரக்கை இந்தியாவில் களமிறக்க ஆயத்தமாகி வருகிறது.

2 மாடல்களில் வருகிறது ஹைலக்ஸ்... இசுஸு வி க்ராஸுக்கு செக் வைக்க டொயோட்டா திட்டம்!

இந்த நிலையில், அண்மையில் இசுஸு வி க்ராஸ் பிக்கப் டிரக்கின் பிஎஸ்6 மாடல் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. இந்த மாடல் விலை அடிப்படையில் ஹைலேண்டர் மற்றும் வி க்ராஸ் என்று இரண்டு மாடல்களில் வந்தது.

2 மாடல்களில் வருகிறது ஹைலக்ஸ்... இசுஸு வி க்ராஸுக்கு செக் வைக்க டொயோட்டா திட்டம்!

இதே பாணியில் ஹைலக்ஸ் பிக்கப் டிரக்கையும் விலை அடிப்படையில் இரண்டு மாடல்களில் கொண்டு வருவதற்கு டொயோட்டா திட்டமிட்டுள்ளது. இதற்காக, புதிய பெயர்களையும் இந்தியாவில் பதிவு செய்துள்ளது. அதாவது, அடிப்படை வசதிகள் கொண்ட விலை குறைவான மாடல் மற்றும் அதிக சிறப்பம்சங்கள் கொண்ட பிரிமீயம் மாடலாக அறிமுகப்படுத்த டொயோட்டா முடிவு செய்துள்ளது.

2 மாடல்களில் வருகிறது ஹைலக்ஸ்... இசுஸு வி க்ராஸுக்கு செக் வைக்க டொயோட்டா திட்டம்!

தற்போது இந்தியாவில் விற்பனையில் உள்ள டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா மற்றும் ஃபார்ச்சூனர் கார்கள் உருவாக்கப்பட்ட அதே கட்டமைப்புக் கொள்கையில்தான் புதிய டொயோட்டா ஹைலக்ஸ் பிக்கப் டிரக்கும் உருவாக்கப்பட்டுள்ளது.

2 மாடல்களில் வருகிறது ஹைலக்ஸ்... இசுஸு வி க்ராஸுக்கு செக் வைக்க டொயோட்டா திட்டம்!

இந்த பிக்கப் டிரக்கில் வலிமையான பானட், நேர்த்தியான க்ரில் அமைப்பு பை பீம் எல்இடி புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள் ஆகியவை விலை உயர்ந்த வேரியண்ட்டில் இடம்பெறும். அலாய் வீல்கள், நிரந்தர அம்சமாக இரண்டு வேரியண்ட்டுகளிலும் இருக்கும்.

2 மாடல்களில் வருகிறது ஹைலக்ஸ்... இசுஸு வி க்ராஸுக்கு செக் வைக்க டொயோட்டா திட்டம்!

புதிய டொயோட்டா ஹைலக்ஸ் பிக்கப் டிரக்கில் உட்புறம் மிகவும் பிரிமீயமாக இருக்கும். இதில், 8 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே செயலிகளை சப்போர்ட் செய்யும் வசதிகள் கொடுக்கப்பட்டு இருக்கும்.

2 மாடல்களில் வருகிறது ஹைலக்ஸ்... இசுஸு வி க்ராஸுக்கு செக் வைக்க டொயோட்டா திட்டம்!

புதிய டொயோட்டா ஹைலக்ஸ் பிக்கப் டிரக்கில் 150 பிஎச்பி பவரை வழங்கும் 2.4 லிட்டர் டர்போ டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கும் ரியர் வீல் டிரைவ் மற்றும் 4 வீல் டிரைவ் சிஸ்டம் கொண்ட வேரியண்ட்டுகளில் வர இருக்கிறது. ஃபார்ச்சூனரில் பயன்படுத்தப்படும் 2.8 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வும் எதிர்பார்க்கலாம்.

2 மாடல்களில் வருகிறது ஹைலக்ஸ்... இசுஸு வி க்ராஸுக்கு செக் வைக்க டொயோட்டா திட்டம்!

இந்த எஸ்யூவியில் ஆஃப்ரோடு பயன்பாட்டின்போது தேவைப்படும் முக்கிய தொழில்நுட்ப அம்சங்கள், அதிக க்ரவுண்ட் க்ளியரன்ஸ் உள்ளிட்டவை முக்கிய அம்சங்களாக இருக்கும். மேலும், டொயோட்டாவின் நம்பகத்தன்மையும் இந்த பிக்கப் டிரக்கிற்கான வரவேற்பை வெகுவாக உறுதி செய்யும்.

Most Read Articles
மேலும்... #டொயோட்டா #toyota
English summary
The Toyota Hilux is all set to debut in the Indian market very soon.
Story first published: Monday, June 14, 2021, 12:38 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X