இந்தியாவில் விற்பனைக்கு வரவுள்ள, அளவில் சிறிய கார்கள் இவைதான்!! பண்டிகை காலத்தை சிறப்பாக வருகின்றன!

சிறிய அளவிலான கார்கள் என்றாலே பெரும்பாலும் நம் இந்தியர்கள் மாருதி ஆல்டோ, வேகன்ஆர், ஸ்விஃப்ட் என்ற மூன்று மாடல்கள் பக்கமே செல்கின்றனர். மாருதி சுஸுகி தவிர்த்து சிறிய கார்களின் விற்பனையில் பெரியதாக வேறெந்த நிறுவனமும் கல்லா கட்டுவது இல்லை.

இந்தியாவில் விற்பனைக்கு வரவுள்ள, அளவில் சிறிய கார்கள் இவைதான்!! பண்டிகை காலத்தை சிறப்பாக வருகின்றன!

இதற்கிடையில் எலக்ட்ரிக் மோட்டார்களின் பயன்பாடும் நம் நாட்டில் அதிகரித்து வருகிறது. இப்படிப்பட்ட தற்போதைய நிலையில், 2021- 22ஆம் நிதியாண்டிற்குள் இந்திய சந்தையில் அடுத்ததாக அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக எதிர்பார்க்கப்படும் 5 சிறிய கார்களை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

இந்தியாவில் விற்பனைக்கு வரவுள்ள, அளவில் சிறிய கார்கள் இவைதான்!! பண்டிகை காலத்தை சிறப்பாக வருகின்றன!

2021 மாருதி சுஸுகி செலிரியோ

சந்தையில் மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கும் புதிய தலைமுறை மாருதி செலிரியோ இந்த 2021 செப்டம்பர் மாதத்தில் அறிமுகப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் குறைக்கடத்திகளின் பற்றாக்குறையால் இதன் அறிமுகம் 2021ஆம் ஆண்டின் இறுதிக்கு தாமதாகி உள்ளது.

இந்தியாவில் விற்பனைக்கு வரவுள்ள, அளவில் சிறிய கார்கள் இவைதான்!! பண்டிகை காலத்தை சிறப்பாக வருகின்றன!

புதிய எஸ்-பிரெஸ்ஸா காரை உருவாக்க பயன்படுத்தப்பட்ட அதே எடை குறைவான ஹார்ட்டெக் ப்ளாட்ஃபாரத்தில் தான் புதிய செலிரியோவையும் மாருதி வடிவமைத்து வருகிறது. சிறப்பாக விற்பனையாகும் மாருதி ஹேட்ச்பேக்குகளுள் ஒன்றாக விளங்கும் செலிரியோவின் 2021ஆம் ஆண்டிற்கான அப்டேட் வெர்சன் ஏகப்பட்ட வசதிகளை புதியதாக பெற்று வந்தாலும், இதன் ஆரம்ப விலையை குறைவாக ரூ.5 லட்சத்தில் எதிர்பார்க்கிறோம்.

இந்தியாவில் விற்பனைக்கு வரவுள்ள, அளவில் சிறிய கார்கள் இவைதான்!! பண்டிகை காலத்தை சிறப்பாக வருகின்றன!

சிட்ரோன் சி3

மைக்ரோ-எஸ்யூவி காராக வடிவமைக்கப்பட்டுள்ள சிட்ரோன் சி3 எஸ்யூவி கார்களுக்கு இணையான வசதிகளை பெற்றுவரவுள்ளது. 3.98 மீட்டர் நீளத்தில் மிகவும் சிறிய அளவிலான காராக கொண்டுவரப்படும் சி3-இல் முன் & பின் சக்கரங்களுக்கு இடையே தூரம் 2.54 மீட்டராகும். க்ரவுண்ட் க்ளியரென்ஸ் 180 மிமீ.

இந்தியாவில் விற்பனைக்கு வரவுள்ள, அளவில் சிறிய கார்கள் இவைதான்!! பண்டிகை காலத்தை சிறப்பாக வருகின்றன!

இந்த சிட்ரோன் காரின் மிக முக்கிய சிறப்பம்சம், இது சுமார் 90% இந்தியாவிலேயே கிடைக்கும் பாகங்களை கொண்டு உருவாக்கப்பட உள்ளது. இந்த காரில் வழங்கப்பட உள்ள என்ஜினை குறித்த தகவல்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. எங்களுக்கு தெரிந்தவரையில் 1.2 லிட்டர், 3-சிலிண்டர், டர்போ-பெட்ரோல் என்ஜின் இந்த மைக்ரோ-எஸ்யூவி காரில் பொருத்தப்படலாம்.

இந்தியாவில் விற்பனைக்கு வரவுள்ள, அளவில் சிறிய கார்கள் இவைதான்!! பண்டிகை காலத்தை சிறப்பாக வருகின்றன!

டாடா டியாகோ சிஎன்ஜி

பாதுகாப்பான கார் என்ற அடையாளத்துடன் விற்பனை செய்யப்பட்டு வரும் டாடா டியாகோ விரைவில் இந்தியாவில் சிஎன்ஜி வேரியண்ட்டை பெறவுள்ளது. டியாகோ சிஎன்ஜி உள்பட ஏகப்பட்ட சிஎன்ஜி வாகனங்களை, பெட்ரோல் & டீசல் விலை உயர்வை கருத்தில் கொண்டு கொண்டுவர டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தயாராகி வருகிறது.

இந்தியாவில் விற்பனைக்கு வரவுள்ள, அளவில் சிறிய கார்கள் இவைதான்!! பண்டிகை காலத்தை சிறப்பாக வருகின்றன!

டாடா டியாகோ சிஎன்ஜி காரின் சோதனை ஓட்ட மாதிரிகள் இதற்குமுன் சில முறை இணையத்தில் வெளியாகியுள்ளன. இதனால் இந்த டாடா சிஎன்ஜி காரின் அறிமுகத்தை வருகிற பண்டிகை காலத்தில் எதிர்பார்க்கிறோம்.

இந்தியாவில் விற்பனைக்கு வரவுள்ள, அளவில் சிறிய கார்கள் இவைதான்!! பண்டிகை காலத்தை சிறப்பாக வருகின்றன!

ரெனால்ட் ஜோ

ஜோ, மிகவும் அளவில் சிறிய எலக்ட்ரிக் வாகனம். இதனை பிரெஞ்சு கார் தயாரிப்பு நிறுவனமான ரெனால்ட் வடிவமைத்துள்ளது. இந்தியாவில் மெல்ல மெல்ல அதிகரித்துவரும் இவி பயன்பாட்டிற்கு மாற முனைப்புடன் உள்ள ரெனால்ட், ஜோ எலக்ட்ரிக் காரை 2020 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தி இருந்தது.

இந்தியாவில் விற்பனைக்கு வரவுள்ள, அளவில் சிறிய கார்கள் இவைதான்!! பண்டிகை காலத்தை சிறப்பாக வருகின்றன!

வெளிநாட்டு சந்தையில் இந்த எலக்ட்ரிக் கார் சுமார் 350 கிமீ ரேஞ்ச்சை வழங்குகிறது. இதன் பேட்டரியை முழுவதுமாக சார்ஜ் நிரப்ப 3 மணிநேரங்கள் தேவைப்படுமாம். இந்தியாவில் இதன் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.8 லட்சத்தில் நிர்ணயிக்கப்படலாம். இதன் அறிமுகத்தை அக்டோபரில் எதிர்பார்க்கிறோம்.

இந்தியாவில் விற்பனைக்கு வரவுள்ள, அளவில் சிறிய கார்கள் இவைதான்!! பண்டிகை காலத்தை சிறப்பாக வருகின்றன!

2022 நிஸான் லீஃப்

புதிய தலைமுறை நிஸான் லீஃப் எலக்ட்ரிக் காரின் அறிமுகம் அடுத்த 2022 பிப்ரவரிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. விற்பனையில் உள்ள நாடுகளில் உடனடி ஆக்ஸலரேஷன், மைலேஜ், கேபின் இடவசதி, செயல்முறை மற்றும் சவுகரியம் உள்ளிட்டவற்றில் இந்த நிஸான் எலக்ட்ரிக் கார் பிரபலமானதாக உள்ளது.

இந்தியாவில் விற்பனைக்கு வரவுள்ள, அளவில் சிறிய கார்கள் இவைதான்!! பண்டிகை காலத்தை சிறப்பாக வருகின்றன!

இத்தகைய நிஸான் மாடலின் 2022 வெர்சனை கூடுதல் கூர்மையான தோற்றத்தில், மேம்படுத்தப்பட்ட வசதிகள் மற்றும் சிறப்பான ரேஞ்ச்சில் எதிர்பார்க்கிறோம்.

இந்திய சந்தையில் அடுத்ததாக அறிமுகமாக உள்ளதாக நாங்கள் எதிர்பார்க்கும் 5 சிறிய கார்கள் இவை தான். குறைக்கடத்திகளுக்கான தற்போதைய உலகளாவிய தேவை ஓர் முடிவிற்கு வந்தால், இவை ஐந்தின் அறிமுகம் இன்னும் விரைவாக இருக்கும்.

Most Read Articles
English summary
5 Upcoming Small Cars In India, Expected Launch Details.
Story first published: Sunday, September 26, 2021, 17:18 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X