டொயோட்டாவின் சொகுசு எஸ்யூவி கார்... ஆர்ஏவி4!! இந்தியாவில் சோதனை ஓட்டம்...

நம்பகத்தன்மை, குறைவான பராமரிப்பு செலவு மற்றும் சௌகரியம் உள்ளிட்டவற்றினால் டொயோட்டா கார்களுக்கு நம் நாட்டு சந்தையில் மிக நல்லப்படியான வரவேற்பே கிட்டத்தட்ட கடந்த 20 வருடங்களாக கிடைத்து வருகிறது.

டொயோட்டாவின் சொகுசு எஸ்யூவி கார்... ஆர்ஏவி4!! இந்தியாவில் சோதனை ஓட்டம்...

உலகளவில் எஸ்யூவி கார்களுக்கு மிக பெரிய தேவை உருவாகி வருகிறது. இந்திய சந்தையிலும் இதே நிலை தான். இதனாலேயே டொயோட்டா அதன் புதிய நடுத்தர-அளவு எஸ்யூவி காராக ஆர்ஏவி4-ஐ இந்தியாவில் விற்பனைக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளது.

டொயோட்டாவின் சொகுசு எஸ்யூவி கார்... ஆர்ஏவி4!! இந்தியாவில் சோதனை ஓட்டம்...

இந்த நிலையில் டொயோட்டா ஆர்ஏவி4 கார் ஒன்று மும்பை- அகமதாபாத் நெடுஞ்சாலையில் அடையாளம் காணப்பட்டுள்ளது. ஏற்கனவே சர்வதேச சந்தைகளில் விற்பனையில் இருக்கும் இந்த டொயோட்டா காரின் ஐந்தாம் தலைமுறை இப்போது சாலை சோதனை ஓட்டத்தில் உட்படுத்தப்பட்டுள்ளது.

டொயோட்டாவின் சொகுசு எஸ்யூவி கார்... ஆர்ஏவி4!! இந்தியாவில் சோதனை ஓட்டம்...

டொயோட்டா காம்ரியின் டிஎன்ஜிஏ-கே ப்ளாட்ஃபாரத்தை பயன்படுத்தி உருவாக்கப்படும் ஆர்விஏ4 காரின் இந்த சோதனை ஓட்ட ஸ்பை படங்கள் இந்தியன் ஆட்டோ ப்ளாக் என்ற செய்தி மூலம் கிடைத்துள்ளது.

டொயோட்டாவின் சொகுசு எஸ்யூவி கார்... ஆர்ஏவி4!! இந்தியாவில் சோதனை ஓட்டம்...

இந்த படங்களில் காரின் பின்பக்கத்தில் காரின் 'ஆர்ஏவி4' முத்திரை உடன் மற்றொரு லோகோவையும் பார்க்கலாம். இது டொயோட்டாவின் ஹைப்ரீட் வாகனங்களில் பொருத்தப்படும் முத்திரை ஆகும்.

டொயோட்டாவின் சொகுசு எஸ்யூவி கார்... ஆர்ஏவி4!! இந்தியாவில் சோதனை ஓட்டம்...

இதில் இருந்து டொயோட்டா ஆர்ஏவி4 இந்தியாவில் ப்ளக்-இன் ஹைப்ரீட் வேரியண்ட்டில் அறிமுகமாகலாம் என்பது தெரிய வருகிறது. சர்வதேச சந்தையில் இந்த எஸ்யூவி காரை டொயோட்டா நிறுவனம் பெட்ரோல் வெர்சனில் மட்டுமே வழங்குகிறது.

டொயோட்டாவின் சொகுசு எஸ்யூவி கார்... ஆர்ஏவி4!! இந்தியாவில் சோதனை ஓட்டம்...

ஆனால் இந்தியாவில் இந்த கார் எத்தகைய வெர்சனிலும் அறிமுகமாகும் என்பது தற்போதைக்கு தெரியவில்லை. இந்தியாவில் முழுவதும் தயாரிக்கப்பட்ட நிலையில் (சிபியூ முறையில்) வருடத்திற்கு 2,5000 யூனிட்கள் என்ற விதத்தில் ஆர்ஏவி4 கார் விற்பனை செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டொயோட்டாவின் சொகுசு எஸ்யூவி கார்... ஆர்ஏவி4!! இந்தியாவில் சோதனை ஓட்டம்...

இதனால் நிச்சயம் இந்த டொயோட்டா எஸ்யூவி காரை குறைவான விலையில் எதிர்பார்க்க முடியாது. இறக்குமதி வரி உள்ளிட்டவற்றினால் ஆர்ஏவி4 ஹைப்ரீட் காரின் விலையை ரூ.60 லட்சத்தில் எதிர்பார்க்கிறோம்.

டொயோட்டாவின் சொகுசு எஸ்யூவி கார்... ஆர்ஏவி4!! இந்தியாவில் சோதனை ஓட்டம்...

டொயோட்டா நிறுவனம் இந்த ஹைப்ரீட் காரில் 2.5 லிட்டர், 4-சிலிண்டர், அட்கின்சன் சைக்கிள் பெட்ரோல் என்ஜினை எலக்ட்ரிக் மோட்டார் உடன் வழங்கவுள்ளது. இந்த பெட்ரோல் என்ஜின் -எலக்ட்ரிக் மோட்டார் அமைப்பு இருசக்கர ட்ரைவ் மாடல்களில் அதிகப்பட்சமாக 218 பிஎஸ் பவரை வெளிப்படுத்தக்கூடியது.

டொயோட்டாவின் சொகுசு எஸ்யூவி கார்... ஆர்ஏவி4!! இந்தியாவில் சோதனை ஓட்டம்...

அதுவே அனைத்து-சக்கர ட்ரைவ் வெர்சன்களில் 222 பிஎஸ் ஆற்றலை வழங்கும். இந்த என்ஜின் அமைப்புடன் சிவிடி கியர்பாக்ஸ் இணைக்கப்படவுள்ளது. உட்புறத்தில் ஆர்ஏவி4 எஸ்யூவி கார் ஆப்பிள் கார்ப்ளே & ஆண்ட்ராய்டு ஆட்டோவை ஏற்கக்கூடிய 8.0 இன்ச் தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் திரையை பெற்று வரவுள்ளது.

டொயோட்டாவின் சொகுசு எஸ்யூவி கார்... ஆர்ஏவி4!! இந்தியாவில் சோதனை ஓட்டம்...

இதுமட்டுமின்றி ஜேபிஎல்-இன் ப்ரீமியம் சவுண்ட் சிஸ்டம், வயர் இல்லா போன் சார்ஜர், பாதசாரிகளை அடையாளம் காணுதல், அவசரகால ப்ரேக், டைனாமிக் க்ரூஸ் கண்ட்ரோல், இயங்கும் பாதையில் இருந்து வாகனம் விலகினால் எச்சரிக்கும் வசதி உள்ளிட்டவற்றையும் ஏற்றுவரவுள்ள டொயோட்டா ஆர்ஏவி4 இந்தியாவில் இந்த ஆண்டு மத்தியில் அறிமுகப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
மேலும்... #டொயோட்டா #toyota
English summary
Toyota to launch RAV4 SUV in India Spotted testing ahead of launch.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X