2 எலெக்ட்ரிக், 1 எம்பிவி... 3 புதிய கார்களை இந்தியாவில் அறிமுகம் செய்யும் ஹூண்டாய்... சீக்கிரம் பண்ணுங்கப்பா!

ஹூண்டாய் நிறுவனம் 3 புதிய கார்களை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

2 எலெக்ட்ரிக், 1 எம்பிவி... 3 புதிய கார்களை இந்தியாவில் அறிமுகம் செய்யும் ஹூண்டாய்... சீக்கிரம் பண்ணுங்கப்பா!

ஹூண்டாய் நிறுவனம் இந்திய சந்தையில் பல்வேறு கார்களை விற்பனை செய்து வருகிறது. இதில், ஹேட்ச்பேக், செடான், எஸ்யூவி ரக கார்கள் அடங்கும். எலெக்ட்ரிக் காரையும் கூட இந்தியாவில் ஹூண்டாய் நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. எனினும் வாடிக்கையாளர்களை கவர்வதற்காக புதிய கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்ய ஹூண்டாய் திட்டமிட்டுள்ளது.

2 எலெக்ட்ரிக், 1 எம்பிவி... 3 புதிய கார்களை இந்தியாவில் அறிமுகம் செய்யும் ஹூண்டாய்... சீக்கிரம் பண்ணுங்கப்பா!

மேலும் ஏற்கனவே விற்பனையில் உள்ள கார்களை அப்டேட் செய்வதற்கும் ஹூண்டாய் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதன்படி 2022ம் ஆண்டில் ஹூண்டாய் நிறுவனம் இந்திய சந்தையில் மூன்று கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் ஒன்று, புத்தம் புதிய எம்பிவி ரக கார் ஆகும். மற்றொன்று ஐயோனிக் 5 (Ioniq 5).

2 எலெக்ட்ரிக், 1 எம்பிவி... 3 புதிய கார்களை இந்தியாவில் அறிமுகம் செய்யும் ஹூண்டாய்... சீக்கிரம் பண்ணுங்கப்பா!

இதுதவிர ஏற்கனவே விற்பனையில் உள்ள கோனா எலெக்ட்ரிக் காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடலையும் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கு ஹூண்டாய் திட்டமிட்டுள்ளது. இதில், ஹூண்டாய் நிறுவனம் அடுத்ததாக விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ள எம்பிவி கார், தென் கொரியா, இந்தோனேஷியா நாடுகளில் சோதனையில் ஈடுபடுத்தப்படும்போது கேமரா கண்களில் சிக்கியுள்ளது.

2 எலெக்ட்ரிக், 1 எம்பிவி... 3 புதிய கார்களை இந்தியாவில் அறிமுகம் செய்யும் ஹூண்டாய்... சீக்கிரம் பண்ணுங்கப்பா!

இது எண்ட்ரி-லெவல் மாடல் ஆகும். இந்தியா, இந்தோனேஷியா போன்ற நாடுகளுக்காக ஹூண்டாய் நிறுவனம் இந்த எம்பிவி காரை பிரத்யேகமாக உருவாக்கியுள்ளது. ஹூண்டாய் கிரெட்டா/அல்கஸார் கார்களில் பயன்படுத்தப்பட்டுள்ள அதே பிளாட்பார்ம்தான் சில மாற்றங்களுடன் இந்த எம்பிவி காரிலும் பயன்படுத்தப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

2 எலெக்ட்ரிக், 1 எம்பிவி... 3 புதிய கார்களை இந்தியாவில் அறிமுகம் செய்யும் ஹூண்டாய்... சீக்கிரம் பண்ணுங்கப்பா!

இந்த புதிய எம்பிவி காருக்கு ஸ்டார்கசார் என்ற பெயர் சூட்டப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 1.5 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் மற்றும் 1.5 லிட்டர் டர்போ டீசல் என மொத்தம் 2 இன்ஜின் தேர்வுகள் இந்த எம்பிவி காரில் வழங்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த இன்ஜின்களுடன் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன்கள் வழங்கப்படலாம்.

2 எலெக்ட்ரிக், 1 எம்பிவி... 3 புதிய கார்களை இந்தியாவில் அறிமுகம் செய்யும் ஹூண்டாய்... சீக்கிரம் பண்ணுங்கப்பா!

மஹிந்திரா மராஸ்ஸோ மற்றும் மாருதி சுஸுகி எர்டிகா கார்களுக்கு போட்டியாக 2022ம் ஆண்டு இந்த எம்பிவி கார் இந்தியாவில் களமிறக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையே ஹூண்டாய் நிறுவனம் கோனா எலெக்ட்ரிக் காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடலை சர்வதேச சந்தைகளில் ஏற்கனவே அறிமுகம் செய்து விட்டது.

2 எலெக்ட்ரிக், 1 எம்பிவி... 3 புதிய கார்களை இந்தியாவில் அறிமுகம் செய்யும் ஹூண்டாய்... சீக்கிரம் பண்ணுங்கப்பா!

ஆனால் இந்திய சந்தையில் ஃபேஸ்லிஃப்ட்டிற்கு முந்தைய கோனா எலெக்ட்ரிக் கார் தொடர்ந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. எனினும் மேம்படுத்தப்பட்ட மாடலை ஹூண்டாய் நிறுவனம் 2022ம் ஆண்டின் முதல் பாதியில் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய மாடலில் டிசைனும், வசதிகளின் பட்டியலும் மேம்பட்டித்தப்பட்டிருக்கும்.

2 எலெக்ட்ரிக், 1 எம்பிவி... 3 புதிய கார்களை இந்தியாவில் அறிமுகம் செய்யும் ஹூண்டாய்... சீக்கிரம் பண்ணுங்கப்பா!

எனினும் இந்த ஃபேஸ்லிஃப்ட் மாடலின் பவர்ட்ரெயின் மாற்றப்படாது என தெரிகிறது. அதே நேரத்தில் ஹூண்டாய் ஐயோனிக் 5 சர்வதேச அளவில் ஏற்கனவே வெளியிடப்பட்டு விட்டது. 72.6 kWh மற்றும் 58kWh என மொத்தம் 2 பேட்டரி தேர்வுகளுடன் ஹூண்டாய் ஐயோனிக் 5 கார் கிடைக்கும். இதில் எந்த வேரியண்ட் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும்? என்பது உறுதியாக தெரியவில்லை.

2 எலெக்ட்ரிக், 1 எம்பிவி... 3 புதிய கார்களை இந்தியாவில் அறிமுகம் செய்யும் ஹூண்டாய்... சீக்கிரம் பண்ணுங்கப்பா!

எனினும் அடுத்த ஆண்டு சிபியூ வழியில், அதாவது முழுவதும் கட்டமைக்கப்பட்ட நிலையில், குறிப்பிட்ட எண்ணிக்கையில் இந்த கார் இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஹூண்டாய் நிறுவனத்தின் இந்த மூன்று கார்களும் இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

2 எலெக்ட்ரிக், 1 எம்பிவி... 3 புதிய கார்களை இந்தியாவில் அறிமுகம் செய்யும் ஹூண்டாய்... சீக்கிரம் பண்ணுங்கப்பா!

தற்போதைய நிலையில் ஹூண்டாய் நிறுவனத்தின் கிரெட்டா மிட்-சைஸ் எஸ்யூவி, அல்கஸார் எஸ்யூவி, வெனியூ சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி, ஐ20 பிரீமியம் ஹேட்ச்பேக் உள்ளிட்ட கார்கள் இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருக்கின்றன. ஹூண்டாய் நிறுவனத்தின் இந்திய லைன்-அப் ஏற்கனவே வலுவாக இருக்கும் நிலையில், அடுத்த ஆண்டு வரவுள்ள புதிய மாடல்கள் அதற்கு கூடுதல் வலு சேர்க்கும்.

2 எலெக்ட்ரிக், 1 எம்பிவி... 3 புதிய கார்களை இந்தியாவில் அறிமுகம் செய்யும் ஹூண்டாய்... சீக்கிரம் பண்ணுங்கப்பா!

குறிப்பாக ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய எம்பிவி காரும், கோனா எலெக்ட்ரிக் காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடலும் இந்திய வாடிக்கையாளர்களின் ஆவலை தூண்டியுள்ளன. இதில், கோனா எலெக்ட்ரிக் காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடலானது, எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவியை வலுவாக எதிர்கொள்வதற்கு உதவி செய்யும்.

Most Read Articles

English summary
Upcoming hyundai cars in india brand new mpv ioniq 5 kona ev facelift
Story first published: Friday, October 15, 2021, 22:19 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X