டொயோட்டா ஆர்ஏவி-4 எஸ்யூவி இந்தியாவில் சோதனை... விரைவில் அறிமுகமாகிறது?

டொயோட்டா ஆர்ஏவி-4 எஸ்யூவி இந்தியாவில் வைத்து ரகசியமாக சோதனை செய்யப்பட்டு வருகிறது. இந்த புதிய டொயோட்டா எஸ்யூவி விரைவில் அறிமுகம் செய்யப்படுமா என்ற எதிர்பார்ப்பும் ஏகத்துக்கும் பற்றிக் கொண்டுள்ளது.

டொயோட்டா ஆர்ஏவி-4 எஸ்யூவி இந்தியாவில் சோதனை... விரைவில் அறிமுகமாகிறது?

இந்தியாவில் எஸ்யூவி கார்கள் இல்லாமல் காலத்தை ஓட்ட முடியாது என்ற நிலைக்கு கார் நிறுவனங்கள் தள்ளப்பட்டுவிட்டன. இதனால், எஸ்யூவி மாடல்களை வரிசை கட்டுவதற்கான திட்டங்களை அனைத்து கார் நிறுவனங்களும் துரிதப்படுத்தி வருகின்றன.

டொயோட்டா ஆர்ஏவி-4 எஸ்யூவி இந்தியாவில் சோதனை... விரைவில் அறிமுகமாகிறது?

அந்த வகையில், டொயோட்டா கார் நிறுவனமும் எஸ்யூவி கார் சந்தையில் புதிய மாடல்களை கொண்டு வருவதற்கான முனைப்பில் இறங்கி இருக்கிறது. வெளிநாடுகளில் விற்பனையில் உள்ள டொயோட்டா நிறுவனத்தின் ஆர்ஏவி-4 எஸ்யூவி இந்தியாவில் வைத்து சோதனை செய்யப்படுவது தெரிய வந்துள்ளது.

டொயோட்டா ஆர்ஏவி-4 எஸ்யூவி இந்தியாவில் சோதனை... விரைவில் அறிமுகமாகிறது?

அடையாளத்தை மறைக்காமல் இந்திய சாலைகளில் வலம் வந்த இந்த எஸ்யூவியை ஆயுஷ் நிம்கர் எந்பவர் படம் பிடித்து பகிர்ந்து கொண்டுள்ளார். இந்த எஸ்யூவி பிரிமீயம் மிட்சைஸ் எஸ்யூவி ரகத்தை சேர்ந்தது. அதாவது, டொயோட்டா ஃபார்ச்சூனர் எஸ்யூவியைவிட விலை குறைவான மாடலாக வெளிநாடுகளில் விற்பனை செய்யப்படுகிறது.

டொயோட்டா ஆர்ஏவி-4 எஸ்யூவி இந்தியாவில் சோதனை... விரைவில் அறிமுகமாகிறது?

ஆனால், இந்த மாடலை இறக்குமதி செய்து இந்தியாவில் விற்பனை செய்ய டொயோட்டா திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இதனால், இதன் விலை டொயோட்டா ஃபார்ச்சூனர் எஸ்யூவியைவிட அதிகமாக நிர்ணயிக்கும் நிலை ஏற்படலாம்.

டொயோட்டா ஆர்ஏவி-4 எஸ்யூவி இந்தியாவில் சோதனை... விரைவில் அறிமுகமாகிறது?

அதாவது, ரூ.50 லட்சம் விலையில் இந்த புதிய எஸ்யூவி மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல்கள் கூறுகின்றன. இந்த ஆண்டு மத்தியில் புதிய டொயோட்டா ஆர்ஏவி-4 எஸ்யூவி இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன.

டொயோட்டா ஆர்ஏவி-4 எஸ்யூவி இந்தியாவில் சோதனை... விரைவில் அறிமுகமாகிறது?

டொயோட்டா ஆர்ஏவி-4 எஸ்யூவியில் 2.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் மின் மோட்டார் கொண்ட ஹைப்ரிட் மாடலாக விற்பனை செய்யப்படுகிறது. இந்த கார் அதிகபட்சமாக 219 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கும். சிவிடி கியர்பாக்ஸ் மற்றும் 4 வீல் டிரைவ் சிஸ்டம் ஆகியவை உள்ளன.

டொயோட்டா ஆர்ஏவி-4 எஸ்யூவி இந்தியாவில் சோதனை... விரைவில் அறிமுகமாகிறது?

புதிய டொயோட்டா ஆர்ஏவி-4 எஸ்யூவியில் ஆம்பியன்ட் லைட் சிஸ்டம், பனோரமிக் சன்ரூஃப், வென்டிலேட்டட் இருக்கைகள், 8.0 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டியூவல் ஸோன் க்ளைமேட் கன்ட்ரோல், கீ லெஸ் என்ட்ரி ஆகிய வசதிகள் இடம்பெற்றிருக்கும். தவிரவும், லேன் டிபார்ச்சர் வார்னிங் சிஸ்டம், ஹை பீம் அசிஸ்ட், ஆக்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல், ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், டிராக்ஷன் கன்ட்ரோல் ஆகிய வசதிகள் உள்ளன.

Most Read Articles
மேலும்... #டொயோட்டா #toyota
English summary
Toyota RAV4 SUV spied testing in India and it is expected to arrive in India by mid of this year.
Story first published: Wednesday, February 24, 2021, 15:34 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X