மாஸ் காட்ட போகுது... சூப்பரான விலையில் வரும் டாடாவின் புதிய எலெக்ட்ரிக் கார்... இப்பவே வாங்கணும் போல இருக்கே!

டாடா நிறுவனம் சூப்பரான விலையில் புதிய எலெக்ட்ரிக் காரை அறிமுகம் செய்யவுள்ளது. அத்துடன் இன்னும் பல்வேறு நிறுவனங்களின் எலெக்ட்ரிக் கார்களும் விற்பனைக்கு வரவுள்ளன.

சூப்பரான விலையில் புதிய எலெக்ட்ரிக் காரை அறிமுகம் செய்கிறது டாடா... இது மட்டுமா? இன்னும் எக்கச்சக்கமா இருக்கு!

இந்தியாவில் எலெக்ட்ரிக் கார் சந்தை வேகமாக வளர்ந்து வருகிறது. தற்போதைய நிலையில் டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி, டாடா டிகோர் எலெக்ட்ரிக், எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி மற்றும் ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் எஸ்யூவி போன்ற எலெக்ட்ரிக் கார்கள் இந்திய சந்தையில் விற்பனைக்கு கிடைக்கின்றன.

சூப்பரான விலையில் புதிய எலெக்ட்ரிக் காரை அறிமுகம் செய்கிறது டாடா... இது மட்டுமா? இன்னும் எக்கச்சக்கமா இருக்கு!

மேலும் சொகுசு எலெக்ட்ரிக் கார்களும் இங்கு தொடர்ச்சியாக அறிமுகமாகி வருகின்றன. ஆனால் மாருதி சுஸுகி, டாடா, மஹிந்திரா, எம்ஜி போன்ற நிறுவனங்களின் எலெக்ட்ரிக் கார்கள்தான் பெரும்பாலானோரால் வாங்க கூடிய விலையில் கிடைக்கும். எனவே மேற்கண்ட 4 நிறுவனங்களும் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ள புதிய எலெக்ட்ரிக் கார்கள் குறித்த தகவல்களை இந்த செய்தியில் வழங்கியுள்ளோம்.

சூப்பரான விலையில் புதிய எலெக்ட்ரிக் காரை அறிமுகம் செய்கிறது டாடா... இது மட்டுமா? இன்னும் எக்கச்சக்கமா இருக்கு!

மாருதி சுஸுகி வேகன்ஆர் எலெக்ட்ரிக் (Maruti Suzuki WagonR EV)

மாருதி சுஸுகி நிறுவனம் தற்போதைய நிலையில் சிஎன்ஜி மற்றும் ஹைப்ரிட் தொழில்நுட்பத்தை மேம்படுத்தும் பணிகளில் அதிக ஆர்வம் காட்டி வருகிறது. இதன் மூலம் எரிபொருள் நுகர்வையும், மாசு உமிழ்வையும் குறைப்பதற்கு மாருதி சுஸுகி நிறுவனம் திட்டமிட்டுள்ளது. எனினும் எலெக்ட்ரிக் கார் சந்தையிலும் மாருதி சுஸுகி நுழையவுள்ளது.

சூப்பரான விலையில் புதிய எலெக்ட்ரிக் காரை அறிமுகம் செய்கிறது டாடா... இது மட்டுமா? இன்னும் எக்கச்சக்கமா இருக்கு!

'சரியான நேரத்தில் எலெக்ட்ரிக் கார் சந்தையில் நுழைவோம்' என்பதை மாருதி சுஸுகி நிறுவனம் ஏற்கனவே உறுதி செய்துள்ளது. மாருதி சுஸுகி நிறுவனம் வேகன்ஆர் காரின் அடிப்படையில் எலெக்ட்ரிக் கார் ஒன்றை பலமுறை இந்திய சாலைகளில் சோதனை செய்துள்ளது. வேகன்ஆர் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷன்தான், மாருதி சுஸுகியின் முதல் எலெக்ட்ரிக் காராக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சூப்பரான விலையில் புதிய எலெக்ட்ரிக் காரை அறிமுகம் செய்கிறது டாடா... இது மட்டுமா? இன்னும் எக்கச்சக்கமா இருக்கு!

ஆனால் வேகன்ஆர் எலெக்ட்ரிக் காரின் அறிமுகம் குறித்த அதிகாரப்பூர்வமான தகவல்கள் எதுவும் தற்போதைக்கு இல்லை. இருந்தாலும் அடுத்த 2 ஆண்டுகளுக்கு உள்ளாக வேகன்ஆர் எலெக்ட்ரிக் கார் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏசி மற்றும் டிசி ஃபாஸ்ட் சார்ஜிங் என இரண்டையும் மாருதி சுஸுகி வேகன்ஆர் எலெக்ட்ரிக் கார் சப்போர்ட் செய்யும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

சூப்பரான விலையில் புதிய எலெக்ட்ரிக் காரை அறிமுகம் செய்கிறது டாடா... இது மட்டுமா? இன்னும் எக்கச்சக்கமா இருக்கு!

டாடா அல்ட்ராஸ் எலெக்ட்ரிக் கார் (Tata Altroz EV)

கடந்த 2020ம் ஆண்டு நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போவில் டாடா அல்ட்ராஸ் எலெக்ட்ரிக் கார் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. அனேகமாக அடுத்த ஆண்டில் ஏதேனும் ஒரு சமயத்தில் டாடா அல்ட்ராஸ் எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த எலெக்ட்ரிக் பிரீமியம் ஹேட்ச்பேக் ரக காரில் டாடா நிறுவனத்தின் ஜிப்ட்ரான் எலெக்ட்ரிக் பவர்ட்ரெயின் பயன்படுத்தப்படும்.

சூப்பரான விலையில் புதிய எலெக்ட்ரிக் காரை அறிமுகம் செய்கிறது டாடா... இது மட்டுமா? இன்னும் எக்கச்சக்கமா இருக்கு!

ஏற்கனவே டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி மற்றும் புதிய டாடா டிகோர் எலெக்ட்ரிக் ஆகிய கார்களில் ஜிப்ட்ரான் எலெக்ட்ரிக் பவர்ட்ரெயின் இடம்பெற்றுள்ளது. எனினும் பேட்டரி அளவு மற்றும் பவர் அவுட்புட் மாறுபடுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த காரின் பேட்டரியை ஒரு முறை முழுமையாக நிரப்பினால் 250-300 கிலோ மீட்டர்கள் பயணிக்க முடியும் என கூறப்படுகிறது.

சூப்பரான விலையில் புதிய எலெக்ட்ரிக் காரை அறிமுகம் செய்கிறது டாடா... இது மட்டுமா? இன்னும் எக்கச்சக்கமா இருக்கு!

டிசி ஃபாஸ்ட் சார்ஜர் பயன்படுத்தினால், வெறும் 60 நிமிடங்களில், பூஜ்ஜியத்தில் இருந்து 80 சதவீதம் வரை பேட்டரியை சார்ஜ் செய்து விட முடியும் என தெரிகிறது. ஆனால் சாதாரண சார்ஜரை பயன்படுத்தினால், இதற்கு சுமார் 8 மணி நேரம் வரை ஆகும் என கூறப்படுகிறது. டாடா அல்ட்ராஸ் எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப விலை 10 லட்ச ரூபாய்க்கும் குறைவாகவே இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

சூப்பரான விலையில் புதிய எலெக்ட்ரிக் காரை அறிமுகம் செய்கிறது டாடா... இது மட்டுமா? இன்னும் எக்கச்சக்கமா இருக்கு!

இந்த விலைக்கு வந்தால், இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் எலெக்ட்ரிக் கார் என்ற மகுடத்தை டாடா அல்ட்ராஸ் எலெக்ட்ரிக் கார் சூடுவதற்கான வாய்ப்புகள் மிகவும் அதிகம். தற்போதைய நிலையில் இந்த மகுடம் டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் காரிடம் இருக்கிறது. அதனை டாடா அல்ட்ராஸ் எலெக்ட்ரிக் கார் தட்டி பறிக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை.

சூப்பரான விலையில் புதிய எலெக்ட்ரிக் காரை அறிமுகம் செய்கிறது டாடா... இது மட்டுமா? இன்னும் எக்கச்சக்கமா இருக்கு!

மஹிந்திரா எக்ஸ்யூவி300 எலெக்ட்ரிக் (Mahindra eXUV300)

டாடா நிறுவனம் ஏற்கனவே நெக்ஸான் ஐசி இன்ஜின் காரை இந்திய சந்தையில் விற்பனை செய்து வருகிறது. இதன் எலெக்ட்ரிக் வெர்ஷன்தான் தற்போது இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் எலெக்ட்ரிக் கார். இதே பாணியில்தான் ஏற்கனவே விற்பனையில் இருந்து வரும் ஐசி இன்ஜின் உடன் கூடிய அல்ட்ராஸ் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது.

சூப்பரான விலையில் புதிய எலெக்ட்ரிக் காரை அறிமுகம் செய்கிறது டாடா... இது மட்டுமா? இன்னும் எக்கச்சக்கமா இருக்கு!

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் இதே பாணியில் வெளிவரவுள்ள மஹிந்திரா நிறுவனத்தின் கார்தான் எக்ஸ்யூவி300 எலெக்ட்ரிக். இந்தியாவின் சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி செக்மெண்ட்டில் மிகவும் பிரபலமான கார்களில் ஒன்றாக எக்ஸ்யூவி300 திகழ்கிறது. இந்த ஐசி இன்ஜின் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷன்தான் எக்ஸ்யூவி300 எலெக்ட்ரிக் கார்.

சூப்பரான விலையில் புதிய எலெக்ட்ரிக் காரை அறிமுகம் செய்கிறது டாடா... இது மட்டுமா? இன்னும் எக்கச்சக்கமா இருக்கு!

ஏற்கனவே சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி செக்மெண்ட்டில், டாடா நெக்ஸான் மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி300 ஆகிய இரண்டு ஐசி இன்ஜின் கார்களும் போட்டியிட்டு வருகின்றன. இந்த 2 கார்களின் எலெக்ட்ரிக் வெர்ஷன்களுக்கும் எதிர்காலத்தில் போட்டி ஏற்படவுள்ளது. அனேகமாக மஹிந்திரா எக்ஸ்யூவி300 எலெக்ட்ரிக் கார் வரும் 2023ம் ஆண்டு இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம்.

சூப்பரான விலையில் புதிய எலெக்ட்ரிக் காரை அறிமுகம் செய்கிறது டாடா... இது மட்டுமா? இன்னும் எக்கச்சக்கமா இருக்கு!

மஹிந்திரா நிறுவனம் தற்போது புதிய கார்களை அறிமுகம் செய்வதில் பரபரப்பாக இயங்கி வருகிறது. ஏற்கனவே புதிய தலைமுறை தார், எக்ஸ்யூவி700 உள்ளிட்ட கார்கள் விற்பனைக்கு வந்து வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. அடுத்து புதிய தலைமுறை ஸ்கார்பியோ உள்ளிட்ட கார்கள் அறிமுகத்திற்கு தயாராக உள்ளன.

சூப்பரான விலையில் புதிய எலெக்ட்ரிக் காரை அறிமுகம் செய்கிறது டாடா... இது மட்டுமா? இன்னும் எக்கச்சக்கமா இருக்கு!

இந்த பரபரப்பு அடங்கியவுடன், எக்ஸ்யூவி300 காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனை மஹிந்திரா விற்பனைக்கு கொண்டு வரலாம். ஸ்டாண்டர்டு மற்றும் லாங் ரேஞ்ச் என மொத்தம் 2 வேரியண்ட்களில் மஹிந்திரா எக்ஸ்யூவி300 எலெக்ட்ரிக் கார் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில், ஸ்டாண்டர்டு மாடலின் பேட்டரியை ஒரு முறை சார்ஜ் செய்தால் 200 கிலோ மீட்டர்கள் பயணிக்க முடியும் என தெரிகிறது.

சூப்பரான விலையில் புதிய எலெக்ட்ரிக் காரை அறிமுகம் செய்கிறது டாடா... இது மட்டுமா? இன்னும் எக்கச்சக்கமா இருக்கு!

அதே நேரத்தில் லாங் ரேஞ்ச் மாடலின் பேட்டரியை ஒரு முறை சார்ஜ் செய்தால் 375 கிலோ மீட்டர்கள் பயணம் செய்ய முடியும் என கூறப்படுகிறது. மஹிந்திரா எக்ஸ்யூவி300 எலெக்ட்ரிக் காரின் கான்செப்ட் மாடலை, 2020 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தியது. இதன் தயாரிப்பு நிலை வெர்ஷனின் டிசைன், கிட்டத்தட்ட கான்செப்ட் மாடலை போலவே இருக்கும் என கூறப்படுகிறது.

சூப்பரான விலையில் புதிய எலெக்ட்ரிக் காரை அறிமுகம் செய்கிறது டாடா... இது மட்டுமா? இன்னும் எக்கச்சக்கமா இருக்கு!

எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி (MG ZS EV)

எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி ஏற்கனவே விற்பனையில் இருந்து வரும் மாடல்தானே? என நீங்கள் நினைப்பது புரிகிறது. தற்போது விற்பனையில் உள்ள எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் காரின் விலை சற்று அதிகமாக இருக்கிறது. எனவே டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி அளவிற்கு விற்பனை எண்ணிக்கையை பெற முடியவில்லை.

சூப்பரான விலையில் புதிய எலெக்ட்ரிக் காரை அறிமுகம் செய்கிறது டாடா... இது மட்டுமா? இன்னும் எக்கச்சக்கமா இருக்கு!

எனவே இஸட்எஸ் எலெக்ட்ரிக் காரில் புதிய மாடல் ஒன்றை விற்பனைக்கு கொண்டு வருவதற்கு எம்ஜி நிறுவனம் திட்டமிட்டுள்ளது. எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் காரில் தற்போது இருக்கும் பேட்டரியை காட்டிலும், சிறிய அளவுடைய பேட்டரி, இந்த புதிய மாடலில் பொருத்தப்பட்டிருக்கும். எனவே இந்த புதிய மாடலை குறைவான விலையில் விற்பனை செய்ய முடியும்.

சூப்பரான விலையில் புதிய எலெக்ட்ரிக் காரை அறிமுகம் செய்கிறது டாடா... இது மட்டுமா? இன்னும் எக்கச்சக்கமா இருக்கு!

இதன் மூலம் டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் காருக்கு நெருக்கடி ஏற்படுத்தவும் எம்ஜி நிறுவனம் முடிவு செய்துள்ளது. எம்ஜி நிறுவனம் தற்போது இந்திய சந்தையில் சுறுசுறுப்பாக செயல்பட்டு வருகிறது. எனவே சிறிய பேட்டரி கொண்ட எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் காரின் புதிய மாடலை கூடிய விரைவில் விற்பனைக்கு எதிர்பார்க்கலாம்.

Most Read Articles
English summary
Upcoming electric cars in india maruti suzuki wagonr ev tata altroz ev mahindra exuv300 new mg zs ev
Story first published: Thursday, September 23, 2021, 17:11 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X