6 மற்றும் 7 இருக்கை தேர்வுகளுடன் 2022 மாருதி எக்ஸ்.எல்.6 எம்பிவி!! அடுத்த ஆண்டில் அறிமுகம்!

2018இல் மாருதி சுஸுகி நிறுவனம் இரண்டாம் தலைமுறை எர்டிகா எம்பிவி காரை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியது. வெளிப்புற & உட்புற தோற்றத்தில் மட்டுமில்லாமல், காரின் தொழிற்நுட்ப அம்சங்களிலும் குறிப்பிடத்தக்க அளவில் அப்டேட்கள் கொண்டுவரப்பட்டிருந்தன.

6 மற்றும் 7 இருக்கை தேர்வுகளுடன் 2022 மாருதி எக்ஸ்.எல்.6 எம்பிவி!! அடுத்த ஆண்டில் அறிமுகம்!

இந்த அப்டேட்கள் மாருதி நிறுவனத்திற்கு பெரிய அளவில் சாதகமாக அமைந்துவிட்டன என்றுதான் சொல்ல வேண்டும். ஏனெனில் இந்தியாவில் தற்சமயம் அதிகளவில் விற்பனையாகும் எம்பிவி கார்களுள் எர்டிகா முதன்மையானதாக விளங்குகிறது. அளவில் பெரியதாக இருப்பினும், மலிவான விலையில் விற்பனை செய்யப்படுவது தான் எர்டிகாவின் ஹைலைட்டாக விளங்குகிறது.

6 மற்றும் 7 இருக்கை தேர்வுகளுடன் 2022 மாருதி எக்ஸ்.எல்.6 எம்பிவி!! அடுத்த ஆண்டில் அறிமுகம்!

இருப்பினும் பிரீமியம் தர வாடிக்கையாளர்களை கவரும் பொருட்டு, எக்ஸ்.எல்6 காரினை விற்பனைக்கு மாருதி சுஸுகி கொண்டுவந்தது. எர்டிகாவை காட்டிலும் சற்று கூடுதல் விலையில் மாருதி சுஸுகியின் நெக்ஸா டீலர்ஷிப்கள் மூலமாக விற்பனை செய்யப்படும் எக்ஸ்.எல்6 காரில் கேப்டன் இருக்கைகள் மத்திய இருக்கை வரிசையில் வழங்கப்படுகின்றன.

6 மற்றும் 7 இருக்கை தேர்வுகளுடன் 2022 மாருதி எக்ஸ்.எல்.6 எம்பிவி!! அடுத்த ஆண்டில் அறிமுகம்!

எர்டிகா உடன் ஒப்பிடும்போது எக்ஸ்.எல்6 சற்று வித்தியாசமான முன்பக்கத்தை கொண்டுள்ளது. ஆனால் உட்புற கேபின் மற்றும் மற்ற இயந்திர பாகங்களில் எந்த வித்தியாசமும் இல்லை. இருப்பினும் எர்டிகா அளவிற்கு வாடிக்கையாளர்களின் கவனத்தை எக்ஸ்.எல்6 பெறாவிட்டாலும், விற்பனையில் ஓரளவிற்கு நல்ல விதமாகவே இது செயல்படுகிறது. எக்ஸ்எல்6 சந்தையில் முதன்முதலாக 2019இல் அறிமுகப்படுத்தப்பட்டது.

6 மற்றும் 7 இருக்கை தேர்வுகளுடன் 2022 மாருதி எக்ஸ்.எல்.6 எம்பிவி!! அடுத்த ஆண்டில் அறிமுகம்!

அடுத்த 2022ஆம் ஆண்டில் அதிகளவில் அப்டேட்களுடன் புதிய எக்ஸ்.எல்6 எம்பிவி காரை அறிமுகப்படுத்த மாருதி சுஸுகி திட்டமிட்டுள்ளது. இதனுடன் அடுத்த ஆண்டில் பலேனோ பிரீமியம் ஹேட்ச்பேக் காரின் ஃபேஸ்லிஃப்ட் வெர்சன், அடுத்த தலைமுறை விட்டாரா பிரெஸ்ஸா மற்றும் ஆல்டோ உள்ளிட்டவையும் இந்த இந்திய- ஜப்பானிய கூட்டு ஆட்டோமொபைல் நிறுவனம் அறிமுகப்படுத்தவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

6 மற்றும் 7 இருக்கை தேர்வுகளுடன் 2022 மாருதி எக்ஸ்.எல்.6 எம்பிவி!! அடுத்த ஆண்டில் அறிமுகம்!

2022 மாருதி சுஸுகி எக்ஸ்.எல்6 மாடல் 6 இருக்கை மற்றும் 7 இருக்கை என இரு விதமான இருக்கை அமைப்பு தேர்வுகளிலும் விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம் வெளிப்புற தோற்றத்திலும் பெரிய அளவில் வித்தியாசங்களை காணலாம் என கூறப்படுகிறது. இதுவரையில் நமக்கு கிடைத்துள்ள ஸ்பை படங்களும் இதைதான் வெளிக்காட்டியுள்ளன.

6 மற்றும் 7 இருக்கை தேர்வுகளுடன் 2022 மாருதி எக்ஸ்.எல்.6 எம்பிவி!! அடுத்த ஆண்டில் அறிமுகம்!

மாருதியின் எடை குறைவான ஹார்டெக்ட் ப்ளாட்ஃபாரத்தின் அடிப்படையில் உருவாக்கப்படும் புதிய எக்ஸ்.எல்6 காரில் சில புதிய வசதிகளையும் தயாரிப்பு நிறுவனம் அறிமுகப்படுத்தலாம். இதன்படி, காரின் முன்பக்க க்ரில், ஹெட்லேம்ப்கள் மற்றும் டெயில்லேம்ப்களில் சிறிய அளவிலான மாற்றத்தினை எதிர்பார்க்கிறோம். டாப் வேரியண்ட்களில் புதிய டிசைனில் அலாய் சக்கரங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

6 மற்றும் 7 இருக்கை தேர்வுகளுடன் 2022 மாருதி எக்ஸ்.எல்.6 எம்பிவி!! அடுத்த ஆண்டில் அறிமுகம்!

சமீபத்தில் முழு மறைப்புகளுடன் சோதனை ஓட்டத்தில் உட்படுத்தப்பட்டிருந்த எக்ஸ்.எல்6 காரில் உலகளாவிய எக்ஸ்.எல்7 காரில் வழங்கப்படுவதை போன்றதான அலாய் சக்கரங்கள் காட்சி தந்திருந்தது. டேஸ்போர்டில் ஆப்பிள் கார்ப்ளே & ஆண்ட்ராய்டு ஆட்டோ உடன் இணைக்கக்கூடிய அதிநவீன ஸ்மார்ட்ப்ளே ஸ்டூடியோ தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் வழங்கப்படலாம்.

6 மற்றும் 7 இருக்கை தேர்வுகளுடன் 2022 மாருதி எக்ஸ்.எல்.6 எம்பிவி!! அடுத்த ஆண்டில் அறிமுகம்!

இதனுடன் இன்-கார் இணைப்பு வசதிகளையும் புதிய எக்ஸ்.எல்6 மாடலில் எதிர்பார்க்கிறோம். ஆனால் ஏற்கனவே கூறியதுபோல், இயக்க ஆற்றலை வழங்குவதற்கு வழக்கமான 1.5 லிட்டர் 4-சிலிண்டர் கே15பி மைல்ட்-ஹைப்ரீட் பெட்ரோல் என்ஜினே தொடரப்படலாம். அதிகப்பட்சமாக 105 பிஎஸ் மற்றும் 138 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் தேர்வு நிலையானதாக வழங்கப்படுகிறது.

6 மற்றும் 7 இருக்கை தேர்வுகளுடன் 2022 மாருதி எக்ஸ்.எல்.6 எம்பிவி!! அடுத்த ஆண்டில் அறிமுகம்!

அதேநேரம் கூடுதல் தேர்வாக 4-ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் கொடுக்கப்படுகிறது. ஆனால் உண்மையில், கடந்த சில மாதங்களாக குறைக்கடத்திகளின் பற்றாக்குறையால் மாருதி சுஸுகி பெரிய அளவில் தடுமாற்றத்தை கண்டுள்ளது. கடந்த செப்டம்பரில் இந்தியாவில் உள்ள தனது தொழிற்சாலைகளில் வழக்கமான பணிகளில் சுமார் 60% குறைத்திருந்த மாருதி சுஸுகி, கடந்த அக்டோபரில் 40% குறைத்துள்ளதாக அறிவித்திருந்தது.

6 மற்றும் 7 இருக்கை தேர்வுகளுடன் 2022 மாருதி எக்ஸ்.எல்.6 எம்பிவி!! அடுத்த ஆண்டில் அறிமுகம்!

இதன் விளைவாக கடந்த இரு மாதங்களாக மாருதி கார்களின் விற்பனை குறிப்பிடத்தக்க அளவில் குறைந்திருந்தது. ஆனால் தற்போது இந்த நிலை மெல்ல மெல்ல சீரடைந்து வருகிறது என்றுதான் சொல்ல வேண்டும். இருப்பினும் கடந்த சில மாதங்களாக தயாரிப்பு பணிகளில் ஏற்பட்ட தொய்விற்கு இன்னும் சில மாதங்களுக்கு மாருதி சுஸுகி கார்களின் விற்பனை மந்தமாகவே இருக்கும்.

6 மற்றும் 7 இருக்கை தேர்வுகளுடன் 2022 மாருதி எக்ஸ்.எல்.6 எம்பிவி!! அடுத்த ஆண்டில் அறிமுகம்!

தயாரிப்பு பணிகளை குறைத்ததால், குறிப்பிட்ட நேரத்தில் கார்களை வாடிக்கையாளர்களுக்கு டெலிவிரி செய்ய முடியாமல், முன்பதிவு செய்து காத்திருக்க வேண்டிய கால அளவுகளை மாருதி அதிகரித்தது. இவை தற்போது மெல்ல மெல்ல குறைக்கப்பட்டு வருகின்றன. கொரோனா வைரஸ் பரவலினால் பெரும்பான்மையான நாடுகளில் கொண்டுவரப்பட்ட ஊரடங்குகளே குறைக்கடத்திகளின் பற்றாக்குறைக்கு காரணமாக பார்க்கப்படுகிறது.

Most Read Articles
English summary
2022 Maruti XL6 is expected to go on sale with cosmetic changes and additions to the features list.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X