"கார்களில் 6 ஏர் பேக்குகள் கொடுங்க" - பாதுகாப்பான பயணத்திற்காக உற்பத்தியாளர்களிடம் ஒன்றிய அமைச்சர் கோரிக்கை!

கார்களில் ஆறு ஏர் பேக்குகளை வழங்க வேண்டும் என ஒன்றிய அமைச்சர் கோரிக்கை விடுத்திருந்தார். இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம்.

வாகனங்களின் பாதுகாப்பு தரத்தை மேம்படுத்தும் முயற்சியில் இந்தியா களமிறங்கியிருக்கின்றது. இதனடிப்படையில் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது, தனி நபர் கார்களில் 6 ஏர் பேக்குகள் இருப்பது கட்டாயம் என அது அறிவித்துள்ளது.

சமீபத்தில் இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் சங்கத்துடன் (சியாம்) நடைபெற்ற சந்திப்பில், வாகன பொறியியல் செயல்பாட்டில் சிறப்பாக செயல்பட்டு வரும் நிறுவனங்களுக்கு சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி வாழ்த்து தெரிவித்தார்.

தொடர்ந்து, அனைத்து பிரிவுகளிலும் கிடைக்கும் வாகனங்களிலும் குறைந்தபட்சம் 6 ஏர்பேக்குகளை கட்டாயமாக வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை தனி நபர் பயன்பாட்டு வாகன உற்பத்தியாளர்களுக்கு அவர் கோரிக்கை விடுத்தர். பயணங்களின்போது பயணிகளின் பாதுகாப்பு உறுதி செய்ய வேண்டும் என்பதற்காக இந்த வேண்டுகோளை அவர் முன் வைத்தார்.

ஏர் குறைவாக இருப்பது விபத்துகளின்போது பயணிகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக அமைகிறது. தற்போது உயர்நிலை வேரியண்டில் விற்பனைக்குக் கிடைக்கும் கார்களில் மட்டுமே முன் மற்றும் பின் பக்க பயணிக்களுக்கான ஏர் பேக்குகள் வழங்கப்படுகின்றன.

ஆனால், ஆரம்ப நிலை வேரியண்டாக விற்பனைக்குக் கிடைக்கும் கார்களில் முன் பக்க பயணிகளுக்காக மட்டுமே ஏர் பேக்குகள் வழங்கப்படுகின்றன. இந்த நிலையை மாற்றும் நோக்கிலேயே அனைத்து பயணிகளுக்கும் அனைத்து தர வாகனங்களிலும் பாதுகாப்பு அம்சங்களை பலப்படுத்த வேண்டும் என அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

அரசின் அறிவுறுத்தலானது காரின் முன், பின் மற்றும் பக்கவாட்டு ஆகிய பகுதிகளில் ஏர் பேக்குகளை நிலை நிறுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் அமைந்துள்ளது. காருக்குள் பயணிப்பவர்கள் சிறு கீரல்களை கூட பெறக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு இத்தகைய அறிவுறுத்தலை வாகன உற்பத்தி நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

மிகக் குறிப்பாக தலை மற்றும் மார்பக பகுதிகளுக்கு அதிக பாதுகாப்பை ஆபத்தான நேரங்களில் கார்கள் வழங்க வேண்டும் என்பதே இதன் குறிக்கோளாகும். பெரும்பாலான விபத்து நிகழ்வுகளில் தலையில் பலத்த காயம் ஏற்படுவதும், மார்பக பகுதியில் கடும் பாதிப்புகளும் ஏற்படுகின்றன.

இதன் விளைவாக பலர் மிகவும் ஆபத்தான நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இதனை தவிர்த்து உயிர்களைப் பாதுகாக்க வேண்டும் என்பதே அமைச்சகத்தின் முக்கியமான நோக்கமாகும். இதுமட்டுமின்றி, கூடுதலாக வாகன உற்பத்தியாளர்களிடத்தில் நூறு சதவீதம் எதனால் மற்றும் வாயுக்களால் இயங்கும் வாகன உற்பத்தி மாற வேண்டும் என்ற கோரிக்கையும் முன் வைக்கப்பட்டுள்ளது.

கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைத்து, நாட்டுக்கு வருவாய் ஈட்டும் நோக்கில் இந்த கோரிக்கை முன் வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வாகன உற்பத்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அமைச்சர் நிதின் கட்கரி, ஃப்ளெக்ஸ்-எரிபொருளால் இயங்கும் வாகனங்களின் (FFVs) அவசியத்தை விளக்கினார். மேலும், ஒரு வருட காலத்திற்குள் இந்திய வாகன சந்தையில் 100% எத்தனால் மற்றும் வாயுவால் இங்கும் வாகனங்களைக் களமிறக்க வேண்டும் என்றும் கூறினார்.

மேலும், பசுமை ஹைட்ரஜனால் இயங்கும் வாகனங்களைப் பயன்பாட்டிற்குக் கொண்டு வர வேண்டும் என்பதற்கான வலியுறுத்தலையும் அமைச்சர் முன் வைத்துள்ளார். தொடர்ந்து, பிஎஸ்-6 பகுதி 2, சிஏஎஃப் பகுதி 2 மற்றும் ஓபிடி ஆகிய புதிய விதிமுறைகள் பற்றியும் இக்கூட்டத்தில் கலந்தாலோசிக்கப்பட்டது.

இதுமட்டுமின்றி, கடந்த சில தினங்களுக்கு முன்பு டயர் குறித்த ஓர் புதிய அறிவிப்பையும் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் வெளியிட்டிருந்தது. விபத்தைத் தவிர்க்கும் விதமாக ரோலிங் ரெசிஸ்டன்ஸ், ஈரமான சாலையிலும் அதிக கிரிப் மற்றும் சத்தம் இல்லாமல் இயங்கும் வசதி உள்ளிட்டவற்றை புதிய டயர்குறித்த விதியில் முக்கிய அம்சமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Most Read Articles
English summary
Union minister nithin gadkari proposes indian automakers to 6 airbags standard in cars
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X