2021 டொயோட்டா ஹிலக்ஸ் ஏடி35 பிக்-அப் டிரக் வெளியீடு... அறிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்!!

டொயோட்டா நிறுவனத்தின் 2021 ஹிலக்ஸ் ஏடி35 பிக்-அப் டிரக் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியாகியிருக்கும் முக்கிய தகவலைக் கீழே காணலாம்.

2021 டொயோட்டா ஹிலக்ஸ் ஏடி35 பிக்-அப் டிரக் வெளியீடு... அறிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்!!

பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வந்த டொயோட்டா நிறுவனத்தின் 2021 ஹிலக்ஸ் ஏடி35 பிக்-அப் ட்ரக் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. முந்தைய மாடலைக் காட்டிலும் பல்வேறு அட்டகாசமான அப்டேட்டுகளுடன் இந்த வாகனம் வெளிவந்திருக்கின்றது.

2021 டொயோட்டா ஹிலக்ஸ் ஏடி35 பிக்-அப் டிரக் வெளியீடு... அறிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்!!

வெளிப்புற தோற்றத்தில் மட்டுமின்றி வாகனத்தின் உட்புறத்திலும் கணிசமான அப்டேட்டுகளை டொயோட்டா நிறுவனம் புகுத்தியிருக்கின்றது. இதில், புதிதாக இரட்டை கேப் (double cab) மாடலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதனை இன்வின்சிபிள் எக்ஸ் எனும் ட்ரிம்மில் மட்டுமே பெற முடியும்.

2021 டொயோட்டா ஹிலக்ஸ் ஏடி35 பிக்-அப் டிரக் வெளியீடு... அறிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்!!

இந்த வேரியண்டை ஸ்பெஷல் தேர்வாக மட்டுமே வழங்க டொயோட்டா திட்டமிட்டிருகின்றது. தொடர்ந்து, முன்பை விட அதிக கிரவுண்ட் கிளியரன்ஸ் உடன் ஹிலக்ஸ் ஏடி35 காட்சியளிக்கின்றது. இதற்காக ஸ்பிரிங் மற்றும் டேம்பர்கள் கொண்ட பில்ஸ்டெய்ன் சஸ்பென்ஷன் முன் பக்கத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது.

2021 டொயோட்டா ஹிலக்ஸ் ஏடி35 பிக்-அப் டிரக் வெளியீடு... அறிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்!!

இதனால் இவ்வாகனம் சுமார் 65 மிமீ வரை உயரமான கிரவுண்ட் கிளியரன்ஸைப் பெற்றிருக்கின்றது. இவ்வாறு, வாகனத்தை முரட்டுத்தனமானதாக காட்சியளிக்கும் வகையில் பல்வேறு அம்சங்கள் சேர்க்கப்பட்டிருக்கின்றன. தொடர்ந்து, ஆஃப் ரோடு பயணங்களை மிக சுலபமாக சமாளிக்கும் வகையில் 17 இன்ச் கொம்ட வீல் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது.

2021 டொயோட்டா ஹிலக்ஸ் ஏடி35 பிக்-அப் டிரக் வெளியீடு... அறிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்!!

இத்துடன், 35 இன்ச் அளவுள்ள கூட்ரிச் கோ2 டயர்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன. இந்த டயர்கள் கரடு, முரடான எந்த சாலையாக இருந்தாலும் சமாளிக்கும் திறன் கொண்டது. தொடர்ந்து, ஹிலக்ஸ் ஏடி35 பிக் அப் ட்ரக்கில் 2.8 லிட்டர் 4 சிலிண்டர் டீசல் எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது.

2021 டொயோட்டா ஹிலக்ஸ் ஏடி35 பிக்-அப் டிரக் வெளியீடு... அறிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்!!

இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 198 பிஎச்பி மற்றும் 500 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது. இதில் சிறப்பு வசதியாக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் சேர்க்கப்பட்டுள்ளது. இதுதவிர, ஆஃப் ரோட் சிஸ்டமும் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நான்கு வீல்கள் அல்லது இரு வீல்கள் என தேவைக்கேற்ப இயங்க செய்து கொள்ள முடியும்.

2021 டொயோட்டா ஹிலக்ஸ் ஏடி35 பிக்-அப் டிரக் வெளியீடு... அறிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்!!

இந்த வாகனத்தின் விலை மற்றும் இன்னும் பல்வேறு தகவல்களை நிறுவனம் வெளியிடவில்லை. இதுகுறித்த மற்றும் விற்பனைக்கான அறிமுகம் பற்றிய தகவல்கள் விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Most Read Articles
மேலும்... #டொயோட்டா #toyota
English summary
Toyota Revealed New 2021 Arctic Truck Variant Of The Hilux Truck. Read In Tamil.
Story first published: Saturday, February 6, 2021, 16:51 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X