இந்த ஆண்டு டொயோட்டாவிடம் இருந்து எதிர்பார்க்கப்படும் 4 புதிய கார்கள்!

இந்த ஆண்டு 4 புதிய கார் மாடல்களை டொயோட்டா கார் நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த 4 கார்களும் வெவ்வேறு பட்ஜெட் மற்றும் வாடிக்கையாளர்களின் விருப்பங்களை பூர்த்தி செய்யும் வகையில் இருக்கும் என தெரிகிறது.

இந்த ஆண்டு டொயோட்டாவிடம் இருந்து எதிர்பார்க்கப்படும் 4 புதிய கார்கள்!

இந்தியாவின் எம்பிவி மற்றும் ஃபுல்சைஸ் எஸ்யூவி மார்க்கெட்டில் டொயோட்டா நிறுவனம் நம்பர்-1 ஆக இருந்து வருகிறது. இன்னோவா க்ரிஸ்ட்டா மற்றும் ஃபார்ச்சூனர் ஆகிய மாடல்கள் தன்னிகரற்ற தேர்வாக வாடிக்கையாளர்களிடம் அதிக வரவேற்பை பெற்றுள்ளன.

இந்த ஆண்டு டொயோட்டாவிடம் இருந்து எதிர்பார்க்கப்படும் 4 புதிய கார்கள்!

இந்த நிலையில், எதிர்கால வளர்ச்சியை கருத்தில்கொண்டு புதிய ரக கார் மாடல்களை கொண்டு வருவதற்கு டொயோட்டா கார் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அதன்படி, மாருதி சுஸுகி கூட்டணியில் மேலும் இரண்டு புதிய கார் மாடல்களையும், வெளிநாடுகளில் விற்பனையில் உள்ள சில புதிய கார் மாடல்களையும் இந்தியாவில் களமிறக்க டொயோட்டா திட்டமிட்டுள்ளது.

இந்த ஆண்டு டொயோட்டாவிடம் இருந்து எதிர்பார்க்கப்படும் 4 புதிய கார்கள்!

டொயோட்டா பெல்ட்டா

மாருதி சுஸுகி கூட்டணியில் ஏற்கனவே க்ளான்ஸா மற்றும் அர்பன் க்ரூஸர் ஆகிய மாடல்களை விற்பனை செய்து வருகிறது. இதைத்தொடர்ந்து, தற்போது மாருதி சியாஸ் காரை தனது பிராண்டில் விரைவில் விற்பனைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளது டொயோட்டா.

இந்த ஆண்டு டொயோட்டாவிடம் இருந்து எதிர்பார்க்கப்படும் 4 புதிய கார்கள்!

டொயோட்டா பெல்ட்டா என்ற பெயரில் மாருதி சியாஸ் கார் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. மாருதி சியாஸ் காரில் இருக்கும் வசதிகள் மற்றும் எஞ்சின் ஆகியவற்றுடன் பெல்ட்டா களமிறக்கப்படும். பண்டிகை காலத்திற்கு முன்பாக இந்த மாடல் வர இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

இந்த ஆண்டு டொயோட்டாவிடம் இருந்து எதிர்பார்க்கப்படும் 4 புதிய கார்கள்!

மாருதி எர்டிகா ரீபேட்ஜ் மாடல்

இதைத்தொடர்ந்து, மாருதி சுஸுகி கூட்டணியில் நான்காவது மாடலாக எர்டிகா காரையும் விற்பனைக்கு கொண்டு வருவதற்கு டொயோட்டா திட்டமிட்டுள்ளது. இந்த கார் குறித்த அதிகத் தகவல்கள் இல்லை.

இந்த ஆண்டு டொயோட்டாவிடம் இருந்து எதிர்பார்க்கப்படும் 4 புதிய கார்கள்!

ஆனால், எர்டிகா அல்லது எக்ஸ்எல்-6 காரை ரீபேட்ஜ் எஞ்சினியரிங் முறையில் லோகோவை மட்டும் மாற்றி தனது பிராண்டில் களமிறக்குவதற்கான முயற்சிகளில் டொயோட்டா ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது. இந்த காரும் இந்த ஆண்டு பண்டிகை கால வரவாகவே பார்க்கப்படுகிறது.

இந்த ஆண்டு டொயோட்டாவிடம் இருந்து எதிர்பார்க்கப்படும் 4 புதிய கார்கள்!

டொயோட்டா ஆர்ஏவி4

இதற்கு அடுத்து படியாக, டொயோட்டா நிறுவனம் தனது ஆர்ஏவி-4 எஸ்யூவி மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்யவும் திட்டமிட்டுள்ளது. இந்த புதிய சொகுசு ரக எஸ்யூவி ஏற்கனவே இந்திய சாலைகளில் வைத்து சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த கார் தீபாவளிக்கு முன்னதாக வருவதற்கான வாய்ப்பு இருக்கிறது.

இந்த ஆண்டு டொயோட்டாவிடம் இருந்து எதிர்பார்க்கப்படும் 4 புதிய கார்கள்!

புதிய டொயோட்டா ஆர்ஏவி4 எஸ்யூவியில் 2.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் ஹைப்ரிட் தொழில்நுட்பத்துடன் கொடுக்கப்படுகிறது. இந்த மாடலானது 218 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கும். இதனுடன் 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படும். ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் இந்த காரிலும் இடம்பெற்றிருக்கும். ஃபார்ச்சூனர் எஸ்யூவியைவிட விலை அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது, ரூ.50 லட்சம் முதல் ரூ.60 லட்சத்தில் வரும் வாய்ப்புகள் உள்ளன.

இந்த ஆண்டு டொயோட்டாவிடம் இருந்து எதிர்பார்க்கப்படும் 4 புதிய கார்கள்!

இந்த ஆண்டு டொயோட்டாவிடம் இருந்து நான்காவது மாடலாக ஹைலக்ஸ் பிக்கப் டிரக் மாடல் எதிர்பார்க்கப்படுகிறது. இசுஸு வி க்ராஸ் பிக்கப் டிரக் தனிநபர் பயன்பாட்டு வகை வாகன சந்தையில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. எனவே, அதே வகையில் இந்த புதிய மாடலை ஆஃப்ரோடு எஸ்யூவி வாகனங்களை வாங்க விரும்பும் வாடிக்கையாளர்களை குறிவைத்து அறிமுகம் செய்யப்படும்.

இந்த ஆண்டு டொயோட்டாவிடம் இருந்து எதிர்பார்க்கப்படும் 4 புதிய கார்கள்!

இன்னோவா க்ரிஸ்ட்டா மற்றம் ஃபார்ச்சூனர் எஸ்யூவி மாடல்கள் உருவாக்கப்பட்ட அதே லேடர் ஆன் ஃப்ரேம் சேஸீயில்தான் புதிய டொயோட்டா ஹைலக்ஸ் பிக்கப் டிரக்கும் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், எஞ்சின் தேர்வுகளையும் பகிர்ந்து கொள்ளும். இந்த பிக்கப் டிரக்கில் 2.8 லிட்டர் டீசல் எஞ்சின் எதிர்பார்க்கலாம். 201 பிஎச்பி பவரையம், 500 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 147 பிஎச்பி பவரை வழங்கும் 2.4 லிட்டர் டீசல் எஞ்சின் மற்றும் 2.7 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் தேர்வுகளும் டொயோட்டா கைவசம் உள்ளது.

இந்த ஆண்டு டொயோட்டாவிடம் இருந்து எதிர்பார்க்கப்படும் 4 புதிய கார்கள்!

இந்த ஆண்டு பண்டிகை காலத்திற்குள் அனைத்து மாடல்களையும் கொண்டு வந்துவிடுவதற்கான திட்டம் டொயோட்டாவிடம் உள்ளதாக தெரிகிறது. ஆனால், இந்த புதிய மாடல்கள் குறித்து இதுவரை எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலையும் பகிர்ந்து கொள்ளவில்லை. இந்த ஆண்டுக்கான புதிய மாடல்கள் குறித்து விரைவில் டொயோட்டா சில முக்கியத் தகவல்களை பகிர்ந்து கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
மேலும்... #டொயோட்டா #toyota
English summary
Toyota is planning to launch 4 news cars in India this year.
Story first published: Friday, April 23, 2021, 13:08 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X