நல்லா கால நீட்டிட்டு படுத்த மாதிரி போகலாம்... ரொம்ப சாதாரணமான காரை சொகுசு கப்பலை போல் மாற்றிய உரிமையாளர்!

ரொம்ப சாதாரணமான டொயோட்டா இன்னோவா க்ரிஸ்டா காரை சொகுசு கப்பலுக்கு இணையாக ரெட்டி கஸ்டம்ஸ் எனும் தனியார் நிறுவனம் மாற்றியமைத்திருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம்.

நல்லா கால நீட்டிட்டு படுத்த மாதிரி போகலாம்... ரொம்ப சாதாரணமான காரை சொகுசு கப்பலை போல் மாற்றிய உரிமையாளர்!

இந்தியாவின் அதிகம் விற்பனையாகும் எம்பிவி ரக கார்களில் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்டா கார் மாடலும் ஒன்று. இந்த காரின் வழக்கமான மாடலே தற்போது வாகன மாடிஃபிகேஷன் செயலுக்கு உட்படுத்தப்பட்டிருக்கின்றது. இந்த செயலிலன் காரணத்தினால் மிகவும் சாதாரணமான வசதிகளுடன் காட்சியளித்த டொயோட்டா இன்னோவா க்ரிஸ்டா தற்போது சொகுசு கப்பலுக்கு இணையான வாகனமாக மாறியிருக்கின்றது.

நல்லா கால நீட்டிட்டு படுத்த மாதிரி போகலாம்... ரொம்ப சாதாரணமான காரை சொகுசு கப்பலை போல் மாற்றிய உரிமையாளர்!

சொகுசு கப்பல் என்று கூறுமளவிற்கு அப்படி என்னென்ன சிறப்பு வசதிகளை டொயோட்டா இன்னோவா க்ரிஸ்டா கார் பெற்றிருக்கின்றது என்பது பற்றிய தகவலையே இப்பதிவில் நாம் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் கார் குறித்த பிரம்மிக்க வைக்கும் தகவலைப் பார்க்கலாம்.

நல்லா கால நீட்டிட்டு படுத்த மாதிரி போகலாம்... ரொம்ப சாதாரணமான காரை சொகுசு கப்பலை போல் மாற்றிய உரிமையாளர்!

முதலில் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்டா காரை யார் இப்படி பிரம்மிக்க வைக்கும் வகையில் மாற்றியமைத்தவர்கள் என்று பார்த்துவிடலாம். மஹாராஷ்டிரா மாநிலம், புனேவை மையமாகக் கொண்டு இயங்கும் ரெட்டி கஸ்டம்ஸ் எனும் வாகன மாடிஃபிகேஷன் நிறுவனமே காரை வியக்க வைக்கும் வகையில் மாற்றியமைத்திருக்கின்றது.

நல்லா கால நீட்டிட்டு படுத்த மாதிரி போகலாம்... ரொம்ப சாதாரணமான காரை சொகுசு கப்பலை போல் மாற்றிய உரிமையாளர்!

மிக தெளிவாக கூற வேண்டும் ரெட்டி கஸ்டம்ஸ் நிறுவனத்தின் கை வண்ணத்தில் டொயோட்டா இன்னோவா அழகோவியாகமாக மாறியிருக்கின்றது. இதை உறுதிப்படுத்தும் வகையில் காரின் உட்புறம் முழுமையாக மாற்றியமைக்கப்பட்டிருக்கின்றது. பழைய பேனல்கள் மற்றும் உட்பக்கத்தில் பயன்படுத்தப்பட்டிருந்த துணி மேட்டுகள் அனைத்தும் நீக்கப்பட்டு தற்போது புதிய பேனல், துணி மேட் மற்றும் திரைகள் உள்ளிட்டவை காருக்குள் சேர்க்கப்பட்டிருக்கின்றன.

நல்லா கால நீட்டிட்டு படுத்த மாதிரி போகலாம்... ரொம்ப சாதாரணமான காரை சொகுசு கப்பலை போல் மாற்றிய உரிமையாளர்!

இதனால், மிகவும் பிரீமியம் தர காராக இதன் உட்பகுதி மாறியிருக்கின்றது. இதுமட்டுமின்றி அதிக சொகுசான மற்றும் அலாதியான பயண அனுபவத்தை வழங்க வேண்டும் என்பதற்காக காரில் இருந்த அனைத்து இருக்கைகளும் நீக்கப்பட்டு புதிய சூப்பர் வசதிகள் கொண்ட இருக்கைகள் புகுத்தப்பட்டுள்ளன.

நல்லா கால நீட்டிட்டு படுத்த மாதிரி போகலாம்... ரொம்ப சாதாரணமான காரை சொகுசு கப்பலை போல் மாற்றிய உரிமையாளர்!

அவை உடலுக்கு மட்டுமின்றி கால், கை மற்றும் கழுத்து ஆகிய பகுதிகளுக்கும் மிக சிறப்பான ஓய்வளிக்கும் வடிவத்தைக் கொண்டிருக்கின்றது. குறிப்பிட்டுக் கூற வேண்டுமானால் நடிகர்களின் கேரவன் வேன்களில் இருப்பதைப் போல் மிக அதிக வசதிளைக் கொண்ட இருக்கையாக இது காட்சியளிக்கின்றது. இந்த இருக்கையை ஓர் படுக்கையை போல் நன்றாக சாய்த்துக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

நல்லா கால நீட்டிட்டு படுத்த மாதிரி போகலாம்... ரொம்ப சாதாரணமான காரை சொகுசு கப்பலை போல் மாற்றிய உரிமையாளர்!

அவ்வாறு சாய்த்து அதைப் பயன்படுத்தும்போது, காலை நீட்டிக்க கொண்டு ஹாயாக படுத்துச் செல்லும் அனுபவம் கிடைக்கும். இத்தகைய சிறப்பு வசதிக் கொண்ட இருக்கையையே பின் பக்க பயணிகளுக்காக வழங்கப்பட்டுள்ளது. டொயோட்டா இன்னோவாக காரில் வழங்கப்பட்டிருக்கும் பெரும்பாலான சிறப்பு வசதிகள் காரின் இரண்டாம் வரிசை இருக்கை பயணிகளை மையமாகக் கொண்டதாக வழங்கப்பட்டிருக்கின்றது.

நல்லா கால நீட்டிட்டு படுத்த மாதிரி போகலாம்... ரொம்ப சாதாரணமான காரை சொகுசு கப்பலை போல் மாற்றிய உரிமையாளர்!

ஆகையால், இரண்டாம் வரிசையில் அமர்ந்து பயணிக்கும் பயணிகள் பறக்கும் தட்டு அல்லது சொகுசு கப்பலில் பயணிப்போது போன்ற பயண அனுபவத்தை பெறுவார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. தொடர்ந்து, டிரைவரிடம் பிரிந்து இருந்து ஓர் தனியறை வசதி வழங்கும் வகையில் பின் பக்கம் பிரிக்கப்பட்டுள்ளது.

நல்லா கால நீட்டிட்டு படுத்த மாதிரி போகலாம்... ரொம்ப சாதாரணமான காரை சொகுசு கப்பலை போல் மாற்றிய உரிமையாளர்!

பின்னிருக்கையாளர்கள் அதிக தனிமையான உணர்வைப் பெற இது உதவியாக இருக்கும். இந்த பிரிவினையை ஏற்படுத்தும் சுவர் போன்ற பேனலிலேயே இரு பெரிய திரைகள் தொடுதல் வசதியுடன் வழங்கப்பட்டுள்ளது. இது பயணிகள் தங்களின் பயணத்தை சுவாரஷ்யமானதாக மாற்றிக் கொள்ள உதவும்.

நல்லா கால நீட்டிட்டு படுத்த மாதிரி போகலாம்... ரொம்ப சாதாரணமான காரை சொகுசு கப்பலை போல் மாற்றிய உரிமையாளர்!

இத்துடன், ஸ்பீக்கர்கள், ஒயர்லெஸ் ஹெட்ஃபோன் வசதி, மன நிலைக்கேற்ப ஒளிரும் மின் விளக்கு அலங்காரம், கோப்பை தாங்கிகள், கூடுதல் ஏசி திறப்புகள், குளிர்பானங்களை சில்லென வைத்துக் கொள்ள உதவும் குளிர்சாதன வசதிக் கொண்ட கோப்பை தாங்கிகள் என பல்வேறு சிறப்பு அம்சங்கள் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்டா காரில் வழங்கப்பட்டிருக்கின்றன.

நல்லா கால நீட்டிட்டு படுத்த மாதிரி போகலாம்... ரொம்ப சாதாரணமான காரை சொகுசு கப்பலை போல் மாற்றிய உரிமையாளர்!

இதுமாதிரியான அம்சங்களை வேறு எந்த டொயோட்ட இன்னோவா காரிலும் பார்க்க முடியாது என்பது குறிப்பிடத்தகுந்தது. இதுபோன்ற மிக சிறப்பான வசதிகளை ரெட்டி கஸ்டம்ஸ் நிறுவனம் ரூ. 4.44 லட்சம் என்ற ஆரம்ப விலையில் இருந்து செய்து வருவதாக குறிப்பிட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் தனித்துவமாக சில அம்சங்களைக் கூடுதலாக சேர்க்கக் கேட்டால் அவற்றை கூடுதல் கட்டணத்துடன் வழங்குவதாகவும் அது கூறியிருக்கின்றது.

நல்லா கால நீட்டிட்டு படுத்த மாதிரி போகலாம்... ரொம்ப சாதாரணமான காரை சொகுசு கப்பலை போல் மாற்றிய உரிமையாளர்!

Image Courtesy: Reddy Customs

பொதுவாக வாகனங்களை மாடிஃபை (மாற்றம்) செய்வது இந்திய வாகன சட்டத்தின்படி விதிமீறல் செயலாகும். ஆனால், இது உருமாற்றம் செய்தலுக்கு மட்டுமே பொருந்தும். ஆகையால், காரின் உட்பகுதியில் செய்யப்படும் மாற்றங்களுக்கு எந்தவித சட்ட சிக்கலும் இல்லை என கூறப்படுகின்றது. இருப்பினும், பாதுகாப்பு மற்றும் எதிர்கால சிக்கல்களில் இருந்து தப்பிக்க உள்ளூர் ஆர்டிஓ-வின் விதிகள் என்ன என்பதை அறிந்து இதுபோன்ற மாற்றங்களைச் செய்து கொள்வது மிக சிறந்தது.

Most Read Articles

English summary
Toyota innova crysta converted into a super luxurious car by reddy customs
Story first published: Friday, August 13, 2021, 10:51 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X