50ஆண்டுகள் ஆகிடுச்சாம்! இந்தோனேசியர்களை மிரள வைக்க சிறப்பு பதிப்பு இன்னோவா! 50 யூனிட்டுகள் மட்டுமே கிடைக்கும்!

இந்தோனேசியர்களை மிரள வைக்கும் வகையில் சிறப்பு பதிப்பு எடிசன் இன்னோவா க்ரிஸ்டா காரை டொயோட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இக்காரை வெறும் 50 யூனிட்டுகள் மட்டுமே விற்பனைச் செய்ய நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

50ஆண்டுகள் ஆகிடுச்சாம்! இந்தோனசியர்களை மிரள வைக்க சிறப்பு பதிப்பு இன்னோவா அறிமுகம்... 50 யூனிட்டுகள் மட்டுமே கிடைக்கும்!

ஜப்பான் நாட்டை மையமாகக் கொண்டு வாகன உற்பத்தியில் ஈடுபட்டு வரும் டொயோட்டா நிறுவனம், அதன் இன்னோவா காரை சிறப்பிக்கும் விதமாக 50ம் ஆண்டு விழா பதிப்பு மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தோனேசியா சந்தையிலே இக்காரை நிறுவனம் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.

50ஆண்டுகள் ஆகிடுச்சாம்! இந்தோனசியர்களை மிரள வைக்க சிறப்பு பதிப்பு இன்னோவா அறிமுகம்... 50 யூனிட்டுகள் மட்டுமே கிடைக்கும்!

வெறும் 50 யூனிட்டுகளை மட்டுமே விற்பனைச் செய்ய நிறுவனம் திட்டமிட்டுள்ளது. டொயோட்டா இந்த சிறப்பு பதிப்பு காரை இரு விதமான வேரியண்டுகளில் விற்பனைக்கு வழங்க திட்டமிட்டுள்ளது. அவை, 2.0 லிட்டர் வி லக்சூரி ஏடி மற்றும் வென்சர் 2.4 லிட்டர் ஏடி ஆகியவையாகும்.

50ஆண்டுகள் ஆகிடுச்சாம்! இந்தோனசியர்களை மிரள வைக்க சிறப்பு பதிப்பு இன்னோவா அறிமுகம்... 50 யூனிட்டுகள் மட்டுமே கிடைக்கும்!

இதில் ஏடி என்பது தானியங்கி கியர்பாக்ஸ் வசதியைக் குறிக்கக் கூடிய சொல்லாகும். இதில், 2.0 லிட்டர் எஞ்ஜினுக்கு இந்திய மதிப்பில் ரூ. 20.7 லட்சம் என்ற விலையையும், 2.4 லிட்டர் வேரியண்டிற்கு ரூ. 24.72 லட்சம் என்ற விலையையும் நிறுவனம் நிர்ணயித்துள்ளது.

50ஆண்டுகள் ஆகிடுச்சாம்! இந்தோனசியர்களை மிரள வைக்க சிறப்பு பதிப்பு இன்னோவா அறிமுகம்... 50 யூனிட்டுகள் மட்டுமே கிடைக்கும்!

தொடர்ந்து, 2.0 லிட்டர் எஞ்ஜின் கொண்ட தேர்வை 30 யூனிட்டு வரையிலும், வென்சர் 2.4 லிட்டர் வேரியண்டை 20 யூனிட் வரையிலும் விற்பனைக்கு வழங்க நிறுவனம் திட்டமிட்டிருக்கின்றது. இன்னோவா க்ரிஸ்டா காருக்கு இந்தியாவில் கிடைப்பதைப் போலவே இன்தோனேசியாவிலும் நல்ல வரவேற்புக் கிடைத்து வருகின்றது.

50ஆண்டுகள் ஆகிடுச்சாம்! இந்தோனசியர்களை மிரள வைக்க சிறப்பு பதிப்பு இன்னோவா அறிமுகம்... 50 யூனிட்டுகள் மட்டுமே கிடைக்கும்!

சொல்லப் போனால் இந்தியாவைக் காட்டிலும் நல்ல வரவேற்பை அந்நாட்டில் இன்னோவா பெற்று வருகின்றது. எனவேதான், இக்காரின் 50ம் ஆண்டு அறிமுக தினத்தை முன்னிட்டு 50 சிறப்பு பதிப்பு இன்னோவாக்களை நாட்டில் விற்பனைச் செய்ய டொயோட்டா திட்டமிட்டிருக்கின்றது.

50ஆண்டுகள் ஆகிடுச்சாம்! இந்தோனசியர்களை மிரள வைக்க சிறப்பு பதிப்பு இன்னோவா அறிமுகம்... 50 யூனிட்டுகள் மட்டுமே கிடைக்கும்!

வெளிப்புறம் மற்றும் உட்புறத்தில் கணிசமான வித்தியாசங்களைப் பெற்று இக்கார் விற்பனைக்கு வந்திருக்கின்றது. குறிப்பிட்டுக் கூற வேண்டுமானால் புதிய அணிகலன் சேர்ப்பு, வெளிப்புறத்தில் புதிய ஸ்டிக்கர்கள் மற்றும் 50ம் ஆண்டு சிறப்பு பதிப்பை குறிக்கும் வகையில் புதிய பேட்ஜ்கள் என கணிசமான ஸ்பெஷல் அலங்காரங்களுடன் இக்கார் அறிமுகமாகியுள்ளது.

50ஆண்டுகள் ஆகிடுச்சாம்! இந்தோனசியர்களை மிரள வைக்க சிறப்பு பதிப்பு இன்னோவா அறிமுகம்... 50 யூனிட்டுகள் மட்டுமே கிடைக்கும்!

இதேபோன்று, காரின் உட்புறத்திலும் கணிசமான மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. அந்தவகையில், இருக்கையின் நிறம், முக்கிய பாகங்களின் தோற்றம் மற்றும் ஸ்பெஷல் கருவிகள் சேர்ப்பு ஆகிய செய்யப்பட்டுள்ளன. ஜேபிஎல் ஆடியோ சிஸ்ஸடத்தையே சிறப்பு கருவி சேர்ப்பு விஷயமாக நிறுவனம் செய்துள்ளது.

50ஆண்டுகள் ஆகிடுச்சாம்! இந்தோனசியர்களை மிரள வைக்க சிறப்பு பதிப்பு இன்னோவா அறிமுகம்... 50 யூனிட்டுகள் மட்டுமே கிடைக்கும்!

இத்துடன், காரின் உட்பகுதியை அதிக பிரீமியம் தரத்திற்கு உயர்த்தும் வகையில் மரக்கட்டையாலான டேஷ்போர்டு, லெதர் இருக்கை உள்ளிட்டவையும் வழங்கப்பட்டுள்ளன. இதுபோன்ற கணிசமான சிறப்பு வசதிகளையே இச்சிறப்பு பதிப்பு டொயோட்டா இன்னோவா க்ரிஸ்டா கார் பெற்றிருக்கின்றது.

50ஆண்டுகள் ஆகிடுச்சாம்! இந்தோனசியர்களை மிரள வைக்க சிறப்பு பதிப்பு இன்னோவா அறிமுகம்... 50 யூனிட்டுகள் மட்டுமே கிடைக்கும்!

இந்தியாவில் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்டா கார் இரு விதமான எஞ்ஜின் தேர்வில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. 2.4 லிட்டர் டீசல் மற்றும் 2.7 லிட்டர் பெட்ரோல் ஆகிய இரு விதமான எஞ்ஜின் தேர்விலேயே இன்னோவா கிடைத்து வருகின்றது. இதில், டீசல் எஞ்ஜின் 147 பிஎச்பி மற்றும் 360 என்எம் டார்க் திறன் வெளிப்பாட்டிலும், பெட்ரோல் எஞ்ஜின் 164 பிஎச்பி மற்றும் 245 என்எம் டார்க் திறன் வெளிப்பாட்டையும் கொண்டதாக இருக்கின்றன.

Most Read Articles
English summary
Toyota Launches 50th-Anniversary Edition Innova Indonesia. Read In Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X