ஒரே மாதத்தில் 13 ஆயிரம் கார்களை விற்றுள்ள டொயோட்டா!! 2021 ஜூன் மாதத்தை காட்டிலும் 50% உயர்வு!

முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்களுள் ஒன்றாக விளங்கும் டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார்ஸ், அதன் கடந்த ஜூலை மாத விற்பனை புள்ளி விபரங்களை வெளியிட்டுள்ளது. அவற்றை பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.

ஒரே மாதத்தில் 13 ஆயிரம் கார்களை விற்றுள்ள டொயோட்டா!! 2021 ஜூன் மாதத்தை காட்டிலும் 50% உயர்வு!

டொயோட்டா வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கடந்த 2021 ஜூலை மாதத்தில் மொத்தம் 13,105 கார்களை இந்திய சந்தையில் இந்த ஜப்பானிய கார் தயாரிப்பு நிறுவனம் விற்பனை செய்துள்ளது.

ஒரே மாதத்தில் 13 ஆயிரம் கார்களை விற்றுள்ள டொயோட்டா!! 2021 ஜூன் மாதத்தை காட்டிலும் 50% உயர்வு!

இந்த டொயோட்டா கார்கள் விற்பனை எண்ணிக்கை 2020 ஜூலை மாதத்துடனான ஒப்பிட்டீன்போதும், கடந்த 2021 ஜூன் மாதத்துடனான ஒப்பீடுகையிலும் பல சதவீதங்கள் அதிகமாக உள்ளது. குறிப்பாக 2020 ஜூலை மாதத்துடனான வருடம்-வருடம் ஒப்பீடுகையில், தற்போதைய 13,105 என்ற எண்ணிக்கை சுமார் 143 சதவீதம் ஆகும்.

ஒரே மாதத்தில் 13 ஆயிரம் கார்களை விற்றுள்ள டொயோட்டா!! 2021 ஜூன் மாதத்தை காட்டிலும் 50% உயர்வு!

ஏனெனில் அந்த மாதத்தில் வெறும் 5,386 டொயோட்டா கார்களே இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. அதேநேரம் 2021 ஜூன் மாதத்தை காட்டிலும் கடந்த மாதத்தில் 4,304 டொயோட்டா கார்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன.

ஒரே மாதத்தில் 13 ஆயிரம் கார்களை விற்றுள்ள டொயோட்டா!! 2021 ஜூன் மாதத்தை காட்டிலும் 50% உயர்வு!

கொரோனா இரண்டாவது அலைக்கு பிறகு கடந்த ஜூன் மாதத்தில் இருந்து மீண்டும் மெல்ல மெல்ல இயல்பு வாழ்க்கை திரும்ப ஆரம்பித்தது. அத்தகைய மாதத்தில் 8,801 கார்களை டொயோட்டா விற்பனை செய்திருந்தது.

ஒரே மாதத்தில் 13 ஆயிரம் கார்களை விற்றுள்ள டொயோட்டா!! 2021 ஜூன் மாதத்தை காட்டிலும் 50% உயர்வு!

விற்பனையில் இத்தகைய வளர்ச்சி கண்டிருப்பது குறித்து டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் இந்தியா நிறுவனத்தின் விற்பனை மற்றும் சந்தைப்படுத்துதல் பிரிவின் துணை நிர்வாக மேலாளர் வி.விஸ்லைன் சிகாமணி கூறுகையில், 2021ஆம் ஆண்டின் இரண்டாவது அரைப்பகுதியின் 2வது மாதத்தில் தேவைகள் மற்றும் மொத்த விற்பனை என இரண்டிலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை கண்டுள்ளதால், 2021 ஜுலை எங்களுக்கு ஒரு நல்ல மாதமாக இருந்தது.

ஒரே மாதத்தில் 13 ஆயிரம் கார்களை விற்றுள்ள டொயோட்டா!! 2021 ஜூன் மாதத்தை காட்டிலும் 50% உயர்வு!

கடந்த ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் எங்களிடம் நிலுவையில் இருந்த முன்பதிவுகள் எங்களுக்கு மிகவும் ஊக்கமளிப்பதாக இருந்தன. எங்கள் சில்லறை விற்பனைகளும், மொத்த விற்பனைக்கும் சில்லறை விற்பனைக்கும் இடையேயான புள்ளி விபர இடைவெளியை வெகுவாக குறைப்பதாக உள்ளன.

ஒரே மாதத்தில் 13 ஆயிரம் கார்களை விற்றுள்ள டொயோட்டா!! 2021 ஜூன் மாதத்தை காட்டிலும் 50% உயர்வு!

இன்னோவா க்ரிஸ்டா மற்றும் ஃபார்ச்சூனர் இவை இரண்டையும் இந்த நேரத்தில் குறிப்பிட்டே ஆக வேண்டும். ஏனெனில் இந்த இரு மாடல்களும் எங்கள் மொத்த விற்பனைக்கு கணிசமாக பங்களித்துள்ளன. இதன் மூலம் இவை பிரிவில் தங்கள் தலைமை நிலையை மீண்டும் வலியுறுத்தியுள்ளன.

ஒரே மாதத்தில் 13 ஆயிரம் கார்களை விற்றுள்ள டொயோட்டா!! 2021 ஜூன் மாதத்தை காட்டிலும் 50% உயர்வு!

கொரோனா வைரஸ் அச்சத்தினால் தனிப்பட்ட போக்குவரத்தையே மக்கள் விரும்புவதால், க்ளான்ஸா மற்றும் அர்பன் க்ரூஸர் கூட மாதந்தோறும் தொடர்ந்து சிறப்பாக செயல்படுகின்றன. சந்தையில் வேகமான நேர்மறையான விற்பனைக்கு தெளிவான அறிகுறி உள்ளதை நாங்கள் புரிந்துக்கொள்கிறோம்.

ஒரே மாதத்தில் 13 ஆயிரம் கார்களை விற்றுள்ள டொயோட்டா!! 2021 ஜூன் மாதத்தை காட்டிலும் 50% உயர்வு!

நாட்டின் சில பகுதிகள் இன்னமும் கட்டுப்பாடுகளுக்குள் தான் உள்ளன. இந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டவுடன், கார் விற்பனை மேலும் உயரும் என நாங்கள் நம்புகிறோம். தற்போதைக்கு எங்கள் வாடிக்கையாளர்களின் நிலுவையில் உள்ள முன்பதிவுகளை பூர்த்தி செய்வதில் கவனம் செலுத்தி வருகிறோம்.

ஒரே மாதத்தில் 13 ஆயிரம் கார்களை விற்றுள்ள டொயோட்டா!! 2021 ஜூன் மாதத்தை காட்டிலும் 50% உயர்வு!

அத்தோடு, எங்கள் ஊழியர்கள், அவர்களது குடும்பங்கள் மற்றும் டீலர்கள் & சப்ளை பணியாளர்களுக்கு முறையாக கொரோனா தடுப்பூசி செலுத்துவதிலும் கவனமாக இருக்கின்றோம். எங்கள் ஊழியர்களில் கிட்டத்தட்ட 97 சதவீதத்தினர் தடுப்பூசியின் முதல் டோஸை பெற்றுள்ளனர் என்றார்.

Most Read Articles

மேலும்... #டொயோட்டா #toyota
English summary
Toyota Kirloskar Motor today announced that the company sold a total of 13,105 units in the month of July 2021, thereby registering a growth of 143% when compared to the domestic sales in the month of July 2020. The company also clocked a 49% growth in domestic sales when compared to sales made in June 2021. For reference, TKM had reported wholesales of 5386 units in the month of July 2020 and 8801 units in the month of June 2021.
Story first published: Saturday, July 31, 2021, 23:04 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X