விரைவில் விற்பனைக்கு வரப்போகுது... பெரிய குடும்பங்களுக்கு ஏற்ற 7 சீட்டர் கார்கள்... எல்லாமே சூப்பரா இருக்கே!

இந்தியாவில் விரைவில் விற்பனைக்கு வரவுள்ள 7 சீட்டர் எஸ்யூவி மற்றும் எம்பிவி ரக கார்கள் குறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

விரைவில் விற்பனைக்கு வரப்போகுது... பெரிய குடும்பங்களுக்கு ஏற்ற 7 சீட்டர் கார்கள்... எல்லாமே சூப்பரா இருக்கே!

இந்திய சந்தையில் தற்போது 7 சீட்டர் கார்களுக்கான டிமாண்ட் அதிகமாகி கொண்டே வருகிறது. எனவே வரும் மாதங்களில் நிறைய 7 சீட்டர் கார்கள் விற்பனைக்கு அறிமுகமாகவுள்ளன. அந்த கார்கள் பற்றிய தகவல்களை இந்த செய்தியில் தொகுத்து வழங்கியுள்ளோம். இதில், எஸ்யூவி மற்றும் எம்பிவி ரக கார்கள் அடங்கும். இந்த கார்கள் அடுத்த ஆண்டு விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விரைவில் விற்பனைக்கு வரப்போகுது... பெரிய குடும்பங்களுக்கு ஏற்ற 7 சீட்டர் கார்கள்... எல்லாமே சூப்பரா இருக்கே!

கியா கேரன்ஸ் (Kia Carens)

மாருதி சுஸுகி எர்டிகா, மாருதி சுஸுகி எக்ஸ்எல்6 மற்றும் மஹிந்திரா மராஸ்ஸோ உள்ளிட்ட கார்களுடன் போட்டியிடும் வகையில் புத்தம் புதிய எம்பிவி கார் ஒன்றை விற்பனைக்கு அறிமுகம் செய்தற்கு கியா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த புதிய எம்பிவி கார் கியா கேரன்ஸ் என்ற பெயரில் அழைக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

விரைவில் விற்பனைக்கு வரப்போகுது... பெரிய குடும்பங்களுக்கு ஏற்ற 7 சீட்டர் கார்கள்... எல்லாமே சூப்பரா இருக்கே!

2022ம் ஆண்டின் தொடக்கத்தில் கியா கேரன்ஸ் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய சாலைகளில் சோதனை செய்யப்படும்போது ஏற்கனவே கேமராவின் கண்களில் கியா கேரன்ஸ் கார் சிக்கியுள்ளது. கார்னிவல் சொகுசு எம்பிவியை தொடர்ந்து, இந்தியாவில் கியா நிறுவனம் களமிறக்கவுள்ள 2வது எம்பிவி கார் இதுவாகும்.

விரைவில் விற்பனைக்கு வரப்போகுது... பெரிய குடும்பங்களுக்கு ஏற்ற 7 சீட்டர் கார்கள்... எல்லாமே சூப்பரா இருக்கே!

கியா செல்டோஸ் காரில் பயன்படுத்தப்பட்டுள்ள அதே பிளாட்பார்ம் அடிப்படையில் கேரன்ஸ் கார் கட்டமைக்கப்படவுள்ளது. ஆனால் 3வது வரிசை இருக்கைகளுக்காக ஒரு சில மாற்றங்கள் செய்யப்படவுள்ளன. இந்த காரில், 1.5 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டர்போ டீசல் ஆகிய இன்ஜின் தேர்வுகளுடன், மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படலாம்.

விரைவில் விற்பனைக்கு வரப்போகுது... பெரிய குடும்பங்களுக்கு ஏற்ற 7 சீட்டர் கார்கள்... எல்லாமே சூப்பரா இருக்கே!

ஹூண்டாய் ஸ்டார்கஸார் (Hyundai Stargazer)

ஹூண்டாய் நிறுவனமும் இந்திய சந்தையில் புத்தம் புதிய எம்பிவி கார் ஒன்றை விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. கியா கேரன்ஸ் காரின் அதே பிளாட்பார்ம் இதிலும் பயன்படுத்தப்படலாம். வெளிநாட்டு சாலைகளில் இந்த கார் ஒரு சில முறை கேமரா கண்களில் சிக்கியுள்ளது. ஹூண்டாய் ஸ்டார்கஸார் என்ற பெயரில் இந்த கார் அழைக்கப்படலாம்.

விரைவில் விற்பனைக்கு வரப்போகுது... பெரிய குடும்பங்களுக்கு ஏற்ற 7 சீட்டர் கார்கள்... எல்லாமே சூப்பரா இருக்கே!

கியா கேரன்ஸ் காரை போலவே, ஹூண்டாய் ஸ்டார்கஸார் காரிலும், 1.5 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டர்போ டீசல் ஆகிய இன்ஜின் தேர்வுகள் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காரிலும் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

விரைவில் விற்பனைக்கு வரப்போகுது... பெரிய குடும்பங்களுக்கு ஏற்ற 7 சீட்டர் கார்கள்... எல்லாமே சூப்பரா இருக்கே!

ஜீப் மெரிடியன் (Jeep Meridian)

ஜீப் நிறுவனம் காம்பஸ் காரின் அடிப்படையில் கமாண்டர் என்ற 7 சீட்டர் எஸ்யூவி காரை நடப்பாண்டு ஆகஸ்ட் மாதம் வெளியிட்டது. இந்த எஸ்யூவி கார், 2022ம் ஆண்டின் மத்தியில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் மெரிடியன் என்ற பெயரில் இந்த கார் அழைக்கப்படவுள்ளது.

விரைவில் விற்பனைக்கு வரப்போகுது... பெரிய குடும்பங்களுக்கு ஏற்ற 7 சீட்டர் கார்கள்... எல்லாமே சூப்பரா இருக்கே!

இந்திய சந்தையில் ஜீப் மெரிடியன் கார், 2.0 லிட்டர் டர்போ டீசல் இன்ஜின் தேர்வுடன் விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 200 பிஎஸ் பவரை உருவாக்கும். இதனுடன் மைல்டு ஹைப்ரிட் தொழில்நுட்பமும் வழங்கப்படலாம். இந்த காரில் டர்போ பெட்ரோல் இன்ஜின் தேர்வு வழங்கப்படுவதற்கான வாய்ப்புகளும் உள்ளன.

விரைவில் விற்பனைக்கு வரப்போகுது... பெரிய குடும்பங்களுக்கு ஏற்ற 7 சீட்டர் கார்கள்... எல்லாமே சூப்பரா இருக்கே!

புதிய தலைமுறை மஹிந்திரா ஸ்கார்பியோ (New-gen Mahindra Scorpio)

ஸ்கார்பியோ எஸ்யூவி காரின் புதிய தலைமுறை மாடலை உருவாக்கும் பணிகளை மஹிந்திரா நிறுவனம் நீண்ட காலமாகவே மேற்கொண்டு வருகிறது. இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள இந்த எஸ்யூவி கார், 2022ம் ஆண்டின் முதல் பாதியில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.

விரைவில் விற்பனைக்கு வரப்போகுது... பெரிய குடும்பங்களுக்கு ஏற்ற 7 சீட்டர் கார்கள்... எல்லாமே சூப்பரா இருக்கே!

தற்போதைய மாடலை காட்டிலும், புதிய தலைமுறை மாடலை பெரியதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் அதிக பிரீமியம் ஆகவும் இருக்கும். இந்த காரில், 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின், 2.2 லிட்டர் டர்போ டீசல் இன்ஜின் வழங்கப்படலாம். கியர் பாக்ஸை பொறுத்தவரை, 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் தேர்வுகள் கொடுக்கப்படலாம்.

விரைவில் விற்பனைக்கு வரப்போகுது... பெரிய குடும்பங்களுக்கு ஏற்ற 7 சீட்டர் கார்கள்... எல்லாமே சூப்பரா இருக்கே!

டொயோட்டா ரூமியான் (Toyota Rumion)

டொயோட்டா நிறுவனம் சமீபத்தில் ரூமியான் காரை தென் ஆப்ரிக்காவில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. இது மாருதி சுஸுகி எர்டிகா காரின் ரீபேட்ஜ் செய்யப்பட்ட வெர்ஷன் ஆகும். இந்திய சந்தையிலும் இந்த கார் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அனேகமாக 2022ம் ஆண்டின் தொடக்கத்தில் இது நடப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.

விரைவில் விற்பனைக்கு வரப்போகுது... பெரிய குடும்பங்களுக்கு ஏற்ற 7 சீட்டர் கார்கள்... எல்லாமே சூப்பரா இருக்கே!

மாருதி சுஸுகி நிறுவனத்தில் இருந்து டொயோட்டா நிறுவனம் ரீபேட்ஜ் செய்யும் மற்ற கார்களை போலவே, ருமியான் காரும் கிட்டத்தட்ட எர்டிகாவை போன்றே இருக்கிறது. ஆனால் புதிய முன் பக்க க்ரில் அமைப்பும், வேறு லோகோக்களும் வழங்கப்பட்டுள்ளன. டொயோட்டா ரூமியான் காரில், 1.5 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

விரைவில் விற்பனைக்கு வரப்போகுது... பெரிய குடும்பங்களுக்கு ஏற்ற 7 சீட்டர் கார்கள்... எல்லாமே சூப்பரா இருக்கே!

இந்த இன்ஜின் அதிகபட்சமாக 105 பிஎஸ் பவரையும், 138 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. இந்த இன்ஜினுடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் மற்றும் 4 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. இந்திய சந்தையில் டொயோட்டா ரூமியான் காரின் சிஎன்ஜி மாடலும் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles

English summary
Upcoming 7 seater suv s and mpv s
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X