7-இருக்கை ஜீப் காம்பஸ் மீண்டும் இந்தியாவில் சோதனை!! ஸ்பை படங்கள் வெளியீடு!

7-இருக்கை ஜீப் காம்பஸ் காரின் ஸ்பை படங்கள் அதன் சோதனை ஓட்டத்தில் இருந்து வெளியாகியுள்ளன. அவற்றை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

7-இருக்கை ஜீப் காம்பஸ் மீண்டும் இந்தியாவில் சோதனை!! ஸ்பை படங்கள் வெளியீடு!

ஜீப் நிறுவனம் அதன் பிரபலமான காம்பஸ் எஸ்யூவி காரின் புதிய 7-இருக்கை வெர்சனை தயாரிக்கும் பணியில் தற்சமயம் தீவிரமாக ஈடுப்பட்டு வருகிறது.

7-இருக்கை ஜீப் காம்பஸ் மீண்டும் இந்தியாவில் சோதனை!! ஸ்பை படங்கள் வெளியீடு!

நடப்பு 2021ஆம் ஆண்டின் இறுதியில் அறிமுகமாகலாம் என எதிர்பார்க்கப்படும் 7-இருக்கை காம்பஸ் கார் அதன் தற்போதைய 5-இருக்கை வெர்சனில் இருந்து குறிப்பிடத்தக்க அளவிலான மாற்றங்களை பெற்றுவரவுள்ளது.

7-இருக்கை ஜீப் காம்பஸ் மீண்டும் இந்தியாவில் சோதனை!! ஸ்பை படங்கள் வெளியீடு!

இந்த நிலையில் தற்போது 7-இருக்கை காம்பஸ் காரின் புனேவில் நடத்தப்பட்ட சோதனை ஓட்ட ஸ்பை படங்கள் டீம் பிஎச்பி செய்திதளம் மூலம் கிடைத்துள்ளன. இந்த படங்களில் கார் கிட்டத்தட்ட கடந்த ஆண்டில் சோதனை ஓட்டத்தின் அடையாளப்படுத்தப்பட்ட 7-இருக்கை காம்பஸை ஒத்து காணப்படுகிறது.

7-இருக்கை ஜீப் காம்பஸ் மீண்டும் இந்தியாவில் சோதனை!! ஸ்பை படங்கள் வெளியீடு!

ஆனால் கூடுதலான இருக்கை வரிசையினால் காரின் பின்பகுதியின் தோற்றம் பெரிய அளவில் மாறியுள்ளது. இந்த வகையில் பின்சக்கரங்களுக்கு மேலே வழங்கப்படும் வளைவுகள் புதியதாக கொண்டுவரப்பட்டுள்ளன.

7-இருக்கை ஜீப் காம்பஸ் மீண்டும் இந்தியாவில் சோதனை!! ஸ்பை படங்கள் வெளியீடு!

இந்த சக்கர வளைவுகள் தற்போதைய 5-இருக்கை வெர்சன் உடையதை காட்டிலும் சற்று பெரியதாக உள்ளது. புதிய D-பில்லரை ஏற்றுள்ள இந்த 7 இருக்கை ஜீப் காம்பஸ் காரில் மூன்றாவது இருக்கை வரிசைக்கும் சிறிய அளவிலான கண்ணாடி பொருத்தப்பட்டுள்ளது.

7-இருக்கை ஜீப் காம்பஸ் மீண்டும் இந்தியாவில் சோதனை!! ஸ்பை படங்கள் வெளியீடு!

இவை எல்லாவற்றினாலும், காரின் நீளம் அதிகரித்துள்ளது. இந்த சோதனை காரின் முன்பகுதி முற்றிலுமாக மூடப்பட்டுள்ளது. இதனால் 7-இருக்கை ஜீப் காம்பஸில் புதிய தொகுப்பில் எல்இடி ஹெட்லேம்ப்கள், முன்பக்க க்ரில், பம்பர் மற்றும் பொனெட் வழங்கப்பட்டிருக்கலாம்.

7-இருக்கை ஜீப் காம்பஸ் மீண்டும் இந்தியாவில் சோதனை!! ஸ்பை படங்கள் வெளியீடு!

நீளம் மட்டுமின்றி 7-இருக்கை வெர்சனில் வீல்பேஸும் அதிகரிக்கப்படலாம். ஏனெனில் இதுவும் மூன்றாவது இருக்கை வரிசையில் அமருவருக்கு கூடுதல் இடம் கிடைக்க வழிவகுக்கும். ஆனால் இது தொடர்பான விபரங்கள் எதையும் இதுவரை ஜீப் நிறுவனம் வெளியிடவில்லை.

7-இருக்கை ஜீப் காம்பஸ் மீண்டும் இந்தியாவில் சோதனை!! ஸ்பை படங்கள் வெளியீடு!

இயக்க ஆற்றலை வழங்குவதற்கு புதிய ஜீப் காம்பஸ் 7-இருக்கை வெர்சனில் வழக்கமான 2.0 லிட்டர் டீசல் என்ஜின் பொருத்தப்பட வாய்ப்புள்ளது. அதிகப்பட்சமாக 173 பிஎச்பி மற்றும் 350 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் இணைக்கப்படுகிறது.

7-இருக்கை ஜீப் காம்பஸ் மீண்டும் இந்தியாவில் சோதனை!! ஸ்பை படங்கள் வெளியீடு!

அதேநேரம் சர்வதேச காம்பஸ் மாடலில் வழங்கப்படும் 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜினும் 7-இருக்கை காம்பஸில் வழங்கப்படலாம். இதன் உடன் 7-ஸ்பீடு டிசிடி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles

மேலும்... #ஜீப் #jeep
English summary
Upcoming Jeep Compass 7-seater spotted testing in India again.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X