நார்டன் பைக்குகள் இந்தியா வருவது உறுதி!! முதலில் வரும் 4 மோட்டார்சைக்கிள்கள் இவைதான்...

நார்டன் மோட்டார்சைக்கிள் பிராண்ட் இந்திய சந்தைக்கு வருவது உறுதியாகிவிட்டது. நான்கு நார்டன் மோட்டார்சைக்கிள்களுக்கு வர்த்தக முத்திரை பதிவு செய்யப்பட்டுள்ளன.

நார்டன் பைக்குகள் இந்தியா வருவது உறுதி!! முதலில் வரும் 4 மோட்டார்சைக்கிள்கள் இவைதான்...

ஓசூரில் தொழிற்சாலை அமைத்து செயல்பட்டுவரும் டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் நார்டன் பிராண்டை கையகப்படுத்தி ஒரு வருடம் நிறைவடைந்துவிட்டது.

நார்டன் பைக்குகள் இந்தியா வருவது உறுதி!! முதலில் வரும் 4 மோட்டார்சைக்கிள்கள் இவைதான்...

ஆனால் கொரோனா வைரஸ் பரவலின் காரணமாக தற்போது தான் நான்கு நார்டன் மோட்டார்சைக்கிள்கள் இந்திய சந்தைக்காக பதிவு செய்யப்பட்டுள்ளன. மோட்டார்சைக்கிள் உலகில் நார்டன் மோட்டார்சைக்கிள்கள் மிகவும் பணக்காரர்களால் மட்டுமே வாங்கப்பட்டு வந்தது.

நார்டன் பைக்குகள் இந்தியா வருவது உறுதி!! முதலில் வரும் 4 மோட்டார்சைக்கிள்கள் இவைதான்...

இதனால் தான் என்னவோ இந்த மோட்டார்சைக்கிள் நிறுவனம் நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்க நேர்ந்தது. ஒரு கட்டத்திற்கு மேல் பிராண்டை விற்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது. பழமையான மோட்டார்சைக்கிள் பிராண்ட் என்பதால் வாங்க பல நிறுவனங்கள் முன் வந்தன.

நார்டன் பைக்குகள் இந்தியா வருவது உறுதி!! முதலில் வரும் 4 மோட்டார்சைக்கிள்கள் இவைதான்...

இறுதியில் நமது இந்திய ஆட்டோமொபைல் நிறுவனமான டிவிஎஸ் மோட்டார் கம்பெனி 16 மில்லியன் க்ரேட் பிரட்டன் பவுண்ட் (கிட்டத்தட்ட ரூ.150.77 கோடி) தொகையில் ஏலத்தை முடித்து கொண்டுள்ளது. இந்த ஏலத்தொகையின் மூலமாக நார்டன் மோட்டார்சைக்கிள்களை தயாரிக்க புதிய தொழிற்சாலை மற்றும் தலைமையகம் நிறுவப்பட்டுள்ளன.

நார்டன் பைக்குகள் இந்தியா வருவது உறுதி!! முதலில் வரும் 4 மோட்டார்சைக்கிள்கள் இவைதான்...

பிராண்டை வாங்கியவுடன் தற்போதைய நிலைமையை உணர்ந்து தற்போதைக்கு நார்டன் மோட்டார்சைக்கிள்கள் தயாரிக்கப்படாது என டிவிஎஸ் நிறுவனம் தெரிவித்திருந்தது. ஆனால் தற்போது நான்கு நார்டன் மோட்டார்சைக்கிள்கள் வர்த்தக முத்திரை பதிவு செய்யப்பட்டுள்ளன.

நார்டன் பைக்குகள் இந்தியா வருவது உறுதி!! முதலில் வரும் 4 மோட்டார்சைக்கிள்கள் இவைதான்...

வெளிநாடுகளில் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டதற்கு பின்பே இந்தியாவில் நார்டன் மோட்டார்சைக்கிள்கள் களமிறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வர்த்தக முத்திரை தாக்கல் செய்யப்பட்ட நான்கு நார்டன் மோட்டார்சைக்கிள்கள் கமெண்டோ, அட்லாஸ், ஃபாஸ்ட்பேக் மற்றும் மேங்க்ஸ் என்பன ஆகும்.

நார்டன் பைக்குகள் இந்தியா வருவது உறுதி!! முதலில் வரும் 4 மோட்டார்சைக்கிள்கள் இவைதான்...

இந்திய சந்தைக்கு நார்டன் கமெண்டோ ஒன்றும் புதியது கிடையாது. சில வருடங்களுக்கு முன்பு விற்பனையில் இருந்தது. இதில் பொருத்தப்படுகின்ற 961சிசி, இணையான-இரட்டை என்ஜின் அதிகப்பட்சமாக 80 பிஎச்பி பவரை வெளிப்படுத்தக்கூடியது.

நார்டன் பைக்குகள் இந்தியா வருவது உறுதி!! முதலில் வரும் 4 மோட்டார்சைக்கிள்கள் இவைதான்...

நார்டன் அட்லாஸ், பழமையான ஸ்க்ரம்ப்ளர் பைக்குகளின் தோற்றத்தை கொண்டது. ட்யுல்-பர்பஸ் டயர்களுடன் ஆஃப்-ரோட்டிற்கும் ஏற்ற மோட்டார்சைக்கிளான இதில் பொருத்தப்படுகின்ற என்ஜின் அதிகப்பட்சமாக 84 பிஎச்பி மற்றும் 64 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தியதாக உள்ளது.

நார்டன் பைக்குகள் இந்தியா வருவது உறுதி!! முதலில் வரும் 4 மோட்டார்சைக்கிள்கள் இவைதான்...

நார்டன் ஃபாஸ்ட்பேக் இதுவரையில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது இல்லை. 1970களில் ஃபாஸ்ட்பேக், கமெண்டோ மாடலின் ஒரு வேரியண்ட்டாகவே இருந்தது. நார்டன் மேங்க்ஸ் மோட்டார்சைக்கிள்கள் 1946ல் இருந்து 1962 வரையில் வெளிநாடுகளில் விற்பனையில் இருந்தன.

Most Read Articles

மேலும்... #நார்டன் #norton
English summary
Norton Motorcycles is coming to India. A media report claims that TVS Motor Company is all set to launch Norton in the Indian market. This news comes more than a year after the TVS Motor Company bought the Norton brand in April 2020. The report also claims that trademarks have been filed in India for four Norton models.
Story first published: Thursday, May 13, 2021, 2:19 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X