டொயோட்டா இன்னோவா கார்களை வாங்கி குவிக்கும் இந்தியர்கள்!! விற்பனை எண்ணிக்கை 6,300-ஐ தொட்டது!

இந்தியன் ஆட்டோமொபைல் நிறுவனம் தற்சமயம் மிகுந்த சவால்களை சந்தித்து வருகிறது. இதன் விளைவாக, விற்பனை செய்யப்படும் வாகனங்களின் எண்ணிக்கை சமீப மாதங்களில் வெகுவாக குறைந்துள்ளது. இந்த நிலை கடந்த 2021 நவம்பர் மாதத்திலும் தொடர்ந்துள்ளது என்றுதான் சொல்ல வேண்டும்.

டொயோட்டா இன்னோவா கார்களை வாங்கி குவிக்கும் இந்தியர்கள்!! விற்பனை எண்ணிக்கை 6,300-ஐ தொட்டது!

இருப்பினும் சில நிறுவனங்களின் மாடல்கள் தற்போதைய சந்தை சூழலையும் தாண்டி விற்பனையில் நேர்மறையான விற்பனை எண்ணிக்கைகளை கடந்த மாதத்தில் பதிவு செய்துள்ளன. உதாரணத்திற்கு, டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா. கடந்த நவம்பரில் மொத்தம் 6,300 இன்னோவா க்ரிஸ்ட்டா கார்களை டொயோட்டா நிறுவனம் விற்பனை செய்துள்ளது.

டொயோட்டா இன்னோவா கார்களை வாங்கி குவிக்கும் இந்தியர்கள்!! விற்பனை எண்ணிக்கை 6,300-ஐ தொட்டது!

இதன் மூலமாக இந்திய சந்தையில் சிறந்த விற்பனை எம்பிவி மாடல்களில் இன்னோவா க்ரிஸ்ட்டாவும் ஒன்றாக உள்ளது. டொயோட்டா இந்தியாவில் அதிகம் விற்பனை செய்யும் கார்களுள் முதன்மையானது என்று கூட சொல்லலாம். வருடம்-வருடம் ஒப்பிடுகையில் கடந்த மாதத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ள 6,300 இன்னோவா க்ரிஸ்ட்டா கார்களின் விற்பனை எண்ணிக்கை சுமார் 187.41% அதிகமாகும்.

டொயோட்டா இன்னோவா கார்களை வாங்கி குவிக்கும் இந்தியர்கள்!! விற்பனை எண்ணிக்கை 6,300-ஐ தொட்டது!

ஏனெனில் 2020 நவம்பரில் 2,192 இன்னோவா கார்களே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. அதேபோல் இன்னோவா க்ரிஸ்ட்டாவின் கடந்த மாத விற்பனை எண்ணிக்கை 2021 அக்டோபர் மாதத்துடன் ஒப்பிடுகையிலும் 3.35% அதிகமாகும். ஏனென்றால் அந்த மாதத்தில் 6,096 இன்னோவா கார்களே விற்பனை செய்யப்பட்டு இருந்தன.

டொயோட்டா இன்னோவா கார்களை வாங்கி குவிக்கும் இந்தியர்கள்!! விற்பனை எண்ணிக்கை 6,300-ஐ தொட்டது!

இந்தியாவில் இன்னோவா க்ரிஸ்ட்டாவை மொத்தம் 2 விதமான என்ஜின் தேர்வுகளில் டொயோட்டா விற்பனை செய்கிறது. இதில் 2.7 லிட்டர் நேச்சுரலி-அஸ்பிரேட்டட் பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 166 பிஎஸ் மற்றும் 245 என்எம் டார்க் திறனையும், 2.4 லிட்டர் டர்போ-டீசல் என்ஜின் 150 பிஎஸ் மற்றும் 360 என்எம் டார்க் திறனையும் (மேனுவல் வேரியண்ட்களில் 343 என்எம்) வெளிப்படுத்தக்கூடியவைகளாக உள்ளன.

டொயோட்டா இன்னோவா கார்களை வாங்கி குவிக்கும் இந்தியர்கள்!! விற்பனை எண்ணிக்கை 6,300-ஐ தொட்டது!

இவற்றுடன் டிரான்ஸ்மிஷனுக்கு 5-ஸ்பீடு மேனுவல் & 6-ஸ்பீடு டார்க்-கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வு வழங்கப்படுகிறது. பின்சக்கர ட்ரைவ் அமைப்பில் மட்டுமே இந்திய சந்தையில் கிடைக்கக்கூடிய இந்த எம்பிவி காரை 7 மற்றும், 8-இருக்கை தேர்வுகளில் வாங்கலாம். டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டாவின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.17.18 லட்சத்தில் இருந்து ரூ.24.99 லட்சம் வரையில் உள்ளன.

டொயோட்டா இன்னோவா கார்களை வாங்கி குவிக்கும் இந்தியர்கள்!! விற்பனை எண்ணிக்கை 6,300-ஐ தொட்டது!

இந்தியாவில் இந்த டொயோட்டா எம்பிவி காருக்கு நேரடி போட்டி மாடல்கள் எதுவும் இல்லை. இருப்பினும், விலையினை பொறுத்து, ஹூண்டாய் அல்கஸார், மஹிந்திரா எக்ஸ்யூவி700 மற்றும் டாடா சஃபாரி உள்ளிட்டவை மறைமுக போட்டி மாடல்களாக உள்ளன. இதற்கிடையில் ஜப்பானை தலைமையிடமாக கொண்டு செயல்படும் டொயோட்டா இந்தியாவில் இரு புதிய எம்பிவி கார்களை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது.

டொயோட்டா இன்னோவா கார்களை வாங்கி குவிக்கும் இந்தியர்கள்!! விற்பனை எண்ணிக்கை 6,300-ஐ தொட்டது!

இதில் ஒன்று விற்பனையில் ஜொலித்துவரும் மாருதி சுஸுகி எர்டிகாவின் ரீபேட்ஜ்டு வெர்சனாகும். இதன் பெயர் ரூமியன் என வைக்கப்படலாம் என தகவல்கள் கூறுகின்றன. ஏனெனில் இந்த பெயரில் டொயோட்டா எம்பிவி கார் ஒன்று தென்னாப்பிரிக்க நாட்டு சந்தையில் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஜப்பானிய நிறுவனங்களான டொயோட்டா- சுஸுகி கூட்டணியில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

டொயோட்டா இன்னோவா கார்களை வாங்கி குவிக்கும் இந்தியர்கள்!! விற்பனை எண்ணிக்கை 6,300-ஐ தொட்டது!

ரூமியனின் இந்திய அறிமுகத்தை 2022ஆம் ஆண்டின் முதல் பாதியில் எதிர்பார்க்கிறோம். இத்துடன் டொயோட்டா மற்றும் மாருதி சுஸுகி நிறுவனங்கள் ஒன்றாக இணைந்து நடுத்தர-அளவு எம்பிவி கார் ஒன்றினையும் தயாரிக்க உள்ளன. இன்னோவா க்ரிஸ்ட்டாவிற்கு கீழே நிலைநிறுத்தப்பட்டாலும், இதன் பரிமாண அளவுகள் மாருதி எக்ஸ்.எல்6 பிரீமியம் எம்பிவி காரினை காட்டிலும் அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது.

டொயோட்டா இன்னோவா கார்களை வாங்கி குவிக்கும் இந்தியர்கள்!! விற்பனை எண்ணிக்கை 6,300-ஐ தொட்டது!

அத்துடன் சில புதிய மாடல்களையும் டொயோட்டா இந்தியாவில் அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. இவற்றில் புதிய காம்பெக்ட் எஸ்யூவி (அடுத்த தலைமுறை அர்பன் க்ரூஸர்), நடுத்தர-அளவு எஸ்யூவி மற்றும் ஹில்லுக்ஸ் பிக்அப் ட்ரக் உள்ளிட்டவை அடங்குகின்றன. கடந்த 2021 நவம்பரில் இந்திய சந்தையில் கார்கள் விற்பனையில் மொத்தமாக 53% வளர்ச்சியை 2020 நவம்பர் உடன் ஒப்பிடுகையில் அடைந்துள்ளதாக இந்த டிசம்பர் மாத துவக்கத்தில் டொயோட்டா அறிவித்திருந்தது.

டொயோட்டா இன்னோவா கார்களை வாங்கி குவிக்கும் இந்தியர்கள்!! விற்பனை எண்ணிக்கை 6,300-ஐ தொட்டது!

கடந்த 2021 நவம்பரில் இந்த ஜப்பானிய நிறுவனம் மொத்தம் 13,003 யூனிட் கார்களை இந்திய சந்தையில் விற்பனை செய்துள்ளது. இந்த எண்ணிக்கை தான் 2020 நவம்பரை காட்டிலும் 53% அதிகமாகும். ஏனெனில் அந்த மாதத்தில் 8,508 கார்களையே டொயோட்டா நம் நாட்டு சந்தையில் விற்றிருந்தது. உண்மையில், கடந்த சில மாதங்களாக இந்தியாவில் டொயோட்டா கார்களின் விற்பனை சிறப்பானதாக இருந்து வருகிறது.

டொயோட்டா இன்னோவா கார்களை வாங்கி குவிக்கும் இந்தியர்கள்!! விற்பனை எண்ணிக்கை 6,300-ஐ தொட்டது!

கடந்த 2021 அக்டோபரிலும் கடந்த நவம்பர் மாத விற்பனையை காட்டிலும் வெறும் 5% மட்டுமே குறைவாக 12,440 டொயோட்டா கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இத்தகைய வளர்ச்சிக்கு ஃபோர்டின் இந்திய வெளியேற்றமும் ஒரு காரணமாக சொல்லலாம். ஏனெனில் ஃபோர்டின் வெளியேற்றத்தால், அதன் எண்டேவியர் கார்களின் விற்பனை நிறுத்தி கொள்ளப்பட்டதை அடுத்து, டொயோட்டா ஃபார்ச்சூனர் அதன் பிரிவிலேயே சிறந்த விற்பனை மாடலாக உருவெடுத்துள்ளது.

Most Read Articles
மேலும்... #டொயோட்டா #toyota
English summary
Toyota Innova Crysta MPV registers over 187 percent sales growth in november 2021.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X