உலகெங்கிலும் அமோக வரவேற்பில் சுஸுகி ஜிம்னி... அதே பாணியை கையில் எடுக்கும் டொயோட்டா!!

சுஸுகி ஜிம்னிக்கான டொயோட்டாவின் போட்டி மாடல் டைஹாட்சு லாகர் என்ற பெயரில் வருகிற 2021ஆம் ஆண்டின் இறுதியில் ஜப்பானில் அறிமுகமாகவுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. அவற்றை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

உலகெங்கிலும் அமோக வரவேற்பில் சுஸுகி ஜிம்னி... அதே பாணியை கையில் எடுக்கும் டொயோட்டா!!

உலகளவில் டொயோட்டா மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் லேண்ட் க்ரூஸர் 300 காரை அறிமுகப்படுத்தவுள்ளது. புதிய தொழிற்நுட்ப வசதிகளை பெற்றுவரும் லேண்ட் க்ரூஸர் 300-இன் புதிய தலைமுறையின் உலகளாவிய அறிமுகம் அடுத்த 2022ஆம் ஆண்டில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உலகெங்கிலும் அமோக வரவேற்பில் சுஸுகி ஜிம்னி... அதே பாணியை கையில் எடுக்கும் டொயோட்டா!!

இதற்கு மத்தியில் டொயோட்டா மற்றும் சுஸுகி நிறுவனங்களின் தாயகமான ஜப்பான் மட்டுமின்றி உலகளவில் மிகுந்த வரவேற்பை பெற்றுவரும் ஜிம்னிக்கு போட்டியாக புதிய ஆஃப்-ரோடு காம்பெக்ட் எஸ்யூவி வாகனத்தை இந்த 2021ஆம் ஆண்டிற்குள் ஜப்பானில் அறிமுகப்படுத்த டொயோட்டா நிறுவனம் தீவிரமாக பணியாற்றி வருவதாக தற்போது தகவல்கள் கிடைத்துள்ளன.

உலகெங்கிலும் அமோக வரவேற்பில் சுஸுகி ஜிம்னி... அதே பாணியை கையில் எடுக்கும் டொயோட்டா!!

சுஸுகி ஜிம்னிக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருவதால் இதன் தயாரிப்பு பணிகள் மாருதி நிறுவனத்தின் உதவியுடன் இந்தியாவிலும் சமீபத்தில் துவங்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. டொயோட்டாவின் துணை பிராண்டான டைஹாட்சுவில் வெளிவரும் இந்த புதிய ஆஃப்-ரோடு காம்பெக்ட் எஸ்யூவி வாகனம் டொயோட்டா ரைஸ் காரின் தோற்றத்தில் இருந்து கொண்டுவரப்படுகிறது.

உலகெங்கிலும் அமோக வரவேற்பில் சுஸுகி ஜிம்னி... அதே பாணியை கையில் எடுக்கும் டொயோட்டா!!

இதற்கிடையில் பெஸ்ட்கார்வெப் என்ற இணையத்தளம் மூலமாக நமக்கு கிடைத்துள்ள தகவல்களின்படி, இந்த ஆஃப்-ரோடு கார், டைஹாட்சு லாகர் என்ற பெயரில் அழைக்கப்படவுள்ளது. ஜிம்னியை போன்று இதன் தோற்றமும் முரட்டுத்தனமாக போதுமான அளவிற்கு சிறியதாக இருக்கும்.

உலகெங்கிலும் அமோக வரவேற்பில் சுஸுகி ஜிம்னி... அதே பாணியை கையில் எடுக்கும் டொயோட்டா!!

முன்பக்கத்தில் உயரமான பில்லர்களும், டயர்கள் நன்கு அகலமானதாகவும் இந்த ஆஃப்-ரோடு வாகனத்தில் வழங்கப்படும் என்பது உறுதி. டைஹாட்சுவின் டிஎன்ஜிஏ ப்ளாட்ஃபாரத்தில் கட்டமைக்கப்பட உள்ளதால் இதன் ட்ரைவிங் பண்பு சிறப்பானதாக விளங்கும்.

உலகெங்கிலும் அமோக வரவேற்பில் சுஸுகி ஜிம்னி... அதே பாணியை கையில் எடுக்கும் டொயோட்டா!!

இதற்கு ஏற்றாற்போல் ‘டைனாமிக் கண்ட்ரோல் 4-சக்கர ட்ரைவ்' என்ற பெயரில் 4-சக்கர ட்ரைவ் சிஸ்டம் இந்த காம்பெக்ட் எஸ்யூவி காரில் வழங்கப்படலாம். இயக்க ஆற்றலை வழங்குவதற்கு காருக்கு அடியில் டைஹாட்சு ராக்கியின் 1.0 லிட்டர் 3-சிலிண்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் என்ஜின் பொருத்தப்படலாம்.

உலகெங்கிலும் அமோக வரவேற்பில் சுஸுகி ஜிம்னி... அதே பாணியை கையில் எடுக்கும் டொயோட்டா!!

அதிகப்பட்சமாக 100 எச்பி மற்றும் 140 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்ட இந்த என்ஜின் உடன் 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் சிவிடி ஆட்டோமேட்டிக் என்ற ட்ரான்ஸ்மிஷன் தேர்வுகள் கொடுக்கப்படலாம் என கூறப்படுகிறது.

Most Read Articles
மேலும்... #டொயோட்டா #toyota
English summary
Toyota’s Jimny Rival Could Be The Daihatsu Lager; Likely Launch In End 2021
Story first published: Wednesday, February 10, 2021, 21:59 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X