காரை சுற்றி நடக்கும் அனைத்தையும் உள்ளே இருந்தபடி கவனிக்கலாம்!! 360-கோண கேமிரா உடன் இன்னோவா லிமிடெட் எடிசன்!

டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் சமீபத்திய அறிமுகமான இன்னோவா கிரிஸ்ட்டா லிமிடெட் எடிசன் காரின் புதிய டிவிசி வீடியோவினை அதிகாரப்பூர்வமாக வெளியீடு செய்துள்ளது. இந்த வீடியோவினை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

காரை சுற்றி நடக்கும் அனைத்தையும் உள்ளே இருந்தபடி கவனிக்கலாம்!! 360-கோண கேமிரா உடன் இன்னோவா லிமிடெட் எடிசன்!

இந்தியாவில் பிரபலமான டொயோட்டா கார்களுள் ஒன்றாக இன்னோவா க்ரிஸ்ட்டாவை தாராளமாக சொல்லலாம். சற்று விலைமிக்க காராக இருந்தாலும், இன்னோவா க்ரிஸ்ட்டாவிற்கு நம் நாட்டில் அதிகளவில் ரசிகர்கள் உள்ளனர். இந்த நிலையை தொடர்ந்து நீடிக்க, அவ்வப்போது ஸ்பெஷல் எடிசன் இன்னோவா க்ரிஸ்ட்டா கார்களை டொயோட்டா அறிமுகப்படுத்த மறப்பதில்லை.

காரை சுற்றி நடக்கும் அனைத்தையும் உள்ளே இருந்தபடி கவனிக்கலாம்!! 360-கோண கேமிரா உடன் இன்னோவா லிமிடெட் எடிசன்!

இந்த வகையில் கடந்த அக்டோபர் மாதத்தில் இன்னோவா க்ரிஸ்ட்டாவின் லிமிடெட் எடிசன் அறிமுகப்படுத்தப்பட்டது. இன்னோவா க்ரிஸ்ட்டாவின் வழக்கமான ஜிஎக்ஸ் ட்ரிம் நிலையின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த லிமிடெட் எடிசனின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.17.18 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது பெட்ரோல் என்ஜின் உடனான இன்னோவா க்ரிஸ்ட்டாவின் லிமிடெட் எடிசனின் விலை ஆகும்.

காரை சுற்றி நடக்கும் அனைத்தையும் உள்ளே இருந்தபடி கவனிக்கலாம்!! 360-கோண கேமிரா உடன் இன்னோவா லிமிடெட் எடிசன்!

டீசல் என்ஜின் உடனான மாடலின் விலை ரூ.18.99 லட்சமாக உள்ளது. ஜிஎக்ஸ் வேரியண்ட்டின் அடிப்படையில் உருவாக்கப்படுவதால், அதில் வழங்கப்படும் வசதிகளும், தொழிற்நுட்பங்களுமே இதிலிலும் கொடுக்கப்படுகின்றன. இதனை மக்கள் மத்தியில் விளம்பரப்படுத்தும் வகையில் டொயோட்டா அதன் யுடியூப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவினை கீழே காணலாம்.

இந்த டிவிசி வீடியோ இந்த லிமிடெட் எடிசன் காரில் வழங்கப்படும் காற்று அயனியாக்கி மற்றும் 360-கோண கேமிராவையும் ஹைலைட்டாக சுட்டிக்காட்டுவதாக உள்ளது. காற்று மாசு அதிகரிப்பை குறைக்கும் விழிப்புணர்வு பரவிவரும் தற்போதைய சூழ்நிலையில் பெரும்பாலானோர் காற்று அயனியாக்கி உடன் காரை வாங்க விரும்புகின்றனர். இன்னோவா க்ரிஸ்ட்டா லிமிடெட் எடிசனில் அத்தகைய அம்சம் தொழிற்சாலையிலேயே பொருத்தப்பட்டு வழங்கப்படுகிறது.

காரை சுற்றி நடக்கும் அனைத்தையும் உள்ளே இருந்தபடி கவனிக்கலாம்!! 360-கோண கேமிரா உடன் இன்னோவா லிமிடெட் எடிசன்!

இவற்றுடன் இந்த வீடியோவில் ஹைலைட் படுத்தப்பட்டுள்ள 360-கோண பார்க்கிங் கேமிரா, இந்த எம்பிவி காரை ஓட்டுனர் கடுமையான சூழல்களிலும் எளிமையாக பார்க்கிங் செய்ய உதவுகிறது. இந்த கேமிரா ஆனது காருக்கு மேலாக இருந்து அதனை சுற்றிலும் 360-கோணத்திற்கு என்னென்ன உள்ளன என்பதை இன்ஃபோடெயின்மெண்ட் திரையில் காட்டுவதாக உள்ளன. இதனை பல-பாதைகள் கண்காணிப்பு என டொயோட்டா அழைக்கிறது.

காரை சுற்றி நடக்கும் அனைத்தையும் உள்ளே இருந்தபடி கவனிக்கலாம்!! 360-கோண கேமிரா உடன் இன்னோவா லிமிடெட் எடிசன்!

இவை மட்டுமின்றி இரண்டாவது வரிசை இருக்கை பயணிகளுக்கும் வயர் இல்லா சார்ஜர் மற்றும் பிரீமியம் உணர்வை வழங்கும் விதத்தில் கேபினை சுற்றிலும் விளக்குகள் போன்றவற்றையும் டொயோட்டாவின் இந்த எம்பிவி கார் பெறுகிறது. இந்த வீடியோவில், டேஸ்போர்டில் ஓட்டுனருக்கு நேரெதிராக நேரம் மற்றும் முன் கண்ணாடியில் படும் காற்றின் வேகம் உள்ளிட்டவற்றை காட்டும் திரையும் இந்த லிமிடெட் எடிசனில் கொடுக்கப்படுவதாக காட்டப்பட்டுள்ளது.

காரை சுற்றி நடக்கும் அனைத்தையும் உள்ளே இருந்தபடி கவனிக்கலாம்!! 360-கோண கேமிரா உடன் இன்னோவா லிமிடெட் எடிசன்!

இதன் மூலமாக, சாலையில் இருந்து கவனத்தை திருப்பி ஓட்டுனர் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோலை பார்க்க வேண்டிய தேவை குறைகிறது. இத்துடன் டயரின் அழுத்தத்தை அளவிடும் அமைப்பையும் இன்னோவாவின் இந்த புதிய லிமிடெட் எடிசன் பெறுகிறது. இந்த அமைப்பின் மூலமாக டயரில் காற்றழுத்தம் குறைந்தாலோ அல்லது டயர் பஞ்சராகினாலோ அது உடனே ஓட்டுனருக்கு தெரிய வந்துவிடும்.

காரை சுற்றி நடக்கும் அனைத்தையும் உள்ளே இருந்தபடி கவனிக்கலாம்!! 360-கோண கேமிரா உடன் இன்னோவா லிமிடெட் எடிசன்!

இவை தவிர்த்து இன்னோவா க்ரிஸ்ட்டாவின் இந்த லிமிடெட் எடிசனில் மற்ற தொழிற்நுட்பங்கள் அம்சங்கள் அனைத்தும் இன்னோவா க்ரிஸ்ட்டாவின் ஜிஎக்ஸ் வேரியண்ட்டில் வழங்கப்படுவையே ஆகும். இதன்படி, ஹீட்டர் உடன் மேனுவல் ஏசி, பிரேக் உதவி உடன் ஆண்டி-லாக் பிரேக்கிங் அமைப்பு, வாகன நிலைப்பாட்டு கண்ட்ரோல், ஏறுமுகமான சாலைகளில் ஏறுவதற்கான உதவி, ரிவர்ஸில் செல்வதற்கு உதவியாக சென்சார்கள் உள்ளிட்டவற்றை புதிய லிமிடெட் எடிசன் பெறுகிறது.

காரை சுற்றி நடக்கும் அனைத்தையும் உள்ளே இருந்தபடி கவனிக்கலாம்!! 360-கோண கேமிரா உடன் இன்னோவா லிமிடெட் எடிசன்!

பின்பக்கத்தை காட்டும் காருக்கு வெளியே உள்ள கண்ணாடிகளை இன்னோவா க்ரிஸ்ட்டாவில் எலக்ட்ரிக் மூலமாக தேவைக்கேற்ப மடக்கி கொள்ளலாம். பயணிகளின் பாதுகாப்பிற்கு இரட்டை முன்பக்க காற்றுப்பைகளும், ஓட்டுனருக்கு தேவையான தகவல்களை வழங்கக்கூடிய திரை, ஓட்டுனர் கால் முட்டிக்குமான காற்றுப்பை, பல-செயல்பாட்டு ஸ்டேரிங் சக்கரம் மற்றும் 12 வோல்ட் சார்ஜிங் துளைகள் உள்ளிட்டவற்றையும் இந்த எம்பிவி கார் ஏற்கிறது.

காரை சுற்றி நடக்கும் அனைத்தையும் உள்ளே இருந்தபடி கவனிக்கலாம்!! 360-கோண கேமிரா உடன் இன்னோவா லிமிடெட் எடிசன்!

இந்த காரின் டேஸ்போர்டில் ஆப்பிள் கார்ப்ளே & ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதி உடன் 8-இன்ச்சில் தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் வழங்கப்படுகிறது. இன்னோவா க்ரிஸ்ட்டாவை 7 மற்றும் 8 இருக்கை தேர்வுகளில் டொயோட்டா இந்தியாவில் விற்பனை செய்கிறது. இதில் 7 இருக்கை தேர்வில் மத்திய இருக்கை வரிசையில் இரு கேப்டன் இருக்கைகளும், மறுப்பக்கம் 8-இருக்கை தேர்வில் அந்த பகுதியில் மேசை இருக்கை அமைப்பும் கொடுக்கப்படுகிறது.

Most Read Articles
மேலும்... #டொயோட்டா #toyota
English summary
Toyota introduced new tvc for the innova crysta limited edition variant
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X