டொயோட்டா நிறுவனத்தின் காட்டில் அடைமழை... இன்னோவா க்ரிஸ்ட்டா, ஃபார்ச்சூனர் கார்களை அடிச்சுக்க ஆளே இல்ல!

இந்திய சந்தையில் கடந்த செப்டம்பர் மாதம் டொயோட்டா நிறுவனம் விற்பனை செய்த கார்களின் எண்ணிக்கை குறித்த தகவல்களை மாடல் வாரியாக இந்த செய்தியில் பார்க்கலாம்.

டொயோட்டா நிறுவனத்தின் காட்டில் அடைமழை... இன்னோவா க்ரிஸ்ட்டா, ஃபார்ச்சூனர் கார்களை அடிச்சுக்க ஆளே இல்ல!

இந்தியாவில் கடந்த செப்டம்பர் மாதம் டொயோட்டா நிறுவனம் விற்பனை செய்த கார்களின் எண்ணிக்கை குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்படி கடந்த செப்டம்பர் மாதம் இந்திய சந்தையில் அதிகம் விற்பனை செய்யப்பட்ட டொயோட்டா நிறுவனத்தின் கார் என்ற பெருமையை இன்னோவா க்ரிஸ்ட்டா பெற்றுள்ளது.

டொயோட்டா நிறுவனத்தின் காட்டில் அடைமழை... இன்னோவா க்ரிஸ்ட்டா, ஃபார்ச்சூனர் கார்களை அடிச்சுக்க ஆளே இல்ல!

டொயோட்டா நிறுவனம் இந்திய சந்தையில் கடந்த செப்டம்பர் மாதம் 4,724 இன்னோவா க்ரிஸ்ட்டா கார்களை விற்பனை செய்துள்ளது. இந்த எண்ணிக்கை கடந்த 2020ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 4,087 ஆக இருந்தது. இதன் மூலம் விற்பனையில் 16 சதவீத வளர்ச்சியை டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா பதிவு செய்து அசத்தியுள்ளது.

டொயோட்டா நிறுவனத்தின் காட்டில் அடைமழை... இன்னோவா க்ரிஸ்ட்டா, ஃபார்ச்சூனர் கார்களை அடிச்சுக்க ஆளே இல்ல!

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் எம்பிவி ரக கார் ஆகும். இங்கு டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டாவிற்கு சரிநிகரான போட்டியாளர்கள் எதுவும் இல்லை. எனினும் கியா நிறுவனத்தின் கார்னிவல் காரை, டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டாவிற்கு மாற்றாக கருதலாம்.

டொயோட்டா நிறுவனத்தின் காட்டில் அடைமழை... இன்னோவா க்ரிஸ்ட்டா, ஃபார்ச்சூனர் கார்களை அடிச்சுக்க ஆளே இல்ல!

இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தை டொயோட்டா ஃபார்ச்சூனர் பிடித்துள்ளது. இது இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் ஃபுல்-சைஸ் எஸ்யூவி ரக கார் ஆகும். டொயோட்டா நிறுவனம் கடந்த 2020ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இந்தியாவில் வெறும் 1,045 ஃபார்ச்சூனர் கார்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது.

டொயோட்டா நிறுவனத்தின் காட்டில் அடைமழை... இன்னோவா க்ரிஸ்ட்டா, ஃபார்ச்சூனர் கார்களை அடிச்சுக்க ஆளே இல்ல!

ஆனால் நடப்பாண்டு செப்டம்பர் மாதம் இந்த எண்ணிக்கை 1,869 ஆக உயர்ந்துள்ளது. இது 79 சதவீத வளர்ச்சியாகும். எம்ஜி க்ளோஸ்ட்டர் மற்றும் ஃபோர்டு எண்டேவியர் ஆகிய கார்களுடன் டொயோட்டா ஃபார்ச்சூனர் போட்டியிட்டு வந்தது. ஆனால் ஃபோர்டு நிறுவனம் இந்திய சந்தையை விட்டு வெளியேறுவதால், இனி எண்டேவியர் கார், டொயோட்டா ஃபார்ச்சூனருக்கு போட்டியாக இருக்காது.

டொயோட்டா நிறுவனத்தின் காட்டில் அடைமழை... இன்னோவா க்ரிஸ்ட்டா, ஃபார்ச்சூனர் கார்களை அடிச்சுக்க ஆளே இல்ல!

எனவே இனி டொயோட்டா ஃபார்ச்சூனர் காரின் விற்பனை மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பட்டியலில் டொயோட்டா க்ளான்சா மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. மாருதி சுஸுகி பலேனோ கார்தான் டொயோட்டா பிராண்டில் ரீ-பேட்ஜ் செய்யப்பட்டு க்ளான்சா என்ற பெயரில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

டொயோட்டா நிறுவனத்தின் காட்டில் அடைமழை... இன்னோவா க்ரிஸ்ட்டா, ஃபார்ச்சூனர் கார்களை அடிச்சுக்க ஆளே இல்ல!

சுஸுகி நிறுவனத்துடன் ஏற்படுத்தி கொண்டுள்ள கூட்டணியின் அடிப்படையில் டொயோட்டா நிறுவனம் இதனை செய்து வருகிறது. இந்தியாவில் நடப்பாண்டு செப்டம்பர் மாதம் 1,764 க்ளான்சா கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால் கடந்தாண்டு செப்டம்பர் மாதம் இந்த எண்ணிக்கை 2,572 ஆக இருந்தது. இது 31 சதவீத வீழ்ச்சியாகும்.

டொயோட்டா நிறுவனத்தின் காட்டில் அடைமழை... இன்னோவா க்ரிஸ்ட்டா, ஃபார்ச்சூனர் கார்களை அடிச்சுக்க ஆளே இல்ல!

டாடா அல்ட்ராஸ், ஹூண்டாய் ஐ20, ஃபோக்ஸ்வேகன் போலோ ஆகிய கார்களுடன் மாருதி சுஸுகி பலேனோவிற்கும், டொயோட்டா க்ளான்சா விற்பனையில் சவால் அளித்து வருகிறது. இந்த பட்டியலில் நான்காவது இடத்தை டொயோட்டா அர்பன் க்ரூஸர் பிடித்துள்ளது. இதுவும் மாருதி சுஸுகி நிறுவனத்தின் ரீ-பேட்ஜ் செய்யப்பட்ட வெர்ஷன்தான்.

டொயோட்டா நிறுவனத்தின் காட்டில் அடைமழை... இன்னோவா க்ரிஸ்ட்டா, ஃபார்ச்சூனர் கார்களை அடிச்சுக்க ஆளே இல்ல!

மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி ரக கார்தான், டொயோட்டா பிராண்டில் அர்பன் க்ரூஸர் என்ற பெயரில் விற்பனை செய்யப்படுகிறது. இந்தியாவில் நடப்பாண்டு செப்டம்பர் மாதம் 816 டொயோட்டா அர்பன் க்ரூஸர் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. கடந்த 2020ம் ஆண்டு செப்டம்பர் மாத இறுதியில்தான் டொயோட்டா அர்பன் க்ரூஸர் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

டொயோட்டா நிறுவனத்தின் காட்டில் அடைமழை... இன்னோவா க்ரிஸ்ட்டா, ஃபார்ச்சூனர் கார்களை அடிச்சுக்க ஆளே இல்ல!

எனவே அதன் விற்பனை எண்ணிக்கையை ஒப்பிட முடியாது. இந்த பட்டியலில் ஐந்தாவது இடத்தை டொயோட்டா கேம்ரி பிடித்துள்ளது. கடந்த 2020ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வெறும் 21 ஆக இருந்த டொயோட்டா கேம்ரி காரின் விற்பனை எண்ணிக்கை நடப்பாண்டு செப்டம்பர் மாதம் 59 ஆக உயர்ந்துள்ளது. இது 181 சதவீத வளர்ச்சியாகும்.

டொயோட்டா நிறுவனத்தின் காட்டில் அடைமழை... இன்னோவா க்ரிஸ்ட்டா, ஃபார்ச்சூனர் கார்களை அடிச்சுக்க ஆளே இல்ல!

இந்த பட்டியலில் ஆறாவது மற்றும் கடைசி இடத்தை டொயோட்டா வெல்ஃபயர் பிடித்துள்ளது. கடந்த 2020ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வெறும் 14 ஆக இருந்த டொயோட்டா வெல்ஃபயர் காரின் விற்பனை எண்ணிக்கை நடப்பாண்டு செப்டம்பர் மாதம் 52 ஆக உயர்ந்துள்ளது. இது 271 சதவீத வளர்ச்சியாகும். இது மிகவும் சிறப்பான விற்பனை வளர்ச்சி என்பதில் சந்தேகமில்லை.

டொயோட்டா நிறுவனத்தின் காட்டில் அடைமழை... இன்னோவா க்ரிஸ்ட்டா, ஃபார்ச்சூனர் கார்களை அடிச்சுக்க ஆளே இல்ல!

டொயோட்டா வெல்ஃபயர் மிகவும் விலை உயர்ந்த கார் ஆகும். பிரபலங்கள் பலர் இந்த காரை வாங்குவதற்கு ஆர்வம் காட்டி வருகின்றனர். மலையாள திரையுலக சூப்பர் ஸ்டார் மோகன்லால் இதற்கு ஒரு உதாரணம். டொயோட்டா வெல்ஃபயர் காரை வாங்கிய பிரபலங்களில் அவரும் ஒருவர். இந்த காரில் சொகுசு வசதிகளுக்கு பஞ்சமிருக்காது.

Most Read Articles
மேலும்... #டொயோட்டா #toyota
English summary
Toyota model wise september 2021 sales report innova crysta leads chart
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X