இப்போதும் சாலைகளில் உலா வரும் டொயோட்டா குவாலிஸ்!! எத்தனை பேருக்கு ஞாபகம் இருக்கு?

டொயோட்டா நிறுவனம் இந்தியாவில் ஆரம்பத்தில் விற்பனை செய்த கார்களில் குவாலிஸும் ஒன்று. கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு முன்பு 2000ஆம் வருடங்களில் விற்பனையில் இருந்த இந்த கார் வெறும் 4 வருடங்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டது.

இப்போதும் சாலைகளில் உலா வரும் டொயோட்டா குவாலிஸ்!! எத்தனை பேருக்கு ஞாபகம் இருக்கு?

தனி பயன்பாட்டிற்கு மற்றும் கமர்ஷியல் பயன்பாட்டிற்கென வாங்கப்பட்ட இந்த டொயோட்டா கார் மஹிந்திரா பொலிரோ மற்றும் டாடா சுமோ உள்ளிட்டவற்றிற்கு விற்பனையில் போட்டியாக விளங்கி வந்தது.

இப்போதும் சாலைகளில் உலா வரும் டொயோட்டா குவாலிஸ்!! எத்தனை பேருக்கு ஞாபகம் இருக்கு?

இதற்கு மாற்றாக டொயோட்டா நிறுவனம் கொண்டுவந்த மாடல் தான் இன்னோவா. இப்போதெல்லாம் குவாலிஸ் கார்களை சாலையில் பார்ப்பது மிகவும் அரிதாகிவிட்டது. தற்போதும் பயன்படுத்துபவர்களில் பெரும்பான்மையானோர் காரை மீண்டும் புதுபித்தவர்களாக தான் உள்ளனர்.

இப்போதும் சாலைகளில் உலா வரும் டொயோட்டா குவாலிஸ்!! எத்தனை பேருக்கு ஞாபகம் இருக்கு?

அவ்வாறான புதுப்பிக்கப்பட்டு, பயன்படுத்தப்பட்டு வரும் டொயோட்டா குவாலிஸ் காரை பற்றி தான் இந்த செய்தியில் பார்க்க போகிறோம். இது தொடர்பான வீடியோ பிவிடி ஆட்டோ கான்செப்ட் என்ற யுடியுப் சேனலில் பதிவிடப்பட்டுள்ளது.

இந்த வீடியோவில், பயன்பாட்டில் இருக்கும் இந்த குவாலிஸ் கார் எவ்வாறெல்லாம் பட்டி டிங்கரிங் செய்யப்பட்டுள்ளது என்பது விரிவாக காட்டப்பட்டுள்ளது. காரின் வெளிபுறம் மற்றும் உட்புறம் என இரு புறங்களிலும் பல திருத்தியமைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இப்போதும் சாலைகளில் உலா வரும் டொயோட்டா குவாலிஸ்!! எத்தனை பேருக்கு ஞாபகம் இருக்கு?

மெக்கானிக் ஷாப்பிற்கு வரும் முன் இந்த குவாலிஸ் கார் எவ்வாறு இருந்தது என்பதில் இருந்து ஆரம்பிக்கும் இந்த வீடியோவில், கீறல்கள் மற்றும் குழிகள் சரிபார்க்கப்பட்டு காருக்கு இளம்பழுப்பு நிறம் கொடுக்கப்பட்டுள்ளது.

இப்போதும் சாலைகளில் உலா வரும் டொயோட்டா குவாலிஸ்!! எத்தனை பேருக்கு ஞாபகம் இருக்கு?

ஆனால் காரில் துருப்பிடித்து இருந்தாற்போல் இந்த வீடியோவில் எந்த இடத்திலும் பார்க்க முடியவில்லை. மேடு, குழிகள் சரிபார்க்கப்பட்ட பின்னர் அதன் மீது துருப்பிடிக்காமல் இருப்பதற்காக ப்ரைமர் தெளிக்கப்பட்டுள்ளது.

இப்போதும் சாலைகளில் உலா வரும் டொயோட்டா குவாலிஸ்!! எத்தனை பேருக்கு ஞாபகம் இருக்கு?

அதன் பின்னரே கருப்பு நிற பெயிண்ட் கொடுக்கப்பட்டுள்ளது. கருப்பு நிறம் உண்மையில் இந்த எம்பிவி காருக்கு மிகவும் எடுப்பாக உள்ளது. பெயிண்டிங் வேலை முடிந்தவுடன் முன் மற்றும் பின்பக்க பம்பர், ஹெட்லைட்கள் & டெயில்லைட்கள் உள்ளிட்டவை பொருத்தப்படுகின்றன.

இப்போதும் சாலைகளில் உலா வரும் டொயோட்டா குவாலிஸ்!! எத்தனை பேருக்கு ஞாபகம் இருக்கு?

முன்பு இருந்த இரும்பு சக்கரங்களுக்கு மாற்றாக அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. வெளிப்பக்கத்தின் கருப்பு நிறத்திற்கு ஏற்ப உட்புறத்திலும் மைய கன்சோல், டேஸ்போர்டு க்ரே நிறத்தில் பெயிண்ட் செய்யப்பட்டுள்ளன.

இப்போதும் சாலைகளில் உலா வரும் டொயோட்டா குவாலிஸ்!! எத்தனை பேருக்கு ஞாபகம் இருக்கு?

இந்த வீடியோவில் இதற்கு ஆன செலவு மற்றும் நேரம் எதுவும் குறிப்பிடப்படவில்லை. குறைந்த பராமரிப்பு செலவு மற்றும் நம்பகமான என்ஜின் உள்ளிட்டவற்றினால் தான் குவாலிஸ் இந்தியாவில் பிரபலமானது.

இப்போதும் சாலைகளில் உலா வரும் டொயோட்டா குவாலிஸ்!! எத்தனை பேருக்கு ஞாபகம் இருக்கு?

இதனால் இந்த குவாலிஸ் காரில் இருக்கும் என்ஜினை நம்பி இவ்வாறான மாடிஃபிகேஷன் பணிகளை தைரியமாக மேற்கொள்ளலாம். டொயோட்டா குவாலிஸில் 2.4 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles

English summary
Old Toyota Qualis MPV beautifully restored on video. Read Full Details in Tamil.
Story first published: Wednesday, April 14, 2021, 9:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X